என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

வெள்ளி, ஏப்ரல் 29, 2011

45 பிரபல பதிவர் சி.பி.செந்தில்குமாரின் ஒருநாள்...


பதிவுலக மன்னன் அட்ராசக்க சி.பி.செந்தில்குமார் ஒருநாளை எப்படி செலவழிக்கிறார் என்று ஒரு பார்க்க நீண்டநாள் ஆசை...அதன் படி  வெள்ளிக்கிழமை அவரை கண்காணிக்க ஒருநபரை நியமித்தோம். இதற்கு ஆபரேசன் சி.பி.என்று பெயரிட்டோம். அவரை காலையிலிருந்து இரவுவரை கண்காணித்து நம் ஆள் கொடுத்த ரிப்போர்டை உங்கள் முன் சமர்பிக்கிறோம்.

காலை

 6 to 7 மணி - துயில் எழுதல், பல் துலக்குதல்,குளித்தல்  இன்னபிற....

7 to 9 மணி-  குளித்துவிட்டு கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்து அவரின் வலைத்தளமான அட்ராசக்கையில் அன்றைய பதிவை வெளியிடுகிறார். பின்னர் பிற பதிவர்களின் பதிவை பார்வையிட்டு வாக்களித்து, முதன்முதலாக பரவசமாக என்று பின்னூட்டம் போடுகிறார்.

9 to 9:30 மணி-  காலை சிற்றுண்டியாக எட்டு தோசை, நாலு சப்பாத்தி, மூணு பூரி ஒரே மூச்சில் சாப்பிடுகிறார்.

9:30 to 10 மணி - சிறிது ஓய்வு

10 to 11 மணி - கையில் லேப்டப்புடன் வீட்டை விட்டு வெளியேறி ஈரோடு சென்று, அன்று வெளியாகியுள்ள ஒரு புது படத்தை பார்க்க தியேட்டருக்குள் நுழைகிறார். லேப்டாப்பை ஆயத்த நிலையில் வைக்கிறார்.

11:15 மணி - படம் ஆரம்பம். இடையிடையே முக்கிய வசனங்களை லேப்டாப்பில் டைப் அடித்து சேமித்து வைக்கிறார்.


மதியம்

12:30 மணி- படம் இடைவேளை விடப்படுகிறது.அதுவரை பார்த்த காட்சிகளையும் வசனங்களையும் வரிசைபடுத்தி விமர்சனம் எழுத்து கிறார்...

12:45 மணி - மீண்டும் படம் ஆரம்பம்.
2:to 2:30 மணி - படம் முடிந்து வெளியேறி ஒரு ஓரமாக உட்கார்ந்து மீதி படத்தின் விமர்சனத்தையும் எழுதி கூகுள் இமேஜில் அந்த படத்திற்கு பொருத்தமான நடிகைகளின் கவர்ச்சி  படத்தை தேடி தன் விமர்சனத்தில் சேர்த்து தன்  பதிவை  வெளியிடுகிறார்......

பின்னர்  ஓட்டமும் நடையுமாக ஒரு சைவ ஹோட்டலில் நுழைந்து பரபரப்பாக சாப்பிட்டுவிட்டு அதே வேகத்தில் வெளியாகி இன்னொரு தியேட்டருக்குள் மேட்னி காட்சிக்காக நுழைகிறார்.


 2:30 மணி- படம் ஆரம்பம்.

மாலை

4:00 மணி-  இடைவேளை. முன்பு சொன்ன முறைப்படி முற்பாதிக்கான விமர்சனம் எழுதி சேமிக்கிறார்.

4:15 மணி-  மீண்டும் படம் ஆரம்பம்.

5:30 மணி-  படம் முடிகிறது...தியேட்டரை விட்டு வெளியேறி மேற்சொன்ன பாணியில் விமர்சனம் எழுதி தன் வலைப்பதிவில் வெளியிடுகிறார்.

6:00 மணி-  மீண்டும் ஒரு பிட்டு படம் ஓடும் தியேட்டருக்கு செல்கிறார்..வாசலில் இருக்கும் ஒரு டீக்கடையில் ஒரு டீயும், ஒரு வடையும் சாப்பிட்டுவிட்டு தியேட்டருக்குள் நுழைகிறார். பதிவில் குறிப்பிடுமளவிற்கு பிட்டுபடத்தில் வசனம் இடம்பெறாது, முழுக்க முழுக்க சீன்களே நிறைந்திருக்கும்.ஒரு சீனை மிஸ் பண்ணினாலும் காசுக்கு நட்டம்  என்பதால் தனது லேப்டாப்பை திறக்காமல் வெண்திரையை வெறித்து பார்த்தபடி அமர்ந்திருக்கிறார்.

6:30 மணி- படம் ஆரம்பம்...

இரவு

7:30 மணி-  இடைவேளை

7:45 மணி-மீண்டும் ஆரம்பம்

8:15 மணி-படம் முடிகிறது

8:30 மணி- பஸ் பிடித்து வீட்டிற்கு வந்து அடுத்த நாள் காலை வெளியிடுவதற்காக அந்த பிட்டு படத்தின் விமர்சனத்தை எழுதி சேமிக்கிறார்.

10:00 மணி- சாப்பிடுகிறார்

10:30 மணி- உறங்கப்போகிறார்.

இவ்வளவுதாங்க சிபி-யின் வெள்ளிக்கிழமை. நிறைவு பெறுகிறது.


டிஸ்கி: இது முழுக்க முழுக்க நகைச்சுவைக்காக எழுதப்பட்ட பதிவு...இதற்கும் சி.பி-யின் வெள்ளிக்கிழமைக்கும் சம்பந்தமில்லை. 
இது சிபி-யின் மனதை புண்படுத்தாது என்று நம்புகிறேன்
 

படிக்காமல் தவற விட்டவர்களுக்காக....என் முந்தைய பதிவு 


Post Comment

இதையும் படிக்கலாமே:


45 கருத்துகள்:

  1. நீங்கள் வெளியிட்ட ஒரு நாள் மாதிரி தானா ஒவ்வொரு நாளும்??

    பதிலளிநீக்கு
  2. //இதற்கு ஆபரேசன் சி.பி.என்று பெயரிட்டோம்.//

    "ஆப்பு"ரேசன் பண்ணிய டாக்குடரு யாருங்க??

    பதிலளிநீக்கு
  3. இந்தப்பதிவை நான் வன்மையாக கண்டிக்கிறேன்

    பதிலளிநீக்கு
  4. //இடையிடையே முக்கிய வசனங்களை லேப்டாப்பில் டைப் அடித்து சேமித்து வைக்கிறார்.///

    இப்படி செய்வதில்லை என்று சி.பி. முன்பு சொல்லியிருக்கிறார்.
    எல்லாம் மெமரி பாஸ் ..மெமரி..

    பதிலளிநீக்கு
  5. தவறுகள்

    1, எனக்கு டீ குடிக்கும் பழக்கம் கிடையாது

    2. பிட் படம் வந்தா காலைக்காட்சியே பார்த்துடுவேன் ( முதல் ஷோ போனா சில சீன் கட் ஆகிடும்)

    பதிலளிநீக்கு
  6. ///இந்தப்பதிவை நான் வன்மையாக கண்டிக்கிறேன்///

    ஓ... இது சீரியசான பதிவா?

    பதிலளிநீக்கு
  7. தவறுகள்

    3. லேப்டாப்பில் ஆல்ரெடி பட ஸ்டில்ஸை வியாழன் அன்றே சேமித்து விடுவேன்

    4. தியேட்டரில் வசனங்களை டைப் அடித்தால் எவனும் படத்தை பார்க்க மாட்டான்.நம்மளைத்தான் பார்ப்பான் ( லூஸா?ன்னு?)

    பதிலளிநீக்கு
  8. //தவறுகள்

    1, எனக்கு டீ குடிக்கும் பழக்கம் கிடையாது///

    ஓட்டை உடைச்சல் ரிப்போர்ட் தந்த உங்க உளவுத்துறையை உடைப்பில போடுங்க... (எப்படி ரைமிங்)

    பதிலளிநீக்கு
  9. >>
    6 to 7 மணி - துயில் எழுதல், பல் துலக்குதல்,குளித்தல் இன்னபிற....

    இதுவும் தவறு நான் காலை 5 மணீக்கு எழுந்து ஜாக்கிங்க் போயிடுவேன்

    பதிலளிநீக்கு
  10. >>காலை சிற்றுண்டியாக எட்டு தோசை, நாலு சப்பாத்தி, மூணு பூரி ஒரே மூச்சில் சாப்பிடுகிறார்.

    இதுக்குப்பேரு சிற்றுண்டியா? அடிங்கொய்யால

    பதிலளிநீக்கு
  11. >>2:to 2:30 மணி - படம் முடிந்து வெளியேறி ஒரு ஓரமாக உட்கார்ந்து மீதி படத்தின் விமர்சனத்தையும் எழுதி கூகுள் இமேஜில் அந்த படத்திற்கு பொருத்தமான நடிகைகளின் கவர்ச்சி படத்தை தேடி தன் விமர்சனத்தில் சேர்த்து தன் பதிவை வெளியிடுகிறார்..

    இதுவும் தப்பு.. விமர்சனம் டைப் பண்ண ஒரு மணீ நேரம். வசனம் டைப் பண்ண ஒரு மணீ நேரம்.. ஆல்டர். எடிட் பண்ண அரை மணீ நேரம்

    பதிலளிநீக்கு
  12. >>
    10:00 மணி- சாப்பிடுகிறார்

    10:30 மணி- உறங்கப்போகிறார்.

    செகண்ட் ஷோ பார்க்க மாட்டேனா?

    பதிலளிநீக்கு
  13. >>இதற்கு ஆபரேசன் சி.பி.என்று பெயரிட்டோம். அவரை காலையிலிருந்து இரவுவரை கண்காணித்து நம் ஆள் கொடுத்த ரிப்போர்டை உங்கள் முன் சமர்பிக்கிறோம்.

    அடப்போங்கப்பா.. எனக்கு 10 ரூபாக்கு பஞ்சு மிட்டாய் வாங்கிக்குடுத்திருந்தா நானே சொல்லி இருப்பேன்.

    பதிலளிநீக்கு
  14. அண்ணன் கஸாலி டாக்டர் ராம் தாஸ் மாதிரி.. ஒரு பதிவுல தாக்குவாரு.. அடுத்த பதிவுல பாராட்டுவாரு ஹி ஹி

    பதிலளிநீக்கு
  15. யோவ் மாப்ள நீ போட்டு வாங்கரன்னு தெரியாம அவரே வந்து உண்மையா கொட்றாரு பாரு ஹிஹி!

    பதிலளிநீக்கு
  16. @சி.பி.செந்தில்குமார்

    "சி.பி.செந்தில்குமார் said... 9

    >>
    6 to 7 மணி - துயில் எழுதல், பல் துலக்குதல்,குளித்தல் இன்னபிற...."

    >>>>>>>>>>>

    இதுவும் தவறு நான் காலை 5 மணீக்கு எழுந்து ஜாக்கிங்க் போயிடுவேன்

    >>>>>>>>>>>>>>>

    காலையில ஜாகிங்கா
    ஹிஹி...........எதுக்குன்னு ஹிஹி!

    பதிலளிநீக்கு
  17. விக்கி உலகம் said... 15

    யோவ் மாப்ள நீ போட்டு வாங்கரன்னு தெரியாம அவரே வந்து உண்மையா கொட்றாரு பாரு ஹிஹி!/// விக்கி எப்படியெல்லாம் யோசிக்குது பாரு..

    பதிலளிநீக்கு
  18. பிரபல பதிவர் சி.பி.செந்தில்குமாரின் ஒருநாள்...//

    சகோவின் லேட்டஸ் போட்டோ ஒன்று போட்டிருக்கலாமில்ல.

    பதிலளிநீக்கு
  19. லாப் டோப் பட்டரியே ஒரு மணி நேரம் தான் ஒர்க் ஆகும்,
    ஆனால் சிபிக்கு மட்டும் எப்பூடி லப்டாப் தியேட்டரினுள் ஒரு நாள் பூர மின்சாரம் இன்றி ஒர்க் ஆகுது?

    பதிலளிநீக்கு
  20. இன்னைக்கு சிபி மாட்டிக்கிட்டாரா........

    அவ்..............

    பதிலளிநீக்கு
  21. சிபி வேலைக்கு போறதில்லையா???

    பதிலளிநீக்கு
  22. பெயரில்லா29 ஏப்., 2011, 10:04:00 AM

    @ சி.பி செந்தில் குமார் கொடுத்த வைச்ச ஆளாகத் தெரிகிறார். தினமும் மூன்று வேளை உணவு, மூன்று படம் - அதிலும் சீன் நிறைந்த பிட் படமாம் .. மனுசனுக்கு இதை விடவும் வேற என்னங்க வேண்டும். இராத்திரி 10.30க்கு தூங்கப் போய்விடுகிறார்....... லக்கி பெல்லோவ்

    பதிலளிநீக்கு
  23. http://blogintamil.blogspot.com/2011/04/blog-post_29.html

    just go to Valaichcharam! you have been introduced

    பதிலளிநீக்கு
  24. அசிக்கப்பட்டான்டா செந்திலு...

    எத்தனைநாள் கோவங்க...
    இப்படி போட்டு தாக்கியிருக்கிங்க...

    பதிலளிநீக்கு
  25. ///
    காலை சிற்றுண்டியாக எட்டு தோசை, நாலு சப்பாத்தி, மூணு பூரி ஒரே மூச்சில் சாப்பிடுகிறார்.
    ////

    ஏதாவது ஓட்டலை லீஸீக்கு எடுத்திருக்காரா..?

    பதிலளிநீக்கு
  26. ஏனுங்க, இந்த ஆபீசு ஆபீசுன்னு ஒண்ணு இருக்கே அதுக்கு எப்பங்க போவாரு....?

    பதிலளிநீக்கு
  27. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
    ஏனுங்க, இந்த ஆபீசு ஆபீசுன்னு ஒண்ணு இருக்கே அதுக்கு எப்பங்க போவாரு....?//

    பாஸ் என்கிற பாஸ்கரன்...?

    பதிலளிநீக்கு
  28. //////6:00 மணி- மீண்டும் ஒரு பிட்டு படம் ஓடும் தியேட்டருக்கு செல்கிறார்..////////

    ஈவ்னிங் ஷோவுல பிட்டு போடமாட்டாங்களே?

    பதிலளிநீக்கு
  29. பெயரில்லா29 ஏப்., 2011, 12:18:00 PM

    ///சி.பி.செந்தில்குமார் said... 13

    >>இதற்கு ஆபரேசன் சி.பி.என்று பெயரிட்டோம். அவரை காலையிலிருந்து இரவுவரை கண்காணித்து நம் ஆள் கொடுத்த ரிப்போர்டை உங்கள் முன் சமர்பிக்கிறோம்.

    அடப்போங்கப்பா.. எனக்கு 10 ரூபாக்கு பஞ்சு மிட்டாய் வாங்கிக்குடுத்திருந்தா நானே சொல்லி இருப்பேன்./// ஹஹஹா சூப்பர்

    பதிலளிநீக்கு
  30. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  31. ஹெட்லைன் டுடே - எக்சிட் போல் கணிப்புபடி தி மு க முந்துகிறது - முந்தைய கணிப்பில் ஜெ தான் முதல்வர் என்று அடித்து சொன்ன இந்திய டுடே இப்போது ஜெ முதல்வராவது சந்தேகமே என தெரிவித்துள்ளது.. தி மு க தனியாக 90௦ வரையும் , அதன் கூட்டணியோ சேர்ந்து 130௦ வரையும் பெரும் என்று தெரிகிறது.. தி மு க வின் பிரசாரம் மிக அதிகமான வாக்களர்களை தி மு க பக்கம் இழுத்துள்ளது

    தலித் வாக்குகளில் பெரும் பகுதி தி மு க விற்கு சென்றுள்ளது.. கிராமப்புறங்களில் தி மு க அதிக வாக்குகளை பெற்றுள்ளது .
    அ தி மு க வை விட கிராமப்புறத்தில் 5% அதிகம் தி மு க விற்கு

    முதல் முறை வாக்காளர்கள் வாக்கு தி மு க வே அதிகம் பெற்றுள்ளது

    தேர்தலுக்கு முன் தி மு க விற்கு 45% பேர் ஆதரவு சொன்னார்கள்.. இப்போது 50% க்கு மேல் தி மு க விற்கு வாக்களித்திருப்பதாக தெரிகிறது

    அம்மா கொடநாட்டில் இருக்க வேண்டும் என்பது விதி போல

    பதிலளிநீக்கு
  32. பெயரில்லா29 ஏப்., 2011, 1:06:00 PM

    ம்..நடத்துங்க...

    பதிலளிநீக்கு
  33. பெயரில்லா29 ஏப்., 2011, 1:06:00 PM

    ம்..நடத்துங்க...

    பதிலளிநீக்கு
  34. பெயரில்லா29 ஏப்., 2011, 1:07:00 PM

    என் புகைப்படம் வெளியிட்டு வாழ்த்துக்கள் தெரிவித்தமைக்கு மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  35. பெயரில்லா29 ஏப்., 2011, 1:08:00 PM

    பிட் படம் வந்தா காலைக்காட்சியே பார்த்துடுவேன் ( முதல் ஷோ போனா சில சீன் கட் ஆகிடும்)//
    ரொம்ப முக்கியம்

    பதிலளிநீக்கு
  36. பெயரில்லா29 ஏப்., 2011, 1:09:00 PM

    சிபி வேலைக்கு போறதில்லையா??//
    கூலி வேலைக்கா போறாரு..?

    பதிலளிநீக்கு
  37. எச்சூச்மி ..............மே ஐ கம் இன் ............????

    பதிலளிநீக்கு
  38. அப்ப அண்ணே வேல வெட்டிக்கே போறது கெடையாது

    பதிலளிநீக்கு
  39. எதுக்கு பாஸ் இதெல்லாம்...

    பதிலளிநீக்கு
  40. எல்லா உண்மையையும் சொல்லிட்டாரா? :-)

    பதிலளிநீக்கு
  41. ஹிஹிஹிஹி சிரித்து மாளாது...
    அனுபவிச்சு எழுதி இருக்கார்லே!!
    உண்மையாலுமே இது தான் சி பயிண்ட வாழ்க்கை வட்டமா??

    பதிலளிநீக்கு
  42. தல சுத்துது எல்லோரும் கேட்ட கேள்வி தான் வேலை பெட்டிகேல்லாம் போறதில்லையா

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.