என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

திங்கள், ஏப்ரல் 04, 2011

23 கருத்து கணிப்பா? அது டுபாக்கூருங்க அதை நம்பாதீங்க பாஸ்


இன்று தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் முன்னணி இதழ்கள் அனைத்திலும் கருத்து கணிப்பு என்ற பெயரில் கருத்து திணிப்புகள் வெளிவந்து விட்டது.

அதில்  இந்த கட்சி ஆட்சிக்கு வரும் அந்த கட்சி ஆட்சிக்கு வரும் என்று ஆளாளுக்கு அடித்து விடுகிறார்கள். தி.மு.க-வை பிடிக்காத ஊடகங்கள் அண்ணா. தி.மு.க. ஆட்சிக்கு வருமென்றும், அண்ணா.தி.மு.க-வை பிடிக்காத ஊடகங்கள் தி.மு.க ஆட்சிக்கு வருமென்றும் எழுதி தங்கள் விசுவாசத்தை காட்டி கொள்கிறார்கள்.

சரி...இந்த கருத்துக்கணிப்பெல்லாம் எடுபடுமான்னு பார்த்தால்....
முந்தைய தேர்தல்களில் கருத்து கணிப்புகள் பொய்த்து போய் இருக்கிறது.
எப்படி எடுக்கப்படுகிறது இந்த கருத்துகணிப்புகள்?

ஒரு சட்டமன்றத்தொகுதியில் குறைந்த பட்சமாக ஒரு லட்சம் வாக்காளர்கள் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொண்டால் கூட அவ்வளவு பேரிடமும் எடுக்கப்படுவதில்லை. அது சாத்தியமும் இல்லை.

ஒரு தொகுதியில் அதிக பட்சம் ஆயிரம் பேரிடம் மட்டுமே எடுக்கப்படுகிறது. கருத்துக்கனிப்புகளுக்காக ஊடகங்கள் ஒவ்வொரு தொகுதிக்கும் போகும்போது...வாக்காளர்கள் தி.மு.க அபிமானிஎன்றோ....அண்ணா தி.மு.க அபிமானிஎன்றோ அறிந்திருக்க வாய்ப்பில்லை. தி.மு.க வின் ஆதரவாளரிடம் கேட்கப்பட்டால் அவர் தி.மு.க-தான் ஆட்சிக்கும் வருமென்றும், அண்ணா.தி.மு.க-ஆதரவாளரிடம் கேட்கப்பட்டால் அடுத்து அண்ணா.தி.மு.க  ஆட்சிதான் என்றும் சொல்வார்கள்.

அப்படி எடுக்கப்பட்ட கணிப்பை இவர்களும் தத்தம் பத்திரிகைகளில் வெளியிட்டு விடுவார்கள்.தங்களுக்கு பிடித்த கட்சிகளுக்கு சாதகமாக கூட ஊடங்கங்கள் கணிப்பை மாற்றி விடுவார்கள். 

இது சரிதானா?

ஒரு லட்சம் வாக்காளர்களின் மனநிலையை வெறும் ஆயிரம் பேர் மட்டும் எப்படி தீர்மானிக்க முடியும்? அல்லது பிரதிபலிக்க முடியும்? ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற வார்த்தை பிரயோகத்தை நாம் இங்கே பயன்படுத்த முடியாது. சோறு என்பது ஒரே தண்ணீரில் ஒரே வெப்பத்தில், ஒரே கொதிநிலையில் சீராக வேகக்கூடியது.

ஆனால் மக்கள்?
ஒரே தெருவில் இருக்கும் ஒவ்வொருவரின் மனநிலையை கூட நம்மால் கணிக்க முடியாது.  வேட்பாளர், ஜாதி, இலவசங்கள், பணம், கடைசி நேர பிரச்சார வியூகங்கள் மூலம் கூட மக்களின் மன நிலை மாறிவிடும்.    முன்பு ஊடகங்களில்  இந்த கட்சிக்குத்தான் என் வாக்கு என்று சொன்னவர்கள் கூட மாற்றி வாக்களித்து விடுவார்கள். எனவே, இதையெல்லாம் கணக்கில் வைத்துக்கொள்ள கூடாது.

கருத்து கணிப்பினால் சாதக பாதகங்களும் இருக்கத்தான் செய்கிறது. எப்படி என்று பார்த்தால்......

இந்த தொகுதியில் இந்த கட்சி ஜெயிக்கும் என்று ஒரு கருத்து கணிப்பு வந்தால்....கருத்துக்கணிப்புபடி ஜெயிப்பதாக கூறப்பட்ட  கட்சியினர்  நாம்தானே ஜெயிக்கப்போகிறோம் என்று களப்பணியில் மெத்தனமாக இருப்பதற்கும் வாய்ப்புண்டு.... தோற்க்கப்போவதாக கூறப்பட்ட கட்சியினர் சோர்ந்து போகவும் வாய்ப்புண்டு.

அல்லது தோற்கப்போவதாக கூறப்பட்ட கட்சியினர் இன்னும் உத்வேகத்துடன் செயல்பட்டு களப்பணியாற்றி ஜெயிக்கவும் வாய்ப்புண்டு...

அடுத்து மக்கள்.....கருத்து கணிப்பை உண்மையென நம்பி மக்களும் மனசு மாறும் சாத்தியமுண்டு....நம்ம தொகுதியில் இந்த கட்சிதானே ஜெயிக்கும் என்று கருத்து கணிப்பு சொல்லியிருக்கிறது. நாமும் அந்த கட்சிக்கே வாக்களிப்போம்.எதற்காக தோற்கும் கட்சிக்கு வாக்களித்து நம் ஓட்டை வீணாக்குவானேன் என்று மாறவும் வாய்ப்பிருக்கிறது. அதனால்தான் கருத்து கணிப்பை நம்பாதீர்கள் என்று கட்சிகள் அலறுகிறது.

மக்களின் இந்த மனநிலையை கெட்டியாக பிடித்து கொண்ட ஊடகங்கள் தங்களுக்கு பிடித்த கட்சியினர் ஜெயிக்க கருத்து கணிப்பு என்ற பெயரில் கருத்து திணிப்பை செவ்வனே செய்து வருகிறார்கள். ஒருவேளை இவர்களின் கணிப்பு மாறிவிட்டால்....இலவசங்கள், பணம் அதிகமாக கொடுத்த கட்சி வென்று விட்டது. நாங்கள் வேட்பாளர், இலவசங்களை அறிவிக்கும்  முன்பே கருத்து கணிப்பு எடுத்து விட்டதால் எங்கள் கணிப்பு மாறிவிட்டது என்ற ரீதியில் ஒரு அறிக்கை விட்டு மீசையில் மண் ஒட்டாமல் பார்த்து கொள்வார்கள்...ஒருவேளை இவர்களின் கணிப்பு தப்பி தவறி சரியாக இருந்துவிட்டால்...சொல்லவே வேணாம் அடுத்த தேர்தல் வரை இந்த  விளம்பரத்தை வைத்தே ஓட்டிவிடுவார்கள்.

ஆகவே, கருத்து கணிப்பை நம்பாமல் நமக்கு நல்லது செய்பவர்கள் யாரென்று பார்த்து வாக்களிக்க வேண்டும்.அந்த வேட்பாளர் சுயேட்சையாக இருந்தாலும் கூட.....
கார்டூனை பாருங்க கலகலன்னு சிரிங்க.....
 

படிக்காமல் தவற விட்டவர்களுக்காக....என் முந்தைய பதிவு 


Post Comment

இதையும் படிக்கலாமே:


23 கருத்துகள்:

  1. கருத்துக்கணிப்புகள் பரபரப்புக்காக ஏற்படுத்தப்ப்பட்டவை.. மக்கள் மன நிலை கடைசி நேரத்தில் தீர்மானிக்கப்படலாம்

    பதிலளிநீக்கு
  2. maசரியாகச் சொன்னீர்கள் ரஹீம் சாப். எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற பாணியில் கூறப்படும் கருத்துக் கணிப்புகள் பரபரப்புக்கு வேண்டுமானால் உதவுமே தவிர, சமுதாயத்திற்கு அதனால் கடுகளவும் பயனில்லை./ma

    பதிலளிநீக்கு
  3. கருத்து கணிப்பை நம்பாமல் நமக்கு நல்லது செய்பவர்கள் யாரென்று பார்த்து வாக்களிக்க வேண்டும்.

    >>>>>>>>>>>

    இப்படின்னா என்ன அர்த்தம் சொல்லுங்கோ!

    பதிலளிநீக்கு
  4. கருத்து கணிப்பை நம்பாமல் நமக்கு நல்லது செய்பவர்கள் யாரென்று பார்த்து வாக்களிக்க வேண்டும்//

    இப்படி யாரையாவது தெரிந்தால் எனக்கும் தெரியப்படுத்தவும்!

    பதிலளிநீக்கு
  5. அன்பின் கஸாலி - கருத்துக் கணிப்பெல்லாம் சாதாரணமாக சரியாக இருப்பதில்லை. இது வாக்காளர்களாஇ திசை திருப்பும் உத்தி தான். ஆனால் இப்பொழுதெல்லாம் வாக்காளர்கள் இதனை எல்லாம் நம்புவதில்லை. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  6. சரியாகச் சொன்னீர்கள் கஸாலி..அது டுபாக்கூர் வேலை தான்!

    பதிலளிநீக்கு
  7. கருத்து கணிப்இபல்லாம் நம்பக் கூடாது..

    தமிழ்மணத்துல 7வது ஓட்டு போட்டுட்டோமில்ல..

    பதிலளிநீக்கு
  8. ஹி ஹி

    நாங்களும் கவிதை எழுதுவோம்

    http://speedsays.blogspot.com/2011/04/blog-post_04.html

    பதிலளிநீக்கு
  9. கார்ட்டூன் அருமை பார்த்து விஜயகாந்திக்கு கோபம் வந்துவிட போகிறது .

    பதிலளிநீக்கு
  10. நல்ல அலசல்...உண்மையில் கருத்துக்கணிப்பால் மிகவும் பாதிக்கப்படுபவர்கள் சுயேட்சை வேட்பாளர்கள்தான்!

    பதிலளிநீக்கு
  11. இந்த உண்மை புரியாமல் இங்கு வலையில் இவர்கள் பண்ணும் ரகளை சகிக்கலை. வெறும் வார இதழ்களில் வரும் "கருத்து கணிப்புகள் " என்ற தலைப்பில் வெளிவரும் குப்பைகளை எல்லாம் வாரி சுருட்டி வைத்துக்கொண்டு அவைகளே உண்மை என்று நம்பி ஆனந்த கூத்தாடும் பதிவர்களை கண்டால் //ஐயோ பாவம் // என்ற உணர்வுதான் வருகிறது. முடிவுகளை தீர்மானிக்க ஒன்று இரண்டு அல்ல நிறைய எண்ணிக்கைகளில் காரணிகள் உள்ளன.அவைகளும் கூட தனி தனி மனிதர்களுக்கும் வேறுபாடும். இடத்துக்கு இடம் மாறுபடும். இந்த வார குப்பைகள் அனைத்தும் தேர்தல் ஜுரத்தை அச்சில் ஏற்றி பரபரப்பு உண்டாக்கி காசு பார்கிறார்கள் என்ற உண்மை இவர்களுக்கு ஏன் புரியாமல் போனது?
    நல்ல பதிவு.

    பதிலளிநீக்கு
  12. கருத்துக்கணிப்பெல்லாம் எப்பவுமே சரி வருவதில்லை. இதெல்லாம் ஒரு பரபரப்புக்காகச்செய்யப்படுவதுதான்.

    பதிலளிநீக்கு
  13. முறையாக செய்யப்படும் கருத்துக் கணிப்புகள் ஓரளவு சரியாக இருக்க வாய்ப்புண்டு. ஆனால் தற்போது வருபவை எல்லாமே கருத்துத் திணிப்புகளாகத்தான் தெரிகிறது...!

    பதிலளிநீக்கு
  14. பெயரில்லா4 ஏப்., 2011, 12:20:00 PM

    லயோலா கல்லூரி கருத்து கணிப்பு பொய்த்ததில்லை என கலைஞரே சொல்லி இருக்கிறார்..ஒரே நேரத்தில் எல்லா கருத்து கணிப்புமா பொய்யாகி இருக்கிறது..?

    பதிலளிநீக்கு
  15. பெயரில்லா4 ஏப்., 2011, 12:21:00 PM

    கருத்துக்கணிப்பு பின் சில அனுதாப அலைகள் செயற்கையாக தோற்றுவிக்கப்பட்டால் கணிப்பு பொய்யாக வாய்ப்பிருக்கிறது..அல்லது ஓட்டுக்கு பணம் சுதந்திரமாக கொடுக்கப்பட்டால் கருத்து கணிப்புகள் பொய்யாகும்

    பதிலளிநீக்கு
  16. பொய்கள்;பெரும் பொய்கள்;புள்ளி விவரம் என்று சொல்வார்கள்!

    பதிலளிநீக்கு
  17. இவ்வளவு கருத்துக்கணிப்புக்கள் வந்தால், சாமானியனின் பாடு ரொம்ப திண்டாட்டம் தான்.

    பதிலளிநீக்கு
  18. //முறையாக செய்யப்படும் கருத்துக் கணிப்புகள் ஓரளவு சரியாக இருக்க வாய்ப்புண்டு. ஆனால் தற்போது வருபவை எல்லாமே கருத்துத் திணிப்புகளாகத்தான் தெரிகிறது...!//


    முறையாக இப்பொதெல்லாம் கருத்துக்கணிப்புக்கள் செய்யப்படுவதாக தெரியவில்லை. முன்பே யாரை ஆதரிக்க வேண்டுமென்று முடிவு செய்த பின் தான் கருத்துக்கணிப்புக்கள் வருகின்றன.

    பதிலளிநீக்கு
  19. // ஒரு தொகுதியில் அதிக பட்சம் ஆயிரம் பேரிடம் மட்டுமே எடுக்கப்படுகிறது. //மிகவும் சரி... இதுவரை எந்தவொரு ஊடகமும் என்னிடம் கருத்து கேட்டதில்லை... ஏன், எங்கள் பகுதிக்கு வந்ததாகவே வரலாறு இல்லை...

    பதிலளிநீக்கு
  20. 5 ஆண்டுகளில் 12 புதிய அரசு பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் ஒரு கல்லூரிகூட தொடங்கப்படவில்லை.

    பொறியியல் கல்விக்கான நுழைவுத் தேர்வு கிராமப்புற மாணவர்களுக்கு சுமையான ஒரு விஷயமாகவும், வசதிகளும், வாய்ப்புகளும் இருப்பதால் நுழைவுத் தேர்வின் மதிப்பெண்கள் பெற்று நகர்ப்புற மாணவர்கள் அதிகம் பொறியியல் கல்லூரிகளில் இடம் பெற்றுவிடுகிறார்கள் என்பதால், 2007இல் நுழைவுத்தேர்வை ரத்து செய்தது தி.மு.க. அரசு. 2006இல் பொறியியல் படிக்கச் சேர்ந்த கிராமப்புற மாணவர்கள் 24,000 பேர்.

    நுழைவுத் தேர்வு ரத்துக்குப் பின்னர் ஆண்டுதோறும் படிப்படியாக இந்த எண்ணிக்கை உயர்ந்து, கடந்த ஆண்டு 54,000-_அய் தொட்டிருக்கிறது. கிராமப்புற இளைஞர்களும், அவர்கள் பெற்றோர்களும் இந்த விஷயத்தில் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். நுழைவுத்தேர்வு ரத்து செய்த பின்னர் பயின்ற முதல் பேட்ச் பொறியாளர்கள் இந்த ஆண்டு வெளிவரப்போகிறார்கள்.

    சுயநிதிக் கல்லூரிகளில் அரசு அனுமதித்த கட்டணத்தில் சீட்டுகளை 50 சதவிகிதமாக உயர்த்தியதில் பல மத்திய தரக் குடும்ப இளைஞர்கள் பயன்பெற்றிருக்கின்றனர்.

    பட்டதாரிகள் இல்லாத குடும்பத்திலிருந்து தொழிற்கல்வியில் சேர்பவர்களுக்கு முழு கட்டணச் சலுகை அளிக்கப்பட்டிருக்கிறது. இது இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத சலுகை.

    கடந்த மூன்று ஆண்டுகளில் அரசின் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2500_க்கு மேல் ஆசிரியர்கள் புதிதாக நியமனம் செய்யப்பட்டிருக்கின்றனர். கல்வித் துறையை இரண்டாகப் பிரித்து இரண்டு அமைச்சர்களை நியமித்து, இளைஞர் களுக்குப் பயன்தரும் பல திட்டங்களை தி.மு.க. அரசு செய்திருக்கிறது.

    இதன் பலன் தி.மு.கவுக்கு இளைஞர் களின் வோட்டாக மாறுமா? பொறுத் திருந்துதான் பார்க்கவேண்டும்.

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.