என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

வெள்ளி, டிசம்பர் 21, 2012

8 இன்று அழியப்போவது உலகமல்ல... மாறாக?




21/12/2012 அன்று உலகம் அழியும்..அழியாது என்று உலகம் முழுவதும் நடந்த பட்டிமன்றம் இன்றோடு முடிவுக்கு வருகிறது. என்றைக்கு இந்த டுபாக்கூர் மாயன் காலண்டரை கண்டெடுத்தார்களோ அன்றைக்கு துவங்கியது இந்த காமெடி கலாட்டா.


ஆனால், இதையெல்லாம் கண்டுகொள்ளாமல், வழக்கம் போல் துரோகம்,ஏமாற்றம், வஞ்சகம், சுகம்,துக்கம், நட்பு, காதல், பாசம் என்று எல்லாவற்றையும் தாங்கி இந்த உலகம் சுற்றிக்கொண்டுதான் இருக்கிறது, எந்த மாறுதலும் இல்லாமல்...


இந்த டுபாக்கூர் அலப்பறைகளை உண்மையென நம்பி சொத்துக்களை விற்றும், சேமிப்புகளை எடுத்தும் சிலவு செய்தவர்கள்தான் பாவம். இனி, பூஜ்யத்திலிருந்து துவங்க வேண்டும். அதிலும் சிலர் முன்னெச்சரிக்கை முத்தண்ணாவாக மாறி பணத்தை மக்களுக்கு கொடுத்துவிட்டு, உலகம் அழிந்தால் பரவாயில்லை.ஒருவேளை உலகம் அழியாவிட்டால் பணத்தை திருப்பி தந்து விடுங்கள் என்று நிபந்தனை விதித்த கூத்தும் நடந்திருக்கிறது.

இதையெல்லாம் விட பெரிய காமெடி இங்கிலாந்தில் நடந்திருக்கு.
உலகம் அழியிம்போது தப்பிப்பதற்காக, பாதாள அறைகளையும்,பதுங்கு குழிகளையும் பூமிக்கு கீழ் அதாவது அண்டர் கிரவுண்டில் 10 அடி ஆழத்திற்கு அமைத்து விற்பனை செய்துள்ளார்கள் சிலர்.

அடப்பதர்களா?
நீங்கள் எங்கிருந்த போதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும் என்கிறது அல்குரான். இஸ்லாம் மட்டுமல்ல, எல்லா மதங்களும் மரணத்தை வெல்ல முடியாது என்றுதான் சொல்கிறது.




ஒருவேளை உலகம் அழிந்து இவர்கள் மட்டும் தப்பித்து என்ன கிழித்துவிட போகிறார்கள்?
சரி தலைப்பிற்கு வருகிறேன். இன்றோடு அழியப்போவது உலகம்மல்ல... மாறாக, மாயன் காலண்டரும், மக்களின் மூட நம்பிக்கையும்தான்.

நடுவில் கொஞ்சம் பக்கத்தை காணாம் என்பது போல்... மாயன் காலண்டரை பொறுத்தவரை கடைசியில் நிறைய பக்கத்தை காணாம். அவ்வளவுதான். 




Post Comment

இதையும் படிக்கலாமே:


8 கருத்துகள்:

  1. கண்டிப்பாக இன்று அழியப்போவது உலகம் அல்ல, மாறாக மாயன் காலண்டர்தான்.

    பதிலளிநீக்கு
  2. சரியான நேரத்தில் சரியான பதிவு அண்ணா...

    பதிலளிநீக்கு
  3. // நடுவில் கொஞ்சம் பக்கத்தை காணாம் என்பது போல்... மாயன் காலண்டரை பொறுத்தவரை கடைசியில் நிறைய பக்கத்தை காணாம். அவ்வளவுதான்.
    //

    haa..haa..haa... செம!

    பதிலளிநீக்கு
  4. எப்புடியோ,பீதிலேருந்து மீண்டாச்சு!

    பதிலளிநீக்கு
  5. மீண்டும் ஒருமுறை, இறைவன் மிகப்பெரியவன் என்பதை பலரும் புரிந்துகொண்டனர்.

    பதிலளிநீக்கு
  6. நல்ல செய்தி இன்னும் எவ்வளவு நிகழ்வுகள் நடக்க இருக்கு, நபியவர்களின் முன்னறிவிப்புகள் வர இருக்கு அதற்குள்ளாகவா அந்த இறைத்தூதர் மூலம் அறிவிப்பு செய்த இறைவன் அழித்து விடுவான். ஆனாலும் ஒரு நாள் இவ்வுலகம் அழியும்.அதை நம்மை படைத்தவனே அறிவான். அந்த நாளை அஞ்சிக்கொள்ளுங்கள் இறைவனை வழிபடுஙகள் நன்றி!.

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.