இன்று காலை மு.க.ஸ்டாலின் வீட்டில் நடந்த ரெய்டு பல அதிர்வு அலைகளை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல் பல கேள்விகளையும் எழுப்பியுள்ளது. சரி ஏன் இந்த ரெய்டு? ஒரு ப்ளாஷ்பேக்.....
அலெக்ஸ் ஜோசப் என்பவர் வெளிநாட்டிலிருந்து விலை உயர்ந்த சொகுசு கார்களை வாங்கி இந்தியாவில் இருக்கும் வி.ஐ.பி.களுக்கு சப்ளை செய்யும் கார் வியாபாரி. கார் வியாபாரி என்று சொல்வதை விட கார் கடத்தல்காரன் என்றும் சொல்லலாம்.
ஒவ்வொரு முறையும் வெளிநாட்டிலிருந்து மிக விலை உயர்ந்த காரை இந்தியாவிற்குள் இறக்குமதி செய்த விதத்தில் பல கோடி ரூபாய் வரி கட்டாமல் டிமிக்கி கொடுத்து வந்தார். அதனாலேயே மத்திய அரசால் பத்து வருடங்கள் தேடப்பட்டு வந்தவர் கடந்த வருடம் மாட்டினார்.
அவரிடம் விசாரித்ததில் பல வி.ஐ.பி.களுக்கு வரி கட்டாமல் காரை இறக்குமதி செய்த விஷயத்தை சொன்னார். அப்படித்தான் உதயநிதியும் இதில் சிக்கினார். அவருக்கு ஆஸ்திரேலியாவிலிருந்து சுமார் 20 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹம்மர் காரை இறக்குமதி செய்து விற்றுள்ளார் அலெக்ஸ். இதில் குற்றவாளி அலெக்ஸ்தானே தவிர உதயநிதி அல்ல. அவரிடம் கார் வாங்கியவர்கள் எல்லோரும் சாட்சிகளே.
இந்த கார் மேட்டர்தான் இப்போது சி.பி.ஐ. ரெய்டு அளவிற்கு போயிருக்கிறது. இன்று காலை ஸ்டாலின் வீட்டில் ரெய்டு செய்த சி.பி.ஐ., பாதியிலேயே ரெய்டை முடித்து கிளம்பியது. நேற்று முன்தினம் காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலகிய சூடு ஆறும் முன் இந்த ரெய்டு அரசியல் காழ்ப்புணர்ச்சியாகவே பார்க்கப்படுகிறது.
ப.சிதம்பரம் இந்த ரெய்டுக்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை என்று சொன்னதோடு மட்டுமல்லாமல் கடும் கண்டனத்தையும் பதிவு செய்து இந்த ரெய்டையும் பாதியிலேயே நிறுத்த உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து இந்த ரெய்டுக்கு யார் காரணம் என்று ஆராயும் போது, பர்சனல் மற்றும் ட்ரைனிங்க் என்ற துறையை கையில் வைத்திருக்கும் பதினைந்துநாள் நாராயணசாமியின் வேலை என்று தெரிந்ததாம். இந்த பர்சனல் மற்றும் ட்ரைனிங் துறையின் கீழ்தான் சி.பி.ஐ.வருதாம்.
எல்லாவற்றிற்கும் பதினைந்து நாள் கெடு கொடுக்கும் நாராயணசாமி ரெய்டை மட்டும் ஏன் உடனே செய்தார் என்றால்... தன் தலைமையிடம் நல்ல பேர் எடுக்கவாம். ஆனால் தலைமை இதை ரசிக்காமல் நாராயணசாமியை கடிந்து கொண்டதாம். இப்போதுள்ள பதட்டத்தை தவிர்க்க அல்லது தடுக்க நாராயணசாமியை பலி கொடுத்தாலும் ஆச்சர்யமில்லை.
ஆனால், இந்த ரெய்டே ஒரு நாடகம். மத்திய அமைச்சரவையை வெளியிலிருந்து ஆதரவு கொடுத்துக்கொண்டிருக்கும் முலாயம் சிங்கையும் மாயாவதியையும் மிரட்டுவதற்காக இப்படி ஒரு நாடகத்தை அரங்கேற்றியுள்ளதாக கூறுகிறார்கள். எனக்கென்னவோ இது நம்பும் மாதிரி இல்லை. காரணம், மத்தியில் வெறும் 281 இடங்களே வைத்துக்கொண்டு ஆட்சியில் இருக்கிறது மன்மோகன் அரசு. இந்த 281 இடங்களில் வெளியிலிருந்து அரசை ஆதரிக்கும் முலாயமின் எம்.பி.க்கள் மட்டுமே 21. அதேப்போல் மாயாவதியின் எம்.பி.க்கள் 22. மொத்தம் 43.
இந்த 43 இடங்களில் யாராவது ஒருவர் வெளியேறினாலும் ஆட்சி பணால் ஆகிடும்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் முலாயமையும், மாயாவதியையும் மிரட்டிப்பார்ப்பதென்பதே தற்கொலை முயற்சிதான். பெரும்பான்மை பலம் இருந்தாலாவது முலாயமோ, மாயாவதியோ போனால் போகட்டும் என்று மிரட்டிப்பார்க்கலாம். இப்போது அப்படி நினைப்பது கூட ஆட்சிக்கு ஆபத்தில்தான் முடியும். அதேநேரம்.....முலாயம்தான் தன்னை தீவிரவாதியுடன் தொடர்பு படுத்திய மத்திய அமைச்சர் பேனி பிரசாத் வர்மாவை நீக்கச்சொல்லி அழுத்தம் கொடுத்துக்கொண்டிருக்கிறார். ஆகவே மத்திய அரசு முலாயமை மிரட்டவில்லை என்பது இதன் மூலம் தெளிவாகிறது. ஆனால், இந்த ரெய்டு யாருக்கும் தெரியாமல் நடந்திருக்க முடியாது என்பது மட்டும் நிச்சயம்.
Tweet |
என்னமோ நடக்குது
பதிலளிநீக்குஏதும் சிக்கலையே
பதிலளிநீக்குபடித்தேன். அரசியல் பதிவுகள் நான் படிப்பதில்லை. எல்லோரும் திருடர்கள்.
பதிலளிநீக்குநல்ல அரசியல் நல்ல ஜனநாயகம்.
பதிலளிநீக்குஎல்லாப் பயலும் மக்களை கேவலமாக நினைக்கிறார்கள்...
பதிலளிநீக்குநல்ல சுவையான அரசியல் அலசல்!
பதிலளிநீக்குஅன்பு நண்பரே வணக்கம்.
பதிலளிநீக்குஎன்ன சார் அதுக்குள்ள புகார் சொல்ல ஆரம்பித்துவிட்டீர்கள்.காங்கிரசால் இன்னும் திமுக சந்திக்க வேண்டியது நிறைய இருக்கிறது.யோசித்து வையுங்கள்.நிறைய தாங்கள் எழுத வேண்டியது வரும்.
வாழ்க வளமுடன்
கொச்சின் தேவதாஸ்