என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

புதன், மார்ச் 06, 2013

8 என் சைக்கிளில் பீடியா...........




இதன் முதல் பாகத்தை படித்துவிட்டு வந்துடுங்க.....ஒரு புரிதலுக்காக......சுட்டி.....

ஆளாளுக்கு ஒண்ணு சொன்னாங்க. இன்னைக்கு மத்தியானம் சாப்பாட்டுக்கு பின்னாடின்னு முடிவு செஞ்சோம்.  சரி யாரு போய் கல்கண்டு அதாங்க பீடி கட்டு வாங்குவதுனு பேசினப்ப என்னை வாங்க சொன்னாங்க. எனக்கு கை காலெல்லாம் உதற ஆரம்பிச்சிடுச்சு. நான் முடியாது வேற ஆள் வாங்கட்டும் என்றேன்.
இல்லை இல்லை நீயே வாங்கிடு. உன் சைக்கிள்தான் டைனமோ இருக்கு. அதனால நீதான் லாயக்கு என்றார்கள்.


சரி டைனமோவிற்கும் பீடி வாங்குவதுக்கும் என்ன சம்பந்தம்?....இருக்கு..............
அதாவது சைக்கிளில் ஹெட்லைட் இருக்கும். அந்த ஹெட்லைட்டை திறப்பதற்காக ஒரு லாக் இருக்கும்.....அவசரத்திற்கு பல்பு ஏதும் அடிபட்டு விட்டால் மாற்றிக்கொள்வதற்காக அந்த வசதி. அதையே நாங்க பீடியை வாங்கி ஒளித்துவைக்க பயன்படுத்திக்கொள்வோம். அதாவது வாங்கும் பீடியை அந்த ஹெட்லைட் லாக்கை திறந்து அதில் பதுக்கி வைத்து விடுவோம். அன்று அப்படித்தான் பீடியை வாங்கி ஹெட்லைட்டில் வைத்து விட்டோம். சரி வாங்கிட்டோம். எங்கே போய் பீடி குடிப்பது? ஒருத்தன் குளத்திற்கு போகலாம் என்றான். அது சரியா வராது. அடிக்கடி பெரியாளுங்க வருவாங்க மாட்டிக்குவோம் என்று நிராகரித்தோம்.



பதினெட்டாம் கண்ணு பாலத்திற்கு போய்விடுவோம் என்றேன் நான். அந்த பாலம் தொட்டிப்பாலம் போல் இருக்கும்.ஊருக்கு சற்று ஒதுக்குப்புறமாக இருக்கும். அவசியம் இல்லாமல் யாரும் அங்கு வரமாட்டார்கள். (அந்தப்பாலம் பற்றி மேலும் அறிய இந்த பதிவை படித்திடுங்க...சுட்டி-1, சுட்டி-2)....  

ஆளுக்கு ஒரு சைக்கிளில் ஒரு பத்து பேர் அங்கு கிளம்பினோம். போனாலும் பயமாகத்தான் இருந்தது மனதிற்குள்.....யாரும் பார்த்து விடுவார்களோ என்று.....இருந்தாலும் போய்விட்டோம். முதலில் ஐந்து பேர் பீடி குடிக்கும்போது ஐந்து பேர் ஆள் யாரும் வருகிறார்களா என்று பார்த்துக்கொள்வோம்.... அடுத்த ஐந்து பேர் குடிக்கும்போது முதலில் குடித்த ஐந்து பேர் ஆள் பார்த்துக்கொள்வார்கள். தூரத்தில் ஒரு தலை தெரிந்தாலும் போதும் உடனே அலார்ட் ஆகிவிடுவோம். இப்படித்தான் சில நாட்கள் கழிந்தது. பிறகு சற்று முன்னேறி சே...சே...பின்னேறி சைக்கிள் சீட் ஸ்ப்ரிங்க் கேப்பில் தீப்பெட்டியையும், சட்டை பாக்கெட்டில் பீடியையும் வைக்கும் அளவிற்கு வளர்ந்தோம். அதன் பின் எப்போதும் பீடி சாப்பிட்டபின் மட்டும் கோல்ட் ப்ளேக் ஃபில்டர் (அப்போது ஒரு சிகரெட்டின் விலை 60 பைசா) குடித்தோம். பல நாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்பது போல் ஒரு நாள் வீட்டில் மாட்டி உதை வாங்கியது தனிக்கதை.




Post Comment

இதையும் படிக்கலாமே:


8 கருத்துகள்:

  1. குட்,குட்!!பீடிலேருந்து கோல்டு பிளேக் !ஹ!ஹ!ஹா!!!!!

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.