இந்த ஆண்டிற்கான காமெடியன் விருதை ராமதாசுக்கு கொடுக்கலாம் என்று நினைத்தால் வில்லன் விருதையும் சேர்த்தே வாங்கிவிடுவார் போல அவர்.
இனி திருமாவுடன் கூட்டணி கிடையாது. ஒழுக்கமான தலைவர்களுடன் கூட்டணி வைப்போம். வன்முறையை தூண்டுகிறவர்களுடன் இனி கூட்டணி கிடையாது என்றெல்லாம் அடிச்சு விட்டிருக்கார் தலைவர். வன்னியர்கள் ஜாதி மாறி திருமணம் செய்தால் அவர்களை வெட்டு, குத்து, கொல்லு என்றெல்லாம் பேசி வன்முறையை தூண்டிய காடுவெட்டி குருவை பக்கத்தில் வைத்துக்கொண்டே இப்படியெல்லாம் பேசுகிறார் என்றால் அவரை என்னவென்று சொல்வது?
-=-=-=*=
அவ்வப்போது மக்களுடனும் தெய்வத்துடனும்தான் கூட்டணி என்று சொல்லி வருபவர் விஜயகாந்த். ஆனால், கூட்டணி என்று வைக்காவிட்டால் தன் கட்சி கரைந்துவிடும் என்ற எதார்த்த அரசியலை புரிந்துகொண்டு கடந்த சட்டசபை தேர்தலில் அண்ணா.தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்து எதிர்கட்சி தலைவராகும் அளவிற்கு உயர்ந்தார். ஆனாலும் சில மாதங்களிலேயே வெளியேறி ஆளுங்கட்சிக்கு எதிரி கட்சியாகிப்போனார்.
அதன் விலையாக 4 எம்.எல்.ஏ.க்களை ஆளுங்கட்சிக்கு தாரை வார்த்ததோடு மட்டுமல்லாமல் இருக்கும் எம்.எல்.ஏ.க்களையும் ஒவ்வொருவராக தவணை முறையில் ஜெயிலுக்கு அனுப்பி வருகிறார். இப்போது ஓரளவு சுதாரித்துக்கொண்டுள்ள அவர் தி.மு.க,ஆதரவு மனநிலைக்கு வந்துவிட்டதாகவே தெரிகிறது.
சமீபத்தில் தி.மு.க.,வுடன் கூட்டணி அமைப்பீர்களா என்று கேட்டதற்கு நல்லவேளையாக கடவுளுடன் கூட்டணி என்று சொல்லாமல், கூட்டணி அமையலாம் என்று சொல்லியிருக்கிறார். கடுமையாக விமர்சித்த ஒரு கட்சியிடன் எப்படி இணைந்து செயல்பட போகிறார் என்பதுதான் இப்போதைய மில்லியன் டாலர் கேள்வி. தி.மு.க.பற்றிய தன் முந்தைய விமர்சனங்களுக்கு எப்படி சப்பைக்கட்டு கட்டப்போகிறார் என்றுதான் தெரியவில்லை. எல்லாவற்றையும் மறந்துவிட்டு இது காலத்தின் கட்டாயம் என்று சொன்னாலும் ஆச்ச்ர்யப்படுவதற்கில்லை. இவர்களுக்காகத்தானே இந்த வார்த்தைகளே கண்டுபிடிக்கப்பட்டிருக்கு.
-=-=-=-=-
ஏன் தேவையில்லாமல் இவர்களுக்கு அரசாங்கம் சிலவு செய்ய வேண்டும் என்றுவெள்ளத்துரை நினைத்தாரோ என்னவோ ஆல்வின்சுதன் கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த கைதிகளை தப்பியோட பார்த்தார்கள் அதான் என் கவுண்டரில் காலி செய்து விட்டோம் என்று நாடகம் போட்டு ஃபை குளாஸ் செய்துவிட்டார்.
ஆனால் போலீசை குறிப்பாக வெள்ளத்துரையை அறிந்தவர்கள்
இதை நம்ப மறுக்கிறார்கள். சரண் அடைந்தவர்கள் ஏன் தப்பிக்க நினைத்தார்கள்? அப்படி தப்பி ஓடினால் முதுகில் தானே குண்டடி பட்டிருக்கும்.நெஞ்சில் பட்டது எப்படி?என்றெல்லாம் லாஜிக்கலாக கேள்வி கேட்டு போலிசை பதற வைத்திருக்கிறாற்கள். அதானே, தப்பி ஓடும் போது பின்னோக்கியா ஓடியிருப்பார்கள் நெஞ்சில் குண்டடி பட..அதுவும் ஒரு என் கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் இருக்கும் போது எப்படி தப்பிக்க நினைப்பார்கள்? அவர்களுக்கு தெரியாதா அப்படி தப்பிக்க நினைத்தால் மர்கயா தான் என்று.
என் கவுண்டர் ஸ்பெஷலிஸ்டான வெள்ளத்துரை மானாமதுரைக்கு மாற்றலாகி போனது எதற்கு வெள்ளக்கொடி பறக்க விடவா? இப்படி என் கவுண்டர் செய்யத்தானே?
அதே நேரம் ஒரு போலீஸ் காரர் உயிரையே கொஞ்சமும் பயமில்லாமல் பறித்திருக்கிறார்கள் இந்த ரவுடிகள் என்றால்... பொதுமக்களுக்கு எத்தனை அச்சுறுத்தலாக இருந்திருப்பார்கள் இவர்கள்?
இவர்கள் கொல்லப்பட வேண்டியவர்கள்தான். ஆனால் கொல்லப்பட்ட விதம்தான் தவறாக இருக்கிறது.
-=--*=;
விஸ்வரூம் படத்தை தியேட்டரில் வெளியிடும் அதேநாள் எனப்படும் சாட்டிலைட் சேனலிலும் வெளியிடுவாத பேசிக்கொண்டிருக்கிறாராம் கமல். இது மட்டும் நிஜமானால் திரையிலகில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியவர் கமல் என்ற பெயர் கிடைக்கும். புதுமையும் புரட்சியும் கமலுக்கு புதிதில்லை என்றாலும் இந்த புரட்சிக்கு துணிச்சல் அதிகம் தேவை. அது சரி இந்தப்படத்தை சேட்டிலைட்டில் ஒளிபரப்பினால் பார்ப்பதற்கு கரண்டு வேணுமே? அதற்காக ஒரு தடவை முதல்வரை சந்திக்கும் ஐடியா கமலிடம் இருக்கான்னு யாராவது கேட்டு சொல்லுங்க.
-=-=-=-=
52 மாவட்டங்களிலும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, முதல்வர் ஜெயலலிதாவின் சாதனைகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்வேன்.ஜெயலலிதாவின் துணிச்சலும், ஆளுமைத் திறனும் பிற மாநில முதல்வர்களும் பின்பற்றக் கூடியதாக உள்ளது. அவரது தலைமையிலான ஆட்சி, சரியான திசையில் சென்று கொண்டுள்ளது.
நாஞ்சில் சம்பத் இன்று...
கல்வியில் சிறந்த தமிழ்நாட்டில், சமச்சீர் கல்வியை கிடப்பில் போட்டதன் மூலம் 1 கோடியே 30 லட்சம் பிள்ளைகளுக்கு இன்று கல்வி மறுக்கப்பட்டிருக்கிறது.
ஜெயலலிதா இழைத்திருக்கின்ற இந்த வரலாற்று அநியாயத்தை, எனக்கு தெரிந்தவரையில் உலகத்தில் எந்த ஆட்சியாளர்களும் மக்களுக்கு எதிராக இப்படி செய்யமாட்டார்கள். காட்டுமிராண்டிகள் வாழும் காட்டில் கூட இப்படி ஒரு அநியாயம் நடக்காது.
நாஞ்சில் சம்பத் அன்று....
--------------
உஷ்...
அந்த ஜன்டு பாம் நடிகர் புதிதாக டி.வி.சேனல் ஆரம்பிக்க போகிறாராம்.அதற்காக மத்தியில் மாண்புமிகுவாக இருக்கும் உலக அமைச்சர் தன் கைவசம் இருந்த ஏழு சேனல்களுக்கான உரிமத்தை இளைய நடிகரின் தந்தை பேருக்கு மாற்றிக்கொடுத்துள்ளாராம். விரைவில் நமக்கு சேனல் மூலமும் தலைவலியை கொடுக்கலாம்.
--------------
படித்ததில் பிடித்தது....
அயோத்தி ராமன்
அவதாரமா மனிதனா
அயோத்தி ராமன்
அவதாரமெனில்
அவன்
பிறப்புமற்றவன்
இறப்புமற்றவன்
பிறவாதவனுக்கா
பிறப்பிடம் தேடுவீர்
அயோத்தி ராமன்
மனிதனெனில்
கர்பத்தில் வந்தவன்
கடவுளாகான்
மனித கோவிலுக்கா
மசூதி இடித்தீர்
-கவிஞர் வைரமுத்து
-----------
கலைஞர் உடல்நிலை பற்றிய வதந்தி நேற்று வேகமாக பரவியது. அதுபற்றி யுவகிருஷ்னா தன் ஃபேஸ்புக்கில்.....
வதந்திகள் சாகடிக்கலாம். வரலாறு வாழவைக்கும்.
-----------
என் ஃபேஸ்புக்கிலிருந்து.....
எப்போதும் எதிர்கட்சிகளை திட்டியே ஸ்டேட்டஸ் போடுங்க...நீங்கள் ஆளுங்கட்சியால் ஆராதிக்கப்படலாம். முக்கியமாக, கைதை தவிர்க்கலாம்.
சமூக வலைதளங்களில் எழுதும் தனி நபர்களை காக்கும் வகையில் புதிய சட்ட திருத்தம்: நாராயணசாமி #
அப்படி எழுதறவங்களை நீங்க ஒண்ணும் பண்ணாமல் இருந்தாலே போதும்.
மேலும் 3 தே.மு.தி.க., எம்.எல்.ஏ.க்களுக்கு போலீஸ் வலைவீச்சு.- தே.மு.தி.க,எம்.எல்.ஏ.,க்களெல்லாம் பேசாமா 'தொகுதி வளர்ச்சிக்காக' ஜெயலலிதாவை சந்திச்சிடுங்களே...பிரச்சினை தீர்ந்திடும்.
========
ஒரு ஜோக்....
எங்க ஏரியாவுல பவர் கட்டே கிடையாது.
ஆஹா..நீ ரொம்ப கொடுத்து வச்சவன்
ம்ஹூம்..எங்கே...பவர்னு ஒண்ணு இருந்தாத்தானே பவர் கட்டுனு ஒண்ணு இருக்கும்.
Tweet |
கஸாலி..
பதிலளிநீக்குநாஞ்சில் சம்பத்தின் அன்றும், இன்றும் அருமை...
நரம்பில்லாத நாக்கு என்பது எத்தனை உண்மை???
அது யாருப்பா ஜண்டு பாம் நடிகர்??? விளம்பரம்லாம் இப்ப பார்க்கிறது இல்ல..அதான் தெரியல...
பதிலளிநீக்கு1 கோடியே 30 லட்சம் பிள்ளைகளுக்கு கல்வி மறுக்கப்படுகிறதா ?
பதிலளிநீக்குஇந்த வருடத்தின் அலசல் திலகம் பட்டம் உனக்கு கொடுக்கப்படுகிறது.
பதிலளிநீக்குகலக்கல் அண்ணா
பதிலளிநீக்குசுவையான பகிர்வு! கவிதை நச்! கொல்லப்படவேண்டும்! ஆனால் கொல்லப்பட்டவிதம் சரியில்லை! உடன் படுகிறேன்! நன்றி!
பதிலளிநீக்குவணக்கம்,கஸாலி சார்!கபேயில சம்பத் போண்டா டேஸ்டா இருந்திச்சு,ஹி!ஹி!ஹி!!!////அப்பப்ப திரையில தலைவலி குடுத்தாங்க.இனிமே ஜண்டு பாம் டெய்லி ப்ரீயா குடுப்பாங்களா?
பதிலளிநீக்குஹஹஹா அருமையான அலசல்
பதிலளிநீக்கு