1996-ஆம் ஆண்டிலிருந்து இப்போது வரை ஏறக்குறைய 17 ஆண்டுகளில் இடையே 13 மாதங்கள் தவிர்த்து 16 ஆண்டுகள் மத்தியில் கோலோச்சிக்கொண்டிருந்த தி.மு.க., அதிகாரங்களை உதறிவிட்டு மத்திய அரசிலிருந்து வெளியேறியுள்ளது. நேற்றுவரை மத்திய அரசிலிருந்து தி.மு.க.,வெளியே வரவேண்டும் என்றவர்கள் இப்போது வெளியே வந்தது நாடகம் என்கிறார்கள். ஈழத்திற்காக அரசியல் கட்சிகள் நடத்துவது எல்லாமே நாடகம்தான். இதில் எந்தக்கட்சியும் விதிவிலக்கல்ல.....
தி.மு.க.,எடுத்திருப்பது காலம் கடந்த முடிவுதான் என்றாலும், மிஞ்சி இருக்கும் கொஞ்சம் நஞ்சம் மரியாதையையும் தக்கவைத்து கொள்வதற்கு இதைவிட்டால் வேறு வழியில்லை. 2009-ஆம் ஆண்டிலேயே தி.மு.க.,வெளியே வந்திருக்க வேண்டும். இப்போது வெளியேறியுள்ளது நாடகம் என்று வழக்கம்போல் ஜெயலலிதா கூறியுள்ளார்.ஜெ.,சொல்வதுபோல் அப்போதே தி.மு.க.,வெளியேறியிருந்தால் என்ன நடந்திருக்கும்?....
காங்கிரஸ் கூட்டணியிலிருந்து தி.மு.க.,வெளியில் வந்தால் நாங்கள் ஆதரவளிக்கத் தயார் என்று இலவு காத்த கிளியாய் அப்போது சொல்லியவர்தான் ஜெ., ஆனால், ஜெயலலிதாவின் ஆதரவை நாங்கள் விரும்பவில்லை என்று குலாம் நபி ஆசாத் சொல்லி நோஸ்கட் செய்ததும் நினைவிருக்கலாம். இப்போது மாற்றி பேசுகிறார். ஆனால், பழ.நெடுமாறனும், தா.பாண்டியனும் இந்த விலகலை வரவேற்றிருப்பதுதான் உலக அதிசயம். ஆனால், வழக்கம்போல் சீமானும், வைகோவும் வாய் திறக்கவில்லை. அதானே அவர்கள் ரியாக்ட் செய்தால்தானே அதிசயம்?
-------------
குடும்பக்கட்டுப்பாட்டை ஊக்கப்படுத்த என்னவெல்லாம் செய்கிறார்கள் பாருங்கள் இந்த உ.பி. அரசாங்கம். கு.க.,செய்ய ஆள் பிடித்து வந்தால் பரிசாம். 500 பேரை பிடித்து வந்தால் நானோ காரும், 50 பேரை பிடித்து வந்தால் ஃபிரிட்ஜும், 25 பேரை பிடித்து வந்தால் தங்க காசும் பரிசாக தருகிறார்களாம். இந்த பரிசுகளுக்கு ஆசைப்பட்ட சிலர் தலித்துகளையும், பழங்குடியினரையும் குறி வைத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதேபோல், கு.க.,செய்யாவிட்டால் அரசாங்கத்தின் இலவச பொருட்கள் ஏதும் கிடைக்காது என்று அதிகாரிகளும் மிரட்டி வருகிறார்களாம். ஒரு நாளைக்கு 50-லிருந்து 100 ஆப்ரேசன் வரைதான் செய்ய வேண்டும் என்ற விதி முறைகளை காற்றில் விட்ட டாக்டர்கள் அதிக பட்சமாக 500 ஆப்ரேசன் வரை செய்கிறார்களாம்.
ஒரு ஒயின்சாப்பில் போதை அதிகமாகி படுத்திருந்த ஒருவர் கண் விழித்து பார்த்தபோது, மருத்துவமனையில் கு.க.செய்யப்பட்டி இருந்தாராம். இத்தனைக்கும் அவருக்கு வயது 23. இன்னும் கல்யாணம் ஆகவில்லை என்பதுதான் ஹைலைட். எமர்ஜென்சியின் போது சஞ்சய்காந்தி நடந்துகொண்டதைத்தான் இது நினைவுபடுத்துகிறது.
----------------
ஒரு அரசியல் கிசுகிசு.......
தே.மு.தி.க.,என்னும் ஆலமரத்திலிருந்து போயஸ் கார்டன் பக்கம் அடுத்ததாக ஒதுங்கும் இலைகளில் சேலம், கோவை, திருச்சி மாவட்ட இலைகளும் உண்டாம். விரைவில் இடப்பெயற்சி நடந்தாலும் ஆச்சர்யமில்லை.
---------------
என் பேஸ்புக்கிலிருந்து.......
இலங்கை அரசை காப்பாற்றுவதில் மத்திய அரசு கண்ணும் கருத்துமாக இருக்கிறது- விஜயகாந்த்#
எல்லோரும் ஜோரா கை தட்டுங்கப்பா...தலைவரு தேசிய அரசியலுக்கு வந்துட்டாரு.
----------------
காங்கிரஸ்காரன் வீதியில் இறங்கி போராடினால் தமிழகம் தாங்காது-ஞானசேகரன்#
என்னது காமராஜரும் செத்துட்டாரா?
---------------
தி.மு.க.வின் முடிவு பாராட்டுதலுக்குரியது-தா.பாண்டி
-------------------
அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை நிரந்தர எதிரியும் இல்லை, காலத்தின் கட்டாயம், அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா போன்ற வார்த்தைகளை இனி அடிக்கடி கேட்கலாம்.
----------------
இனி திராவிட கட்சியோடு கூட்டணி கிடையாது-ஞானதேசிகன்#
இப்படி சொல்லிட்டு அல்ரெடி ஒருத்தர் சுத்திக்கு இருக்கார். அவரோடு கூட்டணி வச்சிக்கங்களே?
ஆட்சியை பிடிச்சிடலாம்.
---------------
இதுவரை மத்திய அரசுக்கு கலைஞர் எழுதிய கடிதங்களிலேயே உருப்படியான கடிதம் இப்போது எழுதிய விலகல் கடிதம் தான்.
========================================
Tweet |
காலம் கடந்த முடிவானாலும் இதிலும் அரசியல் லாபத்தோடுதான் கலைஞர் முடிவெடுத்துள்ளார்! ஜெ.கலைஞர் இருவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்! நன்றி!
பதிலளிநீக்குஉருப்படியான கடிதம்??????சும்மா காமெடி பண்ணாதீங்க,கஸாலி!
பதிலளிநீக்கு