என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

சனி, நவம்பர் 05, 2011

4 மவுனம் கலைந்த கேப்டனும்- மங்காத்தா ஆடிய ஜெயாத்தாவும்....



வாய்யா.....உளறுவாயா.... நீ ஒரு மின்சாரம் மாதிரிப்பா....திடீர்ன்னு வாறே....திடீர்ன்னு காணாம போயிடுறே....

எங்கே போகப்போறேன் கழுதை கெட்டா குட்டிச்சுவரு..... 

 அப்படின்னா நீ ஒரு கழுதைன்னு ஒத்துக்கறே?

நான்கழுதைன்னா... நான் தேடிவர்ர நீ ஒரு குட்டிச்சுவர் சரிதானே

 சரி...சரி...கோபப்படாதே உளறுவாயா....எதாவது ஹாட் நியூஸ் இருந்தா சொல்லேன்.

உங்கிட்ட சொல்லாம வேறு யார்கிட்ட சொல்லுவேன் ஓட்டைவாயா 

 ஆமா.... நீ வந்ததும் நான் கேட்கனும்ன்னு நினைச்சேன். அண்ணா நூற்றாண்டு நூலகம் இடம் மாறப்போகுதாமே?

அதையேன் கேக்கறே?....பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்காய் மாறியது போல....இதுவரை தனித்தையா இயங்கிட்டு இருந்த எல்லா எதிர்கட்சிகளும் இந்த விஷயத்தில ஒன்றா சேர்ந்து ஜெயலலிதாவை எதிர்க்கறாங்கப்பா.... 

 நம்ம கேப்டனுமா?

ஆமா...அவரும்தான்...கலைஞர் ஆட்சியில் கட்டப்பட்ட நூலகம் என்பதால்தான் இதை மாற்ற முடிவு செஞ்சிருக்காங்க ஜெயலலிதான்னு சொல்லிருக்காரு... 

பரவாயில்லையே கேப்டன் கூட தெளிஞ்சுட்டார் போல... 

 அட அது மட்டுமில்லேப்பா...மருத்துவமனை அமைக்கனும்ன்னா அதுக்கு இந்த நூலகத்தை எதுக்கு மாத்தனும்?...2100 கோடி ரூபா செலவுல புதுசா அமைக்கப்பட இருக்க துணை நகரத்திலேயோ, அல்லது தமிழ்நாட்டில் இருக்க மற்ற மாநகராட்சியிலேயோ அமைக்கலாமேன்னு ஜெயலலிதாவுக்கு யோசனை கூட சொல்லிருக்காரு

அடேங்கப்பா....ஜெயலலிதாவுக்கே யோசனை சொல்லுற அளவுக்கு விஜயகாந்த் வந்துட்டாரா? 

வராமா? அவருதான இப்ப எதிர்கட்சி தலைவரு

 நல்லவேளை அது இப்பவாவது ஞாபகத்துக்கு வந்துச்சே அவருக்கு....

 அப்படியில்லை. உள்ளாட்சி தேர்தல் போது ஏதாவது சீட்டு ஒதுக்குவாங்கன்னு நினைச்சு அமைதியா இருந்தாரு...அதான் ஜெயா இவருக்கு அல்வா கொடுத்திட்டாங்களே...இனிமேலும் மவுனமா இருந்தா கட்சிய வளர்க்க முடியாதுன்னு பொங்கி எழுந்துட்டாரு...

ஆக்கப்பூர்வமான எதிர்கட்சியா செயல்பட்டா சரிதான்... ஆமா, நேத்துக்கூட ஜெயலலிதா ஆறு மந்திரிகளை வெளியாக்கிட்டு ஆறு பேரை புதுசா மந்திரியாக்கிருக்காங்க போல... 

 அது வழக்கமா அவங்க ஆடற மங்காத்தாதானே...இவ்வளவு நாள் அமைதியா இருந்ததே பெரிய விஷயம் தான். 

 ஏன் இப்படி? 

 அவங்க கட்சில இருக்கிற எல்லா எம்.எல்.ஏ.,க்களையும் ஒரே நேரத்துல மந்திரிரியாக்க முடியாதுல்ல...அதான் இப்படி தவணை முறையில மந்திரியாகறாங்களோ என்னவோ? யாருக்குத்தெரியும்?

அப்படின்னா மிச்சமிருக்க நாலரை வருஷத்தில அவங்க கட்சில இருக்க எல்லா எம்.எல்.ஏ.,வும் மந்திரியாகற வாய்ப்பு இருக்குன்னு சொல்லு....திருச்சி இடைத்தேர்தல்ல ஜெயிச்ச பரஞ்சோதிக்கு கூட லக் அடிச்சிருக்கே? 

 நீ லக்குன்னு சொல்றே....ஆனா மந்திரிகளை கேட்டாத்தான் தெரியும்...லக்கா....என்னன்னு...

ஏப்பா இப்படி சொல்றே?

 ஜெயலலிதாட்ட மந்திரியா இருப்பதுங்கறது தலைக்கு மேல கத்தி தொங்கற மாதிரியான ஒரு விஷயம்...எப்ப யாருக்கு பதவி போகும்ன்னு சொல்லவே முடியாது. 

 எனக்கொரு சந்தேகம்?... அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடம் மாற்றம் செஞ்சதால கிளம்பிய சர்ச்சையை திசைதிருப்பத்தான் இப்படி மந்திரிசபை மாற்றத்தை கொண்டு வந்திருப்பாங்களோ?

ச்சே...ச்சே...அப்படிலாம் இருக்காது. எவ்வளவு பெரிய முட்டாள்தனமான முடிவை எடுத்தாலும் போல்டாத்தான் எடுப்பாங்க ஜெயலலிதா...எடுத்தபின்னாடி ஊரெல்லாம் திட்டு வாங்கி நீதிபதிட்ட குட்டு வாங்கிய பின்னாடிதான் மாத்துவாங்க...

ஓ நீ அப்படி சொல்றியா....அப்படின்னா ஜெயா இன்னும் மாறவே இல்லைன்னு சொல்லு...

அப்படித்தான் வச்சுக்கவே...அதுதானே உண்மை. சரிப்பா நான் கிளம்பறேன்.

என்ன திடீர்ன்னு கிளம்பிட்டே?

வெளில ஆட்டோ சத்தம் கேக்குது....எதுக்கும் நம்ம எச்சரிக்கையா இருக்கனும்ல...அதான்...


டிஸ்கி:  இந்த பதிவை காப்பியடிப்பதாக இருந்தால் தயவுசெய்து ஒரு மெயில் மூலம் என்னிடம் கேட்டுவிட்டே செய்யுங்கள். தேவையில்லாமல் திருட்டு நாய்கள்  என்று பெயர் வாங்காதீர்கள்.

இனி கருணாநிதி பெயரை யாரும் பயன்படுத்தக்கூடாது-ஜெயலலிதா அறிக்கை



Post Comment

இதையும் படிக்கலாமே:


4 கருத்துகள்:

  1. //எவ்வளவு பெரிய முட்டாள்தனமான முடிவை எடுத்தாலும் போல்டாத்தான் எடுப்பாங்க ஜெயலலிதா...எடுத்தபின்னாடி ஊரெல்லாம் திட்டு வாங்கி நீதிபதிட்ட குட்டு வாங்கிய பின்னாடிதான் மாத்துவாங்க...//அதேதான்....

    பதிலளிநீக்கு
  2. சரி ,சரி விடுங்க!இப்போ என்ன அம்மா திருந்தணும்கிறீங்க,அம்புட்டுத்தானே?சனி மாறிடுச்சில்லை?இனிமே திருந்திடுவாங்க.

    பதிலளிநீக்கு
  3. அருமை

    தமிழ்த்தோட்டம்
    www.tamilthottam.in

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.