கலைஞரை குலாம் நபி ஆசாத் சமீபத்தில் சந்தித்தார். இருவரும் என்ன பேசினார்கள் என்று புலனாய்வு பத்திரிகைகள் ஒவ்வொன்றும் தன் கற்பனை சக்தியை காட்டி எழுதி வருகிறது. நம்ம மட்டும் சும்மா இருந்தா நல்லாவா இருக்கும்?. அதுதான் நம்மளும் நம் கற்பனை குதிரையை தட்டிவிட்டதிலிருந்து...
கலைஞர்: வாங்க பாய் என்ன இவ்வளவு தூரம்?
குலாம்: சும்மா நட்பு நாடி வந்திருக்கேன்.
கலைஞர்: அப்படியா ஆச்சர்யமா இருக்கே. என்னை இங்கே சத்தியமூர்த்தி பவன்ல இருக்கும் வாட்ச்மேன் கூட மதிக்கறதில்லையோனு நினைச்சேன். நீங்க டெல்லியிலிருந்து வந்திருக்கீங்கன்னு நினைக்கறப்போ மகிழ்ச்சியா இருக்கு. என்ன விஷயமா வந்திருக்கீங்க?.
குலாம்: அன்னிய முதலீடு விஷயமா....
கலைஞர்: அதான் அன்னிய முதலீட்டை நாங்க 10 வருஷமா ஆதரிச்சுக்குத்தானே இருக்கோம்.
குலாம்: நீங்க என்ன சொல்றீங்க?
கலைஞர்: புரியல...சோனியா கூட அன்னிய முதலீடுதானே அதாவது இத்தாலிகாரங்கதானே அதை சொன்னேன். ஹா..ஹா..ஹா..
குலாம்: அதில்லை சார். நான் சொல்றது சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு பற்றி. எதிர்கட்சிக்காரங்க நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தா நீங்க ஆதரிக்கனும்.
கலைஞர்: எதை தீர்மானத்தையா?
குலாம்: இல்லை.எங்களை....
கலைஞர்: இதைப்பற்றி மன்மோகன் ஒண்ணும் பேசவே இல்லையே.
குலாம்: அவரு இதைப்பற்றி மட்டுமல்ல எதை பற்றியுமே பேச மாட்டாரு. அவருக்கு அந்த அதிகாரத்தை கொடுக்கல.
கலைஞர்: அதான் தெரியுமே..சரி இந்த விஷயத்துல உங்களுக்கு ஆதரவா இருக்கேன்.
குலாம்: நன்றி அய்யா. நாங்க எவ்வளவு அடிச்சாலும் தாங்கற நீங்க ரொம்ப நல்லவருய்யா.
கலைஞர்: அதுதானே கூட்டணி தர்மம். நாங்க எப்போதும் உங்களை கைவிட்டதில்லை. நீங்க எப்போதும் எங்களுக்கு கை கொடுத்ததும் இல்லை என்பதையும் வருத்தத்தோடு சொல்லிக்கிறேன்.
குலாம்: அப்படிலாம் சொல்லலாமா நீங்க?. அன்னையிடம் உங்க வருத்தத்தை சொல்லிடறேன்.
கலைஞர்: வருத்தத்தை சொன்னதோடு விட்டுடாம செயல்ல காட்டச்சொல்லுங்க.
குலாம்: நிச்சயமா. அதுசரி வெளில நிருபர்கள் நிற்கறாங்களே. அன்னிய முதலீடு பற்றி கேள்வி கேட்பாங்களே என்ன பதில் சொல்வீங்க?.
கலைஞர்: அது சஸ்பென்ஸ்.
Tweet |
ரசித்தேன்... சில இடங்களில் வாய் விட்டு சிரித்தேன் அவ்வ்வ்வ்வ்
பதிலளிநீக்கு// கலைஞர்: அது சஸ்பென்ஸ். //
பதிலளிநீக்குஇது தெரியாதா?? திமுக செயற்க்குழு கூடி முடிவெடுக்கும்னு சொல்லுவாரு... ஹி.ஹி.ஹி
சிறப்பு..
பதிலளிநீக்குஹா..ஹா..ஹா....
பதிலளிநீக்குபதிவு அருமை
எப்படியும் இவிங்க காங்கிரசை ஆதரிக்கத்தான் போறாங்க ....
பதிலளிநீக்குவரவர திமுகாவின் போக்கே பிடிக்கவில்லை .
:)))))
பதிலளிநீக்குதிமுக என்பது தமிழக காங்கிரஸாகிவிட்டது
பதிலளிநீக்கு"திமுக என்பது தமிழக காங்கிரஸாகிவிட்டது"
நீக்குரசித்தேன்!
ரைட்டூ :-)))
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குதிருவாளர் கசாசி அவர்களே உங்க பொண்டாட்டி ஊரு எது நீங்க இருக்கிற ஊரு எது? உங்க மனைவிகிட்ட உங்க ஊரு எதுன்னு கேட்டா நீங்க குடும்பத்தோட இருக்கிற ஊற சொல்லுவன்களா இல்லை அவங்க பொறந்து வளர்ந்த ஊற சொல்லுவங்கலா உங்க கிண்டல் கேலி பண்றது எல்லாம் இங்கத்தான் மின்சாரத்தை பற்றி கனவு காண வைத்த மகராசி பற்றி எதுவும் பண்ணாதிங்க பண்ணா கேஸ் வரும் அதான்! உங்களுக்கெல்லாம் மீசை எதற்கு?
பதிலளிநீக்குசார் நம்ம பதிவுக்கு புதுசுன்னு நினைக்கிறேன். இந்த ஒரு பதிவை வச்சு முடிவு பண்ணீடாதீங்க சார். கடந்த எல்லா பதிவையும் ஒரு தடவை படிச்சிட்டு ஒரு முடிவுக்கு வாங்க. அப்புறம் சொல்லுங்க எனக்கு மீசை தேவையான்னு?
நீக்கு