என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

செவ்வாய், மார்ச் 05, 2013

31 தீக்குளிப்பதற்கு பெயர் தியாகமல்ல.....முட்டாள்தனம்.





உணர்ச்சி வேகத்தில் தீக்குளிப்பதென்பது சர்வ சாதா’ரண’மாகிவிட்டது இப்போது. நேற்றுக்கூட மணி என்பவர் தீக்குளித்து உயிரை விட்டிருக்கார்.

கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு செங்கொடி தீக்குளித்தபோது நான் எழுதிய  பதிவையே இப்போது மீள்பதிவாக தருகிறேன்

////////மூன்று உயிர்களை காப்பாற்ற தன் உயிரை இழந்துள்ளார் செங்கொடி.இப்படி தற்கொலை செய்துகொள்வதால் ஒரு மாற்றமும் நிகழப்போவதில்லை,உயிர் போவதை தவிர.... எதற்கெடுத்தாலும் இப்படி உணர்சிவசப்பட்டு தற்கொலை செய்து கொள்வது வாடிக்கையான ஒன்றாகிவிட்டது. தற்கொலை செய்து கொண்டால் அந்த ஐந்து நிமிடமோ, பத்து நிமிடமோ தான் சம்பந்தப்பட்டவர்களுக்கு வேதனை, வலி எல்லாம். உயிர் பிரிந்துவிட்டால் எல்லாம் முடிந்துவிடும். ஆனால், தற்கொலை செய்து கொண்டவர்களின் பெற்றோருக்கோ, குடும்பத்திற்கோ அது ஆயுள் முழுவதும் வலியும், வேதனையும். 

தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் எல்லாம் பெரும்பாலும் திட்டம் போட்டு வருவதில்லை. அந்த கன நிமிட யோசனைதான். இன்னும் கொஞ்ச நேரம் யோசித்தால் அது எத்தனைபெரிய முட்டாள்தனம் என்பது புரியும். துணிச்சலில் மிகப்பெரிய துணிச்சல் சாவை நேருக்கு நேர் சந்திப்பதுதான். அப்படி சாவை சந்திக்கும் துணிச்சலில் பாதியளவை  போராடவோ, வாழ்வதற்க்கோ பயன்படுத்தினாலே போதும் வெற்றியடைந்து விடலாம்.
செங்கொடியின் தியாகத்தை நான் கொச்சைப்படுத்தவில்லை.அதே நேரம், இந்த உயிர்தியாகத்தை தற்கொலையை தலையில் தூக்கிவைத்து கொண்டாட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். அப்படி கொண்டாடினால், அது தற்கொலை செய்து கொள்ளும் உத்வேகத்தை மற்றவர்களுக்கும் கொடுத்து விடும் அபாயம் இருக்கிறது ஜாக்கிரதை. அந்த மூன்று உயிர்களுக்காக போன முதல் உயிரும், கடைசி உயிரும் செங்கொடியின் உயிராக மட்டும் இருக்கட்டும்./////////////

------------------

இது இப்போது எழுதியது.......



நம் எதிர்ப்பை பதிவு செய்வதற்கும் போராட்டம் செய்வதற்கும் எத்தனையோ வழிகள் இருக்கிறது. அந்த வழிகளில் ஒன்றாக தீக்குளிப்பை தேர்ந்தெடுப்பது என்பது வடிகட்டிய முட்டாள் தனம். இதனால் யாருக்கும் ஒரு லாபமும் இல்லை. தன் குடும்பத்தினர் அநாதையாய் தெருவில் நிற்பதைத்தவிர.

இப்படிப்பட்ட முட்டாள்களை தியாகியாக சித்தரிப்பதால்தான் மீண்டும் இன்னொரு தியாகி தயாராகிறான் தீக்குளிக்க.

உணர்ச்சி வேகத்தில் எடுக்கப்படும் முடிவுகள் எப்போதும் சரியானதாக இருக்காது என்று மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது.

இதை நான் கொச்சைப்படுத்த வில்லை. தயவு செய்து இதை ஆதரித்து எழுதாதீர்கள். கண்டுகொள்ளாமல் விட்டுவிடுங்கள். அப்போதுதான் இன்னொரு தியாகி உருவாகாமல் நாம் தடுக்கமுடியும். இல்லை நான் ஆதரிப்பேன் என்பவர்கள் தன்னிலிருந்து தொடங்குங்கள் இந்த தியாகத்தை முட்டாள்தனத்தை

--------



உனக்கென்ன ஒரே தீக்குச்சியில்
நிரந்தரமாய் போய்விட்டாய்.
இங்கே நிர்க்கதியாய் நிற்பது
உன் குடும்பமல்லவா?
இரண்டு நாள் உன்னை பற்றி
பேசிவிட்டு வேறு வேலை
பார்க்க போய்விடுவார்கள்
நீ சார்ந்திருந்த தலைவர்கள்.
ஆனால், எப்போதும் சிலுவை
சுமக்க போவது உன் உற்றார்களே.
இங்கே எரிய வேண்டியது
தீக்குச்சிகள் அல்ல
தீப்பெட்டிகளே



Post Comment

இதையும் படிக்கலாமே:


31 கருத்துகள்:

  1. முட்டாள் தனத்தின் உச்சம் இது .இது போன்ற செயலை அரசியல்வாதிகள் குளிர்காய உபயோகம் செய்கின்றனர் .இவனை நம்பி எத்தனை பேர் இருந்தார்களோ தெரியவில்லை .இன்றைய தலைப்புசெய்தியாகி நாளை மறந்துவிடும் உலகம் .ஆனா அவனை நம்பிய குடும்பத்துக்கு வேதனை மட்டுமே மிச்சமாக இருக்கபோவுது

    பதிலளிநீக்கு
  2. இப்படிப்பட்ட முட்டாள்களை தியாகியாக சித்தரிப்பதால்தான் மீண்டும் இன்னொரு தியாகி தயாராகிறான் தீக்குளிக்க.

    தலைவர்கள் தூண்டிவிட்டு இதில் அரசியல் செய்கிறார்கள்; குளிர் காய்கிறார்கள்; பாவம் தொண்டர்கள். இவர்களுக்கு இவர்கள் குடும்பம் படும்பாடு.

    பதிலளிநீக்கு
  3. மிகவும் அவசியமான பதிவு சகோ.!

    முத்துக்குமார் என்று முதலில் ஒருவர் காட்டிய வழி ! முத்துக்குமாருக்கு கிடைத்த மரியாதைகளை பார்த்து அன்று தற்கொலை முடிவில் இருந்த சிலர் இலங்கை பிரச்சனையை ஒரு காரணமாக காட்டி தற்கொலை செய்து கொண்டனர் ஆனால் அது அந்த அளவுக்கு பிரபலம் ஆகவில்லை..! அன்று முத்துக்குமாரை யாரும் கண்டு கொள்ளாமல் விட்டுருந்தால் அதன் பின் சில அறிவிலிகள் தற்கொலை செய்து கொண்டுதான் இருப்பார்கள் ஆனால் இதை போன்ற சோசியல் காரணம் வந்திருக்காது.. சரி இவர்களெல்லாம் தீக்குளிக்கின்றனரே இவர்களுக்கு உண்மையிலேயே சம்பந்தப்பட்ட பிரச்சனை பற்றி கவலை இருக்குமா என்றால் இல்லை என்றே பதில் வரும்..காரணம் இவர்களது சொந்த வாழ்வில் ஏதேனும் கஷ்டம் இருந்து அதனால் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் உடையவர்கள் இந்த வைகோ , திருமா போன்றோரின் ஊக்குவிப்பால் தமக்கும் அது போன்று மரியாதை கிடைக்கட்டும் என்று சம்பந்தப்பட்ட பிரச்சனையை ஒரு காரணமாக காட்டுகின்றனர்..! ஆதாரம் இதோ !

    இறந்து போன மணி தன்னுடைய கடிதத்தில் கூறியிருக்கும் வாசகம் : " எனது தாய் ,மனைவி , மகள் , மருமகன் , மகன்களுக்கு எத்தனையோ துன்பங்களை கொடுத்து விட்டேன் .நீங்கள் எனக்கு கிடைத்தது பெரும் பாக்கியம் . எனது இறுதி சடங்கை தற்போது உள்ள வீட்டில் வைத்து என் மீது இந்திய தேசிய கோடியை போர்த்தி எடுத்து நல்லவாடு இடுகாட்டில் என்னை எரித்து என் நினைவாக சிறு கட்டிடம் கட்ட வேண்டும்."

    இவர் மேற்படி கூறுகிறார் 26 முறை ரத்த தானம் செய்துள்ளாராம்..குடும்பத்தார்களிடமே துன்பங்கள் செய்தவர் யாருக்கு நல்லது செய்வார்..? இது ஒரு குடும்ப பிரச்சனையால் எடுத்த தற்கொலை முடிவே.! இன்னும் பாருங்கள் இவர் இறந்த பின்பு இவர் மீது தேசிய கோடியை போர்த்த வேண்டுமாம் , கட்டடம் எழுப்ப வேண்டுமாம்..! இவருடைய எண்ணம் என்னவாக இருக்கும் என்பதை இன்னுமா சொல்ல வேண்டும்..?

    குடும்ப பிரச்சனைக்காக உயிரை விட்டு வைகோ போன்றோரின் ஆதரவுடன் தியாகி ஆக நினைத்திருக்கிறார்..சொல்ல முடியாது ஆனாலும் ஆக்கிவிடுவார்கள் நம் அரசியல் வாதிகள்..இன்னும் எத்தனை தியாகிகள்(!!) உருவாகி கொண்டு உள்ளனரோ...!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த முட்டாள்தனத்தை யார் செய்தாலும் கண்டிக்கத்தக்கதே. வருகைக்கு நன்றி.

      நீக்கு
  4. சலாம்,

    நச் பதிவு. முத்துக்குமார் இறந்த போது, அதனை தியாகம் என்ற அளவில் சிலாகித்து எழுதிய ஒரு குழுவினரிடம் "நீங்களும் அந்த தியாகத்தை செய்யுங்களேன்" என்று சொன்னேன். எதிர்புறம் வார்த்தையே வரவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். இதை சிலர் தூக்கிப்பிடிக்கிறார்கள். கடுப்பா இருக்கு.

      நீக்கு
  5. சரியா சொன்னீங்க...

    முட்டாள்தனமான செயல் :(

    பதிலளிநீக்கு
  6. உனக்கென்ன ஒரே தீக்குச்சியில்
    நிரந்தரமாய் போய்விட்டாய்.
    இங்கே நிர்க்கதியாய் நிற்பது
    உன் குடும்பமல்லவா?
    இரண்டு நாள் உன்னை பற்றி
    பேசிவிட்டு வேறு வேலை
    பார்க்க போய்விடுவார்கள்
    நீ சார்ந்திருந்த தலைவர்கள்.
    ஆனால், எப்போதும் சிலுவை
    சுமக்க போவது உன் உற்றார்களே.
    இங்கே எரிய வேண்டியது
    தீக்குச்சிகள் அல்ல
    தீப்பெட்டிகளே//

    அவசியமான பதிவு தற்கொலைகள் தொடர்பாக நான் பேஸ்புக்கில் ஒரு ஸ்ரேட்டஸ் பகிர்ந்திருந்தோன் ... கொலை அல்லது தற்கொலை என்றவிடயங்கள் உனக்கு நடக்காதவரை அல்லது உன்னைச்சார்ந்தவர்களுக்கு நடக்காதவரை அவை உனக்கு வெறும் செய்திமட்டும்தான் மற்றவர்களின் நிலையும் இதேதான்... கண்ணீர்விடுவதற்கு உன் குடும்பமன்றியாரும் இருக்கப்போவதில்லை...இதுதான் உண்மையான எதார்த்தம்

    பதிலளிநீக்கு
  7. ஆதரவுதரும் அரசியல்வாதிகளும் கண்டனத்திற்கு உரியவர்கள். தீக்குளிப்போர் குடும்பத்திற்கு நன்கொடைகள் தரப்படுவது இல்லையென்றாலே இதுபோன்ற தீக்குளிப்புகள் பெருமளவு குறைந்துவிடும்.

    பதிலளிநீக்கு
  8. ஸலாம் சகோ.ரஹீம் கசாலி.
    சரியான நேரத்தில் பொறுப்புணர்வோடு விழிப்புணர்வூட்டும் சிறப்பான ஒரு பதிவு சகோ. மிக்க நன்றி.

    முட்டாள்களை தியாகி ஆக்கும் பட்டியலில்...

    தனு...
    முத்துக்குமரன்...
    செங்கொடி...

    இப்போது...
    மணி..!

    தற்கொலை என்பது ஒரு போராட்டமே அல்ல..!
    'தீர்வை நாம் பெற முடியாது' என்ற தோல்வியால் ஏற்படும் கோழைத்தனம்..!

    இவர்களை தியாகிகள் என்றும் அதை தியாகமெனவும் போற்றுவோர்...
    அதே தியாக (?)போராட்டத்தை தாங்கள் அல்லது தலைவர்கள் செய்ய முன்வரவே மாட்டார்கள்..! இவர்களுக்குத்தான் நம்மை விட நன்கு தெரிகிறது, அது முட்டாள்த்தனம் என்று..!

    மற்றபடி...

    ராஜபக்சே ஒரு போர்க்குற்றவாளி..!
    அந்தாள் பேரில் அப்படி ஒரு தீர்மானத்தை ஐ நா வில் கொண்டு வந்த அமெரிக்கா...
    ராஜபக்சேவை விட மிகப்பெரிய சீனியர் போர்க்குற்றவாளி..!
    இதை ஆதரிக்க போகும் இந்தியாவும் ஒரு ஜூனியர் போர்க்குற்றவாளிதான்..!

    மூன்று போர்க்குற்றவளிகளுக்கும் எனது வன்மையான கண்டனங்கள்..!

    இந்த நாடகத்துக்காக...
    அந்தோ பரிதாபம்...
    ஒரு முட்டாள் தமிழனின் உயிர் பிரிந்த வேதனையில் மட்டும் பங்கு கொள்கிறேன்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லோரும் கண்டனம் செய்ய வேண்டிய ஒன்று. வருகைக்கு நன்றி

      நீக்கு
  9. தங்கள் கருத்துடன் நான் மிக உடன்படுகிறேன்.
    அத்துடன் தான் கொண்ட கருத்துக்களுக்காக அடுத்தவர் உயிரை எடுப்பதும் தவறே!
    தற்கொலைத் தாக்குதல், மனித வெடிகுண்டென்பதை ஈழத்துக்காகச் செய்தாலும், தீபெத்துக்காகச் செய்தாலும், ஏன் பலஸ்தீனத்துக்குச் செய்தாலும் மகா முட்டாள்தனமே!
    இதில் மாறுபட்ட கருத்து இருக்கக் கூடாது.
    அத்துடன் சிலர் என் மார்க்கத்தை அவன் பழிக்கிறான்; அவன் தலையை பறி!!!, என் மார்க்கத்துக்காக, மதத்துக்காக, கொள்கைக்காக, தலைவனுக்காக, அபிமான நடிக,நடிகைக்காக என பல "ஆக" வுக்களுக்கான
    உயிரை கொடுப்பதோ, எடுப்பதோ என "ஏதோ எல்லாம் சொல்லி" கூச்சலிட்டுகிறாகளே!
    அத்துடன் இவர்களுக்கு சுவர்க்கம் திறந்தேயிருக்குமென ஆசை காட்டுகிறார்களே!
    இந்தப் பயித்தியங்களை என்ன செய்யலாம்.
    இன்னும் சிலர் பலரைக் கூட்டி , அதில் சொல்லியிருக்கு இதில் சொல்லியிருக்கு , அதுதான் சரி மற்றதெல்லாம் முட்டாள்தனம், அவர்கள் ஒழிக்கப்பட வேண்டியவர்கள், அந்த நாட்டைப் பூகோளத்திலிருந்து எடுக்க வேண்டுமென கொம்பு சீவி விடுவார்கள்.
    இவர்களையும் இவர்களுக்குப் பின்னால் அலைபவர்களையும் என்ன? செய்யலாம்.
    இப்படி செத்ததர்க்காகவும், நாக்கை மூக்கை வெட்டியதற்காக எல்லாம் அரச பணத்தையோ, சேகரித்த பணத்தையோ, வெளிநாடுகளில் இருந்து வந்த பணத்தையோ கொடுப்பதை உடன் நிறுத்துவதுடன்,
    கூட்டம் கூட்டி மூளைச் சலவை செய்து கொம்பு சீவி விடுவோரையும் எச்சரிக்க வேண்டும். அதற்காக வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெறுபவரகளையும் எச்சரிக்கை செய்யவேண்டும்.
    இவை நடக்குமா? நம் நாடுகளில்





    பதிலளிநீக்கு
  10. பதில்கள்
    1. அய்யா மீண்டும் வந்தாச்சா. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

      நீக்கு
  11. வண்மையாக கண்டிக்கிறேன். இது போன்ற முட்டாள்தன செயல்களுக்கு தலைவர்கள், தீக்குளிப்பவர்களை பெரிய்ய தியாகிகளாக சித்தரித்து துணைபோவதையும் கண்டிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  12. சொல்லவேண்டியதை தலைப்பிலேயே சொல்லிவிட்டீர்கள். இனியாவது இந்து போன்ற செயல்கள் நடக்காமலிருக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிமேல் அப்படி நடக்காமல் இருக்க பிரார்த்திப்போம்.

      நீக்கு
  13. ந‌ல்ல‌ ப‌திவு. "தீக்குளிப்ப‌து தியாக‌ம‌ல்ல‌ முட்டாள்தன‌ம்" என்ப‌து ம‌ட்டும‌ல்ல‌ எந்த‌வொரு ஈழ‌த்த‌மிழ‌னும் இப்ப‌டியான‌ "தியாக‌த்தை" விரும்ப‌வில்லை என்ற‌ உண்மையும் த‌மிழ்நாட்டுச் ச‌கோத‌ர‌ர்க‌ளுக்குப் போய்ச்சேர‌ வேண்டும். முருக‌தாஸ், முத்துக்குமார், செங்கொடி போன்ற‌வ‌ர்க‌ளின் த‌மிழுண‌ர்வுக்கு நாம் த‌லைசாய்க்கும் அதே வேளையில் இப்ப‌டியான‌ செயல்க‌ளை இனிமேலும் ஊக்குவிக்க‌வே கூடாது. யாருக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த‌ தீக்குளிப்புக‌ள் ந‌டைபெறுகின்ற‌ன‌வோ, அதே சிங்க‌ள‌வ‌ர்க‌ள் த‌மிழ‌ர்க‌ளை எத‌ற்கெடுத்தாலும் உணர்ச்சிவ‌ச‌ப்ப‌டும் முட்டாள்க‌ள் என‌ எள்ளிந‌கையாடுகிறார்க‌ள்.

    பதிலளிநீக்கு
  14. மிகவும் அவசியமான பதிவு! நானும் தீக்குளிப்பதை ஆதரிப்பது இல்லை! இது போன்ற முட்டாள்தனங்களை திராவிடக் கட்சிகள் ஆதரித்து அரசியல் லாபம் அடைய ஊக்குவித்து வருகின்றன! அவர்களுடன் இணைந்து தீக்குளிப்பவர்களை தியாகிகளாக சில அமைப்புக்களும் ஆதரிப்பது வேதனை! நல்லதொரு பதிவு! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தீக்குளிப்பை புத்தியுள்ள யாரும் ஆதரிக்க மாட்டார்கள்.

      நீக்கு
  15. தீக்குளிப்பு அல்ல தற்கொலை

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.