என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

வெள்ளி, மார்ச் 08, 2013

16 ஃப்ரைடேன்னா ரெண்டு.....







நான் மலேசியாவில் இருந்த போது ஒரு காமெடி. 
வழக்கமாக ஒரு ரெஸ்டோரண்டில் சாப்பிட போவேன். அன்றும் அப்படித்தான் ஒரு டீ பார்சல் வாங்கலாம்னு அங்கே போனேன். 

ஒரு தேத்தாரே கொடுங்கண்ணேன். தேத்தாரேன்னா டீ என்று அர்த்தம். உடனே அங்கிருந்த சர்வர் குடிக்கவா பார்சலா என்றார். நானும் அவரிடம் விளையாடலாம்னு நினைத்து, குடிக்கத்தான் என்றேன். 

அவர் ஒரு க்ளாசில் டீ கொண்டு வந்தார். நான் அவரிடம், அண்ணே கடையில் வைத்து குடிக்கனும், அதனால் ஒரு கவரில் ஊற்றி தந்துடுங்க என்றேன். அதற்கு அவர் அதான் நான் முதல்லேயே கேட்டேன். குடிக்கவா பார்சலான்னு. நீங்கதான் குடிக்கன்னு சொன்னீங்க. இப்ப பார்சல்னு சொல்றீங்க என்றார். 

உடனே நான் சொன்னேன் இல்லேன்னே குடிக்கத்தான் கேட்கறேன் என்றேன். 
உடனே அவர் என்ன தம்பி மாத்தி மாத்தி பேசறீங்க. இப்பத்தான் பார்சல் பண்ண சொன்னீங்க. இப்ப குடிக்கங்கறீங்க என்றார். 

நான் கூலாக.. ஆமாண்ணே என் கடையில் வைத்து குடிக்கத்தானே போறேன். பார்சல் வாங்குனா தூக்கியா வீசப்போறேன் என்றேன். அவருக்கு கோபம் வந்திருக்கும் போல ஆனால் காட்டிக்கொள்ளாமல் அந்த டீயை ஒரு கவரில் ஊற்றி தந்தார். அதன் பின் நான் அந்த ரெஸ்ட்டோரண்ட் போய் டீ கேட்டால், தம்பி இங்கே வச்சு குடிக்கவா, இல்லே உங்க கடையில்.போய் குடிக்கவா என்பார்.

=========================






நான் முன்பு ஒருமுறை ஜூனியர் விகடன், குமுதம் ரிப்போர்ட்டர், நக்கீரன் ஆகிய மூன்று பத்திரிகையும் வாங்கிட்டு வீட்டிற்கு போனேன். மூன்று பத்திரிகையிலுமே அட்டையில் ஏறக்குறைய ஒரே செய்தியான் இருந்தது. இதைப்பார்த்த்ததும் என் மனைவிக்கு கடுமையான கோபம் வந்து 
"ஏங்க இது உங்களுக்கே நல்லாருக்கா? காசைப்போட்டு இப்படியா வீணடிப்பீங்க" என்றார். 
எனக்கு ஏதும் புரியல.

"ஏன் இப்ப என்ன பண்ணிட்டேன்" என்றேன் அப்பாவியாய். 

"பின்னே என்னங்க. இந்த மூனு புக்லயும் ஒரே செய்திதான் வந்திருக்கு. அப்புறம் ஏன் மூனு புக்கை வாங்குனீங்க. எதாவது ஒரு புக்கை வாங்கிருக்கலாம்ல" என்றார் அதே கோபத்தோடு. 

எனக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. இருந்தாலும் சமாளித்து வைப்போம்னு 
"அது இல்லை. இந்த புக்ல போட்டிருக்க செய்திதான் இதிலும் போட்டிருக்கான்னு பார்க்க இன்னொரு புக் வாங்கினேன்" என்றேன். 

உடனே என் மனைவி "சரி அப்புறம் ஏன் மூனாவதா இன்னொரு புக் வாங்கினீங்க?" என்றார். 
உடனே நான் கூலாக " இந்த ரெண்டு புக்லேயும் எழுதிருப்பது உண்மைதானானு செக் பண்ண மூனாவதா இந்த புக்கை வாங்கினேன்" என்றேன். 

யாருட்ட...நாங்கல்லாம் அப்பவே அப்படி.

குறிப்பு: இன்று வெள்ளிக்கிழமை என்பதாலும், இன்றைக்கு சின்ன சின்னதாக இரு பதிவுகள் போட்டிருப்பதாலும் இந்த தலைப்பு வைத்தேன்....ஹி...ஹி...


Post Comment

இதையும் படிக்கலாமே:


16 கருத்துகள்:

  1. நல்ல அனுபவம் உனக்கு .நினைவு பெட்டகம் நீ

    பதிலளிநீக்கு
  2. 2வது பதிவில் மச்சியிடம் அடி வாங்கிய கதை சென்சார் செய்யப்பட்டுவிட்டதா??? :-)

    12 லட்சம் ஹிட்ஸ்க்கு வாழ்த்துக்கள்... (ஆமா அது 12 லட்சம் தானே.. கணக்குல வீக்கு ஹி..ஹி..ஹி...)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தனியா கேட்கவேண்டிய விஷயத்தை இப்படி பொதுவில் போட்டு உடைக்கக்கூடாது. அவ்வ்வ்வ்வ்.
      வாழ்த்திற்கு நன்றி.

      நீக்கு
  3. நல்லா சமாளிக்கிறிங்க. . .

    பதிலளிநீக்கு
  4. வணக்கம்,கஸாலி!நலமா?///வெள்ளிக்கிழமைன்னா ரெண்டு ......................///இனிமே இப்புடி எதிர்பார்க்கலாமோ?ரெண்டுமே செம!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எப்போதாவது இப்படி மொக்கை வரும். ஆனால் வாரந்தோறும் எதிர்பார்க்க கூடாது.

      நீக்கு
  5. ரெண்டுமே சுவையாத்தான் இருக்கு! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  6. பதில்கள்
    1. ஆமா உமக்கெல்லாம் நக்கல்னா என்னன்னே தெரியாது. யோவ் ரொம்ப பேருக்கு நீதான்யா குரு.

      நீக்கு
  7. தங்களது வலைப்பதிவு பற்றி இன்றைய வலைச்சரம் வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ளேன். காண்க.

    பதிலளிநீக்கு
  8. எப்டியெல்லாம் (யோ)(பே)சிக்கிறீங்க!!!

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.