நேற்று என் செல்போனுக்கு ஒரு மெசேஜ் வந்தது. அதில் பூமி திசை மாறுவதால் டிசம்பர் 17-ஆம் தேதி அதாவது இன்று தொடர்ந்து 36 மணி நேரம் சூரியன் மறையாமல் வெளிச்சமாக இருக்கும். அதே நேரம் சில நாடுகளில் தொடர்ந்து 36 மணி நேரம் இருட்டாகவே இருக்கும். இது நடந்தால், 21/12/12-முதல் அழியத்தொடங்கும் என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள் என்று குறிப்பிட்டிருந்தது. என்னமா பீதிய கிளப்புகிறார்கள். இன்று மட்டும் மேற்சொன்னபடி நடந்துவிட்டால் இன்றே உலகம் அழிந்துவிடுமே....அதாவது தொடர்ந்து ஒன்றரை நாள் சூரியன் மறையாமல் உச்சத்திலலேயே இருக்கிறதென்றால் என்ன அர்த்தம். சுத்திக்கொண்டிருக்கும் பூமி சுத்தாமல் நிற்கிறதாகத்தானே அர்த்தம்? சுற்றும் பூமி திடீரென்று நின்றுவிட்டால் என்னவாகும் தெரியுமா? பயங்கர குலுக்கலுடன் எல்லாம் கொட்டிவிடும். அதாவது மிக மிக மிக மிக சக்தி வாய்ந்த பூகம்பம் ஏற்பட்டு எல்லாம் மண்ணோடு மண்ணாகி விடும். அப்புறம் என்ன 21/21/12-கணக்கு?
எனக்குத்தெரிந்து மாயன் இனத்தினர் இந்தக்காலண்டரை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, 21/12/2012-க்கு பிறகு தயாரிக்கவே முடியாமல், ஏதோ தடங்கல் ஏற்ப்பட்டிருக்க வேண்டும். அல்லது மாயன் இனமே அத்துடன் அழிந்து போயிருக்கக்கூடும். இதுதான் நடந்திருக்க வேண்டும். ஆனால், இந்த டுபாக்கூர் காலண்டரை வைத்துக்கொண்டு உலக அழிவை கணிப்பதெல்லாம் டூமச்....
அதிலும் சில, நாடுகளில் எல்லாத்தையும் விற்றுவிட்டு ஜாலியாக சிலவு செய்கிறார்களாம்....அய்யோ பாவம் அவர்களின் நிலை....21/12/12-க்கு பின் என்ன செய்யப்போகிறார்களோ?
என் முகப்புத்தகத்திலிருந்து......
21/12/12-அன்று உலகம் அழியப்போவதாக பீதியை கிளப்பும் பத்திரிகைகள் தான் 2013-ஆம் ஆண்டிற்கான காலண்டரையும் இலவசமாக கொடுக்கிறது.
உலகம் அழியப்போகுது, உலகம் அழியப்போகுதுனு ஆளாளுக்கு பண்ணும் அலப்பறையில் பேசாம உலகம் அழிந்தால் தேவலைனு தோணுது எனக்கு.
ஒருவேளை, மாயன் இனத்தினர் காலண்டர் தயாரித்தபோது 21/12/12-க்கு பிறகு கணிப்பதற்குள் அழிந்து போயிருப்பார்களோ?
Tweet |
// எனக்குத்தெரிந்து மாயன் இனத்தினர் இந்தக்காலண்டரை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, 21/12/2012-க்கு பிறகு தயாரிக்கவே முடியாமல், ஏதோ தடங்கல் ஏற்ப்பட்டிருக்க வேண்டும்//
பதிலளிநீக்குஇருக்கலாம்.. அல்லது அவங்க தயாரிச்சு இவங்களுக்கு கிடைக்காமல் போயி இருக்கலாம்.. எது எப்படியோ உலகம் கண்டிப்பா இந்த வாரம் அழியாது... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
சலாம்..!
நீக்குஇந்த வாரத்துடன் இறுதி உலகத்திருக்கு அல்ல.! மாயன் காலண்டருக்கே..!!!!
:-))
இன்னும் சில நாட்களில் இப்படி ஒரு தகவல் கேட்க நேரிடலாம்..
பதிலளிநீக்கு12/12/2012 அல்ல 12/12/2021 என்று - ஒன்னும் சொல்றதுகில்ல
http://www.acceler8or.com/wp-content/uploads/2012/01/truth-about-2012-mayan-calander.gif
பதிலளிநீக்குஎல்லாரும்தானே சாகப்போறாங்க-ன்னு நிம்மதியா இருக்குய்யா..நாம 'அங்க' போயும் ப்ளாக் எழுதுவோம்ல!
பதிலளிநீக்குஐய்!!!!!ஜாலி!செங்கோவி ப்ளாக் 'அங்க'யும் !!!!!!!!!!!
பதிலளிநீக்குநாம மட்டும் சாவோம் என இருப்பதில் உள்ள திரில்
பதிலளிநீக்குஎல்லோரும் சாவோம் என்பதில் இல்லை
மனம்தான் எவ்வளவு கெட்டுவிட்டது
நடப்பது நடக்கட்டும்..
பதிலளிநீக்குayyo ayyo...
பதிலளிநீக்குமுகபுத்தக status அருமை
பதிலளிநீக்குoru muslimaha idundukondu idai neengal nambuveergal endru ninaikavillai.Ulaga alivin athachikalai al-quran kondum nabu sal(Peace be upon him) avarhalin munnarivipugalilirundum terinthukollungal. idu oru sariyana neram ulaga alivirkiku islam enna solkiratendru ariya. mudintal adu pattri oru blog eludunga insha allah.
பதிலளிநீக்குமறுநாளின் நம்பிக்கை என்பது குர்ஆனில் முக்கியமான விடயங்களில் ஒன்றாகும் முஹம்மது நபிகளார் (ஸல்) சொல்கின்ற உலக முடிவு நாள் பற்றிய குறிப்புகளில்
பெற்ற தாயை கவனிக்க கடமைப்பட்ட ஆண் பிள்ளைகள் தாயை கவனிக்காமல்விட்டுவிடுவார்கள். அதனால் தாய் தனது மகளை சார்ந்து மகளின் தயவில்வாழும் நிலை ஏற்பட்டால்…(ஏற்பட்டிருக்கின்றது.)
வறுமை நிலையில் (அரை) நிர்வாணத்துடனும் வெறும் காலுடனும் ஆடுகளைமேய்த்துக்கொண்டிருந்தவர்கள் மக்களின் தலைவர்களாகஆவது…(ஆகியிருக்கின்றார்கள்).
குடிசைகள் திடீர் திடீரென்று கோபுரமாக மாறினால்…(மாறியிருக்கின்றது)
உலகில் விபச்சாரமும் மதுவும் பெருகினால்…
தகுதியற்றவர்களிடம் பொறுப்புக்கள் ஒப்படைக்கப்படுவதும் அவர்கள்நாணயமின்றி நடந்து கொள்வதும் …(நடக்கின்றது)
பாலைவனங்கள் சோலையானால்…(ஆம்)
காலம் சுருங்கிவிடும் (முஹமது நபிகளார் தான் வாழ்ந்த காலத்தை உதாரணமாகசொல்லும் போது அதாவது இன்றைக்கு 1432 வருடத்திற்கு முன்பு “(இன்றைய) ஒரு வருடம் (அன்று) ஒரு வாரம் போலாகிவிடும். இன்றைய ஒருநாள் அன்றுஒருமணிநேரம் போல ஆகிவிடும். ஒரு மணி என்பது ஒரு வினாடி போன்றுஆகும்..(நடக்கிறது)
கொலைகள் அதிகரிப்பதுவும்…(ஆம்)
நில அதிர்வுகளும் பூகம்பங்களும் அதிகரித்தால்…
மனிதர்கள் பள்ளிவாசல்களை காட்டி என்னுடையது பெரிதா உன்னுடையதுபெரிதா என்று சொல்லி பெருமையடிப்பது….(உண்மைதான்)
கடைகள் பெருகுவது….(பெருகி விட்டது)
பெண்களின் எண்ணிக்கை உலகத்தில் அதிகரித்தல்..
ஆடை அணிந்தும் நிர்வாணமாக தோற்றமளிக்கும் பெண்கள் உலகத்தில்தோன்றுவது…(உண்மைதானே)
பேச்சை தொழிலாக்கி பொருள் திரட்டுவது(அரசியல்வாதிகள் போன்றோர்) (திரட்டுகின்றார்கள்)
தற்கொலை அதிகரித்தல்..(அதிகரித்திருக்கின்றது)
தான் தான் இறைதூதர் என்றும் நபி என்றும் பொய் சொல்பவர்கள்அதிகரித்தல்….(மிக அதிகரித்து விட்டார்கள்)
முஹம்மது நபியவர்கள் உலகத்தின் முக்கியமான தீர்க்கதரசி. அவர் இந்த உலகத்தில் வாழ்ந்தவர். அவர் மரணித்து 1400 வருடங்கள் கடந்துவிட்ட போதிலும் அவரது தீர்க்க தரிசனங்கள் சத்தியமானவையாக இருக்கின்றன.
மேற்சொன்னவைகள் நடந்தால் உலக முடிவுநாள் வரும் என்று நபிகளார் சொன்னார்கள். ஆனால் உலக முடிவுநாள் என்பது திடீரென்று வந்துவிழும் ஒன்றல்ல. யாராலும் அறியமுடியாதவாறு அது மறைக்கப்பட்டிருக்கின்றது
இதை நான் நம்பவில்லை.ஆனால், நம்புகிறவர்களுக்காக மட்டுமே இந்தக்கட்டுரையை எழுதினேன். அப்படி நம்பாதீர்கள், அது மூட நம்பிக்கை என்றுதான் சொல்லிருக்கேன்
பதிலளிநீக்குAlhamdulillah.
பதிலளிநீக்குஉலகம் அழிவதற்கு மிக நெருக்கத்தில் ஏற்படும் பத்து அடையாளங்களை நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 1. வானத்திலிருந்து வெளிப்படும் புகை மண்டலம் 2. தஜ்ஜால் வருகை 3. மனிதனுடன் பேசும் பிராணி வருகை 4. சூரியன் மேற்கிலிருந்து உதித்தல் 5. ஈஸா jesus (அலை) வானத்திலிருந்து இறங்குதல் 6. யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினர் வருகை 7. கிழக்கே ஒரு பூகம்பம் 8. மேற்கே ஒரு பூகம்பம் 9. அரபு தீபகற்பத்தில் ஒரு பூகம்பம் 10. எமன்; நாட்டிலிருந்து புறப்படும் தீப்பிழம்பு. இது பத்து அடையாளங்களும் உலகம் அழியும் மிக நெருக்கமான கட்டத்தில் ஏற்படுபவை.