என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

திங்கள், டிசம்பர் 03, 2012

12 நீர்ப்பறவை உயரே பறக்குமா?





25 வருடங்களுக்கு முன் இறந்துவிட்ட தன் கணவனை யாருக்கும் தெரியாமல் தன் வீட்டிலேயே புதைத்துவிட்டு, கடலுக்கு(ள்) மீன் பிடிக்க போனவன் இன்னும் கரை திரும்பவில்லை என்று எல்லோரையும் நம்ப வைத்து ஏமாற்றிய எஸ்தரின்(நந்திதாதாஸ், இளம் வயதில் சுனைனா) பார்வையில் விரிகிறது படம்.

குடி குடி குடி குடியைத்தவிர வேறொன்றும் அறியேன் பராபரமே என்று முதல் பாதி முழுக்க குடித்துக்கொண்டே திரியும் கதாபாத்திரம் விஷ்ணுவிற்கு.படத்தின் முதல் பாதியில் விஷ்ணுவை போல திரைக்கதையையும் தள்ளாட வைத்திருக்கிறார் இயக்குநர் சீனு ராமசாமி.



அவ்வப்போது குடிப்பதற்கு காசு கொடுக்கிறார் விஷ்ணுவின் அம்மாவான சரண்யா. அவர் காசு கொடுக்காத போது ஊர் முழுவதும் காசுக்காக கையேந்துகிறார் நாயகன். அப்படி ஒரு முறை சர்ச்சில ஊழியம் செய்யும்் கண்ணியாஸ்திரியின் மகளான சுனைனாவிடம் குடிப்பதற்காக ஏமாற்றி பணம் வாங்குகிறார் விஷ்ணு. அப்போது ஆரம்பிக்கிறது இவர்களின் காதல் அத்தியாயம். சுனைனாவை ஒருதலையாக மட்டும் காதலிக்கிறார் ஹீரோ.

பின்னர் குடிகாரர்கள் மறுவாழ்வு மையம் சென்று புதுமனிதனாக விஷ்ணு திரும்பி வரும்போது சுனைனாவிற்கும் காதல் வருகிறது. இந்தக்காதலை ஏற்க மறுக்கிறார் கன்னியாஸ்திரியான சுனைனாவின் வளர்ப்பு தாய், பத்துக்காசு சம்பாதிக்க வக்கில்லாத வெட்டிப்பயலுக்கு பொண்ணை தர முடியாது என்று வழக்கமாக எல்லா பெற்றோரும் பேசும் லாஜிக்குடன்.

உடனே விஷ்ணுவிற்கு ரோஷம் வந்து மீன் பிடிக்க கடலுக்கு போக நினைக்கிறார். ஆனால், மீனவர்களை தவிர மற்றவர்கள் கடலுக்குள் இறங்கக்கூடாது என்று எதிர்ப்பு வருகிறது. அப்போதுதான் தெரிகிறது விஷ்ணு ஒரு இலங்கையை சேர்ந்த அனாதை. அவர் சரண்யா-பூ ராம் தம்பதியினரின் ்வளர்ப்பு மகன் என்று.. தடையை தாண்டி கடலுக்குள் இறங்கினாரா காதலில் ஜெயித்தாரா? ஏன் கொல்லப்பட்டார் என்று நீட்டி முழக்கியிருக்கிறார்கள். இந்தக்காதலின் நடுவே இலங்கை கடற்படையினரால் சுடப்படும் இந்திய தமிழக மீனவர்கள் பிரச்சியை தொட்டிருக்கிறார்கள்.

டீக்கடையில் டீக்குடிக்கும் கேப்பில் சுடப்பட்டு இறக்கும் மீனவர் பிரச்சினையை லேசாக தொடுகிறார் சமுத்திரக்கனி. பின்னர் க்ளைமேக்ஸில் சில நிமிடம். அவ்வளவே.

முதல் பாதியில் அடைத்துக்கொண்டிருக்கும் குடிகார அத்தியாயத்தை கொஞ்சம் குறைத்து மீனவர் பிரச்சினை பற்றிய காட்சிகளை அதிகப்படுத்தியிருந்தால் இந்தப்படம் அருமையான படமாக மாறியிருக்கும். ஆனால், அப்படி செய்யாமல் விட்டதன் விளைவு குடிக்கு நடுவே ஊறுகாய் ஆகிவிட்டது மீனவர் பிரச்சினை.



விஜயின் துப்பாக்கியால் சுடப்பட்ட இஸ்லாமியர்களின் மனக்காயத்திற்கு மருந்திடுவதுபோல் ஒரு வரி வசனம் பேசி அப்ளாசை அள்ளுகிறார் சமுத்திரக்கனி.

தம்பி ராமையா, வடிவுக்கரசி  என்று நடித்திருக்கும் அனைவரும் அலட்டிக்காத நடிப்பை வழங்கியிருக்கிறார்கள். மிஸ்டர் அருளப்பசாமி என்று கொஞ்சுவதாகட்டும், சாத்தானே அப்பாலே போ என்று கோபப்படுவதாகட்டும், சுனேனா நடிப்பில் வெளுத்துக்கட்டியிருக்கிறார். மேக்கப்தான் ஆங்காங்கே திட்டுத்திட்டாய் அப்பியிருப்பதுபோல்  தெரிகிறது.

கடற்கரை, லைட் ஹவுஸ் என்று கேமாராவில் புகுந்து விளையாடி இருக்கிறார் ஒளிப்பதிவாளர். பாடல்களில் சோபித்த அளவிற்கு பின்னணி இசையில் பெரிதாய் சோபிக்கவில்லை இசையமைப்பாளர் ரகுநந்தன்.

இறுதியாக........... நல்ல படம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அதேநேரம் அருமையான கதைக்களமும் தான். ஆனால், சீனு ராமசாமி சொல்ல வந்ததை  அழுத்தமாக சொல்லவில்லை என்றே நினைக்கிறேன். இந்தப்படத்தில் ஒரு காட்சி வரும். அதாவது கல்லறையை சுத்தம் செய்து கொண்டிருக்கும் கதாநாயகன் விஷ்னுவை பார்த்து ஒருவர், 'நீ ஏதோ சொல்ல வர்றே...ஆனா அதுதான் என்னன்னு தெரியலை'ன்னு சொல்வார். அதை அப்படியே இயக்குநர் சீனு ராமசாமிக்கும் பொருந்தும். மொத்தத்தில் எந்த ஒரு இலக்கும் இல்லாமல் பறக்கிறது இந்தப் (நீர்) பறவை.


Post Comment

இதையும் படிக்கலாமே:


12 கருத்துகள்:

  1. உங்கள் விமர்சனத்திற்கு நன்றி.....

    பதிலளிநீக்கு
  2. ஏம்யா நீரு தியேட்டருக்குப் போயி பார்க்கிற படமெல்லாம் ஊத்திக்குது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லேய்யா ஊத்திக்கற படமா பார்த்துதான் நம்மள கூட்டிக்கு போகுதுங்க பய புள்ளைக.

      நீக்கு
  3. இந்த படத்தை பார்க்கலாம் என்று இருந்தேன் இப்படி சொல்லிட்டீங்களே! ம்ம்ம்ம் பார்ப்போம்.

    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் கஸாலி,சார்!///யார் தான்,ஈழப் பிரச்சினையையோ,தமிழக மீனவர் பிரச்சினையையோ முழுசாகத் தொட்டு அலசியிருக்கிறார்கள்?(ஒரு வேளை சென்சாரில் வெட்டியே பாதி ரீலை நஷ்டப்படுத்தி விடுவார்கள் என்ற பயமோ,என்னவோ?)///விமர்சனம்,நன்று!!!

    பதிலளிநீக்கு
  5. படம் நல்லாத்தானே இருக்கு .இதுக்கு மேல படம் எப்படி எடுக்குரது அப்படினு பாடம் எடுங்கப்பா.குத்து டான்ஸ் இல்லையே அதுனால படம் போரடிக்குதோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குத்துப்பாட்டு, கவர்ச்சி டான்ஸ் எல்லாம் உங்களை போல் சராசரி ரசிகனுக்குத்தான். இலங்கை பிரச்சினைக்கு இந்தப்படம் முற்றுப்புள்ளி வைக்கும் என்று சீனு ராமசாமி கொடுத்த பில்டப்பிற்கு இந்தப்படம் ஒரு கமா கூட வைக்கவில்லை.

      நீக்கு
  6. நல்ல தொரு விமர்சனம்! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  7. அரசியல் களம் அரசர் குளத்தானாய் மாறி தற்போது சினிமா களமானவும் மாறுகிறதோ
    தொடரட்டும்

    பதிலளிநீக்கு
  8. Film is getting mixed review. But I liked this film.

    Senkovi is asking a logical question :)

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.