என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

புதன், டிசம்பர் 19, 2012

5 கஸாலி கஃபே (19/12/12)


மது என்ற அரக்கனை எதிர்த்து கடந்த வாரம் வைகோ நடைபயணம் மேற்கொண்டார். அவரை தொடர்ந்து ராமதாசும் டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டுப்போடும் போராட்டத்தை அறிவித்து சொன்னபடி செய்துகாட்டியுள்ளார். இவர்களின் இத்தகைய நடவடிக்கைகள் வரவேற்கப்பட வேண்டியவை. அதேநேரம் பிரதான எதிர்கட்சியான தே.மு.தி.க.,இது சம்பந்தமாக ஏதும் பேசவில்லை. அவரு எப்படி பேசுவார் என்று சொல்கிறீர்களா? அதானே...அவரு எப்படி பேசுவாரு மதுவை எதிர்த்து.
சரி அவர்தான் பேச மாட்டாரு...தி.மு.க.,வாவது பேசியிருக்கலாம் என்றார் என் நண்பர் ஒருவர்..
ஆட்சிக்கட்டிலில் இருந்த அவர்களுக்கு நன்றாக தெரியும்,டாஸ்மாக் என்ற அட்சய பாத்திரத்தை கவிழ்த்து விட்டால், அரசாங்கஏ தள்ளாடிவிடும் என்று....இப்போது எதிர்த்து விட்டு பின்னாளில் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வதாம்?

============


தமிழ்நாட்டில் நிலவும் மின்வெட்டை கண்டித்து நேற்று மாநிலம் தழுவிய ஆர்ப்பார்ட்டத்தை வெற்றிகரமாக நடத்தியிருக்கிறது தி.மு.க., தொண்டர்கள் எழுச்சியுடன் கலந்துகொண்டார்கள். இதே எழுச்சியை மத்திய தொகுப்பிலிருந்து தமிழகத்துக்கு கூடுதல் மின்சாரம் கேட்டு மன்மோகன் சிங் அரசிற்கு எதிராக போராட்டம் மூலம் காட்டலாமே...

===========



கலாநிதியின் முகத்திரைய கிழிக்காமல் விடமாட்டேன் என்று சத்தியம் செய்துள்ளார்கள் அவரின் முன்னாள் சகாவான சக்சேனாவும், அய்யப்பனும். ஏற்கனவே எந்திரன் பட விவகாரத்தில் இயக்குனர் சக்தி சிதம்பரம் கலாநிதிக்கு எதிராக திரும்பியுள்ள நிலையில், சக்ஸ் வேறு வழக்கு தொடர்ந்துள்ளது கலாவுக்கு நிச்சயம் தலைவலியை ஏற்படுத்தும். விரைவில், கைது செய்யப்பட்டாலும் ஆச்சர்யமில்லை.

===========



கடந்த ஞாயிறன்று தலைநகர் டெல்லியில் நடந்த ஒரு கற்பழிப்பு நாடெங்கும் அதிர்ச்சியலையை ஏறடுத்தியதோடு மட்டுமல்லாமல், பாராளுமன்றத்திலும் சுனாமியை ஏற்படுத்தியுள்ளது. ஒருபுறம், பாலியல் பலாத்காரங்களுக்கு தூக்குத்தண்டனை, ஆயுள் தண்டனை, என்கவுண்டர் என்று கொடுக்கப்பட்டு வந்தாலும், மறுபுறம்...இந்த பாதகங்களும் ஜரூராக நடந்துகொண்டுதான் இருக்கிறது.

இதுபோன்ற மாபாதகம் செய்யும் குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்டால்..... அவர்களும் வழக்கு வாய்தா என்று இழுத்தடித்து சட்டத்தின் சந்து பொந்து, இண்டு, இடுக்குகளை பணத்தால் நிரப்பிவிட்டு இருக்கும் ஓட்டை வழியாக வெளியாகிவிடுகிறார்கள். இவர்களுக்கெல்லாம் முஸ்கின் ரித்திக் விஷயத்தில் நடந்தது போல என்கவுடர்தான் சரி.....
இதே பிரச்சினை மலேசியாவில் நடந்திருந்தால் என்ன தண்டனை என்று கீழிருக்கும் வீடியோவின் மூலம் தெரிந்துகொள்ளுங்கள்....


============



தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு நன்றாக பராமரிக்கப்பட்டுள்ளது. பொது அமைதிக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துகிற பெரிய பிரச்சினகள் ஏதுமில்லை
முதல்வர் ஜெயலலிதா

ஜெயலலிதா பதவியேற்றது 2011 மே திங்கள். அந்த மே மாதம் முதல் இதுவரையிலே தமிழ்நாட்டில் நடைபெற்றிருக்கின்ற கொலைகள் மாத்திரம் 928. கொள்ளைகள் - 768 செயின் பறிப்புகள் - 476.   வழிப்பறி மோசடிகள் - 480
கலைஞர்

==================

முகப்புத்தகத்தில் ரசித்தது...


Abdulkader Jailane பேஸ்புக்கிலிருந்து.....



நேயர்களே 21-12-12 உலக அழிவை முன்னிட்டு உங்கள் **டிவியின் சிறப்பு நிகழ்ச்சிகளை கண்டு களியுங்கள் , சாவை ஆன‌ந்தமாய் கொண்டாடுங்கள்.

காலை 6 மணிக்கு

கண்ணம்மா பேட்டை கண்ணாயிரம் , சங்கு சண்முகம் குழுவினர் வழங்கும் ''அமங்கல இசை''

காலை 7 மணிக்கு

'' உலகம் அழியுமா'' 15 நாள் டைம் கொடுப்பாங்களா? பிரபல ஜோதிடர் கூடன்குளம் நாராயணசாமி தனது ஏழம் அறிவு மூலமாககணிக்கிறார்.

காலை 8 மணி

ஒரு சாவுக்கு எம்புட்டு வாங்குறீங்க ''மரண கானா விஜி'' யுடன் ஒரு கல கல பேட்டி .

காலை 9.30 மணிக்கு

உலக அழிவிற்க்கு பெரிதும் காரணம் ஆண்களா ? பெண்களா ?பேராசிரியர் சா(வு)லமன் பாப்பையா தலைமையில் தற்கொலை செய்துகொள்ள சிந்திக்க வைக்கும்சிறப்பு- பட்டி மன்றம்.

காலை 11 மணிக்கு

''பேய்புடிக்கலாம் வாங்க '' கண்னம்மா பேட்டையில் தூங்கி கொண்டிருப்பர்களுடன் ஆவி அமுதா பங்கு பெரும் கொல கொலப்பான நிகழ்ச்சி .

நண்பகல் 12 மணிக்கு

இந்திய தொலைகாட்சி வர‌லாற்றில் திரைக்கு வந்து 10 , 15 வருடங்களான நாசர் , ரோஜா நடித்து திருட்டு வீசிடி களில் கூட வெளிவராத '' மாயன்'' திரைப்படம் கண்டு சாவுங்கள் .

மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை தமிழ் நாடு அரசு மற்றும் நத்தம் விஸ்வனாதன் குளுவினர் வழங்கும் ''பவர்கட்'' தமிழ்னாட்டின் பாரம்பரிய நிகழ்ச்சி .

21-12-12 உலக அழிவு திரு நாளின் நிகழ்ச்சிகள் அனைத்தையும் வழங்குவது '' *** டெத் கேர் '' உங்க சாவுக்கு நாங்க இருக்கோம்.

நேயர்களே 21-12-12 உலக அழிவை முன்னிட்டு உங்கள் **டிவியின் சிறப்பு நிகழ்ச்சிகளை கண்டு களியுங்கள் ,
செத்துத் தொலையுங்கள்.

==============



முதல்வருக்கு எத்தனையோ வேலைகள். விவசாயிகள் பற்றியா கவலைப்பட முடியும்-கலைஞர்# 
இதற்கு முன்பு ஐந்து தடவை முதல்வரா இருந்த நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்.


40-எம்.பி.க்களோடு ஜெயலலிதா டெல்லி சென்று பிரதமராக திரும்புவார்- அமைச்சர் வைத்தியலிங்கம்# 
மின்சாரம் இல்லை, கொசுக்கடி க்கும் மத்தியில் உங்களுக்கு மட்டும் எப்படிண்ணே கனவு காணும் அளவிற்கு தூக்கம் வருது.

2013-டிசம்பர் 31-க்குள் உங்கள் கையில் உங்கள் பணம்-ப.சிதம்பரம்#
மாயன் காலண்டரை நம்பி அடிச்சு விட்டுருப்பாரு போல..

2013-டிசம்பர் 31-க்குள் உங்கள் கையில் உங்கள் பணம்-ப.சிதம்பரம்# 
இப்பக்கூட எங்கள் கையில் எங்கள் பணம்தான் இருக்கு.

ஒரு குடும்பத்தின் மாத சாப்பாட்டு சிலவிற்கு ரூபாய் 600 போதும்-ஷீலா தீட்சித்# 
1970-களில் வர வேண்டிய அறிக்கையை 2012-இல் விட்டா எப்படி மேடம்.



Post Comment

இதையும் படிக்கலாமே:


5 கருத்துகள்:

  1. //கடந்த ஞாயிறன்று த்லைநகர் டெல்லியில் நடந்த ஒரு கற்பழிப்பு நாடெங்கும் அதிர்ச்சியலையை ஏற்படுத்தியதோடு மட்டும‌ல்லாமல் பாராளுமன்றத்திலும் சுனாமியை ஏற்படுத்தியுள்ளது//

    எங்கே உங்க‌ள‌து ஆவேச‌க்குர‌ல்க‌ள். ???

    நிச்ச‌ய‌மாக‌ குர‌ல் எழாது. !



    டெல்லியில் இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்டது வன்மையாகக் கண்டிக்கத்தக்க மிகவும் கொடூரமான குற்றம்.

    அவர்களுக்கு கடுமையான தண்டனையை நீதிமன்றம் வழங்கவேண்டும்.

    அதே நேரத்தில் இந்த விவகாரத்தில் எழுப்பப்படும் ஆவேச குரல்கள்

    இஸ்லாமிய‌ சமூக‌ப் பெண்க‌ள் ஆர்.எஸ்.எஸ், வி .ஹெச்.பி , பஜ்ரங்தள் வெறி நாய் இந்துத்வா ப‌ய‌ங்க‌ர‌வாதிக‌ளால் குஜராத்தில் கற்பழித்து குதறி கொல்லப்பட்டு

    தெஹல்காவில் ஒவ்வொரு முஸ்லிம்களையும் எவ்வாறு கற்பழித்தோம் எப்படி குதறி கொன்றோம் என ஆர்.எஸ்.எஸ், வி .ஹெச்.பி , பஜ்ரங்தள் வெறி நாய்கள் பேட்டி கொடுத்து அகில‌ இந்தியா முழுதும் ப‌றை சாற்றப்பட்டிருந்தும்

    ஆவேச குரல்கள் எந்த‌ மூலையில் ஓடி ஒளிந்து அழிந்து போய் விட்ட‌து.

    சாம்னாவில் ஒரு இனவெறி-இந்துவெறி பாசிச பயங்கரவாத கிரிமினல், மாஃபியா கும்பலின் தலைவன் பால் தாக்கரே அச்செயல்கள் (கற்பழிப்பு, கொலை) தேசப் பக்தியின் வெளிப்பாடு என எழுதும்போது அதனை மௌனமாக ஆதரித்துக்கொண்டிருந்தார்க‌ளே.

    ஒரு முஸ்லீம் பெண்னுக்கு நாட்டில் இதுபோன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்திருந்தால் இப்படியான ஆவேச குரல்கள் எழுந்திருக்குமா ?

    ஊடகங்களிலும் நாடாளுமன்றத்திலும் அது பேசப்பட்டிருக்குமா?

    நிச்சயமாக அப்படி ஒரு குரல் எழாது.



    புதுடெல்லி: 12/12/2012 ல் டெல்லி மெஹ்ராலியில் முஸ்லீம்களின் வக்ஃப் போர்டுக்கு சொந்த‌மான‌ இட‌த்தில் நானூறு ஆண்டுகள் பழமையான கெளஸியா மஸ்ஜிதும் அதன் சுற்றுப்பகுதியில் உள்ள ஐந்நூறுக்கும் அதிகமான சாதாரண முஸ்லிம்கள் வசிக்கும் வீடுகளை கடுமையான குளிர்காலத்தில் காட்டு மிராண்டித்தனமாக இடித்து தள்ளிய டெல்லி வளர்ச்சி ஆணையத்தின்(டி.டி.ஏ) அட்டூழியத்தால்

    நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் சொந்த மண்ணில் அகதிகளாக வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்..

    ஊட‌க‌ங‌க‌ள் இச்செய்தியை இருட்ட‌டிப்பு செய்து விட்டார்க‌ளே.

    எங்கே உங்க‌ள‌து ஆவேச‌க்குர‌ல்க‌ள்.

    நிச்ச‌ய‌மாக‌ குர‌ல் எழாது.

    பதிலளிநீக்கு
  2. பல பெயர் வைத்து கடைசியில் கசாலி ஹபே செட்டாகி விட்டதா அருமை அன்பரே

    பதிலளிநீக்கு
  3. மலேசியாவில் கொடுத்த தண்டனை போல இந்தியாவிலும் கொடுத்தால் தவறுகள் குறைய வாய்ப்பு உண்டு. மனம் பதறியது அந்த வீடியோவை பார்க்கும் போது .....தவறுகள் செய்யும் முன் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டியது.

    பதிலளிநீக்கு
  4. Abdulkader Jailane சுயமா எழுதியது இல்ல தம்பி..!திருடியது

    ஒரிஜினல் இது : http://manathiluruthivendumm.blogspot.com/2012/12/blog-post_19.html#comment-form

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.