என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

செவ்வாய், ஏப்ரல் 26, 2011

20 தேர்தலில் கலைஞர் வென்றால் அல்லது தோற்றால்.....


நடந்த சட்டசபை தேர்தலில் ஒருவேளை தி.மு.க-வே மீண்டும் வென்றால்.....கலைஞர் எப்படி அறிக்கை விடுவார் ஒரு கற்பனை....

உடன் பிறப்பே,
தமிழக அரசியல் வரலாற்றில் எந்தக்காலத்திலும் இல்லாத அளவிற்கு ஒரு ஆளுங்கட்சிக்கு பல திக்குகளிலிருந்தும் எதிர்ப்புக்கணைகள் தொடுக்கப்பட்டன.அவையனைத்தும் முனை முறிந்து போகும் வண்ணம் செய்த பெருமை மக்கள் சக்திக்குத்தான் உரியது.
தேர்தல் ஆணையத்தின் இத்தனை கெடுபிடிகளையும் மீறி கழகம் பெற்றிருப்பது சாதாரண வெற்றியல்ல..ஜனநாயகத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. ஒரு ரூபாய் அரிசி, இலவச வண்ண தொலைக்காட்சி, கலைஞர் காப்பீட்டு திட்டம், கலைஞர் வீட்டு வசதி திட்டம், 108 ஆம்புலன்ஸ், கேஸ் அடுப்பு என்று கழக அரசின் சாதனைகளை உணர்ந்தவர்களும், சலுகைகளை பெற்றவர்களும் நன்றி உணர்வு மிக்கவர்கள் என்பதையே இந்த தேர்தல் வெற்றி உணர்த்துகிறது.
ஏழை எளிய மக்களின் இதய சிம்மாசனத்தில் எங்களுக்கு கிடைத்திருக்கும் இடத்தை அம்மையாரால் அகற்ற முடியவில்லை....அகற்ற முடியாது என்பதற்கு இதைவிட புகழ்பெற்ற சான்று வேறு இருக்க முடியாது.
கொடநாட்டு அம்மையாருக்கு மரண அடி கொடுத்து மீண்டும் கழக ஆட்சி தொடர வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி...இதற்காக அயராது பாடுபட்ட கூட்டணி கட்சி தலைவர்களுக்கு நன்றி...மேலும் புயலென சுற்றி வந்த வைகைபுயல், கருப்பு நாகேஷ் தம்பி வடிவேலு, திராவிட திருவிளக்கு குஷ்பு ஆகியோருக்கும் நன்றி...இந்த வெற்றி மலர்களை எங்களை ஆளாக்கிய பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார், காஞ்சி தலைவன் அறிஞர் அண்ணா அவர்களின் பாத மலர்களுக்கு  காணிக்கை ஆக்குகிறேன்.

**********************************

ஒரு வேளை தி.மு.க-தோற்றால்....

உடன் பிறப்பே,
தோல்வி கண்டு துவண்டு விடாதே, 1962-இல் காஞ்சியில் நமது அண்ணனின் தோல்வியை மனதில் வைத்து ஆறுதலடைந்து கொள்...ஊக்கம் பெறு....

நடந்து முடிந்த ஆரிய திராவிட யுத்தத்தில் நாம் தோற்கடிக்க பட்டிருக்கிறோம்....இல்லை.... இல்லை...வெற்றி வாய்ப்பை  தற்காலிகமாக  இழந்திருக்கிறோம். 
தேர்தல் ஆணையத்தை கைக்குள் போட்டுக்கொண்டு கொடநாட்டு அம்மையார் வெற்றி பெற்றிருக்கிறார் என்று சொல்லாம்....ஆனால், அரசியல் நாகரீகம் கருதி அப்படி சொல்லவில்லை.
நமக்கான தோல்வி என்பது ஒரு செயற்கையான தோல்வி. தேர்தல் ஆணையமும், ஆரிய பத்திரிகைகளும் திராவிடர்களுக்கான நமது ஆட்சியை ஒழிப்பதில் எவ்வளவு தீவிரம் காட்டினார்கள் என்பதை நான் அறியாதவனல்ல....

தோல்வியை கண்டு துவள்பவன் அல்ல...தோல்வியையும், வெற்றியையும் ஒன்றாக கருதுபவன் தான்  இந்த கருணாநிதி என்பதை நீங்கள் அறிவீர்கள். அதுதான் ஈரோட்டு குருகுலத்திலும், காஞ்சி தலைவனிடத்திலும் நான் பயின்ற பால பாடம்.

பதவியில் இருந்துதான் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதில்லை. பதவியில் இல்லாவிட்டாலும் திரை படங்களுக்கு  வசனம் எழுதுவது, இலக்கியங்கள் படைப்பது என்று என் பணி தொடரும்.

பதவி என்பது தோளில் கிடக்கும் துண்டு போல....மானம் என்பது இடுப்பில் கட்டியிருக்கும் வேட்டி போல...நாம் இப்போது துண்டைத்தான் இழந்திருக்கிறோமே தவிர வேட்டியை அல்ல....

ஜெயித்தால் அண்ணா வழி...தோற்றால் பெரியார் வழி....இதுதான் காலங்காலமாக நான் கடை பிடித்து வரும் கொள்கை.  இனி பெரியார் வழியில் என் பயணம் தொடரும்....கலங்காதே....

படிக்காமல் தவற விட்டவர்களுக்காக....என் முந்தைய பதிவு 


Post Comment

இதையும் படிக்கலாமே:


20 கருத்துகள்:

  1. இரண்டாவது சொன்னது தான் நடக்கும்... பொறுத்திருந்து பாருங்கள்... இருந்தாலும் திராவிட தெருவிளக்கு... ச்சே... திருவிளக்கு குஷ்பூ எல்லாம் கொஞ்சம் ஓவர்...

    பதிலளிநீக்கு
  2. நல்லாவே சொல்லியிருக்கிங்க...
    கண்டிப்பா இப்படித்தான் இருக்கும்..

    பதிலளிநீக்கு
  3. பதிவு இரு முறை வருகிறது என்னவென்று பாருங்கள்..

    பதிலளிநீக்கு
  4. தமிழ் நிருபர்ன்னு ஒரு ஓட்டுப்பட்டை இருக்கே... புதுசா...

    பதிலளிநீக்கு
  5. ஹிஹி

    சீன தத்துவம் தமிழில்

    http://speedsays.blogspot.com/2011/04/blog-post_26.html

    பதிலளிநீக்கு
  6. ஹிஹி ஹோ ஹோ ஹாய் ஹாய்!

    பதிலளிநீக்கு
  7. இனி பெரியார் வழியில் என் பயணம் தொடரும்....கலங்காதே.............../////////////////

    அட போங்கையா செத்து போனவரை ஏன்யா அழ வைக்கிறே ........பாபா காலில் விழுந்து மோதிரம் வாங்க பெரியாரா சொல்லிகுடுதார் ?

    பதிலளிநீக்கு
  8. பெயரில்லா26 ஏப்., 2011, 2:06:00 PM

    தோற்றால்- தமிழர்களே தமிழர்களே நீங்கள் என்னை கடலில் தூக்கி போட்டாலும் கட்டு மரமாக தான் மிதப்பேன்.......பழைய பல்லவி தான்

    பதிலளிநீக்கு
  9. மிக குறுகிய காலத்தில் வலை தொழில் நுட்பம் வரைக்கும் புகுந்த விளையாடுறீங்க. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  10. தோத்தாலும், ஜெயிச்சாலும் கலைஞர் அனேகமா இந்த அறிக்கையை காப்பி எடுத்து படிப்பார்ன்னு நெனக்கிறேன்...ஹி...ஹி..

    பதிலளிநீக்கு
  11. மொத்தத்தில் இந்த பதிவால் கலைஞரின் வேலை மிச்சம். ஹி..ஹி...ஹி....

    பதிலளிநீக்கு
  12. அதான் கலைஞர் வேட்டியை சிபிஐ உருவிடுச்சே..

    பதிலளிநீக்கு
  13. சி பி சொல்றாரு குட் இமாஜிநேசனாம்!!
    அப்பிடீன்னா??
    ஜில்பா கதையா??

    பதிலளிநீக்கு
  14. சினிமா நடிகர்களின் காமெடியினை விட, இப்போது கலைஞரின் காமெடி தான் கலக்கலாகி விட்டது,

    பதிலளிநீக்கு
  15. நல்லாயிருக்கு நண்பரே

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.