என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

புதன், நவம்பர் 21, 2012

11 கஸாலி கஃபே (21/11/2012)




'பால் தாக்கரேவை போன்ற பலர் தினமும் பிறக்கிறார்கள் - இறக்கிறார்கள். இதற்கெல்லாம் கடையடைப்பு செய்யக்கூடாது' என்று ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் எழுதிய ஒரே காரணத்திற்காக ஷகீன் என்பவரையும் அந்த ஸ்டேட்டசை லைக்கிய அவரின் தோழி ரினி என்பவரையும் கைது செய்து பலத்த சர்ச்சையில் மாட்டிக்கொண்டுள்ளது மஹராஷ்டிரா போலிஸ்.

சமூக ஆர்வலர் அர்விந்த் கெஜ்ரிவாலில் தொடங்கி பிரஸ் கவுன்சில் தலைவர் மார்கண்டேய கட்ஜூ வரை தன் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்கள்.
மஹாராஷ்டிராவை பொறுத்த வரையில் யார் ஆட்சியில் இருந்தாலும் அதிகாரம் என்பதோ சிவசேனா கையில் தான் என்று மீண்டும் ஒருமுறை நிருபணமாகி உள்ளது. என்மேல் கை வைத்தால் மராட்டியத்தில் ரத்த ஆறு ஓடும் என்று பால்தாக்கரே சொன்னபோதும் போலிசார் இதே வேகத்தை காட்டியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். எப்படியோ இனி ஃபேஸ்புக்கில் லைக் கூட பார்த்துதான் போட வேண்டும் போல.....

=============



கல்யாண வீடா இருந்தா நாந்தான் மாப்பிள்ளையா இருக்கனும் என்று அதாவது எல்லாவற்றிற்கும் எனக்குத்தான் முதலிடம் என்கிற ரீதியில் எஜமான் படத்தில் நெப்போலியன் வசனம் பேசுவார். அப்படித்தான் ஆகிவிட்டது கலைஞரின் நிலையும். சமீபத்தில் சி.பி.எஸ்.ஈ. பாடத்திட்டத்தில் நாடார் பற்றிய செய்திக்கு கண்டனம் தெரிவித்து அதை நீக்கசொல்லி மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார் கலைஞர்.

அதைத்தொடர்ந்து ஜெயலலிதாவும் ஒரு கடிதம் எழுதினார். இதில்தான்  இப்போது பிரச்சினையே நான்தான் முதன் முதலில் கடிதம் எழுதினேன். ஜெயலலிதா அதன்பிறகுதான் எழுதினார் என்றெல்லாம் ஒரு அறிக்கை விட்டு தமாஷ் செய்துள்ளார் கலைஞர். எதிலெல்லாம் ஈகோ பார்ப்பது என்று விவஸ்தை இல்லையா? யார் சொன்னால் என்ன? நீக்கினால் சரிதானே....

============



வரவர ராமதாசின் காமெடிக்கு அளவே இல்லாமல் போச்சு. வரும் தேர்தலில் சாதிக்கட்சியுடன் மட்டுமே கூட்டணி என்றார். அதன் பின் 2016-இல் தமிழகத்தில் பா.ம.க.,ஆட்சி என்றார். இப்போது நான் தனித்து போட்டியிட தயார். அதுபோல மற்ற கட்சிகளும் தயாரா என்கிறார். உங்களுக்கென்ன நீங்க தனித்துப்போட்டியிட்டாலும் ஆட்சியை பிடிக்க போறதில்லை. அதான் சொல்கிறீர்கள். ஆனால், ஆட்சியை பிடிக்கும் கட்சிகளுக்கு......
ஒரு ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் வைத்துள்ளவனிடம் டீக்கடை வைத்திருப்பவர் நான் தோற்றுவிட்டால் என் டீக்கடையை விட்டுவிட்டு போய் விடுகிறேன். நீ தோற்றால் உன் ஃபைவ் ஸ்டார் ஹோட்டலை விட்டுவிட்டு போய்விட தயாரா என்பது போல் இருக்கிறது ராமதாசின் சவால்.

==========



உலக சட்டாம்பிள்ளை அமெரிக்காவின் அடி வருடியாகி விட்டது ஐ.நா. இலங்கையில் கொத்துகொத்தாக மனிதர்கள் கொல்லப்பட்ட போது காட்டிய அதே கள்ள மவுனத்தை இப்போது பாலஸ்தீனம் விஷயத்திலும் கடை பிடித்து வருகிறது ஐ.நா.
இஸ்ரேலிய படைகளால் பாலஸ்தீன அப்பாவிகள் தினம் தினம் செத்து மடிகிறார்கள். அதற்கு பெரியண்ணன் அமெரிக்காவின் ஆதரவு வேறு....ஆனால், இதையெல்லாம் கண்டும் காணாதது போல இருக்கிறது ஐ.நா.
அட....நாதாரிகளா கண்டுகொள்ளாமல் இருப்பதற்கு  எதற்கு ஐ.நா. என்றொரு அமைப்பு?. இதற்கு ஏன் கோட்டு சூட்டு வேற மாட்டிக்கு திரியனும்?.இதெல்லாம் ஒரு பொழைப்பு...

==========




கடந்த வாரம் மலேசியாவிலிருந்து சென்னை வந்திருந்த என் நண்பன், கிண்டியில் புதிதாய் திறக்கப்பட்டிருக்கும் ITC சோழா என்ற 5 ஸ்டார் ஹோட்டலில் தங்கியிருந்தான்.அவனை பார்ப்பதற்காக அங்கு சென்றிருந்தேன். ஹோட்டலா அது அரண்மனை போல் இருந்தது. கிரானைட், மார்பிள் என்று உள்ளே செதுக்கி வைத்திருந்தார்கள். சென்னையில் இப்படி ஒரு ஹோட்டலா என்று மலைப்பாகத்தான் இருந்தது எனக்கு. நீங்களும் பாருங்களேன்....

===========



இனி சாதிக் கட்சியுடன் மட்டுமே கூட்டணி- ராமதாஸ்# சாதிக் என்பவர் கட்சி ஆரம்பிச்சதா தெரியலியே?...
---------

இனி சாதிக் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி-ராமதாஸ்# உங்களோடவே நீங்க கூட்டணி வச்சிக்கிட்டா நல்லாவா இருக்கும்?

--------

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது-மு.க.அழகிரி # உங்க மகனை இன்னும் கண்டுபிடிக்கவே முடியலியே. அதை வச்சு சொல்றீங்களாண்ணே.....

--------

முகநூலில் சாட்டில் அடிக்கடி வந்து சம்பந்தமில்லாமல் பேசி தொல்லை கொடுப்பவர்களிடம் அடுத்த முறை ஒரு 1000 ரூபாய் கடன் கேட்டுப்பாருங்கள். அதன் பின் உங்கள் பக்கமே வர மாட்டார்கள். நான் இதைத்தான் சில நாட்களாக பின் பற்றுகிறேன்.

---------






Post Comment

இதையும் படிக்கலாமே:


11 கருத்துகள்:

  1. nalla thakavalkal.....


    naadaar samooka vivakaaram..
    sdpi enum katchithaan poraattam seythathu....

    பதிலளிநீக்கு
  2. //பால்தாக்ரே
    இந்தியாவில் மட்டுமே இப்படி எல்லாம் நடக்கும்

    //கலைஞர்
    கடிதம் எழுதியது பெயருக்குத்தானே? அதான் அடிச்சுக்கிறாங்க...

    //ராமதாஸ்
    ஹி, ஹி .....

    //ஐ.நா
    இன்னுமா நம்மள நம்புறாய்ங்க?

    நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு
  3. ராமதாஸ் எல்லாம் இன்னும் அறிக்கை விட்டு கொண்டுதான் இருக்கிறாரா?!கலக்கல் கபே

    பதிலளிநீக்கு
  4. சென்னை தங்கும் விடுதி பார்ப்பதற்கு பிரம்மாண்டமாய் உள்ளது.ராமதாஸ் கலக்கல் அருமை.யார் கடிதம் எழுதியது என்பதா முக்கியம் செயல்பட்டதுதான் நமக்கு தேவை

    பதிலளிநீக்கு
  5. //இனி சாதிக் கட்சியுடன் மட்டுமே கூட்டணி- ராமதாஸ்# சாதிக் என்பவர் கட்சி ஆரம்பிச்சதா தெரியலியே?...
    //

    This is Top!!

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் அண்ணே ...
    ராமதாஸ் பேசும் பேச்சுக்கள் பல நேரங்களில் சிரிப்பை தவிர வேறு எதையும் தருவதில்லை..
    அப்புறம் நம்ம முத்தமிழ் அறிஞ்சர் செய்யும் தவறுகளை தானே எல்லாம் செய்து விட்டு மறைமலைநகரில் கொஞ்சம் நேரம் மன்றாடிய கதை வரும் என்று எதிர்பார்த்தேன் ஏமாந்துவிட்டேன் ... அப்புறம் மும்பை அந்த இரு பெண்களையும் கைது செய்தது நாட்டின் ஜனநாயக கேள்விக்குறி ,,,

    பதிலளிநீக்கு
  7. நல்ல தகவல்கள், சிலர் பேசுவதைக் கேட்டால் என்ன என்னவோ சொல்லத் தோன்றுகிறது. அருமையான பதிவு.

    பதிலளிநீக்கு
  8. பாஸ், // கிண்டியில் புதிதாய் திறக்கப்பட்டிருக்கும் ITC சோழா என்ற 5 ஸ்டார் ஹோட்டலில் தங்கியிருந்தான்/// இந்த ஹோட்டல்ல சார்ஜஸ் எப்புடின்னு சொல்லலியே?

    பதிலளிநீக்கு
  9. பெயரில்லா22 நவ., 2012, 9:37:00 AM


    'நாந்தான் முதல்ல லெட்டர் எழுதனேன்' என்று ஆர்டிஸ்ட் சொன்னது உண்மையாக இருக்கலாம். ஆனால் அதை முதலில் போஸ்ட் செய்தது மேடம்தான் என்பதை சொல்லிக்கொள்ள கடமைப்பட்டு இருக்கிறேன். :)

    பதிலளிநீக்கு
  10. பெயரில்லா26 நவ., 2012, 9:31:00 AM

    மிக அருமையான பதிவு
    வணக்கம் வளர்ந்து வரும் புதிய திரட்டி தினபதிவு
    உங்கள் வரவை விரும்புகிறது.
    தினபதிவு திரட்டியில் இன்று அட்ராசக்க -சி.பி. செந்தில்குமார் சிறப்பு பேட்டி
    http://www.dinapathivu.com/
    தினபதிவு திரட்டி

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.