சட்டமன்ற வைரவிழா புகைப்பட கண்காட்சியை பார்வையிடுவதற்காக ஐஸ்லாந்து நாட்டின் நாடாளுமன்ற குழு ஒன்று கடந்த வாரம் வருகை தந்தது. வந்ததோடு மட்டுமல்லாமல் ஜெயலலிதாவின் மக்கள் சேவைகளை பாராட்டி அவருக்கு மக்கள் நலன் காக்கும் இரும்பு பெண்மணி என்ற பட்டத்தையும் வழங்கிவிட்டு சென்றிருக்கிறார்கள்.
தனக்கு வாக்களித்த மக்களை இருட்டில் தள்ளிய விஷயத்தை தெரிந்து கொண்ட ஐஸ்லாந்து குழுவினர் ஜெயலலிதாவை இருட்டு பெண்மணி என்று சொன்னதைதான் மாற்றி இரும்புப்பெண்மணி என்று சொன்னதாக நினைத்து விட்டார்களோ என்னவோ.....
==============
கிராமங்கள்தான் இந்தியாவின் முதுகெலும்பு என்று சொன்னார் காந்தி. இன்று முதுகெலும்பை 18 மணி நேரம் இருட்டில் தவிக்கவிட்டுவிட்டு தலை(நகர்)யை வாழவைக்கிறது அரசு. எப்ப மின்சாரம் வருகிறது எப்ப மின்சாரம் போகிறது என்று மின் வாரியம் தெரிவிக்க வேண்டும் என்று ஒருவர் வழக்கு தொடர்ந்ததை அடுத்து, ஒவ்வொரு மாவட்டத்திலும் எத்தனை மணிநேரம் மின்தடை செய்யப்படுகிறது என்றும், மின்தடை குறித்து மக்களுக்கு ஏன் முன்கூட்டியே அறிவிப்பதில்லை என்றும் விளக்கமாக அறிக்கை அளிக்க நீதிபதிகள் மின்வாரியத்திற்கு உத்தரவிட்டனர்.
மின்சார வாரியமும் சென்னையைப் போன்று பிற மாவட்டங்களிலும் எப்பொழுது மின்தடை செய்யப்படும் என்பது குறித்து ஊடகங்களில் அறிவிக்கப்படும் என்று சொல்லியிருக்கிறது. அதுசரி.... கரண்டு இருக்க நேரமா பார்த்து அறிவியுங்க....இல்லாவிட்டால் அதை அறிவிக்கும் நேரத்திலாவது கரண்டை கொடுங்க...
================
ஆனந்த விகடன் புத்தகத்தோடு ஆரம்பத்தில் இலவச இணைப்பாக வழங்கப்பட்டது என் விகடன். பின்னர் அது நிறுத்தப்பட்டு இணையத்தில் வந்தது. இப்போது இணையத்திலும் அப்டேட் செய்யப்படாமல் தடுமாற்றத்தில் இருக்கிறது.ஏன் என்று தெரியவில்லை. இனியாவது அப்டேட் செய்வார்களா அல்லது யூத்ஃபுல் விகடனை போல அதோகதி ஆக்கிவிடுவார்களா என்று தெரியவில்லை.
================
புதிதாக ஆரம்பிக்கப்பட்ட தினத்தந்தி செய்தி சேனல் இப்போது சன் டைரக்ட்டில் தெரிகிறது. இதற்கு முன்பு இப்படித்தான் புதிய தலைமுறையும் தெரிந்தது. டி.ஆர்.பி. ரேட்டிங்கில் சன் செய்திகளை புதிய தலைமுறை முந்தியதும் கடுப்பான சன் நிர்வாகம் அந்த சேனலை கடைசியில் தள்ளி இப்போது எடுத்தே விட்டது. அதைப்போல தினத்தந்தியையும் எடுத்தாலும் ஆச்சர்யமில்லை.
காரணம், ஏற்கனவே நாளிதழ் விஷயத்தில் நாங்கள்தான் நம்பர்-1 என்று தினத்தந்தியும், சன் குழும இதழான தினகரனும் மாறி மாறி சொல்லிக்கொண்டு வருகிறது. இந்த லட்சணத்தில் தினத்தந்தி சேனலை எப்படி சன் டைரக்ட் காட்டுவார்கள்?. என்னவோ போங்க.... பணம் கட்டி பார்க்கும் வாடிக்கையாளர்களை திருப்தி படுத்துவதுதானே ஒரு நிறுவனத்தின் நோக்கமாக இருக்க வேண்டும்?. ஆனால், க(ல்)லாநிதி மாறனுக்கு யார்யாரை எல்லாம் பிடிக்குமோ அவர்களின் சானலை மட்டுமே பார்க்க முடிகிறது. அதாவது கேடி பிரதர்சின் ஈகோவிற்கு நாம் பணம் கட்டி வருகிறோம்.
=============
தி.மு.க.,விற்கு இது
===========
படித்ததில் பிடித்தது.....
அனைத்து தி.மு.க முன்னால் அமைச்சர்கள், முன்னால் இந்நாள் எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள். தயவு செய்து நீங்கள் செய்த, செய்யாத ஏதாவது ஒரு குற்றதை ஒப்புக்கொண்டு தயவு செய்து ஒட்டுமொததாக ஜெயிலுக்கு போய்விடுங்கள். அம்மா அவர்கள் உங்களை மறந்துவிட்டு இந்த மின்சார பிரச்சினை, டெங்கு காய்ச்சல் எல்லாம் கொஞ்சம் கவனிக்க வேண்டியிருக்கு.
-ஃபேஸ்புக்கில் மனுஷ்யபுத்திரன்
=================
இன்வர்ட்டர் வர்த்தகத்தில் அன்னிய முதலீடு என்று சொல்லியிருந்தால், ஒருவேளை ஜெயலலிதா ஆதரித்து, கலைஞர் எதிர்த்திருப்பாரோ என்னவோ?
அன்னிய முதலீடு: ஆட்சி கவிழாமல் இருக்க மத்திய அரசுக்கு முழு ஆதரவு: கலைஞர் # நீங்க சஸ்பென்ஸ் வைக்கும்போதே தெரிந்து விட்டது, க்ளைமேக்ஸ் இப்படித்தான் இருக்கும் என்று.....
மொக்கைகளை எல்லாம் தத்துவங்களாகவும், கவிதைகளாவும் மாற்றிய பெருமை ஃபேஸ்புக்கையே சாரும்.
நான் செண்டிமெண்ட் பார்க்காதவன் - இயக்குநர் பாலா # செண்டிமெண்ட் பார்க்காததையே செண்டிமெண்டாக வைத்திருப்பார் போல....
Tweet |
இருட்டு பெண்மணி என்பதுதான் சரியான பொருத்தம்.
பதிலளிநீக்குஎல்லா பகிர்வுகளும் அருமை. பேஸ்புக் பகிர்வுகள் புன்னகை வரவைக்கின்றன.
உங்களின் படித்ததில் பிடித்தது கலக்கல்.எல்லா கருத்துக்களுமே அருமை
பதிலளிநீக்குஎன் விகடன் இனி வெளிவராது. விகடனில் பணியாற்றும் என் நண்பர் இந்த தகவல் சொன்னார்
பதிலளிநீக்குதகவலுக்கு நன்றி சார். இந்த வாரம் அப்டேட் பண்ணாமல் இருக்கும் போதே நினைச்சேன்.
நீக்குதகவலுக்கு நன்றி சார். இந்த வாரம் அப்டேட் பண்ணாமல் இருக்கும் போதே நினைச்சேன்.
நீக்குஇருட்டு பெண்மணி
பதிலளிநீக்குக(ல்)லாநிதி மாறனுக்கு
/////////////
ரொம்ப ஓவரா இல்ல...
மோகன்குமார் சொல்வது உண்மைதான்..
பதிலளிநீக்குவணக்கம்,கஸாலி சார்!கடை(பே)யில டீ,பன்னு எல்லாமே நல்லாருக்கு!
பதிலளிநீக்குஅருமையான அலசல் நன்றி சகோதரா , இருட்டு பெண்மணி கருத்து , இன்னும் இருட்டுலே வந்து யாரும் கதவு தட்டல பார்த்து ஜாக்கிரதையா இருங்க .
பதிலளிநீக்குமின்சார வாரியமும் சென்னையைப் போன்று பிற மாவட்டங்களிலும் எப்பொழுது மின்தடை செய்யப்படும் என்பது குறித்து ஊடகங்களில் அறிவிக்கப்படும் என்று சொல்லியிருக்கிறது. அதுசரி.... கரண்டு இருக்க நேரமா பார்த்து அறிவியுங்க....இல்லாவிட்டால் அதை அறிவிக்கும் நேரத்திலாவது கரண்டை கொடுங்க...
பதிலளிநீக்குஅருமை.
சிந்திக்க வைத்த அலசல் படித்ததில் பிடித்தது நன்றாகவே இருந்தது. பேஸ் புக் பகிர்வும் உட்பட.
பதிலளிநீக்குகலைஞர் சஸ்பென்ஸ் வச்சு, வச்சு ஏதோ பேரம் பேசுறாருன்னு சொல்றாங்க..அப்படி என்ன தான் பேரம்னு நமக்குப் புரிய மாட்டேங்குது..2ஜி-ல மாட்டிக்கிட்டு, இந்தப் பாடு படுறாங்களே!
பதிலளிநீக்குகலந்து கட்டி அடிச்சிருக்கிங்க ..அண்ணே .
பதிலளிநீக்குமுக புத்தக முனகல் நச் ...
கலக்கல்
பதிலளிநீக்குபெயர் பொருத்தம் சரியா இருக்கும் , கலக்கல் பதிவு நண்பரே!
பதிலளிநீக்குஎன் விகடன்-ஐ நிறுத்திவிட்டது ஏன்னு புரியலை.
பதிலளிநீக்குஅனைத்தும் அருமை.