என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

வியாழன், ஏப்ரல் 21, 2011

11 புலன் விசாரணை-பாகம்-8


முந்தைய பாகங்கள் 



சென்னை.... டைரக்டர் ரெட்டி வீடு....இன்ஸ்பெக்டர் தில்லையம்பலம் பேசிக்கொண்டு இருந்தார்.

"ரெண்டு நாளைக்கு முன்னாடி நான் போன் போட்டபோது நீங்க அரசர்குளத்துல இருந்ததா சொன்னீங்களே...."

"ஆமா சார்...ஏதாவது விசாரணைக்கு உதவுமான்னு ஸ்ரீமதி அண்ணன் முத்துக்குமார பார்க்க போயிருந்தேன்..."

"ஏதாவது உபயோகமான தகவல் கிடைச்சதா?"

"அந்த நடிகையோட அண்ணன்ட்ட பேசி பார்த்ததிலிருந்து ஒரு புண்ணாக்கும்  கிடைக்கலசார்......ஒரே சோதனையா இருக்கு....எதுக்குத்தான் இந்த சனியன் புடிச்ச வேலைக்கு வந்தோமோ...."

"கூல்...கூல்....நான் இப்ப உங்களுக்கு ஒரு தகவல் சொல்லப்போறேன். நான் வெளிநாட்டுக்கு போனா பெரும்பாலும் வழக்கமா யூஸ் பண்ற செல்போன  யூஸ் பண்ணுறதில்லை. இன்னொரு நம்பர்தான்.ஆனா அந்த நம்பர் என் பேமிலி மெம்பர்கிட்ட மட்டும்தான் தெரியும் .  அப்படித்தான் வெளிநாடு ஷூட்டிங் போற அன்னைக்கும் வழக்கமான செல்போன் யூஸ்பண்ணாம ஆஃப் பண்ணி வச்சிருந்தேன். இங்கே வந்தபோதுதான் ஆன் பண்ணினேன். ரெண்டு நாளைக்கு முன்னாடி உங்களுக்கு போன் போட்டுட்டு எதார்த்தமா போன்ல வந்த எஸ்.எம்.எஸ். செக் பண்ணிட்டு இருக்கையில ஸ்ரீமதி அனுப்புன ஒரு சம்ஸ்.என் கண்ணுல மாட்டுச்சு.அதுல...அவளோட பி.ஏ. தயாளன் அவள மிரட்டுறதாகவும்,பயமா இருக்கதாகவும்  அனுப்பியிருந்தா"...என்றவாறு செல்போனை காட்டினார். 
அதை பார்த்த இன்ஸ்பெக்டர் தில்லையம்பலம்...

"இது என்னைக்கு வந்துச்சுன்னு தெரியுமா? "

"அவ இறந்து போன ஒரு நாளைக்கு முன்னாடின்னு நினைக்கிறேன்..."

"இப்ப தயாளன் எங்கே இருப்பான்?..."

"சென்னையில்தான் இருக்கான்னு நினைக்கிறேன்."

"அவனோட போன் நம்பரை கொடுங்க...நான் போட்டு பேசிக்கிறேன் "

ரெட்டி சொல்ல..சொல்ல தில்லையம்பலம் தன் போனில் பதிவு செய்துகொண்டார்.

"ஓகே..சார்.ரொம்ப நன்றி....நான் கிளம்பறேன்..."
******************************

போலீஸ் ஸ்டேசன்....

தயாளனுக்கு போன்போட்டுவிட்டு காத்திருந்தார் தில்லையம்பலம்
சிறிது நேரத்தில் தயாளன் வந்தான்.
விசாரணையை ஆரம்பித்தார்.

"வாங்க...தயாளன்....ஸ்ரீமதி கொலை கேஸ் விசயமா  ஒரு சின்ன விசாரணை."

"நீங்க அதுக்குத்தான் வர சொல்லிருப்பீங்கன்னு தெரியும் சார்...."

"நீங்க அவங்கட்ட எவ்வளவு நாளா வேலைக்கு இருந்தீங்க?"

"அவங்க ரெண்டாவது படத்திலிருந்து நான்தான் சார் கால்சீட் விவகாரங்களைஎல்லாம் கவனிச்சுக்கு இருந்தேன்."

"அவங்க கேரக்டர் எப்படி?"

"ரொம்ப கறாரா இருப்பாங்க....."

"நான் அதை கேக்கல....வெளி தொடர்புகள்....அது இதுன்னு?"

"எனக்கு தெரிஞ்சவரையும் கொஞ்சம் சுத்தமான ஆளுதான்..."

"கொஞ்சம்னா?"

"என்னைக்காவது பார்ட்டி  கீர்ட்டின்னு  வெளியில போவாங்க....ஆனா அங்க போயி என்ன பண்ணுவாங்கன்னு எனக்கு தெரியாது"

"அப்படியா....சரி அவங்களுக்கும் உங்களுக்கும் என்ன பிரச்சினை....எதுக்காக உங்கள வேலையிலிருந்து தூக்கினாங்க?"

"ஒரு கால்சீட் பிரச்சினையில் கொஞ்சம் குளறுபடி பண்ணிட்டேன்...அதுல கோபமான அவங்க என்னை வேலைலேர்ந்து தூக்கிட்டாங்க..."

"அந்த கோபத்துலதான் அவங்கள கொலை பண்ணும் அளவுக்கு போனீங்க இல்லியா?"

விசாரணை தொடரும்

படிக்காமல் தவற விட்டவர்களுக்காக....என் முந்தைய பதிவு 


Post Comment

இதையும் படிக்கலாமே:


11 கருத்துகள்:

  1. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. Blogger sulthanonline said...

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்



    ......இன்று உங்களுக்கு பிறந்த நாளா? வாழ்த்துக்கள்! :-)

    பதிலளிநீக்கு
  3. இந்தப் பதிவிற்கான உங்கள் உழைப்பு அபாரம்.. வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  4. தமிழ்மணம் வேலை செய்யவில்லை ..

    பதிலளிநீக்கு
  5. வாழ்த்துக்கள்..!! கஸாலி அவர்களே..!

    பதிலளிநீக்கு
  6. பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  7. ஸ்பெக்ட்ரம் மாதிரி தொடர் விசாரணைன்னா எனக்கு அலர்ஜி:)

    பதிலளிநீக்கு
  8. சகோ, இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  9. [ma]எனக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன நண்பர்கள் அனைவருக்கும் நெஞ்சம் நெகிழ்ந்த நன்றி[/ma]

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.