என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

புதன், நவம்பர் 02, 2011

12 இது நியாயம்தானா? நீங்களே சொல்லுங்கள்- ஒரு பதிவரின் ஆதங்கம்......



கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அதாவது ஜெயலலிதா தமிழக முதல்வராக பதவியேற்ற பின்

முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதாவிற்கு ஒரு பகிரங்க கடிதம்....

என்று ஒரு பதிவிட்டிருந்தேன். 

அந்தப்பதிவை ஒரு எழுத்துக்கூட விடாமல் அப்படியே காப்பியடித்துள்ளது kadayanallur.org என்ற தளம். காப்பி அடியுங்கள் தவறில்லை. ஆனால், அதை முறைப்படி என்னிடம் அனுமதி வாங்கியே செய்யுங்கள்.
அல்லது என் பதிவுகளை காப்பியடித்து நீங்கள் உங்கள் தளத்தில் வெளியிடும்போது அந்த பதிவின் கீழ் எனக்கு ஒரு நன்றி சொல்லி என் ஒரிஜினல் பதிவிற்கான  லிங்கையும் கொடுத்துவிடுங்கள்.

 யார் வேண்டுமானாலும் அள்ளிக்குடிக்க என் பதிவுகள் ஆற்று நீரல்ல....அது கிணற்று நீர்...முறைப்படி என்னிடம் அனுமதி வாங்குங்கள்.
இது ஒன்றும் வரலாறு, பூகோளப்பதிவல்ல....காப்பிரைட் இல்லாமல் இருக்க....

இது என் கற்பனையில் உருவான சொந்தப்பதிவு. கடைசியாக காப்பியடிப்பவர்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன். அடுத்தவனின் கற்பனையை திருடி தன் சொந்தப்பெயரில் வெளியிடுவது என்பது அடுத்தவனின் விந்தை எடுத்து தன் மனைவிக்கு வைத்து குழந்தைப் பெற்றுக்கொள்வதைப்போல.....

மன்னித்துவிடுங்கள்....இதைவிட பச்சையாக எனக்கு சொல்லத்தெரியவில்லை.
என் ஒரிஜினல் பதிவிற்கான லிங்க்....

காப்பியடித்த தளத்தின் லிங்க்.....

 

அதன் ஸ்க்ரீன் ஷாட் கீழே





 

இதேபோல் வேறொரு தளமும் என் பதிவை காப்பியடித்திருக்கிறது. ஆனால், அவர்களுக்கு காப்பியடிப்பதே (காப்பி அடிப்பது மட்டுமே) தொழில் என்பதால் விட்டுவிட்டேன்.

படிக்காமல் விட்டவர்களுக்காக.....என் முந்தைய பதிவு....

 
கனிமொழி ஜாமீன், ஆ.ராசா, பரிதி பற்றி கலைஞர் பரபரப்பு பேட்டி.........



Post Comment

இதையும் படிக்கலாமே:


12 கருத்துகள்:

  1. நிரூபனின் ஏதாவது ஒரு பதிவைக் காப்பி பண்ணி, வேர்ட்ல பேஸ்ட் பண்ணுங்க... அதையும் ஒரிஜினல் பதிவையும் பாருங்க... நல்ல டெக்னிக்.. அதை பாலோ பண்ணுங்க...

    பதிலளிநீக்கு
  2. சரியான சாட்டையடி!இதுக்கு மேலயும் காப்பி பேஸ்ட் பண்ணினாங்கன்னா நீங்க சொன்ன மேட்டர் சரிதான்!

    பதிலளிநீக்கு
  3. [ma]எல்லா எடத்துலையும் திருட்டுப்பசங்க இருங்காங்க அண்ணே இவனுங்க எல்லாம் எப்ப தான் திருந்துவாங்களோ?[/ma]

    பதிலளிநீக்கு
  4. பதிவின் இறுதியில் நீங்க சொல்லி இருக்கற வார்த்தைகளே சம்மட்டி அடி. அதுக்கு மேல நாங்க என்னத்த சொல்லிட முடியும்?

    பதிலளிநீக்கு
  5. ஆமாம் நண்பா இதைவிட கேவலமாக திட்டமுடியாது..

    பதிலளிநீக்கு
  6. இதென்னங்க நியாயம்? தொழில் முறைக்காரங்கன்னா ஒரு நீதி, மத்தவங்கன்னா ஒரு நீதியா?

    அப்புறம் பாருங்க, என் பதிவில காப்பியடிப்பதற்கு ஓபன் லைசன்ஸே கொடுத்திருக்கேன். ஒருத்தராச்சும் காப்பியடிக்க மாட்டேங்கிறாங்க. ஒரு சமயம் எனக்குத்தான் தெரியலயோ என்னமோ?

    இதுக்கெல்லாம் வருத்தப்படலாமுங்களா?

    எப்படியோ, ஒரு பதிவு தேத்தியாச்சு, ரைட்ட்ட்.

    பதிலளிநீக்கு
  7. ma என்னங்க இது புதி ட்ரிக் /ma

    பதிலளிநீக்கு
  8. இது எனக்கும் நடந்திருக்கிறது பலமுறை.. பல வெப்சைட்டுகள் இப்படித்தான் செய்கின்றன..

    ஒருமுறை கல்கி புத்தகமே அப்படி செய்திருக்கிறது... கன்னாபின்னாவென்று திட்டி, நியாயம் கேட்டு மெயில் போட்டு, போன் செய்து, கடைசியில் எனக்கு கிடைத்தது.... "ஸாரி ஸார்".

    அவ்வளவுதான்...

    கண்டுபிடிக்க வேண்டுமானால் மட்டும் ஒரு வழி இருக்கிறது.. உங்கள் கட்டுரையில் வித்தியாசமான ஒரு வரியை காப்பி செய்து கூகிளில் போட்டு தேடிப்பாருங்கள்.. எத்தனையெத்தனை நாய்கள் தமது வெப்சைட்டுகளில் அனுமதியின்றி உங்கள் கட்டுரையை வெளியிட்டிருக்கிறார்கள் என்று தெரியும்...

    பதிலளிநீக்கு
  9. உங்கள் மெயில் id எனக்கு அனுப்புங்கள். உங்கள் பதிவை காப்பி அடிக்காமல் இருக்க ஒரு வழி சொல்கிறேன். 007sathish@gmail.com

    பதிலளிநீக்கு
  10. எப்படிதான் இந்த காப்பி அடிப்பவர்களைத் தடுப்பது? சவாலான விஷயம்தான். தெரிந்தவர்கள் உதவலாமே!

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.