என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

வியாழன், டிசம்பர் 13, 2012

10 அது போன மாசம்......இது இந்த மாசம்........




கீழிருக்கும் கேள்விகளை கேட்டால் இப்படித்தான் சொல்வாரோ நாஞ்சில் சம்பத்..........

கேள்வி:உயிருள்ளவரை வைகோ என்று சொன்னீர்கள்... இப்போது கல்லறை போகும் வரை அண்ணா.தி.மு.க.தான் என்கிறீர்களே?

நாஞ்சில் சம்பத்: அது போன மாசம்...இது இந்த மாசம்

மதிமுக.ஒரு வெண்கலப்பானை அது கீழே விழுந்தலும் உடையாது என்று சொல்லிவிட்டு இப்போது, மதிமுக.ஒரு மலட்டுக்கட்சி என்கிறீர்களே?...

நாஞ்சில்: அது போன வருஷம் இது இந்த வருஷம்



கேள்வி:கல்வியில் சிறந்த தமிழ்நாட்டில், சமச்சீர் கல்வியை கிடப்பில் போட்டதன் மூலம் 1 கோடியே 30 லட்சம் பிள்ளைகளுக்கு இன்று கல்வி மறுக்கப்பட்டிருக்கிறது.

ஜெயலலிதா இழைத்திருக்கின்ற இந்த வரலாற்று அநியாயத்தை, எனக்கு தெரிந்தவரையில் உலகத்தில் எந்த ஆட்சியாளர்களும் மக்களுக்கு எதிராக இப்படி செய்யமாட்டார்கள். காட்டுமிராண்டிகள் வாழும் காட்டில் கூட இப்படி ஒரு அநியாயம் நடக்காது என்று அன்று சொல்லிவிட்டு இப்போது 52 மாவட்டங்களிலும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, முதல்வர் ஜெயலலிதாவின் சாதனைகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்வேன்.ஜெயலலிதாவின் துணிச்சலும், ஆளுமைத் திறனும் பிற மாநில முதல்வர்களும் பின்பற்றக் கூடியதாக உள்ளது. அவரது தலைமையிலான ஆட்சி, சரியான திசையில் சென்று கொண்டுள்ளது என்று சொல்றீங்களே?

நாஞ்சில்: அது போன மாசம் இது இந்த மாசம்..

ஆக......மக்களே நமக்கு மாதந்தோறும் மறதி இருக்கனும். இல்லாவிட்டால் இவர்களைப்போல் வியாபாரிகள் பிழைக்க முடியாது. என்ன சரிதானே?

===============
என் முகப்புத்தகத்திலிருந்து......

அ.தி.மு.க.,-வை விமர்சிக்க எந்தக்கட்சிக்கும் உரிமையில்லை- நாஞ்சில் சம்பத்# 
ஆமாம். விமர்சிக்க வேண்டியதை எல்லாக்கட்சிக்கும் சேர்த்து அவர் ஒருவரே கடந்த காலத்தில் விமர்சித்து விட்டாரே!

இனி கல்லறை வரை அண்ணா.தி.மு.க.தான்-நாஞ்சில் சம்பத்# சில்லறையை அதிகம் காட்டியிருப்பார்களோ?


என்னது இரட்டை இலை குதிரை இறக்கையா மாறிடுச்சா- நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணாம் படம் இப்போது வந்திருந்தா என்னது சிவாஜி செத்துட்டாரா என்ற வசனத்திற்கு பதில் இந்த வசனத்தையே பேசிருப்பாரு விஜய் சேதுபதி.


இனி வருங்காலத்தில் இரட்டை இலைக்கு பதில் குதிரையின் சிறகுகளுக்கு வாக்களிங்கள் என்று கூட அண்ணா.தி.மு.க,வினர் கேட்கலாம்.


ஒருவரின் பிறந்தநாளைக்கூட வியாபாரமாக்கி கல்லா கட்டிய பெருமை தமிழக ஊடகங்களையே சேரும்.


தகாத வார்த்தை பேசுகிறார் அமைச்சர்- தே.மு.தி.க.பெண் எம்.எல்.ஏ.,சுபா புகார்.#
நீங்க அவங்கள பேசினாத்தான் கேசு. அவங்க உங்கள பேசுனா அது தூசு.


வைகோ நடைபயணம்# 
நீங்க இப்படியே நடந்துக்கு இருந்தா உங்களை ஒவ்வொருத்தரா விட்டு கழண்டுக்கு போயிடுவாங்க. அப்புறம் நீங்க மட்டும்தான் தனியா நடக்கனும்.





Post Comment

இதையும் படிக்கலாமே:


10 கருத்துகள்:

  1. வாஜ்பாய் ஆட்சிக்கு சப்போர்ட் பண்ணப்ப மினிஸ்டர் போஸ்ட் வாங்காதது வைகோ செய்த வரலாற்று தவறு.. மினிஸ்டர் போஸ்ட் வாங்கி இருந்தா கட்சி நல்ல வளர்ச்சி அடைந்து இருக்கும்....

    இனி அது போன்ற ஒரு வாய்ப்பு வைகோவிற்க்கு கிடைக்காது.. தமிழக அரசியல் வானில் வைகோ அஸ்தமித்து விட்டார்....

    பதிலளிநீக்கு
  2. நாஞ்சில் சம்பத் போனதால் நான் அப்படி சொல்லவில்லை.. நாஞ்சில் இருந்தாலும் ஒன்னும் கிழித்து இருக்க முடியாது.... இதற்க்கு கடந்த காலமே சாட்சி...

    பதிலளிநீக்கு
  3. ஹா ஹா ஹா....உண்மையில் இவர் இப்படி கீழ்த்தரமாக இறங்கி போவார் என நான் எதிர்பார்க்கவில்லை..எல்லாம் டப்பு பண்ணும் வேலை

    பதிலளிநீக்கு
  4. என்னத்தச் சொல்ல! இதுவும் கடந்து போகும்.

    பதிலளிநீக்கு
  5. எதிர்காலம்ன்னு ஒண்ணு இருக்கு தோழரே..

    பதிலளிநீக்கு
  6. இனி.. அவரை பொழைக்கத்தெரியாத மனுசன்னு சொல்ல முடியாது!

    பதிலளிநீக்கு
  7. இதெல்லாம் அரசியல்ல சகஜம்ப்பா! என்ற கவுண்டமணி வசனம்தான் நினைவுக்கு வருகிறது! நன்றி!

    பதிலளிநீக்கு
  8. இந்த மாசம் ஒன்னு பேசறது, அடுத்த மாசம் ஒன்னு பேசறது என்பது திராவிட இயக்கங்களில் சகஜம் .எமர்ஜென்சியில் இந்திராவிடம் நன்றாக மிதி வாங்கியபின்னும் தலைவர் நேருவின் மகளே வா,நிலையான ஆட்சியை தா என்று காலில் விழவில்லையா,விடுங்க பாஸ்.

    பதிலளிநீக்கு
  9. நடிகர்கள் அரசியலுக்கு வந்ததுபோக இன்று அரசியல் வாதிகளே நல்ல நடிகர்கள் ஆகி விட்டார்கள்!

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.