என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

புதன், ஏப்ரல் 27, 2011

47 நடுநிலை(?) காப்பி பேஸ்ட் பதிவர்கள்


  இன்று தமிழில் வெளிவரும் ஜூனியர் விகடன்,குமுதம்  ரிப்போர்டர், நக்கீரன்  போன்ற பத்திரிகைகளில் வெளிவரும் செய்திகளை அப்படியே எடுத்து போட்டு தனது ஹிட்ஸ் ரேட்டை உயர்த்தி கொள்வதற்கென்றே சில பதிவர்கள் இருக்கிறார்கள்.

அவர்களின் முழுநேர வேலையே இந்த பத்திரிகைகளில் வெளிவரும் செய்திகளை ஈ அடிச்சான் காப்பி என்ற ரீதியில் ஒரு எழுத்து விடாமல் அப்படியே அடிப்பதுதான்....

அதற்காக அவர்கள் காப்பி ரைட் வாங்கியிருக்கிறார்களா என்று தெரியவில்லை.(நானும் சில நேரங்களில் அந்த செய்திகளின் முக்கியத்துவம் கருதி காப்பி செய்திருக்கிறேன்...அதே நேரம் அவர்கள் தளத்தில் படிக்க அனுமதித்த செய்திகளை மட்டுமே எடுத்திருக்கிறேன்.சந்தா கட்டி படிக்க சொல்லும்  செய்திகளை நகல் எடுத்ததில்லை).

அதற்காக அவர்கள் சொல்லும் காரணம் வெளிநாட்டில் இருக்கும் தமிழர்கள் மேற்கண்ட இந்த பத்திரிகைகளை படிக்க முடியாது...சிலரே சந்தா கட்டியிருப்பார்கள்...அப்படி சந்தா கட்டி படிக்க முடியாத தமிழர்கள் இடம் இந்த செய்தியை கொண்டுபோகிறோம் என்பதுதான்... நல்லபணி....

அதேநேரம் பத்திரிகைகளில் வெளிவரும் தி.மு.க- எதிர்ப்பு செய்திகளை மட்டுமே இவர்கள் காப்பி பேஸ்ட் செய்து தனது தளத்தில் வெளியிடுகிறார்கள். மறந்தும் கூட அண்ணா.தி.மு.க-விற்கோ, அல்லது ஜெயலலிதாவிற்கோ எதிராக வெளிவரும் எந்த ஒரு செய்திகளையும் இவர்கள் காப்பி பேஸ்ட் செய்து வெளியிடுவதில்லை. என்ன ஒரு நடு நிலைமை?....

வெளிநாடு வாழ் தமிழர்கள் தி.மு.க எதிர்ப்பு செய்திகளை மட்டும்தான் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறார்களா? ஏன் அண்ணா.தி.மு.க எதிர்ப்பு செய்திகளை வெளியிட்டால் படிக்க மாட்டார்களா? அப்படி அண்ணா.தி.மு.க எதிர்ப்பு செய்திகளை வெளியிட்டால் ஹிட்ஸ் ரேட் குறைந்து விடுமா? அல்லது தி.மு.க-எதிர்ப்பு செய்திகளை வெளியிட மட்டுமே அந்தந்த பத்திரிகைகளிடம் ரைட்ஸ் வாங்கியிருக்கிறார்களா? அல்லது ஜெயா & கோ-விடம் இருக்கும் பயமா என்று ஒரு எழவும் விளங்கவில்லை. நீங்களாவது சொல்லுங்களேன்...

நான் இப்படி கேட்பதால் என்னை தி.மு.க-வின் சொம்புதூக்கி என்று சொல்ல நினைப்பவர்களுக்கு.....என் தளத்தில் பாருங்கள் நான் யாருக்காவது சொம்பு தூக்கி இருக்கிறேனா என்று? இரண்டு கட்சிகளையும் சமமாகத்தான் என் பதிவில் சாடியிருக்கிறேன்...




படிக்காமல் தவற விட்டவர்களுக்காக....என் முந்தைய பதிவு 


Post Comment

இதையும் படிக்கலாமே:


47 கருத்துகள்:

  1. அன்பின் கஸாலி

    சிந்தனை நன்று - ஆனால் அது அவர்கள் விருப்பம் - நாம் சொல்வதற்கு என்ன இருக்கிறது. ஆதங்கத்தைத் தெரிவித்தாயிற்று. சரி. ஆமாம் ஏன் கொஞ்ச நாட்களாகவே இடுகைகள் இரண்டு முறை வருகின்றன. பிரச்னை சரி செய்யவும். நல்வாழ்த்துகள் கஸாலி - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  2. அண்ணன் என்னைத்தான் நேரடியா தாக்கறாரு பொல..ஆனா தனி மெயில்ல வந்து உங்களை தாக்கலைன்னு சமாளிச்ட்டார் ஹி ஹி

    பதிலளிநீக்கு
  3. இந்தப்பதிவு 1200 ஹிட்ஸ் அடித்து தமிழ்மணத்தில் மகுடம் சூட்டி கலக்கும் என எதிர்பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  4. இந்தப்பதிவு 1200 ஹிட்ஸ் அடித்து தமிழ்மணத்தில் மகுடம் சூட்டி கலக்கும் என எதிர்பார்க்கிறேன்.//

    இன்னா செய்தாரை நன்னயம் செய்கிறாராம்...ஹி ஹி

    பதிலளிநீக்கு
  5. ஏன் இப்படி சகப் பதிவர்களுக்குள் இப்படி மோதல், ஒரு சிலரை தவிர்த்து பிளாக் மூலம் பணமா வருது. பிளக் மூலம் நல்ல நண்பர்களைத்தான் நாம் வெகுமதியா பெறுகிறோம். பொழுதைப் போக்க, தங்கள் உணர்ச்சிகளுக்கு வடிகாலாதான் பிளாக் இருக்கு. அப்படியிருக்க, எஞ்சாய் பண்ணிட்டு போறதை விட்டுட்டு தேவையா இந்த அக்கப்போரெல்லாம்?

    பதிலளிநீக்கு
  6. நண்பரே காப்பி பேஸ்ட் செய்வதால் அவர்களுக்கு என்ன பணமா கொட்டுகிறது???

    இல்ல ஹிட்ஸ் அதிகமாக வருவதால் கூகுள் அவர்களுக்கு என தனியா அக்கவுண்ட்ல பே பண்றாங்களா???

    அவர்கள் அதிமுக ஆதரவு செய்தியை வெளியிடுவதால் அம்மா ஆட்சிக்கு வந்ததும் அவர்களுக்கு கட்சி பதவி தரப்போகிறார்களா???

    நீங்கள் நடுநிலைமையாக பதிவு போடுவதால் உங்களுக்கு மட்டும் என்ன கிடைக்கப்போகிறது...

    பதிவுலகம் ஒவ்வொருவரின் விருப்பத்தை பொறுத்து அது அவர்கள் உலகம் காப்பி பேஸ்ட் செய்யலாம், இல்ல பதிவே போடாம சும்மா இருக்கலாம் அது அவர்கள் உரிமை...

    பதிலளிநீக்கு
  7. ஆக இப்பதிவால் உங்கள் ஹிட் அதிகமாக போகுது....

    பதிலளிநீக்கு
  8. இதே பதிவை வேறு யாராவது எழுதியிருந்தால்...
    "என்னத்த சொல்ல?" என்பது தானே உங்களது கமெண்டாக இருக்கும்?

    பதிலளிநீக்கு
  9. இப்படி எழுதுவது ஒரு தற்போதைய டிரண்ட் நினைக்கிறேன். இது மாறும்.

    பதிலளிநீக்கு
  10. //அண்ணன் என்னைத்தான் நேரடியா தாக்கறாரு பொல..ஆனா தனி மெயில்ல வந்து உங்களை தாக்கலைன்னு சமாளிச்ட்டார் ஹி ஹி//

    இதைத்தான் அரசியல் என்று சொல்வார்கள்.

    பதிலளிநீக்கு
  11. உங்கள் பதிவுகள் இரட்டையாக வருகிறது. சரி செய்ய முடியுமா என்று பாருங்கள்..

    பதிலளிநீக்கு
  12. சி.பி.செந்தில்குமார் said... 2 அண்ணன் என்னைத்தான் நேரடியா தாக்கறாரு பொல../////////யாருயா அது சிங்கம் சிலுப்பிக்கிட்டு இருக்கும் போது சீப்பு கொண்டு வந்து காட்டுறது?

    பதிலளிநீக்கு
  13. தி.மு.க.வின். இளைஞர் அணி தொண்டர் கசாலி வாழ்க!

    பதிலளிநீக்கு
  14. //அஞ்சா சிங்கம் said...
    சி.பி.செந்தில்குமார் said... 2 அண்ணன் என்னைத்தான் நேரடியா தாக்கறாரு பொல../////////யாருயா அது சிங்கம் சிலுப்பிக்கிட்டு இருக்கும் போது சீப்பு கொண்டு வந்து காட்டுறது?//

    நான் ஒன்னும் சிலிப்பிக்கிட்டு நிக்கலையே..வகுடு எடுத்து சீவிட்டுதானே நிக்கறேன்.

    பதிலளிநீக்கு
  15. என்ன சார் நீங்க கூட தான் காபி அடிக்குறீங்க..... அது அவங்க அவங்க விருப்பம்....இதுல என்ன இருக்கு

    பதிலளிநீக்கு
  16. // இதே பதிவை வேறு யாராவது எழுதியிருந்தால்...
    "என்னத்த சொல்ல?" என்பது தானே உங்களது கமெண்டாக இருக்கும்? //

    ரைட்டு... நடக்கட்டும்...

    பதிலளிநீக்கு
  17. காப்பி அடிக்கிறது மூலமா ஒரு நல்ல விஷயம் நாலு பேருக்கு போய் சேருதுன்னா காப்பி நல்லதுதானே ...ஹையா கமெண்ட் அடிக்கிறதுலகூட காப்பி அடிச்சிட்டேன் ...

    பதிலளிநீக்கு
  18. தமிழ் நிருபர் ஓட்டுப்பட்டையை நீக்கி விட்டு பாருங்கள். பதிவுகள் இரு முறை வராது.

    - இப்படிக்கு பிரபல பதிவர்கள் நலச்சங்கத்தின் பத்தாவது வார்டு உறுப்பினர்.

    பதிலளிநீக்கு
  19. ஹிட்ஸ்காக எழுதப்பட்ட பதிவல்ல இது....பதிவுலகத்தில் சக பதிவர்மீது காழ்புணர்ச்சியையோ அல்லது வெறுப்பையோ உமிழ்ந்து தான் ஹிட்ஸ் வாங்கவேண்டுமென்றால் அது எனக்கு தேவையுமில்லை,அவசியமுமில்லை. அப்படி இதுவரை நான் எந்த பதிவையும் எழுதியதில்லை. பத்திரிகை செய்திகளை காப்பி பேஸ்ட் செய்பவர்கள் ஒரு தரப்பு செய்திகளை மட்டுமே எடுத்து போட்டு, இன்னொரு தரப்பு செய்திகளை இருட்டடிப்பு செய்து விடுகிறார்கள்.அப்படி எழுதுவது அவரவர் இஷ்டம்தான் என்றாலும் தொடர்ந்து ஒரு கட்சியை மட்டும் சாடுவதால் அவர்கள் சொல்வதுபோல பத்திரிகை படிக்க முடியாத வெளிநாடு வாழ் நண்பர்கள் மத்தியில் என்னவோ தி.மு.க.மட்டும் தான் ஊழல் மலிந்த கட்சி என்பது போலவும், அண்ணா.தி.மு.க.,யோக்கிய சிகாமணிகள் நிறைந்த கட்சி என்பது போலவும் ஒரு மாய தோற்றம் காட்ட வேண்டாம். இரு தரப்பு சாதக பாதகங்களையும் வெளிநாடு வாழ் வாசகர்களுக்கு கொண்டு செல்லுங்கள் என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடே இது....மற்றபடி எந்த உள்நோக்கமும் இந்த பதிவில் கிடையாது.

    பதிலளிநீக்கு
  20. நடுநிலைமையோடு எழுத வேண்டியது அவசியமானது.

    பதிலளிநீக்கு
  21. ஐயையோ நான் காப்பி சாப்பிடறதே கிடையாது

    பதிலளிநீக்கு
  22. என் நேர்மையை கிண்டல் செய்தால் எனக்கு பிடிக்காது

    பதிலளிநீக்கு
  23. நன்றி என்று பத்திரிக்கை பெயர் போட்டுவிட்டால் பிரச்சனை இல்லை நினைகிறார்கள் போல!
    // சங்கவி said...நண்பரே காப்பி பேஸ்ட் செய்வதால் அவர்களுக்கு என்ன பணமா கொட்டுகிறது??? //


    அந்த கட்டுரை யை , இதழ் வடிவிலோ அல்லது இணைய சந்தா மூலம் படித்திருந்தால் கிடைத்திருக்க வேண்டிய வருமான தை பத்திரிக்கை இழப்பதற்கு சம்பந்தப்பட்ட பதிவர்களே பொறுப்பு! [பதிவர் கு வருமானம் இல்லை ஆனால் இழப்பை ஏற்படுத்த காரணமாகிறார்!]
    இதுவும் ஒரு வகையில் உழைப்பு திருட்டே!

    நடுநிலையான கட்டுரையாக இருந்தாலும் கூட "இலவசமல்லாத" பக்கங்களை கோப்பி - பேஸ்ட் செய்வது தவறுதான்!

    இவற்றை எல்லாம் விகடன் உள்ளிட்ட பத்திரிக்கைகள் பெரிதாக எடுத்து கொள்வதில்லை என்றாலும், சொந்தமாகவே சிறப்பாக எழுத கூடியவர்கள் ஏன் இப்படி செய்கிறார்களோ?

    நல்ல பதிவை எழுதி இருக்கிறீர்கள்! Copy Rights பற்றிய தெளிவு நம் அனைவருக்கும் இருக்க வேண்டியதும் அவசியம்.[நீங்களே கூட இது குறித்த சட்டம் பற்றி சொல்லி இருக்கலாம்]ஆனால் சங்கவி யை தவிர யாரும் இங்கே விவாதிக்க வில்லை..
    ஜோக் அடிப்பவர்கள்/மொக்கை போடுபவர்கள் கூடவே அவர்கள் கருத்தையும் சொன்னால் தேவலை!

    மறுபடியும் சொல்கிறேன்:சொந்தமாகவே சிறப்பாக எழுத கூடியவர்கள்[பத்திரிக்கைகளை விட] ஏன் இப்படி செய்கிறார்களோ?

    பதிலளிநீக்கு
  24. பெயரில்லா27 ஏப்., 2011, 2:37:00 PM

    no comment ...))))

    பதிலளிநீக்கு
  25. காசா பணமா ஒரு கருத்தையாவது சொல்லிட்டு போங்களேன்
    //

    1. ஒரு கோடிக்கு எம்பூட்டு சைபர்ண்ணே?..!!!!

    பதிலளிநீக்கு
  26. யாரையாவது பாராட்டணும்னா பாரட்டிரலாம்! ஆனா யாரையும் தாக்கி எழுதுறதுக்கு முன்னாடி அது உண்மையான்னு பாக்கணும்!
    நடு நிலைமை அப்படிங்கிறது கண்டிப்பா ஒரு கட்சியைப் பற்றி மட்டுமே எழுதுவது நடுநிலை ஆகாதுன்னு நினைக்கிறேன் :-)

    பதிலளிநீக்கு
  27. //இதழ் வடிவிலோ அல்லது இணைய சந்தா மூலம் படித்திருந்தால் கிடைத்திருக்க வேண்டிய வருமான தை பத்திரிக்கை இழப்பதற்கு சம்பந்தப்பட்ட பதிவர்களே பொறுப்பு! [பதிவர் கு வருமானம் இல்லை ஆனால் இழப்பை ஏற்படுத்த காரணமாகிறார்!]
    இதுவும் ஒரு வகையில் உழைப்பு திருட்டே!//

    நண்பர் கிருஷ்ணகுமார் அவர்களே...

    இங்கு இணையத்தில் அனைவரும் அனைத்து விசயங்களையும் படிப்பதில்லை பல நல்ல விசயங்கள் விடுபடுகின்றன..

    அந்த விசயங்களை எனது நண்பர்களுக்கு தெரிவிப்பது எப்படி திருட்டாகும்...

    எடுத்துக்காட்டுக்கு தமிழ்நாட்டில் கோவை தினமலரில் வரும் செய்தி ஈரோடு தினமலரில் வருவதில்லை. கோவையில் வெளிவரும் அனைவரும் அறிய வேண்டிய ஒரு பகுதியை எனது பதிவில் பதிவிடும் போது அது என் ஈரோட்டு நண்பர்களை சேரும்.
    (பத்திரிக்கையின் நோக்கமே அனைவருக்கும் தகவல் தெரியவேண்டும் என்பது தான்)
    தகவலை நண்பர்களுக்கு அளிப்பது எப்போது திருட்டாகது...

    பதிலளிநீக்கு
  28. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  29. தங்கள் கருத்துக்கு நன்றி சங்கவி!
    தினமலர் பதிப்புகள் போல் அல்லாது,விகடன் இணையதிலும் மற்ற மாநிலங்களில் முக்கிய நகரங்களிலும் கிடைக்கின்றது!
    நீங்கள் சொல்வது போல்,பல நல்ல விஷயங்கள் விடுபடுமேயானால் , கட்டுரை யின் சிறு பகுதியை மட்டும் குறிப்பிட்டுவிட்டு சுட்டி கொடுப்பதே நியாயம் ! [அதுவும் கூட பத்திரிக்கையின் அனுமதி பெற்றே என நினைக்கிறேன்!]

    பதிலளிநீக்கு
  30. இன்று தமிழில் வெளிவரும் ஜூனியர் விகடன்,குமுதம் ரிப்போர்டர், நக்கீரன் போன்ற பத்திரிகைகளில் வெளிவரும் செய்திகளை அப்படியே எடுத்து போட்டு தனது ஹிட்ஸ் ரேட்டை உயர்த்தி கொள்வதற்கென்றே சில பதிவர்கள் இருக்கிறார்கள்.//

    ஏனய்யா...ஏனு?
    நல்லாத் தானே போய்க்கிட்டிருக்கு...
    ஹி...ஹி...

    பதிலளிநீக்கு
  31. அவர்களின் முழுநேர வேலையே இந்த பத்திரிகைகளில் வெளிவரும் செய்திகளை ஈ அடிச்சான் காப்பி என்ற ரீதியில் ஒரு எழுத்து விடாமல் அப்படியே அடிப்பதுதான்....//

    ஆ...அப்படியா..

    கண்ணால் காண்பதும் போய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்.

    நம்ம சகா, இந்த விடயத்தை கண்டு பிடிச்சு பெரிய ஆளாகிட்டார்.
    வாழ்க சகோ கஸாலி!

    பதிலளிநீக்கு
  32. அதற்காக அவர்கள் காப்பி ரைட் வாங்கியிருக்கிறார்களா என்று தெரியவில்லை.(நானும் சில நேரங்களில் அந்த செய்திகளின் முக்கியத்துவம் கருதி காப்பி செய்திருக்கிறேன்...அதே நேரம் அவர்கள் தளத்தில் படிக்க அனுமதித்த செய்திகளை மட்டுமே எடுத்திருக்கிறேன்.சந்தா கட்டி படிக்க சொல்லும் செய்திகளை நகல் எடுத்ததில்லை).//


    இது பெரிய அணுகுண்டா எல்லே இருக்கு..

    பதிலளிநீக்கு
  33. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  34. காப்பி, பேஸ்ட் செய்த பதிவுகள் என்றாலும், பல வெளியூர் நண்பர்களுக்கு இவை பயனுள்ள தகவல்கள் எனும் கருத்தில் நியாயம் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  35. தங்களுக்கு ஸலாம் உண்டாகட்டும் சகோ கஸாலி,
    சரியான நேரத்தில் நெத்தியடியாய் ஒரு அவசியமான பதிவு. மிகச்சரியாக சொல்லி இருக்கிறீர்கள். உங்கள் பின்னூட்டத்தில் இன்னும் தெளிவாக இருக்கிறது உங்கள் நிலை. மிக்க நன்றி, சகோ.

    பதிலளிநீக்கு
  36. நம் மீது எல்லாம் வல்ல ஏக இறைவனின் சாந்தியும் பேரருளும் அபிவிருத்தியும் ஏற்படட்டுமாக..!

    சகோ அருமையான பதிவு

    நடுநிலையான பார்வை

    பதிலளிநீக்கு
  37. ஹி...ஹி...ரைட்டு...நீங்க சொல்லி திருந்த போறாங்களா?

    பதிலளிநீக்கு
  38. Post re direct to உண்மைத்தமிழன்.
    :-)

    பதிலளிநீக்கு
  39. நடுநிலை சிந்தனைக்குப் பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  40. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  41. ***அதேநேரம் பத்திரிகைகளில் வெளிவரும் தி.மு.க- எதிர்ப்பு செய்திகளை மட்டுமே இவர்கள் காப்பி பேஸ்ட் செய்து தனது தளத்தில் வெளியிடுகிறார்கள். மறந்தும் கூட அண்ணா.தி.மு.க-விற்கோ, அல்லது ஜெயலலிதாவிற்கோ எதிராக வெளிவரும் எந்த ஒரு செய்திகளையும் இவர்கள் காப்பி பேஸ்ட் செய்து வெளியிடுவதில்லை. என்ன ஒரு நடு நிலைமை?....

    வெளிநாடு வாழ் தமிழர்கள் தி.மு.க எதிர்ப்பு செய்திகளை மட்டும்தான் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறார்களா?***

    ஆனா வாயக்கேளுங்க! ஏதோ பெரிய நியாயஸ்தன் மாதிரி பேசிக்குவானுக! காப்பி பேஸ்ட் செய்வதில் கூட அரசியல்வாதியைவிட கேவலமான பதிவர்கள் நெறையா இருக்கானுக! விடுங்க!

    பார்ப்பான் ஒழிகனு ஒரு பக்கம் கத்துவானுக! பாப்பாத்திய மேலே கொண்டுவர நாய் மாதிரி ஒழைப்பானுக!

    அப்புறம் ஆரியர் மயிறு மண்ணாங்கட்டினு வேற அப்பப்போ ஒப்பாரி!

    பதிலளிநீக்கு
  42. Post Poll Survey done by India Today & Headlines Today predicts DMK Win in the Assembly election (130+ seats). In today’s (28th April) HT news at 6:00 pm same was broadcasted..

    The same group said ADMK will win in their Pre Poll Survey, now they seem to change their stand to save their face when the election results are out by May 13th.

    http://indiatoday.intoday.in/site/story/post-poll-survey-karunanidhi-gains-jayalalitha-slips-in-tamil-nadu/1/136557.html

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.