எங்க தொகுதியில் அரசன் என்ற எம்.எல்.ஏ., இருந்தார். 2001-ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில்
திருநாவுக்கரசரின் எம்.ஜி.ஆர்.அண்ணா.தி.மு.க.சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர். மிகவும் எளிமையானவர்.
சித்தகண்ணி என்ற அவரது கிராமம் எங்கள் ஊருக்கு மிக அருகில் 2 கி.மீ.தூரத்தில் இருக்கிறது. அவர் ஊரிலிருந்து அறந்தாங்கி செல்லும் பஸ் எங்கள் ஊர் வழியாகத்தான் வரும். அப்படி வரும் பஸ்சில்தான் இவர் தினமும் மாலை வருவார் அறந்தாங்கியில் இருக்கும் எம்.எல்.ஏ., அலுவலகம் செல்வதற்காக
இது தினமும் நடக்கும் செயல். வரும்போது இருக்கை காலியாக இருந்தால் உட்கார்ந்து வருவார். இல்லாவிட்டால் நின்று கொண்டுதான் பயணிப்பார். யாராவது அவரை பார்த்து எழுந்து இடம் கொடுத்தால் கூட மறுத்து விடுவார். அவ்வளவு எளிமை. ஈகோ இல்லாதவர் அவர்.
அறந்தாங்கி பஸ் ஸ்டாண்டில் பஸ் நின்றதும் இறங்கும் இவர் யாராவது தெரிந்தவர் இருந்தால் அவர்களின் பைக்கிலோ அல்லது சைக்கிளிலோ ஏறி அலுவலகம் செல்வார். யாருமே இல்லாவிட்டால் நடந்தே போவார். பந்தா என்றால் கிலோ எவ்வளவு என்று கேட்பார்.
அவர் கிராமத்திற்கு சென்று பார்த்தால், சாலை ஓரத்திலிருக்கும் குளத்தில் குளித்துவிட்டு வெறும் துண்டை மட்டும் போர்த்திக்கொண்டு வருவார். அவரை அந்த நிலையில் அடிக்கடி பார்த்திருக்கிறேன்.
திருநாவுக்கரசர் தன் கட்சியை பி.ஜே.பி.,யில் இணைத்ததும் இவரும் அங்கே போய்விட்டார். பின்னர் தி.மு.க.வில் இணைந்தார். இப்போதும் பஸ்சில்தான் போகிறார் வருகிறார் முன்பை போலவே எந்த வித பந்தாவும் இல்லாமல்.
வண்டு முருகன்களே பத்து அல்லக்கைகளுடன் வந்து அலப்பறை கொடுக்கும் இக்காலத்தில் இப்படி ஒரு எம்.எல்.ஏ. இருந்ததே எங்களுக்கு பெருமைதான். என்ன சொல்றீங்க.
Tweet |
அரசன் ஒரு சிறந்த எம்.எல்.ஏ என்று சொல்ல முடியாது.. ஆனால் எளிமையான மனிதர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை..
பதிலளிநீக்குஅவர் காலத்தில் தொகுதி பெரிதாக வளரவில்லை என்பது உண்மைதான். ஆனாலும், ஒரு எளிமையான எம்.எல்.ஏ.
நீக்குathanaal than avaru adutha thadavai jeyikkale?
பதிலளிநீக்குஅப்படியில்லை. மீண்டும் அவர் அவர் சீட் கேட்கவில்லை என்பதுதான் நிஜம்.
நீக்குஅவரோட புகைப்படம் கிடைக்கவில்லைங்களா..? பதிவேற்றியிருந்தால் நல்லாயிருந்திருக்கும்..
பதிலளிநீக்குஅவர் புகைப்படத்தை எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை.
நீக்குhahahaa brother nallavanga photo kuda kidaikatha kalama erukku intha kalam,,,,,
நீக்குஇது மாதிரி பல சட்ட மன்ற உறுப்பினர்கள் இருந்தார்கள் 1960 களில்! ஆனால் இப்போது?
பதிலளிநீக்குஅது ஒரு கனாக்காலம்.
நீக்குஉண்மையில் ஆச்சர்யம்தான். இப்படிப் பாட்டவர்களும் இருக்கிறார்களே மகிழ்ச்சிதான்.
பதிலளிநீக்குஇவர்களை போன்றவர்கள் அபூர்வமாய் இருப்பார்கள்.
நீக்குசில ஆண்டுகள் முன்புவரை கம்யூனிஸ்ட் கட்சி MLAகள் இப்படி இருப்பார்கள். திராவிட கட்சி MLA இப்படி இருப்பது ஆச்சர்யமாக உள்ளது!
பதிலளிநீக்குஅவரை பார்த்தால் திராவிட கட்சி எம்.எல்.ஏ.க்களுக்குரிய எந்த பகட்டும் இல்லாதவர்.
நீக்குஇத்தகைய எளிய மனிதர்களை பற்றி எழுதுவது அவசியமான ஒன்று!.
பதிலளிநீக்குஎப்போதோ எழுதியிருக்கனும். கொஞ்சம் தாமதமாகி விட்டது.
நீக்குஎளிமையான மனிதர்கள் நினைவில் நிற்கின்றனர்! அருமையான பதிவு! நன்றி!
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி பாஸ்.
பதிலளிநீக்கு