ட்வீட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக தளங்களில் நடிகர்களிலேயே அதிகம் பஞ்சராக்கப்பட்டது நடிகர் விஜய்தான். பவர் ஸ்டார் போன்றோரை ஓரளவு கரிசனத்துடன் எழுதுபவர்கள் கூட, விஜயை கண்ணாபிண்ணாவென்று எழுதுவார்கள். ஆனால், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் விஜய் தரப்பு போய்கொண்டிருக்கும். ஆனால் அதெல்லாம் அப்போது. இப்போது தொட்டதுக்கெல்லாம் வழக்கு பாய்கிறது.
ஃபேஸ்புக், ட்வீட்டரில் ஏதும் எழுதக்கூட வேண்டாம், ஏற்கனவே யாராவது எழுதியதை லைக், ரீட்வீட் செய்தாலே போதும். உடனே போலிஸார் நம் இல்லம்தேடி வந்து கதவை தட்டிவிடுவிடுவார்கள்.
ஒரு அமைச்சரை தொகுதிக்குள் காணவில்லை, எம்.பி.,தொகுதிப்பக்கமே வரவில்லை என்று கூட இனி யாரும் ட்வீட் போடமுடியாது போல....அந்த அளவிற்கு எழுத்து சுதந்திரம் கழுத்து நெரிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது இணையத்தில். சரி விஷயத்திற்கு வருகிறேன். துப்பாக்கி படம் வெளிவருகிறது தீபாவளிக்கு. நமக்கு விஜய் படம் வெளிவந்தாலே தீபாவளிதான். அதிலும் தீபாவளிக்கே படம் வெளி வருதென்றால் சொல்லவே வேண்டாம்.....தவுசண்ட் வாலா பட்டாசுதான். ஆளாளுக்கு ஃபேஸ்புக்கில் உட்கார்ந்து விடுவார்கள் கிண்டல் செய்ய....
படத்தை பற்றியோ, விஜய் பற்றியோ யாரும் நெகட்டிவான கமெண்டை கொடுத்தால் ஒருவேளை கேஸ் போட்டாலும் போடலாம். எதற்கும் கொஞ்சம் அடக்கி வாசிங்க பதிவர்களே...
==============
ஏ.ஆர்.ரஹ்மான் - மணிரத்னம் - வைரமுத்து கூட்டணி என்றாலே மெஹா ஹிட்தான். இது கடந்த காலங்களில் நிருபிக்கப்பட்ட ஒரு விஷயம். இப்போது இவர்கள் கூட்டணியில் வெளிவர இருக்கும் கடல் திரைப்படத்தின் ஒரு பாடலை வெளியிட்டிருக்கிறார்கள். நல்லதொரு அருமையான மெலோடி எனலாம் இப்பாடலை..... நீங்களும் கேட்டுப்பாருங்களேன்.
Tweet |
//அருமையான மெலோடி எனலாம் இப்பாடலை// மிக மிக மிக மிக மிக அருமையான பாட்டு ... கண்ணில் கண்ணீர் வரவளைக்குது ஒரு முறை ...
பதிலளிநீக்குகாதல் சிறகு ஒரு முறை ... ஏக்கம் ஒரு முறை .. அருமை அருமை;
டாகுடரின் தீவிர ரசிகரான கஸாலியின் மிரட்டலுக்கு அடிபணிய மாட்டோம்.
பதிலளிநீக்குவிஜய் எவ்வளவு கலாயித்தாலும் கோபித்து கொள்ள மாட்டார்....அவர்தான் நண்பனாச்சே....
பதிலளிநீக்குசெம பாட்டு பாஸ்....நேத்து தான் கேட்டேன்..பாட்டு பெரிய ஹிட் ஆகும் பாருங்க...
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குஎனக்கு இந்த பதிப்பு பிடுச்சு இருக்கு ஏனா ? நான் அஜித் பிரியன் ஆச்சே ஹ ஹ ஹ
பதிலளிநீக்குவழக்கம்போல் ரகுமானின் உழைப்பு தெரிகிறது. பாடலில்
பதிலளிநீக்குஇதுக்கெல்லாம் அடங்கமாட்டோமெல்ல...ஆவ்வ்வ்
பதிலளிநீக்கு