என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

செவ்வாய், நவம்பர் 27, 2012

17 அன்னிய முதலீடும் தி.மு.க.,வின் சில்லறை அரசியலும்....



சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு விஷயத்தில் தன் நிலைப்பாடு சஸ்பென்சாகவே இருக்கும் என்று கலைஞர் சமீபத்தில்தான் தெரிவித்திருந்தார். அன்னிய முதலீடு பற்றிய பாராளுமன்ற வாக்கெடுப்பில் தி.மு.க.,வின் சஸ்பென்ஸ் உடைந்து க்ளைமேக்சிற்கு வந்துவிட்டது. ஆம்.....மத்திய அரசை ஆதரிக்கும் முடிவை எடுத்துள்ளது தி.மு.க.

மற்றவர்களுக்கு வேண்டுமானால், கலைஞர் வைத்தது  சஸ்பென்சாக இருந்திருக்கலாம். ஆனால், கலைஞரை அறிந்தவர்களுக்கு நன்றாக தெரிந்திருக்கும் அவரின் க்ளைமேக்ஸ் எப்போதும் மத்திய அரசுக்கு ஆதரவாகத்தான் இருக்கும் என்று.....சமீபகாலமாகவே காலையில் ஒரு பேச்சு, மாலையில் ஒரு பேச்சு என்று மாற்றி மாற்றி பேசி வருகிறார் அவர். இந்த எழவுக்கு எதுக்கு சன்பென்ஸ் புடலங்காயெல்லாம்.... நாங்கள் மத்திய அரசின் அடிமைகள் என்று நேரடியாகவே சொல்லிருக்கலாம்.

திமுகவைப் பொறுத்தவரையில் சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கான அனுமதியை எதிர்க்கிறது. ஆனால் நாடாளுமன்றத்தில் இந்த விவகாரத்தில் வாக்கெடுப்பு நடைபெற்றால் மத்திய அரசை திமுக ஆதரிக்கும் என்று ஒரு வெண்டைக்காய் அறிக்கையை விட்டிருக்கிறார் கலைஞர். அதாவது திருடனுக்கு ஆதரவாம், திருட்டுக்கு எதிர்ப்பாம். சூப்பரா இருக்குல்ல இது.

முன்பெல்லாம் தி.மு.க.,வை பற்றி ஒன்று சொல்வார்கள். அதாவது தி.மு.க.,ஆதரித்தாலும், எதிர்த்தாலும் அதில் ஒரு கடுமை இருக்கும் என்று.... இப்போது ஆதரித்தாலும் எதிர்த்தாலும் ஒரு குழப்பமே மிஞ்சுகிறது தி.மு.க.,விடம்....


Post Comment

இதையும் படிக்கலாமே:


17 கருத்துகள்:

  1. சலாம்,

    எதிர்ப்பு ஆனா ஆதரவு.....ஸ்ப்ப்பாஆ ஒன்னுமே புரியலையே...

    பதிலளிநீக்கு
  2. தாத்தா என்றைக்குமே சந்தர்பவாத அரசியில்தான் செய்துகொண்டிருக்குறார்.

    பதிலளிநீக்கு
  3. இதுக்கு அனாதைன்னே சொல்லிருக்கலாம்

    பதிலளிநீக்கு
  4. கொள்கை ரீதியாக எதிர்க்கிறோம், ஆனால் அரசியல் ரீதியாக ஆதரிக்கிறோம்....
    -தலிவர்

    பதிலளிநீக்கு
  5. சுய நலத்தையும் பித்தலாட்ட அரசியலையும்
    எத்தனை நாள்தான் கெட்டிக்காரத்தனமான பேச்சால்
    மறைக்க முடியும்
    தலைப்பே கவிதையைப் போலிருக்கிறது
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  6. வயசாய்ட்டுல அதான் இந்த குழப்பம்

    பதிலளிநீக்கு
  7. மு.க. எதிர்த்து ஓட்டளித்தால் காங்கிரஸ் அரசு கவிழும். ஊடகங்கள் அதைதான் விரும்புகிறது! பா.ஜா.க ஆட்சிக்கு வரும்! பா.ஜா.க வந்தாலும் இதே அந்நிய முதலீடு வரத்தான் போகிறது (முன்பு செய்தவர்கள் தானே!)? முதலீட்டைக் கொண்டு வருவது பெரிய திமிங்கலங்களும் அவர்களுக்கு ஆதரவாக உள்ள ஊடகங்கள் தான்.

    ராஜீனாமா செய்யலாம்;அந்த இடத்தை பிடிக்க அ.தி.மு.க. அவர்கள் ஏதாவது சாக்கு சொல்லி அவர்களும் அந்நிய முதலீடு வரவைப்பார்கள்; இந்தியாவில் கட்சிகளா இல்லை? எனக்குத் தெரிந்த இந்திய அரசியல். தவறாக இருக்கலாம்.

    நீங்கள் மு.க. இடத்தில் இருந்தால் என்ன முடிவு எடுப்பீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த முடிவைத்தான் கலைஞர் எடுப்பார். எடுக்கவேண்டும் என்று ஏற்கனவே தெரிந்ததுதான். ஆனால், இதை குலாம் நபி ஆசாத் வந்தபோதும் சிதம்பரம் வந்தபோதும் சொல்லிருக்க வேண்டியதுதானே? ஏன் வீராப்பு பேசிக்கு சஸ்பென்ஸ் அது இதுன்னு சொல்ல வேண்டும்? எடுக்க வேண்டிய முடிவை வளவளா கொழ கொழான்னு குழப்பத்துடன் எடுக்காமல் ஒரு உறுதியுடன் எடுத்திருந்தால் இப்போதுபோல் விமர்சனம் வந்திருக்காது அல்லவா?

      நீக்கு
    2. அது தான் அரசியல்! அவர் ஒன்னும் குழம்பவில்லை; அவர் தெளிவாகத் தான் இருக்கிறார்; அவர் இப்படி முடிவு எடுக்கும் போதே இப்பட்டி! நேர உடனே எடுத்தால் எல்லாப் பயலும் ஏறி கடிச்சுடுவான்.

      அதே சமயம் வேறு ஏதாவது கட்சி இந்த முடிவை எடுத்தால் முதலீட்டைக் கொண்டு வருவது பெரிய திமிங்கலங்களும் அவர்களுக்கு ஆதரவாக உள்ள ஊடகங்கள் தான் என்றும் மக்கள் அந்தமா என்னாப்பா பண்ணும்; மேலே சொன்ன எல்லாம் பேசுவார்கள்.

      இப்ப இருக்கும் மின்வெட்டு முக ஆட்சியில் இருந்தால் ஊடகங்ள் அவரை எப்போ கீழே இருகியிருப்பார்கள்.

      நீக்கு
    3. கலைஞர் தெளிவாகத்தான் இருக்கிறாரென்றால் அன்னிய முதலீடு விஷயத்தில் இதுதான் என் நிலைப்பாடு என்ற முடிவை எடுக்க இவ்வளவு தயக்கமும் தாமதமும் ஏன்? மற்றபடி அடுத்தடுத்து நீங்கள் கூறிய கருத்து ஏற்புடையதே.

      நீக்கு
    4. கலைஞர் தெளிவாகத்தான் இருக்கிறாரென்றால் அன்னிய முதலீடு விஷயத்தில் இதுதான் என் நிலைப்பாடு என்ற முடிவை எடுக்க இவ்வளவு தயக்கமும் தாமதமும் ஏன்? மற்றபடி அடுத்தடுத்து நீங்கள் கூறிய கருத்து ஏற்புடையதே.

      நீக்கு
  8. கடுமை குறைந்திருப்பது உண்மைதான்..

    பதிலளிநீக்கு
  9. மக்களுக்காக எந்த அரசியல் தலைவர்களும் இல்லை, எல்லோருமே அவரவர்களின் கட்சியை காப்பாற்றவே பாடுபடுகிறார்கள்.

    எப்பத்தான் இந்த உலகம் அழியுமோ? அன்றுதான் புதியதாக யோசிக்கும் மனிதர்களும் பிறப்பார்கள் , மக்களுக்காக பாடுபடும் தலைவர்களும் பிறப்பார்கள்.

    பதிலளிநீக்கு
  10. இது அறிந்த ஒன்றுதான்! யாரும் மக்களுக்காக அரசியல் செய்வதில்லை இப்போது!

    பதிலளிநீக்கு
  11. போங்கடா இழிச்சவாயனுங்களா.... இதுதான் அவர் எடுத்த முடிவின் அர்த்தம்.

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.