சென்னை கோயம்பேட்டில் நேற்று முன் தினம் ஒரு பச்சிளம் குழந்தையை தரையில் கிடத்தி வீறிட்டு அழவைத்துவிட்டு பிச்சை எடுத்த பெண்ணை சந்தேகப்பட்டு போலீஸ் கைது செய்து, அவளை விசாரித்தபோது, அந்த குழந்தையை இன்னொரு பெண்ணிடமிருந்து ரூபாய் 100 கொடுத்து வாங்கி பிச்சையெடுக்க பயன்படுத்தியது தெரியவந்திருக்கிறது. அதையடுத்து அந்தக்குழந்தையை விற்ற (பெற்ற) தாயையையும் கைது செய்தது போலீஸ்.
அந்தக்குழந்தை கள்ளக்காதலில் பிறந்ததாகவும் அதனால் விற்றதாகவும் சொல்லியிருக்கிறாள் தாய்மையை கேவலப்படுத்திய அந்த (தாய்) நாய்....இப்போது விற்றவளும், வாங்கியவளும் கம்பிக்கு பின்னால். அதிகமாக அழுது மூர்ச்சையான அந்தக்குழந்தையோ மருத்துவமனையில்.....
சமீபகாலமாக, பஸ், ரயில், குப்பைத்தொட்டி, கழிவறை என்று பச்சிளம் குழந்தைகளை வீசிச்செல்லும் கொடூரம் நடந்துகொண்டுதான் இருக்கிறது. அப்படி வீசப்படும் குழந்தைகள் ஏதோ ஒரு தவறான வழியில் பிறந்ததாக அவதானிக்க முடிகிறது. சில நிமிட உடல் சுகத்திற்கும், காம இச்சைக்கும் ஆட்பட்டவர்களுக்கு பிறந்ததை தவிர, வேறு என்ன பாவம் செய்திருக்க முடியும் இக்குழந்தைகள்?
பிறந்த சில மணித்துளிகளே ஆன குழந்தைகளை இப்படி வீசும் முன்/விற்கும் முன்..... ஒரு குழந்தையின் அருமையை பற்றி ஒரு குழந்தையில்லாதவர்களிடம் கேட்டுப்பாருங்கள். சொல்வார்கள் அவர்களின் வேதனையை.....
கள்ளக்காதலர்களே உங்கள் உடல் பசிக்காக இப்படிப்பட்ட பாதகங்களை செய்யாதீர்கள். உங்களுக்கு உறவு வைத்துக்கொள்ள வேண்டுமென்று தோணினால், அதான் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய்க்கெல்லாம் கடையில் விற்கிறதே உறை....அதை வாங்கி மாட்டிக்கு செய்யுங்க. நாசமா போங்க.....அதை விடுத்து குழந்தைகளின் எதிர்காலத்தை வீணடிக்காதீர்கள்.
Tweet |
ivanuga thiruthave mattangu sir, ivanuga 100 rs vikkranga, ana 5 Lacs IVF treatment'ku selavu panna makkal irukanga
பதிலளிநீக்கு"சில மனித மனங்கள் கற்பாறையை விட கடினமாகி விட்டது, ஒரு சில கற்பாறைகளில் கூட தண்ணீர் வருகிறது", என்னும் திருக்குர்ஆனின் வசனம்தான் நியாபகத்திற்கு வருகிறது.
பதிலளிநீக்குவருந்த வைக்கும் பதிவு. :(
Thai alla pai.
பதிலளிநீக்குசெம கடுப்பா இருக்கு அது மாதிரியான காம பிசாசுகள் மேல
பதிலளிநீக்குஇதுகளை முதல்ல மனுசப்பிறவிக கணக்குலயே சேர்க்க முடியாது. கருத்தடை ரப்பர் அல்லது மாத்திரை இப்படி ஏதாவது பயன்படுத்தித் தொலைக்க வேண்டியதுதான. இத ந்யூஸ் பேப்பர்ல படிச்சப்ப இப்ப உங்களுக்கு வந்த கோவம்தான் ரஹீம் எனக்கும் இருந்தது.
பதிலளிநீக்கு:-(((((((((((((
கொடுமை..
பதிலளிநீக்குkodumai :-((((
பதிலளிநீக்குகோவத்துல இருக்கேன் செய்தி கேள்விபட்டதில் இருந்து
பதிலளிநீக்குகொடுமையான செய்தி! குழந்தையில்லாமல் எத்தனை பேர் இருக்கின்றார்கள்...!
பதிலளிநீக்கு18+ எதுக்குன்னுதான் புரியலை கஸாலி!
கடைசியில் எழுதியிருக்கும் பத்திக்காகத்தான் 18+
நீக்குஇன்னொரு வழியும் உண்டு..மார்கழி மாசத்தில் நாய்களை பிடித்து கு.க பண்ணிவிடுவார்களே..அது போல் இவர்களுக்கும் பண்ணிவிட்டுடலாம்..எய்ட்ஸ் வந்தால்கூட இவர்களோடு முடிந்துவிடும் ...
பதிலளிநீக்குஇங்கு பலரும் பிரதிபலித்திருக்கும் தார்மீகக் கோபம் எனக்குள்ளும் இருக்கிறது தம்பி.
பதிலளிநீக்குகுழந்தை இல்லாமல் எத்தனையோ பேர் வேதனைப்படுகின்றனர்.ஆனால் எங்கோ இந்த தவறுகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குஅய்யா ! நூறு ரூபாய்க்கு குழந்தையை விற்கும் அளவிற்கு கொடுமையான வறுமை நிலவுகிறது அதை கண்டித்து ஒரு வார்த்தை கூட எழுத வில்லை?..................... அப்படி என்றால் கள்ளகாதல் அல்லாமல் முறையான உறவு மூலம் பிறந்திருந்தால் நீங்கள் இச்செயலை ஆதரிபீர்களா ?
பதிலளிநீக்குவறுமை எங்குதான் இல்லை? அதற்கு குழந்தையை பெற்றுதான் விற்க வேண்டுமா என்ன? நூறு ரூபாய் கூட சம்பாதிக்க இயலாத நிலையில் குழந்தையை வாங்கியவரும் விற்றவரும் இல்லை. வேலை செய்து சம்பாதிக்கும் அளவிற்கு அவர்கள் ஆரோக்கியமாகத்தான் இருக்கிறார்கள். அடுத்து நல்ல காதலோ கள்ள காதலோ எதன் மூலம் குழந்தை பிறந்தாலும் அதை விற்பதோ கொல்லுவதோ அல்லது குப்பைத்தொட்டி, கழிவறையில் போடுவதோ தவறுதான்.
நீக்குஅய்யா ! நூறு ரூபாய்க்கு குழந்தையை விற்கும் அளவிற்கு கொடுமையான வறுமை நிலவுகிறது அதை கண்டித்து ஒரு வார்த்தை கூட எழுத வில்லை?..................... அப்படி என்றால் கள்ளகாதல் அல்லாமல் முறையான உறவு மூலம் பிறந்திருந்தால் நீங்கள் இச்செயலை ஆதரிபீர்களா ?
பதிலளிநீக்குஇதில் இன்னொரு விஷயம் என்னவென்றால்.... முறையான உறவின் மூலம் குழந்தை பிறந்திருந்தால், வெளியில் தெரிந்தால் அசிங்கமாக போய்விடுமே என்று விற்கவோ, குப்பை தொட்டியில் போடவோ மாட்டார்கள். அப்படி செய்ய சில தடைகள் இருக்கும். யாராவது இது தவறென்று சொல்வார்கள்.
நீக்குஅய்யா ! நூறு ரூபாய்க்கு குழந்தையை விற்கும் அளவிற்கு கொடுமையான வறுமை நிலவுகிறது அதை கண்டித்து ஒரு வார்த்தை கூட எழுத வில்லை?..................... அப்படி என்றால் கள்ளகாதல் அல்லாமல் முறையான உறவு மூலம் பிறந்திருந்தால் நீங்கள் இச்செயலை ஆதரிபீர்களா ?
பதிலளிநீக்குஅற்ப சுகத்துக்காக இந்த அவல செயலை செய்பவர்களையும், உடந்தையாக இருப்பவர்களையும் நிச்சயம் தண்டிக்க வேண்டும் அண்ணே
பதிலளிநீக்குஅந்த நாய்களுக்கு கடுமையாண தண்டனை அளிக்க வேண்டும்
பதிலளிநீக்குஎப்படித்தான் மனசு வருதோ?
பதிலளிநீக்குஅய்யா !கடந்த மாதத்தில் தொண்டு நிறுவனம் மூலம் பத்துஉக்கும் மேற்பட்டமுறையாக பிறந்த குழந்தைகள் ஐயாயிரத்திற்கும் பத்தாயிரத்திற்கும் விற்கப்பட்டுள்ளன இதனை காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளது இது பத்திர்ரிக்கை செய்தி நம்ப வில்லையானால் தேதி தேடி எடுத்து தருகிறேன் அசிங்கம் என்பதுபுளி ஏப்ப காரனுக்கு தான் பசி வந்தால் பத்தும் பறக்கும்
பதிலளிநீக்குமுறையான உறவிலோ முறையற்ற உறவிலோ பிறக்கும் குழந்தைகளை விற்பனை பொருளாக்குவது முறையற்ற செயல். முறையான உறவின் மூலம் பிறந்தாலும் விற்றால் குற்றம் குற்றமே. தாய்மையை கேவலப்படுத்தக்கூடிய ஜென்மங்கள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டியவர்களே.
நீக்குதயவுசெய்து வறுமையை காரணம் காட்டி இந்த மாதிரி செயல்களை நியாயப்படுத்த வேண்டாம்.
நீக்குஇவர்கள் எல்லாம் மனிதர்கள்தானா என்றே சந்தேகமாக இருக்கிறது கஸாலி.
பதிலளிநீக்குஇதுல எதுக்கு 18+ சேத்தீங்க?
பதிலளிநீக்குஇவர்கள் மனிதர்களே இல்லை.
பதிலளிநீக்கு