ஞாயிற்றுக்கிழமை காலை பேப்பர் படித்துக்கொண்டிருந்த சிவாவின் கவனத்தை கலைத்தாள் நந்தினி...
“என்னங்க”
“என்னம்மா சொல்லு”
”இன்னைக்கு சினிமாவுக்கு போயிட்டு வரலாமா?”
“வேணாம் நந்து....கூட்டமா ஒரே கசகசன்னு இருக்கும்”
“வேற எங்கேயாவது போயிட்டு வருவோமா...பீச்சுக்கு”
“அங்கே மட்டும் என்ன வாழுதாம். சண்டேன்னா அங்கேயும் கூட்டம்தான்”
“இப்படியே சொல்லிட்டு இருங்க....நமக்கு கல்யாணம் ஆகி இந்த மூணு வருஷத்தில எங்கேயாவது சேர்ந்த மாதிரி போனதே இல்லை.”
“அதுக்கு...இப்ப என்ன வந்துச்சு”
“எங்கேயும் கூட்டிக்கு போகாதீங்க.... வீடு, ஆபீஸ்னு அதையே கட்டிக்கு அழுங்க”
“ஏன் இப்ப கோபப்படுறே?”
“வேற...கோபப்படாம கொஞ்சுவாங்களா? எனக்குத்தான் வாழ்க்கையில ஒரு சந்தோஷமும் இல்லேன்னு ஆண்டவன் எழுதிவச்சிட்டானே.....சே இதெல்லாம் ஒரு பிழைப்பு”
“வெளியில் போறதும் ஊர் சுத்தறதும்தான் சந்தோசம்னு நீ நினைக்கிறியா?”
“அதுவும் கூட சந்தோஷம்தான். பக்கத்து வீட்டுக்காரங்களும், எதிர்த்த வீட்டுக்காரங்களும் சேர்ந்து மாசத்துக்கு ஒருதடவை எங்கேயாவது போயிக்குத்தான் இருக்காங்க... நாமளும் இருக்கோமே”
“எப்போதும் அடுத்தவங்களோட நம்மள கம்பேர் பண்ணாதே நந்து”
“அவங்கவங்க புருஷனோட வெளியில் போகும்போது, எவ்வளவு சந்தோஷமா போறாங்க.... அதுல அவங்களுக்கு பெருமை வேற... என்னை இளக்காரமா பார்க்கறாங்க... நேத்து குழாயடில தண்ணி பிடிக்க போறப்பகூட அந்த எதிர்த்த வீட்டுக்கார பொண்ணு என்ன ஆண்டி ஒரு வேலைக்காரியை வச்சுக்க கூடாதா? நீங்களே எல்லா வேலையையும் பாக்கறீங்கன்னு கேக்குறா...எனக்கு அவமானமா போச்சு”
“இதுல என்னம்மா அவமானம். நம்ம வேலையை நம்ம பார்த்துக்கறதுதானே முறை?”
“இப்படியே வக்கனையா பேசுங்க....காலையில் எழுந்திருச்சு பாத்திரம் தேய்க்கிறதிலிருந்து துணி துவைக்கிற வரைக்கும் எல்லா வேலையையும் நான் ஒரு ஆளே பன்ன வேண்டி இருக்கு. இந்த வேலைக்காவது ஒரு வேலைக்காரியை வச்சுக்கலாம்ன்னு நானும் அடிக்கடி சொல்றேன். கேட்டாத்தானே”
“அதெல்லாம் ஒரு உடற்பயிற்சி மாதிரி... நம்மளே செஞ்சாத்தான் நமக்கு ஆரோக்கியம்”
“ஆரோக்கியம் நமக்கில்லை. உங்க பர்சுக்கு.... அதான் இப்படி சொல்றீங்க.... ஆம்பளைகளை பொறுத்த வரையில் பொண்டாட்டினா பகல்ல வேலைக்காரியாவும், ராத்திரில அவங்களுக்கு விபச்சாரியாவும் இருக்கனும்னு நினைக்கிறாங்க....இது ஆணாதிக்கம்”
“விட்டா மகளிர் அணியை கூட்டிவந்து வீட்டுக்கு எதிர்ல கோஷம் போட வச்சிடுவே போல....உனக்கென்ன வீட்டு வேலைக்கு ஒரு ஆளு வேணும் அவ்வளவுதானே... நாளைக்கே ஏற்பாடு செஞ்சிடுவோம் விடு...”
அப்போது வீட்டிற்கு வெளியே ஒரே கூச்சல்.....
“என்ன சத்தமா இருக்கு.... என்னன்னு கொஞ்சம் பாரேன்”
சில நிமிடங்களுக்கு பிறகு....
“அது ஒண்ணும் இல்லேங்க.... எதிர்த்த வீட்டுக்காரனும், பக்கத்து வீட்டுக்காரனும்.....”
“யாரு? நீ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி புகழ்ந்துக்கு இருந்தியே அவங்களா?”
“ஆமாங்க.... அவங்க பண்ண கூத்து தெரியுமா?”
“சொன்னாத்தானே தெரியும்”
“அவங்க ரெண்டு பேரும் அவங்க வீட்டு வேலைக்காரிட்ட சில்மிஷம் பண்ணி மாட்டிக்கிட்டாங்களாம்.... அதான்”
“ஓ அப்படியா சேதி... சரிதான்....நம்ம வீட்டுக்கு எப்ப வேலைக்காரியை ஏற்பாடு செய்யட்டும்?’
“வேணாங்க.....நானே எல்லா வேலையும் பார்த்துக்கறேன்”
==============
Tweet |
hahaha.. really nice
பதிலளிநீக்குsimple and super :)
சூப்பர்........செம செம...
பதிலளிநீக்குஇப்போ இந்த மாதிரி பதிவுகள் எல்லாம் போடுறீங்க அதையே தொடருங்க அரசியல்லே இருக்காம
அட உங்கள பாணியிலிருந்து மாறுபட்ட பதிவு. சிறுகதை சூப்பர்.
பதிலளிநீக்குநடத்துங்க அண்ணே நடத்துங்க .. நல்லா இருக்கு ..
பதிலளிநீக்குஎல்லா வீட்டுலேயும் நடக்கலேன்னாலும் சில வீட்டுல இப்படித்தான் நடக்குது! நான் சில்மிசத்தை சொல்லலே!
பதிலளிநீக்குகத நல்லாதான் இருக்கு
பதிலளிநீக்குவீட்டு வேலைகளில் கணவனும் பாதி வேலைகளை பகிர்ந்தால் என்ன கோரங்கா போயிடுவான்...? அப்புறம், வார விடுமுறை நாட்களில் ஒரு நாள் மாலை வெளியே போயி சுத்திட்டு வந்தா என்ன குறைஞ்சா போயிடும்...? ஸாரி சகோ.கசாலி... உங்க கதை... ஒரு சார்பு சிந்தனை..!
பதிலளிநீக்கு// கோரங்கா //-------குறைஞ்சா....
நீக்குசலாம் அண்ணே.. இது ஒரு சார்பு சிந்தனை அல்ல. இதில் கணவன் மட்டுமே வேலைக்கு போறான். மனைவி ஒரு குடும்பத்தலைவி மட்டுமே. அப்படி இருக்கும்போது கணவனை வேலைக்கு அனுப்பிவிட்டு மனைவி இந்த வேலைகளை பார்க்கிறாள். அதனால்தான் ஒரு வேலைக்காரியை கேட்கிறாள்.
நீக்குவழக்கமாக அடுத்த வீடு, எதிர்வீட்டுக்காரங்களோடு ஒப்பிடுவது பெண்கள் சிலரின் குணம். எல்லாவற்றிற்கும் அப்படி ஒப்பிடக்கூடாது என்பதற்காக எழுதப்பட்ட கதை.
நீக்குhe he he. sema comedy
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குஅருமை
ஹி ஹி //“ஓ அப்படியா சேதி... சரிதான்....நம்ம வீட்டுக்கு எப்ப வேலைக்காரியை ஏற்பாடு செய்யட்டும்?’
பதிலளிநீக்கு// அங்கதான் நீங்க நிக்கிறீங்க பாஸ்
அடுத்தவருக்காக வாழ்ந்தால் அதில் நிச்சயம் நிம்மதி இருக்காது.
பதிலளிநீக்குநாம் நமக்காகவே வாழ வேண்டும்.
எங்க அம்மா சோனியாவையும்,தமிழினத்தலைவர் கருணாநிதியையும்தான் சொல்லுறீங்களோன்னு அதிர்ச்சியாயிட்டேன்...அப்புறம்..???
பதிலளிநீக்குஅப்புறம் இந்த மியூசிக் எங்கேயோ கேட்டதுமாதிரி இருக்கே
பதிலளிநீக்குநல்லாயிருக்கு கஸாலி..தொடர்ந்து எழுதுங்க..ஆனா க்ளைமாக்ஸ் இதுதான்னு நான் யூகிச்சுட்டேன்..
பதிலளிநீக்கு