சமீபத்தில் தஞ்சையில் ஜெயலலிதாவிற்கு நடந்த பாராட்டு விழாவில் கவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட முயற்சி எடுத்த முதல்வர் ஜெயலலிதாவை பாராட்டி தஞ்சையில் விழா எடுத்து அவருக்கு பொன்னியின் செல்வி பட்டமும், சிலையும் வழங்கப்பட்டது. அதில் பேசிய ஜெயலலிதா சில பொய்களை கூறி முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைத்திருக்கிறார்.
பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு செயலற்ற, வலுவற்ற, பயனற்ற நதி நீர் ஆணையத்தை அமைத்தது. இதை கண்டித்து மத்திய அரசுக்கு அண்ணா.தி.மு.க.,கொடுத்து வந்த ஆதரவை வாபஸ் பெற்று அமைச்சர் பதவிகளை தூக்கி எறிந்தோம்- இது ஜெயலலிதா பேசியதன் ஒரு பகுதி.
சரி நிஜமாகவே இதற்காகத்தான் அப்போது அண்ணா.தி.மு.க., சார்பில் கேபினட்டில் இருந்த தம்பிதுரை, சேடப்பட்டி முத்தையா ஆகியோரை பதவியில் இருந்து ராஜினாமா செய்ய சொன்னாரா ஜெயலலிதா என்றால் அதுதான் இல்லை. காவிரி பிரச்சினையை விட ஜெயலலிதாவின் ஈகோவே 13 மாதங்களில் வாஜ்பாய் அரசு கவிழ காரணம். இப்போது ஜெயலலிதா சொல்லும் காரணத்தை அப்போது அதாவது ஜெயலலிதா சொல்லவில்லை.
மாறாக, ஜெயலலிதா சொன்ன காரணம்,
கடற்படை தளபதி விஷ்ணு பகவத்தை நீக்கியதை எங்களிடம் சொல்லவில்லை மத்திய அரசு. கூட்டணி கட்சி என்ற ரீதியில் எங்களை கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவு எடுத்துள்ளது மத்திய அரசு என்ற குற்றச்சாட்டை முன் வைத்தார். அப்போது இந்த விஷயம் பரபரப்பாக அலசப்பட்டது. அதேபோல் ஜார்ஜ் பெர்னாண்டஸை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும் என்றும் ஜெயலலிதா கோரிக்கை வைத்தார். இன்னும் சில விஷயங்களும் பரபரப்பாக பேசப்பட்டது.
சுப்ரமணிய சுவாமிக்கு நிதி அமைச்சர் பதவியை தரவேண்டும்.
வாழப்பாடி ராமமூர்த்தியை பெட்ரோலிய துறையிலிருந்து நீக்க வேண்டும்.
முக்கியமாக, தமிழ்நாட்டில் தி.மு.க.ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றெல்லாம் பேசப்பட்டது. நிஜம் இதுதான். ஜெயலலிதா இப்போது சொல்வது போல காவிரி பிரச்சினைக்காகத்தான் அமைச்சரவையிலிருந்து வெளியேறினார் என்று வைத்துக்கொண்டால்...தமிழக மக்களின் வாழ்வாதார பிரச்சினையாக இருக்கும் காவிரியை காரணம் காட்டி வெளியில் வந்த்தை அப்போதே தம்பட்டம் அடித்திருப்பார். ஆனால், ஜெயலலிதா எந்த இடத்திலும் அதைப்பற்றி வாய் திறக்கவேயில்லை. 1998-1999 ஆண்டு அரசியலை கூர்ந்து கவனித்தவர்கள் இதை அறிவார்கள். பாவம் எல்லோருக்கும் செலக்டிவ் அம்னீசியா என்று நினைத்து விட்டார் போலும்.
எனக்கு தெரிந்து காவிரி பிரச்சினைக்காக மத்திய அமைச்சரவையிலிந்து ராஜினாமா செய்த ஒரே தமிழர் வாழப்பாடியார்தான்.
----------------------
கலைஞரையும் குஷ்புவையும் கொச்சைப்படுத்தி இன்னொரு மணியம்மை என்ற ரீதியில் குமுதம் புரட்டர் செய்தி வெளியிட்ட போது ஆஹா ஓஹோ என்று சொன்னவர்கள், இப்போது தஞ்சையில் ஜெயலலிதாவுக்கு நடந்த பாராட்டு விழாவிற்கான சிலவு ரூபாய் 50 கோடி எனவும் வறுமையில் வாடும் விவசாயிகளுக்கு அவ்வளவு பணம் ஏது? இது அவர்களின் பணமல்ல என்றும் இனையத்தில் விகடன் வெளியிட்ட செய்திகளுக்காக ஓலமிடுகிறார்கள். விகடன் விவசாயிகளின் போராட்டத்தை கொச்சைப்படுத்தி விட்டதாம். வறுமையின் காரணமாக விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்று ஓ.பன்னீர் செல்வம் சொன்னதை விடவா கொச்சையான வார்த்தை வேணும் விவசாயிகளை கேவலப்படுத்த.
--------------------------
ஈழப்போர் உச்சக்கட்டத்தில் நடந்து கொண்டிருந்த போது, இரண்டு மணி நேர உண்ணாவிரதத்தோடு ஈழத்தமிழர்களுக்கான தன் பங்கை நிறுத்திக்கொண்டது மாநிலத்தை ஆண்ட திமுக.
அதன் பின் திடீர் ஞானோதயம் வந்தது போல, சமீப காலமாக தூதரகம் முற்றுகை, டெசோ பந்த் என்று அறிவித்து எல்லோரையும் சிரிக்க வைத்தார் கலைஞர்.
அப்போதே இந்த உக்கிரத்தை காட்டியிருந்தால் கொஞ்சம் நஞ்சம் மரியாதையாவது மிச்சமிருந்திருக்கும். ஆனால், அதையெல்லாம் அமைதியாக பார்த்து விட்டு இப்போது போராட்டத்தை கையிலெடுத்தது நாடகமாகவே பார்க்கப்படுகிறது.
அதேநேரம், நேற்று அறிவித்த டெஸோ பந்த் ஓரளவு வெற்றியடைந்ததாகவே தெரிகிறது. டெசோ மாபெரும் வெற்றி என்று சொல்கிறார்கள் உ.பிக்கள். இல்லவே இல்லை அது மிகப்பெரிய தோல்வி என்கிறார்கள் ர.ர.க்கள்.
என்னைக்கேட்டால் இரண்டும் சரிதான் என்பேன். நான் காலையில் பார்த்ததை வைத்து, சிலரிடம் பேசியதை வைத்து பார்க்கும் போது சில இடங்களில் பந்த் வெற்றி பெற்றிருக்கிறது. சில இடங்களில் தோல்வியுற்றிருக்கிறது. பல இடங்களில் திறந்திருந்த கடையை மூட சொல்லியும் பல இடங்களில் மூடியிருந்த கடையை திறக்க சொல்லியும் அன்பான வேண்டுகோள் விடுத்தார்களாம் ர.ர.வும், உ.பி. யும். இதையும் ஒரு நடுநிலை நண்பர்தான் சொன்னார். இதுதான் இப்போதைய கள நிலவரம்.
நாடகம், ஏமாற்று என்று எத்தனையோ விமர்சனங்கள் திமுக.வை தாக்கினாலும் மக்களில் சிலர் ஈழப்பிரச்சினைக்கு திமுக. தீர்வு காண முடியும் என்று நம்புவதையே இது காட்டுகிறது. ஆனால், தி.மு.க.,மீது மக்களுக்கு இன்னும் நம்பிக்கை வரவேண்டுமென்றால் காங்கிரஸ் கூட்டணியை விட்டு வெளியே வந்தால்தான் முடியும். பழ.நெடுமாறன் கூட சமீபத்தில் இதை சொல்லிருந்தார்.
மத்திய அரசிலிருந்து திமுக.,வை வெளியே வருமாறு எல்லோரும் அழைப்பதை பார்க்கும்போது ஒரு படத்தில் சும்மா உட்கார்ந்திருக்கும் வடிவேலுவை சீண்டி ஒரு வேனுக்குள் அழைத்து சென்று கிட்னி எடுக்கும் காமெடிதான் நினைவுக்கு வருகிறது. திமுக., மத்திய அரசை விட்டு வெளியே வந்தால் மத்திய அரசினால் இவர்களுக்கு சேதம் அதிகமாக இருக்கும். இதற்கு பயந்தே கலைஞரும் வெளியே வர மறுக்கிறார்போல.
-------------------------
என் பேஸ்புக்கிலிருந்து..............
ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ், நார்வே போன்ற நாடுகளில் ஜெயலலிதாவை பாராட்டுகிறார்கள். -தா.பாண்டியன்.# அப்படியே இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் சேர்த்துக்கிட்டீங்கன்னா கோபால் பல்பொடிக்காவது விளம்பரம் கிடைத்திருக்கும்.
-----------
சீமான், சரத்குமார், வைகோ, தா.பாண்டியன் ஆகியோர் பேசறதையெல்லாம் வைத்து பார்க்கும் போது விரைவில் தமிழக அரசால் மலிவு விலை இன்னோவா கார் கம்பேனி ஒன்று ஆரம்பிக்கப்படும் சாத்தியம் உண்டு.
-------------
அண்ணா.தி.மு.க., நிதியெல்லாம் இன்னோவா கார் வாங்கியே காலியாகிடும் போல. அவ்வளவு போட்டி இந்த ஜால்ராக்களால்.
-----------
விளம்பரம் செய்ய நடிகர்களுக்கு கோடிக்கணக்கில் கொட்டி கொடுப்பதை விட்டு, விற்கும் பொருட்களுக்கு கனிசமான விலைக்குறைப்பு செய்தாலே போதும். நுகர்வோர்களுக்கும் பணம் மிச்சமாகும். கம்பெனிக்காரர்களுக்கும் விளம்பரச்சிலவு மிச்சமாகும். குறிப்பா நடிகர்களின் இம்சையும் இருக்காது.
-------------
Tweet |
கோயபல்ஸ் செல்வி
பதிலளிநீக்குதமிழக கம்யுனிஸ்டுகள் மிகவும் கோமாளிகளாகி வருகிறார்கள் ,அதிலும் தாவன்னா ம்ம்ம்ம் .
பதிலளிநீக்குஅய்யய்யோ... இதுக்கு கமென்ட் போட்டா என்னை ஜெயில்ல பிடிச்சு போட்டுட மாட்டாங்களே.... நான் மாட்டேன்..நான் மாட்டேன்.. :-)
பதிலளிநீக்குஅம்மா சொன்னா சரியாதான் இருக்கும்! :-)
அண்ணே எல்லாரும் ஏமாத்துகாரனுங்க
பதிலளிநீக்குபொன்னியின் செல்வி பொய்தான் உரைத்திருக்கிறார்! விளைச்சல் இல்லாத விவசாயிகள் எதற்கு 50 லட்சம் செலவு செய்ய வேண்டும்? தன் குடும்பத்தை காப்பாற்றவே காங்கிரஸ் ஆதரவு கொள்கையில் உள்ளது தி.மு.க. அருமையான பகிர்வு! நன்றி!
பதிலளிநீக்குவணக்கம் கசாலி,சார்!///உண்மையில் அந்தப் பாராட்டு விழாவுக்கான செலவுக்கு,எங்கிருந்து பணம் வந்தது என்று சி.பி.ஐ விசாரித்தால் தேவல.
பதிலளிநீக்கு//மக்களில் சிலர் ஈழப்பிரச்சினைக்கு திமுக. தீர்வு காண முடியும் என்று நம்புவதையே இது காட்டுகிறது//
பதிலளிநீக்குசிறந்த நகைச்சுவை!
@ s suresh sir,
பதிலளிநீக்கு50 லட்சமா?
50 கோடியா?
//நாடகம், ஏமாற்று என்று எத்தனையோ விமர்சனங்கள் திமுக.வை தாக்கினாலும் மக்களில் சிலர் ஈழப்பிரச்சினைக்கு திமுக. தீர்வு காண முடியும் என்று நம்புவதையே இது காட்டுகிறது. //
பதிலளிநீக்கு:))))))
ரஹீம் கடைசி ஐடியா சூப்பரா இருக்கே.
பதிலளிநீக்குநாடகமே உலகம் அனைவரும் நடிகர்கள்! வேடங்கள்கள் தான் மாற்றம்!
பதிலளிநீக்கு