என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

புதன், டிசம்பர் 12, 2012

16 கஸாலி கஃபே(12/12/12-12:12)



சமீபத்தில் நாஞ்சில் சம்பத்தின் பேட்டியை படித்து தொலைக்க வேண்டியதாய் போய்விட்டது. ஆனால், அதை படித்ததும் அவர் மீது வண்டி வண்டியாய் இல்லை இல்லை அதைவிட அதிகமாக லாரி லாரியாய் பரிதாபம் வந்துவிட்டது எனக்கு. பரிதாபப்படும் அளவிற்கு அப்படி என்னதான் சொல்லியிருக்கார் அவர் பேட்டியில் என்று நினைப்பவர்கள் கீழே படிங்க..

வைகோ எங்களையெல்லாம் அவர் வீட்டு நாயைப்போல் நடத்தினார். அந்த நாய்க்கு சாப்பாடு போடுவது போல்தான் எங்களுக்கு உணவளித்தார். ம.தி.மு.க.,வில் இருந்த 18 ஆண்டு காலமும் எதிர்நீச்சல்தான். எப்போதும் எதையோ இழந்த வலியோடுதான் வாழ்ந்தேன். வலிக்கு மருந்தோ, பரிகாரமோ வைகோவிடம் எப்போதும் கிடைத்ததில்லை. 
என்று சொல்லியிருந்தார் அந்த பேட்டியில்.

இதைப்படித்ததும் எவ்வளவு கஷ்டங்களுடன் வாழ்ந்திருக்கிறார் அவர் என்று எனக்கு ரத்தக்கண்ணீரே வந்துவிட்டதென்றால் பார்த்துக்கொள்ளுங்கள். சம்பத்தை தியாகி என்றால் அது மிகையில்லை. ஆனால், எனக்கு ஒரேயொரு சந்தேகந்தான். சம்பத் இதையைெல்லாம் அப்போதே சொல்லியிருக்கலாமே? ம.தி.மு.க., ஒரு கோபுரம், வெண்கலப்பானை என்றெல்லாம் கடந்த 18 வருடங்களாக புகழ் பாடிவிட்டு இப்போது வெளியே வந்து இதையெல்லாம் சொல்வதுதான ஏன் என்று் புரியவில்லை.

வைகோவாவது நாய் போல்தான் நடத்தினார் ஆனால் ஜெயாவோ... சரி விடுங்க நமக்கேன் வம்பு. நல்ல மரியாதையான இடத்திற்குத்தான் வந்து சேர்ந்திருக்கிறார் நாய்ஞ்சில்.
.
------



வில்லங்கமாய் விஸ்வரூபம் எடுக்கிறது விஸ்வரூபம் பிரச்சினை. வழக்கம்போல் கமல் ஒரு புதுமையை செய்யும்போது எதிர்ப்பு கிளம்பும். பின்னர் எதிர்த்தவர்களே அதை பின்பற்ற ஆரம்பித்து விடுவார்கள். இப்போதும் அப்படித்தான் நேரடியாக விஸ்வரூபம் படத்தை டிடிஹெச்சில் ஒளிபரப்ப தியேட்டர்காரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். அட அதைவிடுங்க. அப்படியே அதை DTH-இல் ஒளிபரப்ப உரிமையை கொடுத்தாலும் கவலைப்படாதீங்க. அதனால் உங்கள் தியேட்டர் பிசினஸ் பாதிக்கவே பாதிக்காது.எப்படியா? இப்பவெல்லாம் எங்கே சேர்ந்த மாதிரி இரண்டு மணி நேரம் கரண்டு இருக்கு. இந்த லட்சணத்தில் யாரு 1000 ரூபாய் பணம் கட்டி வீட்டில படம் பார்க்க போறா? அரை மணி நேரம் சீரியல் பார்க்கவே கரண்டு இல்லை. அப்புறம் எப்படி 3 மணி நேரம் சினிமா பார்க்கறதாம். அய்யோ அய்யோ.

----



ஒரு சின்ன குழந்தை கூட சொல்லிடும் அது இரட்டை இலை என்று. ஆனால் அது இரட்டை இலை இல்லை. பறக்கும் குதிரையின் இறக்கை என்று கூறி மானாவாரியாக சிரிப்பு மூட்டியிருக்கிறது த.நா.அரசு. 

அப்படியே எந்த நாட்டில் இப்படி குதிரை தனியாகவும் இறக்கை தனியாகவும் அதுவும் இறக்கை பக்கவாட்டில் இல்லாமல் நேராக அமைந்த குதிரை இருக்குன்னும் சொல்லிடலாம் அரசு. அப்படி ஒரு அதிசயக்குதிரையை பார்த்த புண்ணியமாவது நமக்கும் கிடைக்கும். நல்லவேளை, அது இரட்டை இலையே இல்லை என்று சொன்னதுபோல் அது எம்.ஜி.ஆர். சமாதியே இல்லைன்னு ஒரு புண்ணியவானும் சொல்லல.அந்த அளவில் சரிதான். என்னவோ போங்க...
கேட்கறவன் கேனையனா இருந்தா எருமைமாடு ஏரோப்ளைன் ஓட்டுறதா கூட சொல்வாங்க.

----


வாணகரத்தில் அமையவிருக்கும் வால்மார்ட்டை தடுக்கவேண்டும் தமிழக அரசு. இதை நான் சொல்லலங்க.. கடந்த வாரம் வால்மார்ட்டை இந்தியாவுக்கு இறக்குமதி செய்த மத்திய அரசை ஆதரித்த கலைஞர் சார் சொன்னதுதான்.
அந்நியன் அம்பியையே மிஞ்சிவிட்டார் கலைஞர். அதாவது பாம்பையும் அடிக்கனும் தடியையும் உடைக்கக்கூடாது. நல்ல லாஜிக். இப்படியே மெயிண்டன் பன்னுங்க தலைவரே.தனது வார்த்தை விளையாட்டின் மூலம்,ஒருவேளை இதற்கு இப்படியும் தன் வார்த்தை ஜாலத்தை காட்டலாம்.
வால்மார்ட் கூடாதென்று சொல்லவில்லை. வால்மார்ட் அண்ணாச்சி கடைகளுக்கு ஆப்படிக்கும் கூடாரமாக ஆகிவிடக்கூடாது என்றுதான் சொல்கிறேன்.

----


பாலா-வைரமுத்து-ஜீவி.பிரகாசின் புதிய கூட்டணியில் வந்திருக்கும் பரதேசி பாடல்கள் கேட்கும்படி இருக்கிறது.
அவத்தப்பையா பாடல் அருமையான கிராமத்து மெலடி. அதைப்போல் கங்கை அமரன் குரலில் செந்நீர்தானா பாடல் மனதை பிழிகிறது. அதில் ஒரு பத்தி

ஆண்டைக்கு சரி பாதி ஆவி போச்சே..
அட்டைக்கு சரிபாதி ரத்தம் போச்சே...
எங்க மேலு காலு் வெறும் தோலா போச்சே
அது கங்காணி செருப்புக்கு தோதா போச்சே..

இதைவிட காட்டிலும் மேட்டிலும் அலைந்து பண்ணையடிக்கும் ஒரு கூலித்தொழிலாளியின்் வாழ்வை வேறு வரியில் சொல்லிவிடமுடியாது.அதைப்போல் ஓ செங்காடே என்ற பாடல் பஞ்சம் பிழைக்க ஊர்விட்டு ஊர் பொவோர்களின் அவலத்தை சொல்கிறது. பாலாவே சொன்னது போல் வைரமுத்து ரத்தத்தில் தான் எழுதியிருப்பார் போல இந்த பாடல்களை. யாத்தே ,என்ற பாடலும் மேற்சொன்ன ரகம்தான். தன்னைத்தானே என்ற கானாப்பாடலும் உண்டு பரவாயில்லை ரகம்தான்.கேட்க கேட்க பிடிக்கலாம்.

---


ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு விகடன் ஒரு பிரத்யோகமாக ஒரு பக்கத்தை இணையத்தில் திறந்திருக்கிறது. அந்த பக்கத்தில் ரஜினி பற்றிய தகவல்கள் கொட்டிக்கிடக்கிறது. ஆரம்பகால ரஜினி படங்களுக்கு விகடன் எழுதிய விமர்சனங்களும், கொடுத்த மதிப்பெண்களும் கூட அப்பக்கத்தில் இடம் பெற்றுள்ளது.அத்துடன் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லும் பக்கமும் உண்டு. அங்கே வாழ்த்து சொல்பவர்களுக்கு விகடன் குழும இதழ்களை ஒரு வாரம் இணையத்தில் இலவசமாக படிக்க சலுகையும் அளிக்கிறார்கள். அந்த பக்கம் செல்ல இங்கே கிளிக்கவும். 
-----

உஷ்...........

புத்தாண்டு பரிசாக தலைநகரில் இப்போது இருக்கும் இரண்டு மணி நேர மின்வெட்டு நான்கு மணி நேரமாக உயர வாய்ப்பிருக்கிறதாம். காலை இரண்டு மணி நேரமும், மாலை இரண்டு மணி நேரமும் மின் வெட்டு இருக்கும் என்று சொல்கிறார்கள். முறையான அறிவிப்பு விரைவில் வருமாம்.....

==========================================

என்  ஃபேஸ்புக்கிலிருந்து....

எம்.ஜி.ஆரின் நினைவிடத்தில் அமைக்கப்பட்டிருப்பது இரட்டை இலையே அல்ல-த.நா.அரசு# 
அது எம்.ஜி.ஆரின் நினைவிடமே அல்ல என்று சொல்லாமல் விட்டவரை சந்தோஷம்.




இலைகள் சிறகுகளாவது அரசியலில் மட்டுமே சாத்தியம்.


எம்.ஜி.ஆர்.,
கலைஞர் போல் தமிழகத்திற்கு காவிரி தண்ணீரை ஜெயலலிதாவால் வாங்கித்தர முடியவில்லை- விஜயகாந்த்# 
அண்ணே அப்படினா கூட்டணி கன்ஃபார்மா?


கலைஞரின் பூர்வீகம் ஆந்திரா- அன்புமணி# 
கூட்டணி இல்லையென்றால் இந்தமாதிரி பரினாம ஆராய்ச்சியில் இறங்கிடுவங்க.


கலைஞரின் பூர்வீகம் ஆந்திரா-அன்புமணி#
அப்படியே ராவ்காரா ரெட்டிக்காரா நாயுடு காரான்னும் கண்டுபிடிச்சு சொல்லிடுங்களே

கலைஞரின் பூர்வீகம் ஆந்திரா-அன்புமணி# 
இவரு சொன்னா கரெக்டாத்தான் இருக்கும்.போதிதர்மன் பூர்வீகத்தையே கண்டுபிடிச்சவங்களாச்சே...





Post Comment

இதையும் படிக்கலாமே:


16 கருத்துகள்:

  1. அண்ணே சூப்பர் கலக்கலா இருக்கு

    பதிலளிநீக்கு
  2. சில விஷயங்கள நீ எழுதுனாத்தான் நல்லா இருக்கு....... அருமை.

    பதிலளிநீக்கு
  3. நல்லவேளை அது MGR சமாதியே இல்லை என சொல்லாமல் இருந்தார்களே...படித்தவுடன் குபீர் சிரிப்பை அடக்க முடியவில்லை...

    பதிலளிநீக்கு
  4. அந்த குதிரை விசயத்தில் பிராமண விஷ(ம)யம்(விஷம் ) உள்ளதாம்.....நல்லா இருக்கு சகோ

    பதிலளிநீக்கு
  5. // சில விஷயங்கள நீ எழுதுனாத்தான் நல்லா இருக்கு //

    அறந்தாங்கியானை வழிமொழிகிறான் இந்த அரசர்குளத்தான்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு உறைக்குள் ஒரு கத்திதான் இருக்கமுடியும். அரசர்குளத்தான் என்ற பெயரின் காப்பிரைட் என்னிடம்தான் இருக்கு. நீ வேணும்னா சின்ன அரசர்குளத்தான்னு பேரை வச்சுக்க.ஹி.ஹி.ஹி.

      நீக்கு
  6. வணக்கம் அண்ணே ... இந்த வாரம் கொஞ்சம் சுவை தூக்கலாகவே இருந்துச்சி ...

    பதிலளிநீக்கு
  7. நல்லதொரு பகிர்வு! நல்ல அலசல்! நன்றி!

    பதிலளிநீக்கு
  8. ஒரு சின்ன குழந்தை கூட சொல்லிடும் அது இரட்டை இலை என்று. ஆனால் அது இரட்டை இலை இல்லை. பறக்கும் குதிரையின் இறக்கை என்று கூறி மானாவாரியாக சிரிப்பு மூட்டியிருக்கிறது த.நா.அரசு. ///

    அண்ணே பூவ பூவுன்னும் சொல்லலாம், புய்ப்பனும் சொல்லலாம்,நீங்க சொல்ற மாதிரியும் சொல்லலாம் அண்ணே.

    பதிலளிநீக்கு
  9. என்னங்க நாய் பேய்னு பதிவு எழுதுறீங்க. ஓவரா தெரியல இதெல்லாம். நல்ல பதிவர்க்கு அழகு நல்ல பதிவு போடுறதுதான். நாயஞ்சில் என்ற வார்த்தைக்கு ஏன் கண்டனங்கள். நான் எந்த கட்சியையும் சேர்ந்தவன் இல்லை இருந்தாலும் இப்டி ஒருத்தர பத்தி இப்டி எழுதும் பொது கேக்காம இருக்க முடில. உங்கள சொல்லி குத்தம் இல்லை. உங்கள அரசியல் சாணக்கியர் அது இதுன்னு தூக்கி வச்சி பேசுறவங்கள தான் தப்பு சொல்லணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிச்சயாமாக நான் அந்த அர்த்தத்தில் அப்படி எழுதவில்லை. தன்னை வைகோ நாய் போல நடத்தினார் என்று நாஞ்சில் சொன்னதால்தான் அப்படி எழுதினேன். தவறை திருத்திக்கொள்கிறேன். நன்றி

      நீக்கு
  10. புரிந்துகொண்டமைக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.