என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

வியாழன், நவம்பர் 03, 2011

11 ஜெயலலிதாவுக்கு அண்ணா நூற்றாண்டு நூலகம் எழுதிய கடிதம்......


மாண்புமிகு(?) தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதாவிற்கு,
அண்ணா நூற்றாண்டு நூலகம் எழுதிக்கொள்வது.
நீங்கள் நலமாக இருப்பீர்கள். ஆனால், என்னை இடம் மாற்றம் செய்யப்போவதாக அறிவித்ததிலிருந்து நான் நலமாக இல்லை.
ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய நூலகம் என்று நான் இத்தனை நாளாக கர்வமும் பெருமையும் பட்டுக்கொண்டிருந்தேன். நான் மட்டுமல்ல, எல்லோரும் அப்படித்தான் பெருமையாக இருந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன், உங்களை தவிர.....

ஆனால், நேற்றைய உங்கள் அறிவிப்பு என் தலையில் இடி விழுந்ததைப்போல இருக்கிறது. கலைஞரால் ஆரம்பிக்கட்ட நூலகம் என்பதைத்தவிர வேறு என்ன பாவம் செய்தேன் நான்?. ஏன் எனக்கு இப்படி ஒரு தண்டனை?. 
நூலகமாகிய என் வாசலில் கலைஞர் பெயரை தாங்கிய ஒரு கல்வெட்டு இருப்பதை தாங்கிக்கொள்ள முடியாமல் இப்படி ஒரு அரசியல் காழ்ப்புணர்ச்சி முடிவை நீங்கள் எடுத்துள்ளீர்கள் என்றே நினைக்கிறேன்.

நான் கலைஞரால் உருவாக்கப்பட்டவனே தவிர....அதையும் தாண்டி அனைத்துக்கட்சியினருக்கும் பயனுள்ளவனாகவே இருந்துவருகிறேன்.  நீங்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற இந்த ஆறு மாதக்காலத்தில் சமச்சீர் கல்வி முதல், சட்டசபை வரை முந்தைய கலைஞரின் திட்டங்களான அனைத்தையுமே உங்கள் காழ்ப்புணர்ச்சியால் மாற்றினீர்கள். அந்த விஷயங்களில் கூட உங்களின் முடிவோடு சிலர் ஒத்துப்போயினர்.

ஆனால், இப்போது என்னையும் மாற்றப்போவதாக அறிவித்ததும் எனக்காக அனைத்துக்கட்சி தலைவர்களும் எனக்காக பரிந்து பேசுகிறார்கள். அவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்த பெருமை உங்களையே சேரும்.

உங்கள் கட்சி மந்திரிகளை மாற்றினீர்கள், மாவட்ட செயலாளர்களை மாற்றினீர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகளை மாற்றினீர்கள், இவ்வளவு ஏன் வேட்பாளர்களைக்கூட மாற்றினீர்கள் அதெல்லாம் உங்களின் உரிமையாக பார்க்கப்பட்டது. ஆனால், இப்போதைய உங்களின் முடிவு ஒரு அரசியல் காழ்ப்புணர்ச்சியாகவே பார்க்கப்படுகிறது.

ஆனால், இதையெல்லாம் மாற்றக்கூடிய அதிகாரத்தை உங்களுக்கு வழங்கிய மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். மக்கள் கலைஞரை மாற்றி உங்களை அதிகாரத்தில் அமரவைத்தது இப்படி எல்லாவற்றையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று மாற்றுவதற்காக அல்ல....மக்களின் வாழ்க்கைத்தரத்தை மாற்றுவதற்காகத்தான் என்பதை  நினைவில் வையுங்கள்.

இப்படி ஒவ்வொன்றாக மாற்றிக்கொண்டிருந்தால் கடைசியில் நீங்கள் இருக்கும் இடத்தையும், உங்கள் ஜால்ராக்கள் இருக்கும் இடத்தையும் மனநல மருத்துவமனையாக மாற்ற நேரிடலாம் என்று சொல்லிக்கொண்டு விடைபெறுகிறேன்

-வருத்தத்துடன்
அண்ணா நூற்றாண்டு நூலகம்.


Post Comment

இதையும் படிக்கலாமே:


11 கருத்துகள்:

  1. //இப்படி ஒவ்வொன்றாக மாற்றிக்கொண்டிருந்தால் கடைசியில் நீங்கள் இருக்கும் இடத்தையும், உங்கள் ஜால்ராக்கள் இருக்கும் இடத்தையும் மனநல மருத்துவமனையாக மாற்ற நேரிடலாம் என்று சொல்லிக்கொண்டு விடைபெறுகிறேன்//

    நன்றாகவே சொன்னீர்!

    பதிலளிநீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  3. உண்மை கலைஞரின் பெயர் தாங்கி ஏதும் இருக்க கூடாது என்ற echo மனப்பான்மை ஜெ க்கு நிறைய உண்டு .அதன் விளைவே இது .அருமையான கட்டுரை

    பதிலளிநீக்கு
  4. சரியான சாட்டையடி பதிவு.

    பதிலளிநீக்கு
  5. ஓட்டு போட்டாச்சுல்ல, இனி அஞ்சு வருசத்துக்கு நம்ம இன்னிங்ஸ்தான் ஒண்ணியும் பண்ண முடியாது. ஒவ்வொரு வினைக்கும் சமமான எதிர் வினை உண்டு. நான் அம்மாவுக்கு சொல்லல. ஓட்டு போட்ட மக்களுக்கு சொல்றேன்.

    பதிலளிநீக்கு
  6. மருத்துவமனை என்று சொன்னால் மக்கள் ஆதரிப்பார்கள் என்று தான் தலைமைச்செயலகத்தை பொதுமருத்துவமனை என்றும் நஊலகதை குழந்தைகள் மருத்துவமனை என்றும் கதை விட்டுக்கொண்டு போகிறார்கள்.

    பதிலளிநீக்கு
  7. பெயரில்லா3 நவ., 2011, 8:49:00 PM

    மக்கள் மனதின் பிரதிபலிப்பு,நன்றி

    பதிலளிநீக்கு
  8. :-)

    #அம்மாவுக்கு கடிதம்னா, வார்த்தையெல்லாம் அளந்து பேசணுமோ? அப்போ, ஐயா மட்டும் இ.வா.வா? ஹி ஹி ஹி...

    பதிலளிநீக்கு
  9. ராணி மேரி பெண்கள் கல்லூரிக்கு வழங்கப்பட்ட அதே மதிப்பும் ,மரியாதையும் இந்த நூலகத்துக்கும் கிடைத்துள்ளது. தமிழ் நாடு ஒன்றும் இவள் அம்மா சந்தியா "சம்பாதித்த " சொத்தல்ல, இவள் நினைத்த வுடன் எல்லாம் இடம் மாற்றி வைக்க.

    பதிலளிநீக்கு
  10. மம்மி அப்பப்போ தன் குணத்தைக் காட்டிடறாங்களே..

    பதிலளிநீக்கு
  11. மூன்றாம் கோணம்
    பெருமையுடம்

    வழங்கும்
    இணைய தள
    எழுத்தாளர்கள்
    சந்திப்பு விழா
    தேதி : 06.11.11
    நேரம் : காலை 9:30

    இடம்:

    ராஜ ராஜேஸ்வரி கல்யாண மண்டபம்

    போஸ்டல் நகர்,

    க்ரோம்பேட்,

    சென்னை
    அனைவரும் வருக!
    நிகழ்ச்சி நிரல் :
    காலை 9.30 மணி : ப்ளாக்கர்கள் அறிமுகம்
    10:30 மணி : புத்தக வெளியீடுகள் ( இணைய எழுத்தாளர்கள் தாங்கள் எழுதிய புத்தகங்களை வெளியிடலாம் )

    11:00 மணி : மூன்றாம் கோணம் தீபாவளி மலர் கையெழுத்துப் பிரதி வெளியீடு 11:15 : இணைய உலகில் எழுத்தாளர் எதிர்காலம் - கருத்தரங்கம்
    12:30 : குறும்படம் திரையிடும் நிகழ்ச்சி
    1 மணி : விருந்து

    எத்தனை பேர் வருவார்களோ, அதைப் பொறுத்து உணவு ஏற்பாடுகள் செய்ய வேண்டியிருப்பதால் வலை நண்பர்கள் முன் கூட்டியே moonramkonam@gmail.com என்ற முகவரிக்கு மெயில் அனுப்பி தங்கள் வருகையை பதிவு செய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் . மேலும் , புத்தக வெளியீடு செய்யும் நண்பர்களும் குறும்படம் வெளியிடும் நண்பர்களும் கட்டாயம் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். இந்த இணைய தள எழுத்தாளர் விழா பெருவெற்றி அடைய உங்கள் ஆதரவை நாடும்:
    ஆசிரியர் மூன்றாம் கோணம்

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.