என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

புதன், ஏப்ரல் 20, 2011

32 நான் ரஹீம் கஸாலி ஆனது எப்படி?

தேர்தல் முடிந்து விட்டதால்...பரபரப்பாக(?) அரசியல் பதிவு எழுதிக்கொண்டிருந்த எனக்கு பெரிய குழப்பம்.இனி என்ன எழுதுவது என்று?.....
அப்படிப்பட்ட நேரத்தில் எனக்கு கை கொடுத்தது நண்பர் செங்கோவி.....ஆம் இன்று ,  பெயர்காரணம் என்று ஒரு பதிவு போட்டிருந்தார். அப்போதுதான் எனக்கும் நினைவிற்கு வந்தது....சமீபத்தில் என்னை பெயர்காரணம் தொடர்பதிவிற்கு நண்பர் தம்பி கூர்மதியான் அழைத்த விஷயம்....
ஏற்கனவே ஒரு முறை இதை பற்றி எழுதிவிட்டாலும் அதனாலென்ன இன்னொரு முறையும் எழுதி விடுவோமே  என்று எனது பிறந்தநாளான நாளை எழுதலாம் என்று நினைத்தேன்...ஆனால் நாளை ஒரு தொடர்கதை போடவேண்டி இருப்பதால்(பெரிய ராஜேஷ்குமார்?) இன்றே  களத்தில் இறங்கிவிட்டேன்(பதிவு எழுத ஒரு விஷயமும் இல்லை என்று நேரடியாக கூறாமல் எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டியுள்ளது).

நான் பிறந்த போது எனக்கு ஒரு வித்தியாசமான, அதேநேரம் எங்கள் ஊரில் யாருக்கும் இல்லாத பெயரான ஒன்றை வைக்க வேண்டுமென்று எங்கள் அய்யா (அதாவது தாத்தா....நாங்கள் இஸ்லாமியர் என்பதால் தாத்தாவை அய்யா என்றும், தந்தையை அத்தா என்றும் அழைப்போம்...ஆனால் கடற்கரை பக்கமுள்ள இஸ்லாமியர்கள் தந்தையை வாப்பா என்பார்கள்) எனக்காக தேர்ந்தெடுத்த பெயர் முகம்மது கஸ்ஸாலி. (இந்த பெயர் இன்று வரை எங்கள் ஊரில் யாருக்கும் இல்லை....அதற்காக நான் காப்பிரைட் எல்லாம் வாங்கவில்லை....என்னவோ யாரும் வைக்கவில்லை).

கஸ்ஸாலி என்ற பெயரில் இருந்த அழுத்தம் காரணமாக சிலர் உச்சரிக்க வராமல் கஜ்ஜாலி, காசாளி என்றெல்லாம் அழைத்து கடித்து துப்பினார்கள். அதன்பிறகு நானே என் பெயரை லேசாக மாற்றினேன்...என் பெயரிலிருந்த "ஸ்"-ஐ நீக்கிவிட்டு முகமது கஸாலி என்று வைத்துக்கொண்டேன்....
என் ஊர் நண்பர்களுக்கும்,என் பள்ளி நண்பர்களுக்கும் என் பெயர் கஸாலி தான். அப்படித்தான் அழைப்பார்கள். அழைக்கிறார்கள். சரி....வலைப்பதிவு ஆரம்பிக்க நினைத்தபோது முகமது கஸாலி என்றுதான் ஆரம்பிக்க நினைத்தேன்..ஆனால் முகமது என்பது பொதுப்பெயர் என்பதால் வெறும் கஸாலி போதுமே என்று எண்ணினேன். ஆனால் அது ரொம்ப சிறிய பெயராக இருக்கிறதாக என் நண்பன் பிரபல  பதிவர் சிராஜுதீன் சொன்னதால் என் தந்தை பெயரான ரஹீம் என்ற பெயரை கஸாலிக்கு முன் சேர்த்து  ரஹீம் கஸாலி ஆகிவிட்டேன்.

எல்லோரும் தந்தை பெயரின் முதல் எழுத்தை இன்சியலாக வைத்து கொள்வார்கள். ஆனால் நான் தந்தை பெயரையே இன்சியலாக வைத்துக்கொண்டேன். இதில் வேடிக்கை என்ன வென்றால் பதிவுலக நண்பர்கள் கஸாலி என்ற என் பெயரிலேயே அழைப்பதும் பின்னூட்டமிடுவதும் ரொம்ப கம்மி, என் தந்தை பெயரான ரஹீம் பெயரிலேயே அழைக்கிறார்கள். இதனால் என் பதிவுல சொந்தங்களுக்கு அறிவிப்பது என்னவென்றால் எனக்கு பின்னூட்டம் போடும்போதும், என்னை தொலைபேசியில் அழைக்கும் போதும் இனி கஸாலி என்றே அழையுங்கள்....ரஹீம் என்று அழைப்பதால் எனக்கு சங்கடமாக இருக்கிறது என் தந்தை பெயரை இப்படி ஏலம் போட வைத்துவிட்டோமே என்று....
அவ்வளவுதாங்க......

படிக்காமல் தவற விட்டவர்களுக்காக....என் முந்தைய பதிவு 


Post Comment

இதையும் படிக்கலாமே:


32 கருத்துகள்:

  1. தேர்தல் முடிந்து விட்டதால்...பரபரப்பாக(?) அரசியல் பதிவு எழுதிக்கொண்டிருந்த எனக்கு பெரிய குழப்பம்.இனி என்ன எழுதுவது என்று?.....//

    உட்கார்ந்து யோசிக்கிறது சகோ..
    நிறைய மேட்டருகள் வருமில்ல.

    பதிலளிநீக்கு
  2. எனது பிறந்தநாளான நாளை எழுதலாம் என்று நினைத்தேன்...//

    ஹப்பி பர்த்டே சகோ.

    அப்போ நாளைக்கு பரப்பரப்பூட்டும் பதிவா.

    பதிலளிநீக்கு
  3. நான் பிறந்த போது எனக்கு ஒரு வித்தியாசமான, அதேநேரம் எங்கள் ஊரில் யாருக்கும் இல்லாத பெயரான ஒன்றை வைக்க வேண்டுமென்று எங்கள் அய்யா//

    ஆஹா... ஆஹா... ஆரம்பிச்சிட்டாரு நம்ம சகோ

    பதிலளிநீக்கு
  4. நான்கூட ரஹீம் என்றே குறிப்பிட்டிருக்கிறேன்.நல்லது கஸாலி.

    பதிலளிநீக்கு
  5. ஆனால் நான் தந்தை பெயரையே இன்சியலாக வைத்துக்கொண்டேன்//

    உங்கள் பெயரின் பின்னணியை அழகாக விளக்கியுள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு
  6. பெயரில்லா20 ஏப்., 2011, 12:21:00 PM

    // என் நண்பன் வருங்கால பதிவர்(?) சிராஜுதீன்//

    சீக்கிரம். நிறைய கலவரம் நடக்க வேண்டியது இருக்கு.

    பதிலளிநீக்கு
  7. பெயரில்லா20 ஏப்., 2011, 12:23:00 PM

    //கஸ்ஸாலி என்ற பெயரில் இருந்த அழுத்தம் காரணமாக சிலர் உச்சரிக்க வராமல் கஜ்ஜாலி, காசாளி என்றெல்லாம் அழைத்து கடித்து துப்பினார்கள்.//

    ஏன் எல்லாரும் இப்படி தவறாக உச்சரிக்கிறார்கள், கசேலி....

    பதிலளிநீக்கு
  8. அட்வான்ஸ் ஹேப்பி பர்த்டே நண்பா

    பதிலளிநீக்கு
  9. பெயர் சுட்டி பொருள் விளக்கி இன்று ஓட்டியாச்சா...
    ம்.. ஆகட்டும்...

    பதிலளிநீக்கு
  10. தந்தை பெயரை உடன் வைத்துள்ளது பாராட்டுக்குரியதுதான்....

    பதிலளிநீக்கு
  11. தங்களுக்கு கவிதை வீதியின் பிறந்தாள் வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  12. பிறந்தநாள் வாழ்த்துக்கள் சார்

    பதிலளிநீக்கு
  13. நான் கஸாலியைக் கஸாலி என்று சரியாகத்தானே அழைக்கிறேன் கஸாலி!

    பதிலளிநீக்கு
  14. நல்ல விஷயம்!அப்பா(வாப்பா?)பேரை ஏலம் விட்டு பொழைக்கிற இந்தக் காலத்தில ????????????அட்வான்ஸ் பொறந்த நாள் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  15. ஒக்கே! இனி உங்களை கஸ்ஸாலி என்றே அழைப்போம்!

    பதிலளிநீக்கு
  16. பிறந்த நாளில் மீண்டும் ஓர் பெயர் பதிவு .... வயதை நான் அறிவேன் .... நண்பர்களே இதோ உங்கள் கணிபிர்கே விட்டுவிட்டேன் 44 அல்லது 47 அல்லது 51

    பதிலளிநீக்கு
  17. பெயரில்லா20 ஏப்., 2011, 5:22:00 PM

    என்னை தொலைபேசியில் அழைக்கும் போதும் இனி கஸாலி என்றே அழையுங்கள்..//
    அப்படியே ஆகட்டும் நண்பரே

    பதிலளிநீக்கு
  18. பேச்சு நடையில் நல்லா எழுதி இருக்கீங்க.

    பதிலளிநீக்கு
  19. என்னையும் மதித்து இங்கே ஒருவர் பதிவு போட்டிருக்காரு பா..

    ஹி ஹி.. ஆமாம் நான் எப்ப கூப்பிட்டேன்.. ஹி ஹி..

    கேட்ட கேள்விக்கு உடனே செவி மடுத்த கஸ்ஸாலி அவர்கள் வாழ்க.. ஹி ஹி..

    முன்னாடியே சொல்லிடுறன் பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

    அப்பரம் இனிமே உங்கள உங்க அப்பா பெயரை சொல்லி கூப்பிடமாட்டேன்னு சொல்லிடுறேன் கஸ்ஸாலி..

    அடிப்பாரு போலிருக்கே.!!

    பதிலளிநீக்கு
  20. உங்கள் பெயருக்கான காரணம் நல்லாத்தான் இருக்கு.

    பதிலளிநீக்கு
  21. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  22. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் கஸாலி

    பதிலளிநீக்கு
  23. தல, இனிமே மாசம் ஒரு பதிவு ‘நான் ரஹீம் இல்லை, கஸாலி’ன்னு போட்டிடுங்க..பதிவுப் பஞ்சத்தையும் போக்கிடலாம்!..அப்படியே உங்க பேர்ல அய்யா/அய்யாவுக்கு அய்யா பேரையும் சேர்த்துட்டா வாரம் ஒரு பதிவு ‘நான் அவர் இல்லை’ன்னு போட்டுடலாம். என்ன சொல்றீங்க?

    பதிலளிநீக்கு
  24. தம்பி கூர் மதியன் தான் இந்த விபரீதத்துக்கு (ரிப்பீட் பதிவு)காரணாமா? ஹா ஹா ஹா

    பதிலளிநீக்கு
  25. அன்பின் கஸாலி - நான் இப்ப்ல்லாம் கஸாலின்னு தானே கூப்பிடறேன். பரவால்ல - பெயர்க் காரணம்னு ஒரு இடுகை எழுதி ஒப்பேத்தியாச்சு - வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  26. [ma]எனக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன நண்பர்கள் அனைவருக்கும் நெஞ்சம் நெகிழ்ந்த நன்றி[/ma]

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.