என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

வியாழன், ஏப்ரல் 14, 2011

12 புலன்விசாரணை பாகம்-7

முந்தைய பாகங்கள் 

அரசர்குளம்.

 நடிகை ஸ்ரீமதியின் வீட்டை கண்டுபிடிப்பதில் சிரமமாக இருக்கவில்லை இன்ஸ்பெக்டர் தில்லையம்பலத்திற்கு....

வீட்டில் ஸ்ரீமதியின் அண்ணன்,அண்ணி மட்டுமே   வீட்டில் இருந்தனர்.

"வணக்கம் சார்.நான் இன்ஸ்பெக்டர் தில்லையம்பலம்...உங்க தங்கை கொலை கேஸ் விஷயமா விசாரிக்கற பொறுப்பு எனக்குத்தான். "

"அப்படியா....சந்தோசம்...என் பேரு  முத்துக்குமார். இப்ப எந்த அளவுல சார் விசாரணை இருக்கு.... "

"ஒரு முன்னேற்றமும் இல்லை....அதுக்குத்தான்  உங்க உதவிய கேட்டு வந்திருக்கோம்."

"என் உதவியா? "

"ஆமாம்....உங்க சொந்த பந்தத்துல யாராவது உங்க தங்கை ஸ்ரீமதியோட பிரச்சினை பண்ணிருக்காங்களா? ஏதும் பகை இருந்ததா? "

"இன்ஸ்பெக்டர் அப்படி யாருக்கும் காயத்ரியோட பிரச்சினை இருந்ததா எனக்கு தெரியாது."..

"காயத்திரியா? "

"ஆமா....நீங்க சொல்ற ஸ்ரீமதியோட உண்மையான பெயருதான் காயத்ரி....எங்களுக்கு அவள காயத்ரியாதான் தெரியும். அவ என்னிக்கு சினிமாவுல நடிக்க   போனாளோ அன்னிக்கே எங்க எல்லோரோட உறவும் முறிஞ்சு போச்சு....ஆனாலும் அவளோட ரொம்ப கோபமா இருந்தது ஒரேஒரு ஆளுதான். "

"அப்படியா யாரு?..... "

"அவரு எங்கப்பா.....அவ சினிமாவுல நடிக்க போனது பிடிக்காம  கடுமையான கோபத்துல இருந்தாரு....அந்த அவமானம் தாங்காம தூக்கு போட்டுக்கு இறந்துட்டாரு.... "

"கொஞ்சம் புரியும் படியா சொல்றீங்களா முத்துக்குமார்? "
"சொல்றேன்....எங்க குடும்பத்துல எங்கப்பா,எங்கம்மா,நான், என் தங்கை காயத்ரி மொத்தம் நாலு பேருதான். எங்கப்பா ரொம்ப கட்டுப்பாடான ஆளு....சினிமா என்றாலே பிடிக்காது. எங்களுக்கு விவரம் தெரிஞ்ச நாளு வரை சினிமா, நாடகம் அது இதுன்னு பார்த்தது கிடையாது.ஆனா காயத்ரி அப்படியில்லை. படிக்க போறேன்னு சொல்லிட்டு அப்பப்ப சினிமா பார்க்க போவா.இது எங்கப்பாவுக்கு தெரியாது. இப்படித்தான் ஒரு  நாளு ரெட்டின்னு ஒரு டைரக்டரு எங்க ஊருக்கு ஷூட்டிங் எடுக்க வந்தாரு....ஷூட்டிங்க வேடிக்கை பார்க்க போன என் தங்கச்சியை அவருக்கு பிடிச்சுப்போயி நடிக்கறியான்னு கேட்டிருக்காரு....அவளும் சரின்னு சொல்லிட்டு எங்கப்பாட்ட வந்து கேட்டா....எங்கப்பா முடியவே முடியாதுன்னு சொல்லிட்டாரு...இருந்தாலும் காயத்ரி பிடிவாதமா இருந்தா....அடுத்த நாள் டைரக்டர்கிட்ட அட்ரஸ் வாங்கி வச்சுக்கு ஒரு வாரத்துல யாருக்கும் தெரியாம வீட்டை விட்டு ஓடிட்டா.....அதுல எங்கப்பா ரொம்ப ஒடஞ்சு போயிட்டாரு....அவ நடிக்க ஆரம்பிச்ச  புதுசுல ஒருநாள் வீட்டுக்கு வந்தா....அவள பார்க்க பிடிக்காத எங்கப்பா...இனிமே எனக்கும் உனக்கும் சம்பந்தமில்லை....இனிமே நான் செத்தாலும் என் முகத்துல விழிக்க கூடாதுன்னு சொல்லி வீட்ட விட்டு துரத்திட்டார் ..... "

அப்போது தில்லையம்பலம் போன் அடித்தது.....
"முத்துக்குமார் ஒரு நிமிஷம்".....என்றபடி போனை எடுத்த தில்லையம்பலம்.

"ஹலோ தில்லையம்பலம் ஸ்பீக்கிங்....
ஆங்....சொல்லுங்க சார்.... "

"................................."

"அப்படியா...இன்னிக்கா....வரமுடியாது சார்....நாளைக்கு வாறேன்"
".............................."
"ஆமா நடிகை ஸ்ரீமதி  கேஸ் விசயமா அவங்க சொந்த ஊர்ல  இருக்கேன்...சரி சரி அட்ரஸ் சொல்லுங்க ..நான் சென்னை வந்ததும் போயி பார்க்கிறேன் "

போனை பொத்தியபடி.....

"முத்துக்குமார் சாரி.... நான் சொல்ற அட்ரச கொஞ்சம் குறிச்சுக்க முடியுமா....எங்கிட்ட பேனா இல்ல... "

"பரவாயில்லை சார் சொல்லுங்க.... "

இன்ஸ்பெக்டர் சொல்ல சொல்ல முத்துக்குமார் ஒரு பேப்பரில் குறித்து கொண்டிருந்தான்.

"ஓகே சார்.ரொம்ப நன்றி" ....போனை வைத்தார்.

"சாரி முத்துக்குமார் என்னிடம் பேனா இல்லாததால குறிக்க சொல்ல வேண்டியதாபோச்சு... "

"பரவாயில்லை சார்....ஒரு உதவிதானே"
என்றபடி அட்ரஸ் எழுதிய பேப்பரை கொடுத்தான் முத்துக்குமார்...
அதை வாங்கி பார்த்துவிட்டு மடித்து தன பாக்கெட்டில் வைத்தார் தில்லையம்பலம்.

"ரொம்ப தேங்க்ஸ்....சரி விசயத்துக்கு வருவோம்....மேலே சொல்லுங்க... "

வீட்டை விட்டு துரத்திட்டார் ....அவளோட எனக்கும்எந்த  தொடர்பும் இருக்க கூடாதுன்னு சத்தியம் வாங்கிட்டாரு....அதுக்கப்புறம் அவளும் இங்கும் வரல....ஒரு மூணு மாசம்  கழிச்சு அவ நடிச்ச படம் வெளியாச்சு....அதுல ரொம்ப கவர்ச்சியா காயத்திரி நடிச்சிருந்தத பார்த்துட்டு எல்லோரும் எங்கப்பாவ கிண்டலும் கேலியுமா பார்த்தாங்க...அதை தாங்க முடியாத எங்கப்பா தூக்குல தொங்கிட்டார்."
கண்ணீர் விட்டான் முத்துக்குமார்.

"ஓ...ஐ யம் சாரி....அப்புறம்... "

"இருந்தாலும் எனக்கு மனசு கேக்காம எங்கப்பா மரணத்தை அவளுக்கு சொன்னேன்.ஆனா அவ அதுபத்தி லஜ்ஜையே இல்லாம கேட்டுக்கிட்டா....பணமும் புகழும் அவள மாத்திடுச்சு....எங்கப்பா இறந்த அதிர்ச்சியில எங்கம்மாவுக்கு புத்தி பேதலிச்சு போச்சு....எங்கம்மாவ கவனிச்சிக்க நான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்..கொஞ்ச நாள்ல அவங்களும் போயி சேர்ந்திட்டாங்க....எங்கம்மா இறந்த விஷயத்தை நான் அவகிட்ட சொல்லவே இல்லை. இப்ப அவ பண்ண பாவம் அவள கொன்னுடுச்சு.... "

"சாரி முத்துக்குமார்...இவ்வளவு விஷயம் நடந்திருக்கா....உங்க தங்கை இறந்ததுக்கு நீங்க வரலியா?" "

"நான் எதுக்கு வரணும்?,பணம், காசுதான் முக்கியம் சொந்தம் பந்தமெல்லாம் தேவையே இல்லைன்னு தூக்கி போட்டுட்டு போனவ மரணம் என்னை பாதிக்கவே இல்லை...இன்னும் சொல்லப்போனா பெத்தவங்களுக்கு அவ பண்ணுன துரோகத்துக்கு இந்த தண்டனை தேவைதான். "

"ரொம்ப பாதிக்கப்பட்டிருக்கீங்க போல..... நான் விசாரிக்க வந்தது வேறு ஆனா உங்க சொந்தக்கதை சோககதை பேசி மனச கனக்க செஞ்சுட்டீங்க .....உங்க தங்கைக்கு உங்க சொந்தக்காரங்க லெவல்ல.... "

"ஏதும் இருக்கதுசார்...ஏன்னா....எனக்கு சொந்தம் பந்தம்ன்னு சொல்லிக்கற மாதிரி யாருமில்லை..அப்படியே இருந்தாலும் கொலை பண்ணுற அளவுக்கு பகையோ முன் விரோதமோ இல்லை.... "

"ரொம்ப நன்றி நான் கிளம்பறேன்....உங்க போன் நம்பர் கொடுங்க...ஏதாவது விசாரனைன்னா தேவைப்படும்... "

விசாரணை தொடரும்....
படிக்காமல் தவற விட்டவர்களுக்காக....என் முந்தைய பதிவு 


Post Comment

இதையும் படிக்கலாமே:


12 கருத்துகள்:

  1. >>உங்க போன் நம்பர் கொடுங்க...ஏதாவது விசாரனைன்னா தேவைப்படும்... "

    98427 13441

    பதிலளிநீக்கு
  2. மாப்ள உண்மைய சொல்லு நீ எந்த டிபாட்மண்டு!

    பதிலளிநீக்கு
  3. கதைல ராஜேஷ்குமார் சாயல் இருக்கு .. but நல்ல இருக்கு ..இப்பதான் first படிக்குறேன்

    பதிலளிநீக்கு
  4. இன்று வியாழனா...

    தொடரட்டும்.. தொடரட்டும்..

    பதிலளிநீக்கு
  5. நல்லாவே போகுது தொடருங்கள் .

    பதிலளிநீக்கு
  6. சுவாரசியமாக போகுது... :-)

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.