30-11-2032 முக்கிய செய்திகள்.
அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் மின்வெட்டு சீரடையும்- ஜெயலலிதா.
33-வது தடவையாக தமிழக அமைச்சரவை மாற்றம். 4 அமைச்சர்களை நீக்கி புதிதாக 3 அமைச்சர்களை சேர்த்தார் ஜெயலலிதா
காவிரியிலிருந்து ஒரு சொட்டு தண்ணீர் கூட தர முடியாது- கர்நாடகா கை விரித்தது.
இனி மீண்டும் ஒரு முறை திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை. வரும் தேர்தலில் பா.ம.க.,தனித்துப்போட்டி- ராமதாஸ்.
தெலுங்கானா விரைவில் உருவாகும்- சந்திரசேகர ராவ்
அழகிரி-ஸ்டாலின் இருவருக்கும் பிளவு ஏற்படுத்த சிலர் சதி- கலைஞர் பேட்டி.
விஜயகாந்தின் மகன் பிரபாகரனுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் தே.மு.தி.க.,விலிருந்து விலகினேன்- தே.மு.தி.க.,எம்.எல்.ஏ.
திருமதி செல்வம் தொடர் 10000 எபிசோடை கடந்தது.
துரை தயாநிதி இருப்பிடம் தெரிந்தது போலீஸ் விரைவு.
ராமஜெயம் கொலையாளிகளை நெருங்கிவிட்டோம்- திருச்சி போலீஸ்
இன்னும் 15 நாளில் அனு உலை செயல் பட துவங்கும்- நாராயண சாமி
ஆளுங்கட்சியை எதிர்த்து வைகோ திருச்சியிலிருந்து மதுரைக்கு வைகோ நடைபயணம்.
இலங்கை கடற்படையினரால் ராமேஷ்வரம் மீனவர்கள் 10 பேர் சுட்டுக்கொலை.
கமலின் மருதநாயகம் 5000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மீண்டும் எடுக்கப்படுகிறது.
என்ன இதெல்லாம் படித்த செய்தியாகவே இருக்குன்னு யோசிக்கிறீங்களா? முதலில் எழுதியிருக்கும் தேதியை இன்னொரு தடவை நல்லா கவனிச்சு பாருங்க மக்கா. எல்லாம் 2032- ஆம் ஆண்டு பேப்பரில் வந்திருக்கும் செய்திதான் இத்தனையும் ஹி.ஹி.ஹி.
---
Tweet |
ஹா ஹா ஹா...அருமை....காமெடியாகவே இருந்தாலும் 2032 ல் ஜெயலலிதா ஆட்சியா?!.................வேற சாய்சே இல்லை என நொந்து கொள்ள வேண்டி இருக்கிறது....
பதிலளிநீக்குஐந்து வருடம் தி.மு.க., ஐந்து வருடம் அண்ணா.தி.மு.க.,என்று முறைவைத்து இரு கட்சிகளும் ஆட்சிக்கு வரும்போது இன்னும் 20 வருடங்களுக்கு பின் அண்ணா.தி.மு.க.,தானே வரும்.அதான் காமெடியா சொன்னேன்
நீக்குநல்லாவே இருக்குங்க.
பதிலளிநீக்கு2032லும் மின்வெட்டா என்ன கொடுமை சார்.
பதிலளிநீக்குகலக்கலான பதிவுக்கு நன்றி.....
எம் ஆர் ராதா ரத்தக்கண்ணீர் படத்துல பேசின வசனங்கள் இன்னைக்கும் பொருந்துவதை பார்த்து வேதனை படாம தீர்க்க தரிசனம்.என்று சொல்லுறோம் அதே மாதிரி இந்த பதிவும் தீர்க்க தரிசனம் என்று பூஜிக்க படலாம் .........
பதிலளிநீக்குஹூம்!
பதிலளிநீக்குஅவ்வ்வவ்வ்வவ்வ்வ்
பதிலளிநீக்குஹா... ஹா... நடந்தாலும் நடக்கும் 2050வரை...
பதிலளிநீக்குபடித்தேன்.
பதிலளிநீக்குகஸாலி,
பதிலளிநீக்கு// திருமதி செல்வம் தொடர் 10000 எபிசோடை கடந்தது. //
நடந்தாலும் நடக்கும்.. ஹி..ஹி..ஹி
விஜயகாந்த் மகனைப்பற்றி படிக்கும் போதே லேசா டவுட் ஆனா இதை எதிர்பார்க்கல
பதிலளிநீக்குநல்ல டுவிஸ்ட்,இந்த அரசியல் ரணகளத்திலேயும் ஒரு கிளுகிளுப்பா........
நல்ல பகிர்வு, அருமை நண்பா
பதிலளிநீக்குஇப்படியும் வரலாம் -2032
:- post paid ...சந்ததரார்கள் ...தங்கள் மின்சார ரீசார்ஜ் கட்டணத்தை உடனே செலுத்த வசதிகள் ...prepaid சந்ததரார்களுக்கு புதிய சலுகை 10 யூனிட் மின்சார ரீசார்ஜ் கார்டு வெறும் 500 ரூபாய்க்கே ....
இன்று நடந்த மந்திரிகள் பதவி ஏற்பில் குழப்பம் பதவி ஏற்ற இரண்டாவது நிமிடத்தில் மந்திரி வணங்கும்முடி மீண்டும் நீக்கம் ...வேறு வழி இல்லாததால் கவர்னர் உதவியாளர் மந்தியாக பதவி ஏற்றார்
கர்நாடாவில் இன்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் தமிழ் நாட்டிக்கு 1000 லிட்டர் தண்ணிர் கொடுக்க முடிவு
பா.ம .க...தனித்து போட்டியிடும் ....இதனர்த்தம் பா.ம.க ..மட்டும் ஒரு தொகுதியில் தனியாக நிற்கும் ..வேறு யாரும் போட்டி போட கூடாது
தெலுங்கானா அமையும்வரை சாகாத வரை உண்ணாவிரதம் .....சந்திர சேகர் ராவு ராத்திரியில் தொடக்கம்
ஆறுமாத முதல்வர் சுழற்சி முறையில் குழப்பம் ....தனக்கும் மூன்று மாதம் முதல்வர் பதவி தரவேண்டும் என கனிமொழி கோரிக்கை
தே.மு.தி க எம்.எல் ஏ விலகல் ----பிரபாகரனுக்கு முக்கியத்துவம் பிடிக்கவில்லை ----பதவி விலகிய எம்.எல்.ஏ திருமதி பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
கள்ளக்காதல் மற்றும் திருட்டு புருஷன் ..மெகா தொடரில் நடித்த நடிகை குமணஸ்ரீ தனது ஆறாவது கணவரை டைவர்ஸ் செய்துள்ளார்
துரை தயாநிதி இருப்பிடம் தெரிந்தது போலீஸ் விரைவு.
ராமஜெயம் கொலையாளிகள் தற்கொலை ---25 வருடமாகியும் தங்களை போலிஸ் பிடிக்காததால் மனவேதனை --கடிதம் சிக்கியது
கூடங்குளம் அணு உலை ஆபீசில் மின்தடை ----இதற்காகவே அணுநிலையம் திறக்கவேண்டும் ...தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் .....(பேர் சொன்ன தெரியவா போகுது ) பேட்டி
அதிக தூரம் நடைபயணம் செய்ததால் விபரீதம் ---- ரஷ்ய எல்லையில் வைகோ கைது
இம்மாத கோட்டா 30 மீனவர்களை தாண்டி 35 மீனவர்களை கொன்ற இலங்கை கடற்படையினரை தமிழக கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்
புதிய படத்தில் ரஜினி "முதியவராக " வேஷம் ஏற்று நடிப்பதை கண்டித்து ரஜினி ரசிகன் 23 வயது ரஜினி கிறுக்கன் தீக்குளிப்பு
பேத்தி சுக்சரா ஹீரோயினாக நடிக்கும் படத்தில் கமல் கவுர வேடத்தில் தோற்றம் ---அமெரிக்க ரிடர்ன் மாப்பிளையாக நடிக்கிறார்
அட...நான் எழுதியதை விட இது இன்னும் அருமையா இருக்கே
நீக்குநீங்க சொன்ன விஷயங்களை வைத்துதான் இங்கே அரசியலே நடந்து கொண்டிருக்கிறது. எப்போதும் மாறாதது..... :)
பதிலளிநீக்குஇந்த தீபாவளிக்கு டாஸ்மாக் கடை வருமானம் 2,000 கோடியாக இலக்கு நிர்ணயம் .தமிழக அரசு தகவல் .......
பதிலளிநீக்குஇதுதானய்யா மெயின் மேட்டரு .............
:-)
பதிலளிநீக்கு