என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

திங்கள், டிசம்பர் 10, 2012

11 ஒரு செய்தியும் தினத்தந்தி தினமலரும் பின்னே நடுநிலையும்




கடந்த வாரம் திருச்சி அருகில் ஒரு போன்ற ஒரு பொருள் கிடந்ததாம்.அதை கைப்பற்றிய போலீசார் அது வெடிகுண்டாக இருக்குமோ என்ற கோணத்தில் விசாரித்து வருகிறார்களாம். இந்த செய்தியை முதலில் தினமலர் எப்படி பதிவு செய்திருக்கிறது பாருங்கள்.

தினமலரின் இந்தசெய்தியை பெரிதாக படிக்க படத்தின் மீது கிளிக்கவும்



தினத்தந்தியின் இந்தசெய்தியை பெரிதாக படிக்க படத்தின் மீது கிளிக்கவும்


அதே செய்தியை தினத்தந்தி எப்படி பதிவு செய்துள்ளது பாருங்கள். என்ன (பார்த்து) படித்து விட்டீர்களா?

ஒரே செய்தியை தினமலரும் தினத்தந்தியும் பதிவு செய்திருக்கும் கோணத்தை பார்த்தால் தினமலர் இந்த செய்தியை வெறும் காமெடி வெடிகுண்டு என்ற அளவோடு  நிறுத்திக்கொண்டு விட்டது. ஆனால்,  தினத்தந்தி்யோ இஸ்லாமியார்கள் மீது எவ்வளவு வன்மத்துடன் செய்தியைப் பதிவு செய்திருகிறார்கள் என்பது புலப்படும்.  சாதாரணமான ஒரு விஷயத்தை பாபர் மசூதி இடிப்பு தினத்துடன் ஒப்பிட்டு விஷயத்தை ஊதி பெரிதாக்குவதில் தான் இவர்களுக்கு எத்தனை ஆனந்தம். இதுதான் இவர்களின் நடுநிலைதொடர்ந்து இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக காட்டும் பொதுப்புத்தி எப்போதுதான் மாறப்போகிறதோ தெரியவில்லை .


Post Comment

இதையும் படிக்கலாமே:


11 கருத்துகள்:

  1. இதுதான் வியாபாரம்! என்ன செய்வது? நாங்கள் தந்தியை டெய்லி டூப் என்று வாசிப்பதில்லை!

    பதிலளிநீக்கு
  2. அவர்களுடைய பிழைப்பே இப்படித்தானே ஓடிக்கொண்டிருக்கிறது...

    பதிலளிநீக்கு
  3. பேப்பர் செய்திகளையும், டி.வி. செய்திகளையும் அப்படியே நம்பின காலம் ஒன்று இருந்தது. எப்போது "அம்மா" டிவியும், "தாத்தா" டிவியும் செய்திகளில் தங்களின் விருப்பு வெறுப்புகளில் திணித்து திரிக்க ஆரம்பித்தவுடனே நாங்களெல்லாம் விழித்துக் கொண்டோம். செய்திகளின் உண்மைத்தன்மைகளிலும் அரசியல் விளையாட்டு இருக்கிறது என்பதை கண்டுக்கொண்டோம்.

    ஊடகத்தில் முஸ்லிம் வெறுப்பை விதைக்க எல்லா மீடியாக்களிலும் ஆட்களை ஊடுருவ விட்டுள்ளார்கள். முஸ்லிம் சமூகத்தை தனிமைப்படுத்த வேண்டும் என்ற அஜன்டாவோடு களமிறங்கி இருப்பவர்களின் கைங்கர்யம் தான் இது.

    தற்போது தமிழ் முஸ்லிம் சமூகம் விழிப்புணர்வு பெற்று வருகிறது. கருத்துப்பகுதியில் இதனை சுட்டிக்காட்டி எதிர்ப்பை பதிந்து வருகிறார்கள். ஊடகங்களில் முஸ்லிம்கள் தங்களின் பங்களிப்பை அதிகரிக்கும் போது இது மாற வாய்ப்புள்ளது. முஸ்லிம்கள் அச்சு ஊடகத்திலும், காட்சி ஊடகத்திலும் பணியாற்ற முன் வரவேண்டும். தமிழத்தில் "ஜர்னலிசம்" படித்த முஸ்லிம்களை விரல் விட்டு எண்ணிவிடமுடியும். மற்ற ஊடகங்களோடு ஒப்பிடுகையில் இணையத்தில் முஸ்லிம்களின் பங்கு அதிகமாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  4. இந்த நாட்டை உருவாக்கப் பாடுபட்ட,

    இந்த நாட்டின் உருவாக்கத்துக்காக உயிர் நீத்த

    இஸ்லாமிய சகோதரர்களைத்

    தேசத்துரோகக் கூட்டமாக சித்தரித்து

    ‘சீன்’ போடுவதை

    ஒருபோதும் சகித்துக் கொள்ளமுடியாது.
    திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார்

    இன்று நேற்றல்ல... இஸ்லாமியர்களை தேசவிரோத சக்தியாக சித்தரித்துப் படம் பிடிப்பது இங்கு நீண்டகாலமாக நடந்து கொண்டுதான் இருக்கிறது.

    ‘ரோஜா’ படத்தில், தொழுகை நடத்திக் கொண்டே ‘அசைன்மென்ட்’க்கு உத்தரவு கொடுப்பதாக காட்சி இருக்கும்.

    உலகநாயகன் படங்களில் இது உச்சக்கட்டம்.

    ‘ஹே ராம்’ படத்தில், ‘‘நீங்க உங்க நாட்டுக்கே போங்கடா,’’ என்பார்.

    உன்னை போல் ஒருவனில், ‘‘ஒரு பொண்டாட்டி செத்தா என்ன பாய்? அதான், மூணு இருக்கே; அதுவும் மூணாவதுக்கு வயது பதினாறுதான்,’’ என இஸ்லாமியர்களின் சோகத்தையும்கூட ஏகடியம் செய்து வசனம் வைப்பார்.

    அடுத்து இவர் ‘விஸ்வரூபம்’ எடுக்கிற படம் நிஜமாகவே, கதி கலக்குகிறது.

    அந்த சினிமாவின் ‘டிரெய்லர்’ பார்த்த போது, நமது பயம் உண்மையாகி விடுமோ என்ற அச்சம் அதிகமாவதை தவிர்க்க முடியவில்லை.

    ‘‘விஸ்வரூபம் சினிமா இஸ்லாமியர்களுக்கு எதிரானதா?’’ என்று பிரெஸ்மீட்டில் கேள்வி பாய்ந்தபோது, ‘‘நானா...? இஸ்லாமியர்களுக்கு எதிராகவா? யாரைப் பார்த்து இப்படி கேள்வி கேட்கிறீர்கள்?’’ என்று உலகநாயகன் சீறியிருக்கிறார்.
    ‘‘நீங்கள் என்பதால்தான், இந்தக் கேள்வியே எழுகிறது,’’ என்று மீடியாகாரர்கள் யாரும் சொல்லவில்லை. சொல்லியிருந்தாலும் அதில், தப்பில்லை.

    ஆன்மீகத்தில் பழுத்த பழமான சூப்பர் ஸ்டார், படம் முடித்தது போக பாதிநேரம் இமயமலை, பாபா, கயிலாய குகை, ஆன்மீக தவம் என்றுதான் பழியாகக் கிடப்பார். அவர்கூட, மாற்றுச் சமூகங்களை விமர்சனம் செய்து எந்தப்படமும் செய்ததில்லை.

    ‘தீவிரவாதம் பற்றி ஆப்கானிஸ்தானில் படம் எடுக்கும் போது, அங்கிருப்பவர்களை இஸ்லாமியர்களாகத்தானே காட்டமுடியும்?’ என்பது உலகநாயகன் வாதம்.

    தீவிரவாதம் பற்றி படம் எடுக்க ஏன் ஆப்கானிஸ்தான்வரை போகவேண்டும்?.

    இன்றைய தேதிக்கு, மனித நாகரிகங்களை, மரபுகளை, நெறிமுறைகளை... அத்தனையையும் குழிதோண்டிப் புதைத்து விட்டு கொத்துக் கொத்தாய் உயிர்களை கொன்று குவித்த, குவிக்கிற உலக மகா தீவிரவாதம், பயங்கரவாதம் நமக்கு மிக அருகே நடந்து கொண்டிருப்பது உலகநாயகன் அறியாததா?

    தீவிரவாதம் பற்றி மிக உண்மையாக படம் எடுக்கிற நேர்மையோ, துணிச்சலோ, ஆண்மையோ அவருக்கு இருந்தால், ஏன் சிங்களத் தீவிரவாதம் குறித்து ஒரு சினிமா எடுக்கக் கூடாது?


    ஒரு பாவமும் அறியாமல் தூங்கிக் கொண்டிருந்த கிரஹாம் ஸ்டெயின்ஸ் பாதிரியாரும், அவரது பச்சிளம் குழந்தைகளும் ஒரிசாவில் மதவெறியர்களால் எரித்துக் கொல்லப்பட்ட கொடூர சம்பவம் மறந்திருக்க முடியாது.

    பஜ்ரங்தளப் பாவிகள் நடத்திய அந்தப் படு பயங்கர சம்பவத்துக்காக, "இந்துக்கள் அனைவருமே பழி பாவத்துக்கு அஞ்சாத பாதகர்கள்" என யாரும் அறிக்கை வெளியிடவில்லை;

    சினிமா எடுக்கவில்லை.

    எரித்துக் கொன்றவனை ஒரு மத அடிப்படைவாதியாக, பயங்கரவாதியாக மட்டுமே பார்த்தார்களே தவிர, அவனது மதத்துடன் தொடர்பு படுத்திக் கொள்ளவில்லை.

    மசூதி இடிப்பிலும் அப்படியே. இடித்தவனின் மதத்தவரை யாரும் விரோதக் கண் கொண்டு பார்க்கவில்லை.

    அப்படி இருக்கையில், இஸ்லாமியர்களுக்கு மட்டும் தனி நடைமுறை ஏன்?


    அவர்களை தீவிரவாதிகளாகச் சித்திரிப்பதை சினிமா சகோதரர்கள் இனியாவது நிறுத்திக் கொள்வது, சமூக ஒற்றுமைக்கும், நல்லிணக்கத்துக்கும் நல்லது.

    நன்றி : திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார்
    ( yes.krishnakumar@yahoo.in)

    கீற்று இதழில்.


    கட்டுரை சுருக்கப்பட்டுள்ளது.
    முழு கட்டுரையும் >>> இங்கே <<<<<<<

    பதிலளிநீக்கு
  5. விஸ்வரூபத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான காட்சிகள் இல்லாவிட்டால் 10000 பேருக்கு பிரியாணி- முஸ்லிம் லீக்

    சென்னை: விஸ்வரூபம் படத்தில் முஸ்லிம்களுக்கு எதிராகக் காட்சிகள் இல்லாவிட்டால் 10000 ஏழை சகோதரர்களுக்கு பிரியாணி விருந்து அளிக்க தயார் என்று தேசிய முஸ்லிம் லீக் அறிவித்துள்ளது.

    விஸ்வரூபம் படத்தில் முஸ்லிம்களை தவறாக சித்தரித்துள்ளதாகக் கூறி, அப்படத்துக்கு சில இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.

    இந்த நிலையில் அதற்கு மறுப்பு தெரிவித்த கமல், படத்தை பார்த்த பிறகு மனம் மாறி என்னை சந்தேகப்பட்டதற்கு பிராயசித்தமாக பசித்த பிள்ளைகளுக்கு முஸ்லிம் சகோதரர்கள் பிரியாணி வழங்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

    இதற்கு பதில் அளித்து இந்திய தேசிய முஸ்லிம் லீக் தலைவர் ஜவஹிர்அலி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    "சகோதரர் கமலஹாசன் தயாரித்து நடித்து வெளிவரும் 'விஸ்வரூபம்' படத்தில் முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான காட்சிகளும் வசனங்களும் உள்ளதாக செய்திகள் வெளிவர தொடங்கியுள்ள நிலையில்

    கமலஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் முஸ்லிம்கள் இப்படத்தைப் பார்த்து மனம் மாறி தேவையில்லாமல் சந்தேகப்பட்டு விட்டோமே என்று மனதில் வருதப்படுவார்கள் என கூறியுள்ளார்.

    'ஹேராம்' மற்றும் 'உன்னைப்போல் ஒருவன்' படம் வெளிவந்தபோதும் இப்படியே கூறினார்.

    ஆனால் அத் திரைப்படங்களில் இஸ்லாமியர்களை காயப்படுத்தும் வகையில் வசனங்களும் காட்சிகளும் அமைந்திருந்தது.

    ஆனால் அச்சமயம் எங்களுக்குள் வலுவான ஒற்றுமை இல்லாததினால் பெரிய அளவில் எங்களின் எதிர்ப்புகளை காட்டவில்லை.

    ஆனால் இன்று முஸ்லிம் சமூகத்துக்குள் மிகப் பெரிய வலுவான ஒற்றுமையும் உணர்வும் வந்திருப்பதால் முஸ்லிம்களை காயப்படுத்தும் வசனங்களோ, காட்சிகளோ எந்த திரைப்படத்தில் இடம் பெற்றாலும் அதை எதிர்க்க தயங்க மாட்டோம்.

    'விஸ்வரூபம்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிரான காட்சிகள் இல்லாமல் இருந்தால் சகோதரர் கமலஹாசன் கூறுவதுபோல் அவர் முன்னிலையில் ஏழைகள் 10 ஆயிரம் பேருக்கு பிரியாணி வழங்க இந்திய தேசிய முஸ்லீம் லீக் தயாராக உள்ளது," என்று குறிப்பிட்டுள்ளார்.

    Read more at: http://tamil.oneindia.in/movies/news/2012/12/viswaroopam-row-muslim-league-accepts-166035.html

    பதிலளிநீக்கு
  6. ஊடகங்கள்(திரைப்படம் உட்பட)சர்க்குலேஷன் எகிறணும்கிறது தான் குறி!////கமல் சார்,சிங்களத் தீவிரவாதம் பற்றியும் கொஞ்சம் கடைக்கண் பாருங்களேன்!

    பதிலளிநீக்கு
  7. உண்மைதான் அண்ணே .. நடுநிலைமை என்ற வார்த்தை அவர்களின் அகராதியில் இருந்து நீக்கப்பட்டு விட்டது

    பதிலளிநீக்கு
  8. சில பத்திரிக்கைகள் சுய லாபத்திற்காக மக்களை முட்டாள்கள் ஆக்குகிறது.

    பதிலளிநீக்கு
  9. எதையோ மறைக்க இப்படித்தான் வதந்திய கிளப்புறாங்க

    பதிலளிநீக்கு
  10. தொடரட்டும் உங்கள் பணி.....

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.