என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

வியாழன், ஏப்ரல் 21, 2011

28 பணம் படைத்த கே.ஆர்.பி.செந்தில்



"சுயசரிதை எழுதினால் உண்மைகளை மறைக்காமல் எழுத வேண்டும். நான் உண்மைகளை அப்படியே எழுதினால் நிறைய பேர் மனது கஷ்டப்படும். மகாத்மா காந்தி சுயசரிதை எழுதுவதற்கு தைரியம் இருந்தது. அது எனக்கு வரும் போது எழுதுவேன்."-
சமீபத்தில் நடந்த இயக்குனர் சங்க ஆண்டுவிழாவில். நீங்கள் சுயசரிதை எழுதுவீர்களா என்று நடிகர் ரஜினிகாந்திடம் இயக்குனர் பாலச்சந்தர் கேட்ட கேள்விக்கு, நடிகர் ரஜினி அளித்த பதில்தான் நீங்கள் மேலே கண்டது. 

அப்படி எதையுமே மறைக்காமல் தன் நண்பருக்கு நேர்ந்த விஷயங்களை (பாதுகாப்பு கருதி அவர்களின் உண்மை முகத்தை மறைத்துவிட்டு) தனக்கு நேர்ந்ததுபோல் எழுதப்பட்டதே இந்த பணம்.ஆம்....இந்த பணம் படைத்த ஆசிரியர் கே.ஆர்.பி.செந்தில் அவர்களுடைய நண்பருக்கு நேர்ந்த உண்மை சம்பவங்களின் தொகுப்புதான் இந்த  பணம்.


பொதுவாகவே நான் பத்திரிகையில் வரும் சினிமா விமர்சனங்களையும், புத்தக விமர்சனங்களையும் படிப்பதோடு சரி....விமர்சனம் எழுதும் அளவிற்கு என்னை ஒரு பெரிய அப்பாடக்கராக நினைத்து கொண்டதில்லை. ஆனால், இந்த பணம் புத்தகத்தை படிக்கும்போது...எனக்குள் ஏற்பட்ட உந்துதலே இந்த புத்தக விமர்சனம்.
 
இன்று மனிதனுக்கு மிக அத்தியாவசிய பொருளாக பணம் மாறிவிட்டது.
பணம் என்பது ஒரு விசித்திரமான மாய மான். அது, தன்னை துரத்துபவர்களுக்கு  குட்டி போட்டுவிட்டு ஓடிக்கொண்டே இருக்கிறது.குட்டிகளில் திருப்தியடையாத மனிதன் தாய் மானை பிடிக்கும் வேட்டையில் தவிக்க தவிக்க ஓடி செத்துப்போகிறான் என்று தண்ணீர் தேசம் நாவலில் கவிப்பேரரசு வைரமுத்து குறிப்பிட்டதாக  நினைவு.

தேவையான அளவு பணமிருந்தால் நாம் அதற்கு எஜமான், தேவைக்கு அதிகமாக இருந்தால் நமக்கு அதுஎஜமான்,
பணம் இல்லாவிட்டால் உன்னை யாருக்கும் தெரியாது....பணம் இருந்தால் உனக்கு யாரையும் தெரியாது என்பதெல்லாம் பண மொழிகள்.மன்னிக்கவும் பழமொழிகள். 


அப்படிப்பட்ட பணத்தை தேடிப்போகும் ஒருவன் படும் அவஸ்த்தைகளையும், அவமானங்களையும், சந்திக்கும் துரோகங்களையும் மிக அருமையாக எடுத்து வைக்கிறார் ஆசிரியர் கே.ஆர்.பி.செந்தில் அவர்கள்.

 (இவர்தான் பணம் படைத்த ஆசிரியர் கே.ஆர்.பி.செந்தில்)

மலேசியா,சிங்கப்பூர் போன்ற நாடுகளில் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையாக வழங்கப்படுவது பிரம்படிதான். பிரம்படி என்றதும் பள்ளிகளில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கொடுப்பது போன்று நினைக்கவேண்டாம்..இது வேறு வகை....

கொதிக்கும் எண்ணையில் நல்ல கனமான பிரம்பை அமிழ்த்தி அதை கொண்டு  குற்றவாளிகளை  நிர்வாணமாக நிற்க வைத்து பிட்டத்தில் அடிப்பார்கள். செய்த தண்டனைகளை பொறுத்து அடிகளின் எண்ணிக்கை கூடும் அல்லது குறையும். அதை நாம் மனக்கண்ணில் கொண்டு வந்து கற்பனை செய்தாலே  நம் பிட்டம் கொஞ்சம் உள்ளிழுத்துக்கொள்ளும். அப்படிப்பட்ட அடியை வாங்கி இருக்கிறார் கே.ஆர்.பி.செந்திலின் நண்பர். 


இந்த இடத்திலிருந்து கதையை ஆரம்பிக்கும் ஆசிரியர்...அதன் பிறகு நடந்த அனைத்தையும் காதல் உடலுறவு என்று  ஒன்று விடாமல் மிக துணிச்சலாக எடுத்து வைக்கிறார்...


 காடு,கழனி, வீடு, நிலம் நீச்சு என்று அனைத்தையும் விற்றோ அல்லது அடகு வைத்தோ அல்லது  வட்டிக்கு வாங்கியோ பணத்தை ஈட்ட வெளிநாடு (மோகத்தில்) செல்பவர்கள், முறையான ஆவணங்கள் இல்லாமல் சென்றால் எத்தனை பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் என்று தனது நண்பருக்கு நேர்ந்த அனுபவங்கள் மூலம் நமக்கு எச்சரிக்கை மணியடிக்கிறார் கே.ஆர்.பி.செந்தில்.

வெளிநாடு செல்பவர்கள்..அப்படி செல்வதற்கு முன் படிக்க வேண்டிய, பாதுகாக்க வேண்டிய ஒரு கையேடுதான் இந்த பணம் என்ற புத்தகம்.


பணம் புத்தகத்தை வாங்க.....இங்கே கிளிக் பண்ணுங்க... 

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
இதையும் படிங்க பாஸ்
இன்று என் பிறந்தநாளை முன்னிட்டு நண்பர் ரசிகன் சர்புதீன் வெளியிட்டிருக்கும் பதிவு  

ரஹீம் கஸாலிக்கு பிறந்த நாள்!


படிக்காமல் தவற விட்டவர்களுக்காக....என் முந்தைய பதிவு 


Post Comment

இதையும் படிக்கலாமே:


28 கருத்துகள்:

  1. பெயரில்லா21 ஏப்., 2011, 1:20:00 PM

    எளிமையான விமர்சனம். நல்லா இருக்கு.

    பதிலளிநீக்கு
  2. என்னுடைய மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பா

    பதிலளிநீக்கு
  3. விரைவில் புத்தகம் வாங்கி படித்துவிட வேண்டும். நன்றி..

    பதிலளிநீக்கு
  4. பிறந்தநாள் வாழ்த்துக்கள் குரு..

    பதிலளிநீக்கு
  5. இந்த விமர்சனத்தை மூன்றாவது முறையாக படிக்கிறேன்...
    செந்திலுக்கு வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  6. ////////
    !* வேடந்தாங்கல் - கருன் *! said...

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் குரு../////

    ரிபீட்டு..

    பதிலளிநீக்கு
  7. எளிமையான விமர்சனம். இனிய பிறந்ததின வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  8. பயனுள்ள தகவல்...

    பிறந்தநாள் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  9. பணம் படைத்த கே.ஆர்.பி.செந்தில்//

    தலைப்பே அருமையாகவும், அட்டகாசமாகவும், இரு பொருளில் இருக்கிறதே.

    பதிலளிநீக்கு
  10. உங்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து,. கே ஆர் பிக்கு புக் ஹிட் ஆக வாழ்த்து

    பதிலளிநீக்கு
  11. வெளி நாட்டிற்குப் போய் நம்மவர் அனுபவிக்கும் துன்பங்களை ஆசிரியர் செந்தில் அவர்கள் அழகாகச் சொல்லியிருக்கிறார் என்பதனை உங்களது விமர்சனமே விளக்கி நிற்கிறது.நிச்சயம் இப் புத்தகத்தை வாங்கிப் படிக்க வேண்டும். வெகு விரைவில் தமிழ் நாட்டிற்கு வரும் போது வாங்குவதாக ஐடியா.

    பதிலளிநீக்கு
  12. சகோ கஸாலிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  13. வாழ்த்துக்கள் இரு நண்பர்களுக்கும்

    பதிலளிநீக்கு
  14. நல்ல விமர்சனம். பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  15. பெயரில்லா21 ஏப்., 2011, 7:33:00 PM

    விமர்சனம் நல்லா இருக்கு ...

    பதிலளிநீக்கு
  16. புத்தகத்தைப் படிக்கத் தூண்டும் விமரிசனம்!

    பதிலளிநீக்கு
  17. கே ஆர் பி படம் போட்டதற்கு நன்றிகள்..அவருக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  18. இன்று பிறந்த நாள் காணும் ரஹீம் கஸ்ஸாலி அவர்கள் வாழ்கையில் எல்லா வளமும் , நலமும் , பெற்று வாழ வாழ்த்துகிறேன்!

    பதிலளிநீக்கு
  19. //கே ஆர் பிக்கு புக் ஹிட் ஆக வாழ்த்து//

    பதிலளிநீக்கு
  20. பெயரில்லா21 ஏப்., 2011, 11:50:00 PM

    பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  21. பெயரில்லா21 ஏப்., 2011, 11:51:00 PM

    விமர்சனம் நன்றாக உள்ளது புத்தகத்தை படிக்க ஆர்வமாக உள்ளது.

    பதிலளிநீக்கு
  22. ????? ???? ??????? ??????????? ??????? ..?? ??? ?? ??????? ???? ????????? ??????????? .. ????????? ?????? ???????? ????????? ???? .. ???? ?????? ???????? ??????? ????? ????? ... ?????!

    பதிலளிநீக்கு
  23. ரொம்ப நாள் கழிச்சு வலைப்பக்கம் வர்றேன் ..கே ஆர் பி அண்ணனோட பணம் புத்தகமாக வந்துட்டுதா .. கண்டிப்பா வாங்கி படிச்சுட வேண்டியது தான் .. உங்க அறிமுக முறையும் கலக்கல் தோழர் ரஹீம் ... நன்றி!

    பதிலளிநீக்கு
  24. அன்பின் பிறந்த நாள் வாழ்த்துக்களும் தங்களுக்கு சகோ!

    பதிலளிநீக்கு
  25. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  26. மிக்க நன்றி தலைவரே...

    பதிலளிநீக்கு
  27. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரஹீம் கஸாலி .

    பதிலளிநீக்கு
  28. [ma]எனக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன நண்பர்கள் அனைவருக்கும் நெஞ்சம் நெகிழ்ந்த நன்றி [/ma]

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.