கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கடைசியில் அடித்த தானே புயல் பாண்டிச்சேரி மாநிலத்தை மட்டுமல்லாமல், கடலூர், விழுப்புரம் மாவட்டத்தையும் ஒரு காட்டு காட்டி விட்டு போனது. அங்கு சீர்குலைந்த மின்சாரத்தை சரி செய்யவே ஒரு மாதங்கள் ஆனது. நல்லவேளையாக நேற்று அடித்த நீலம் புயல் அப்படி ஒரு பெரிய சேதத்தை ஏற்படுத்தாமல் கடந்தது எல்லோருக்கும் பெரிய நிம்மதி.
=============
தே.மு.தி.க.,வில் புயல் அடித்துக்கொண்டிருக்கும் வேளையில் ம.தி.மு.க.,விலும் நாஞ்சில் சம்பத் என்ற புயல் விரைவில் கரையை கடக்கும் என்றே தெரிகிறது. அவராகவே நீக்கட்டும் என்று சம்பத்தும், சம்பத்தாகவே போகட்டும் என்று வைகோவும் இருப்பதாக செய்தி வருகிறது. நாஞ்சில் சம்பத்தை பொறுத்தவரை வைகோவிற்கு அடுத்து ஸ்டார் பேச்சாளர் அவர்தான்.
தி.மு.க.,விலிருந்து வைகோ வெளியானபோது அவர் கூட வந்தவர்கள் பலர்.ஆனால், அவர்களில் சிலரைத்தவிர பலர் ஏற்கனவே தாய்கழகத்தில் இணைந்துவிட்டார். இப்போது நாஞ்சில் சம்பத்தின் முறை போலும்....
சமீபத்தில் அவரின் பேட்டியை படிக்க நேர்ந்தது. அதில் வழக்கமான கோபத்தை ஓரங்கட்டிவிட்டு கலைஞர் மீது கரிசணம் காட்டியிருந்தார். எப்படியோ இந்தப்புயலும் அறிவாலயம் பக்கம் கரையை கடந்தாலும் ஆச்ச்ர்யமில்லை.
===============
காங்கிரஸ்காரர்கள் என்ன செய்வது என்று தெரியாமலேயே செய்கிறார்களா அல்லது தெரிந்தே செய்கிறார்களா என்று விளங்கவில்லை... நேற்று இந்திராகாந்தியில் நினைவு தினம் சம்பந்தமாக பத்திரிகயாளர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் இந்திராவின் நினைவு தினம் என்பதற்கு பதிலாக சோனியாவின் நினைவு தினம் என்று குறிப்பிட்டு விட்டார்களாம்...அய்யோ..அய்யோ....
Tweet |
அரசியல்ல இதெல்லாம் சகஜம்பா! சிறப்பான பகிர்வு!
பதிலளிநீக்குகாங்கிரஸ் காமெடி சிரிச்சி மீளல
பதிலளிநீக்குகாங்கிரஸின் காமெடி மிகவும் அருமை .கலக்கிட்டீங்க
பதிலளிநீக்குஹாஹா ஹா....காங்கிரஸ் என்றாலே கலகலப்புதானே !
பதிலளிநீக்குகாங்கிரசில் ஒருத்தர் கூட ஒழுங்காக proof பார்க்கவில்லையா.
பதிலளிநீக்குவெட்கம்.
Tamil Breaking News