நாராயண சாமி. வாயைத்திறந்தாலே ஒரே காமெடிதான். அப்படிப்பட்டவர் கடந்த வார விகடனில் ஒரு பேட்டி கொடுத்திருந்தார். அதை படித்தால் உங்களுக்கு டென்சன் தலைக்கேறுவது நிச்சயம்.
விகடன்: அணு சக்திக்கு ஆதரவா ஏகமாக அடிச்சுவிடுறீங்களே...விபத்து ஏற்பட்டா பாதிக்கப்படுற மக்களோட நிலை என்னவாகும்?
நா சாமி: டோன்ட் ஒர்ரி... விபத்தோ, பாதிப்போ ஏற்பட்டால், இழப்பீடு கட்டாயம் கிடைக்கும். அதற்குத்தானே 1500 கோடி ரூபாயைத் தொகுப்பில் வைத்திருக்கிறோம். இழப்பீடு தர தனிச்சட்டமும் இயற்றியுள்ளோம். பாதிக்கப்படும் மக்களுக்கு மூன்றே மாதங்களில் இழப்பீடு கிடைக்கச் செய்வோம். இன்னொரு விஷயம் தெரியுமா? இதனால் நாட்டுக்கும் நிதி இழப்பு வராது. பாதிப்புக்கு காரணமான கம்பெனிகளிடம் தொகையை மத்திய அரசு வசூலித்துவிடும்.
என்னவொரு பொறுப்பான பதில். இவரைப்போல் மக்கள் நலனில் அக்கறையுள்ளவர்கள் அமைச்சராக இருந்தாலே போதும் இந்தியா சீக்கிரம் வல்லரசாகிவிடும்.
==========
நாஞ்சில் சம்பத் இன்றும் அன்றும்...
இன்று....
என்னை மதிப்பவர்களை மட்டுமே நான் மதிப்பேன்.. என்னை மதிக்காதவர்களை மதிக்க மனசு வராது. ஒவ்வொரு ஊரிலும் யார் யார் கட்சிக்காக உழைக்கிறவர்கள் என்று வைகோவால் நிச்சயம் அடையாளம் காட்ட முடியாது. என்னால் முடியும். வைகோ பரப்பிவிடுவது போல் மதிமுக மாவட்ட செயலாளர்களை ஓரணியில் திரட்டவெல்லாம் முயற்சிக்கவும் இல்லை.. முயற்சிக்கவும் மாட்டேன். என்னிடத்தில் நாள்தோறும் என் தம்பிமார்கள் ஆதரவு தெரிவித்து பேசினாலும் அவர்களை எனக்கு ஆதரவாக இருக்கச் சொல்லி கேட்பதும் இல்லை.
மதிமுகவுக்காக வைகோவைக் காட்டிலும் கடுமையாக உழைக்கிறேன். அவரைக் காட்டிலும் தொண்டர்களின் அன்பைப் பெறுகிறேன். கட்சி எல்லைகளைக் கடந்து இலக்கியக் கூட்டங்கள், பட்டிமன்றங்களில் பங்கேற்கிறேன். கடல் கடந்து நாடுகளிலெல்லாம் பேசிவருகிறேன். என் இமேஜ் ஏறி வருகிறது. அதை அவரால் பொறுத்துக் கொள்ளவில்லை.
தரம்கெட்ட, அடுத்தவர்களின் இருப்பை ஒத்துக் கொள்ளாத வியாதியின் விளைவுதான் இது. நான் ஒருபோதும் அவருக்கு போட்டியாக என்னைக் கருதியது இல்லை. நான் பிகராக இருப்பதுதான் இப்பொழுது பிரச்சனை.
அன்று...
கலசங்கள் விழுவதால் கோபுரங்கள் சாயப்போவதில்லை. கலசங்கள் கீழே விழத்தான் செய்யும். ம.தி.மு.க. ஒரு வெண்கலப்பானை. கீழே விழும். சத்தம் கேட்கும். ஆனால் உடையாது. கண்ணப்பன் போனார். அவர் வைகோவை விட சீனியர் பொலிட்டீசியன். அவர் கட்சியை விட்டு போகையில் அவருக்கு 40 ஆண்டுகாலம் காரோட்டிய கந்தனூர் கருப்பையா என்பவர் போகவில்லை. அதேபோல கண்ணப்பனை சார்ந்திருந்த ஆலாம்பாளையம் கிளைக்கழகத்தின் செயலாளர் போகவில்லை. செஞ்சி ராமச்சந்திரனும் போனார். ஒரு பாதிப்பும் இல்லை. ஆகவே எங்கள் கட்சியில் இருந்து யார் போனாலும் அவர்கள் அகதிகள் பட்டியலில் போய் சிக்கிக்கொள்கிறார்களே தவிர அரசியலில் அவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை.
ம.தி.மு.க. என்பது தேன். தேன் தானும் கெடாது. தன்னை சார்ந்து இருப்பவர்களையும் கெட விடாது. இந்த இயக்கத்தில் இருந்தால் மரியாதை. அதை விட்டு போனால் அவமரியாதை என்பதை வரலாறு பல பேருக்கு கற்பித்து கொடுத்துள்ளது. ஆகவே எங்கள் கட்சி ஒரு முடிவை எடுப்பதை ஏற்க முடியாதவர்கள், பதவி நல விரும்பிகள், ஆதாயத்தை நாடுபவர்கள் கட்சிக்கு துரோகம் செய்தால் அவர்கள் காணாமல் போவார்களே தவிர கட்சியின் கட்டுமானத்தில் ஒரு கல்லை கூட பெயர்க்க முடியாது.
அது போன மாசம் இது இந்த மாசம்..... அது நாற வாயி...இது வேற வாயி என்ற வடிவேலுவின் வசனமெல்லாம் நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல....
---------
நேற்று திடீர் பதிவர் சந்திப்பு ஒன்று தி.நகர் நடேசன் பார்க்கில் நடைபெற்றது.
நான், கேஆர்பியார், சிவக்குமார், அரசன், ஆரூர் மூனா சேனா, செல்வின் மற்றும் அடையார் அசல் அஜீத் சென்னைப்பித்தன் அய்யா அவர்களும் கலந்துகொண்டு வரலாற்றை புரட்டிப்போடும் ஒரு முடிவும் எடுக்காமல் கூடிக்கலைந்தோம்.
-------
தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் கவர்ந்த இயக்குனர் சீனு ராமசாமியின் அடுத்த படைப்பு நீர்ப்பறவை. இந்தப்படத்தின் பாடல்களை சமீபத்தில் கேட்டேன். ஒரு புதிய இசையமைப்பாளரான ரகுநாதன் இசையில் வைரமுத்து வரிகளை எழுதியிருக்கிறார். பாடல்கள் ஒவ்வொன்றும் அருமை. தேவன் மகளே என்ற பாடல் பிரசன்னா சைந்தவி குரலில் மீண்டும் மீண்டும் கேட்கத்தூண்டும் ரம்மியமான மெலோடி.
பற பற பற பறவை ஒன்று என்ற பாடல் ஸ்ரேயா கோஷல், ஜி.வி.பிரகாஷ்குமார், சின்மயி என்று தனித்தனி வெர்சனில் வந்தாலும் ஜிவிபி குரலில் ஒலிக்கும் பாடல் மனதை கவர்கிறது. மீனுக்கு சிறு மீனுக்கு, ரத்தக்கண்ணீர் பாடலும் அடடே ரகம். இசைக்குள் வரிகள் தொலைந்து போன சமகால பாடல்கள் போலில்லாமல், 1980-90- ஆம் ஆண்டு பாடல்கள் போல் இனிமையாகவே இருக்கிறது.
சில வரிகள் எங்கள் மனம் புண்படுமாறு உள்ளது என்று கிறிஸ்துவ சகோதரர்கள் ஆட்சேபித்ததால் மாற்றியுள்ளார் வைரமுத்து என்பது கூடுதல் தகவல்.
-----
அதென்ன கஸாலி கஃபே?....
நானும் எல்லாவற்றையும் கலந்து எழுதும்போது வானவில் பக்கம், அரசியல் பக்கம், பொடிமாஸ், என்னவோ சொல்லனும்ன்னு தோணுச்சு என்று பல தலைப்புகளில் எழுதிப்பார்த்துட்டேன். ஒண்ணுமே கேட்சிங்கா இல்லைன்னு புகார் வந்த வண்ணம் இருந்துச்சு. அதான் என் பெயரிலேயே எழுதிடுவோம்னு
-------------
கலைஞர் டி.வி.யில் மட்டும்தான் சொல்வார்களா? நானும் சொல்வேன்...
அனைவருக்கும் விடுமுறை நாள் நல் வாழ்த்துக்கள்.
Tweet |
உண்மைதான் நீர் பறவை பாடல்கள் அருமைதான்
பதிலளிநீக்குகண்ணப்பனும் , செஞ்சியும் இப்போது இருக்கும் இடம் தெரியாமல் போய் விட்டனர் . அந்த நிலை சம்பத்துக்கும் வராமல் பார்த்துக்கொள்ளட்டும்
பதிலளிநீக்குஇன்று
பதிலளிநீக்குவயதாகாமல் இருக்க வேண்டுமா ?
கஸாரி கஃபே. தலைப்பே சூப்பரா இருக்கு தம்பி. தொடர்ந்து எழுதுங்க. முதல் ரெண்டு மேட்டர்களும் டாப். ஆதங்கத்தோட சிரிச்சு வைச்சேன். வரலாற்று முக்கியத்துவம் மிக்க அந்த சந்திப்புக்கு என்னைக் கூப்பிடணும்னு கஸாரிக்கோ. சிவாவுக்கோ, அடையாறு அஜித்துக்கோ தோணலைன்றதைக் கண்டிச்சு வெளிநடப்பு செய்யறேன். அதுக்கு முன்னாடி... உங்களுக்கு என் இதயம் நிறைந்த இனிய தீபஒளித் திருநாள் நல்வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஇந்த சந்திப்பின் ஒருங்கிணைப்பு குழு தலைவரே சிவாதான். அவர்தான் இதற்கு முழுப்பொறுப்பு.
நீக்குsako....!
பதிலளிநீக்குnalll pala thakavalkal!
mikka nantri!
தலைப்பு சூப்பர்... தகவல்களும்...
பதிலளிநீக்குநன்றி....
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...
கஸாலி கஃபே = கலக்கல் கஃபே.
பதிலளிநீக்குசம்பத் = எங்கிருந்தாலும் வாழ்க!.
சந்திப்பு = மூனுபேர் இங்கே....மீதிபேர் எங்கே??!!!
பாலகணேஷ் அண்ணேன், இவங்க என்னையும் கூப்பிடாம புரக்கணிசிட்டாங்க அண்ணேன். இவங்கலை உத்து லவனிக்கணும், ஏதோ திரைமரைவுல வேலை பன்ராங்கனு தோணுது.
அடுத்த வாரம் நாம ரெண்டுபேர் மட்டும் ஏதாவது நல்ல கீக்கடையாப் பாத்து டீ சாப்பிட்டிடலாம்ணே. இவங்கலையெல்லாம் கூப்பிடக்கூடாதுணே, பழிக்குப் பழி வாங்குறோம்:-)))
வருவதாக சொல்லிவிட்டு, பின்னர் குடும்பத்தினர் உடல்நிலையை காரணம் காட்டி வராமல் போன ஜெய் அவர்களுக்கு கண்டங்கள்.
நீக்குநல்லது தலைவரே...
பதிலளிநீக்குஅப்படி நல்ல கடையை பிக்கப்பண்ணுங்க....
இனிய தீபாவளி நால்வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குGazzalai Cafe...SUPER.
பதிலளிநீக்குகஃபேயின் உணவுகள் அருமை! இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குஅதான் யூனியன் கார்பைடு விஷயத்தில் நல்லா இழப்பீடு தந்தாங்களே!
பதிலளிநீக்குஅன்று... அறிவாலயத்தை கைப்பற்ற வைகோ முயன்றார்
இன்று... தாயகத்தை கைப்பற்ற சம்பத் முயல்கிறார்.
வரலாறு திரும்புகிறது.
சந்திப்பதே மகிழ்ச்சிக்காகதானே!
கஸாலி கஃபே ஆரம்பமே அசத்தல்தான்.
கடை கல்லா கட்ட நல்வாழ்த்துக்கள்
நாரவாய் சாமி ...................பேறு நல்லா இருக்கு ...அவரை நல்லா உத்து பாருங்க ஸ்நேக் பாபு மதிருயே இருப்பாரு ........
பதிலளிநீக்குஏன்பா இங்க யாரும் ஸ்க்ரீன் சாட்டு எடுக்கிறவங்க மறைஞ்சி இருக்கீங்களா .........?
கஸாலி பத்தியின் ஒவ்வொரு வரியையும் சீராக(முதலிலிருந்து தொடங்கும்படி) மாற்றினால் நல்லாயிருக்கும் என நினைக்கிறேன்..
பதிலளிநீக்குநகைச்சுவை காட்ரூன் அல்லது படம் சேர்த்தால் இன்னும் கலகலக்கும் கபே
இப்போது பாருங்க........ஒவ்வொரு பத்தியும் சீராகவே துவங்கும். மாற்றிவிட்டேன்
நீக்குஇனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பா
பதிலளிநீக்குதம்பி கசாலி , தம்பி சிவா, தொலைபேசி வாயிலாக எனக்கும் தகவல் சொன்னார் ஆனால் அன்று கோவையில் இருந்ததால் வர இயவில்லை! அடுத்த சந்திப்பை கொஞ்சம் கால அவகாசம் கொடுத்து வரும் சனி ஞாயிறு இல்லாமல் அடுத்து வரும் சனி ஞாயிறு வைத்து வலைவழி அனைவரும் அறிய அறிவிப்புக் கொடுத்தால் பலரும் கலந்துகொள்ள வாய்ப்பாக இருக்கும் என்பது என்கருத்து
பதிலளிநீக்குஉடன் தாங்களும் சிவாவும் இணைந்து ஓர் அழைப்பு (வலைவழி) விட வேண்டுகிறேன் அதனை மற்றவர்களும் போடுமாறு செய்யலாம் வருபவர்கள் இசைவினை தெரிவிக்க சொல்லலாம். மழைக்காலம் என்பதால் பூங்கா போன்ற இடங்கள் சரிப்பட்டு வராது நண்பர் வேடியப்பனையே கேட்கலாமே !
எல்லா வகையிலும் உங்களுக்கு உதவ எப்போதும் தயராக உள்ளேன் நன்றி
ஒரு புதிய இசையமைப்பாளரான ரகுநாதன் இசையில் ////ivar puthiya isai amaippalar illai ivar thaan then merku paruvakatru padatthukkum isai ...
பதிலளிநீக்கு