என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

திங்கள், நவம்பர் 21, 2011

27 விலையேற்றம் நன்மைக்கே...- ஜெ.,க்கு போடுங்க ஜே.........



பேருந்து கட்டணம் உயர்வு, பால் விலை உயர்வை தொடர்ந்து மின்சாரக்கட்டணத்தையும் உயர்த்த இருக்கிறதாம் ஜெயலலிதா அரசு.....இந்த விலையேற்றத்திற்கு என்ன  காரணம்  சொல்வார் ஜெ....என்று கற்பனையாக யோசித்ததன் விளைவுதான் இந்த பதிவு....

பேருந்துக்கட்டண உயர்வு....

ரத்த அழுத்தம், நீரிழிவு, இதய நோய் போன்ற நோய்களால் தமிழக மக்கள் அதிக அளவில் பீடிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் வியாதிகளை முற்றிலும் நீக்கி நல்ல ஆரோக்கியமான வாழ்க்கை வாழவைப்பது உங்கள் அன்பு சகோதரியின் கடமை. அதற்காக என்ன செய்யவேண்டும் என்று மருத்துவர்களை கலந்து ஆலோசித்தபோது,
தினமும், சிறிது தூரம் நடந்தாலே போதும் சுகர், BP, இதய நோய்கள் எட்டிப்பார்க்காது. ஆனால், மக்கள் நடப்பதேயில்லை. குறைந்த விலையில் பேருந்துக்கட்டணம் இருப்பதால், ஒன்றிரெண்டு கிலோமீட்டர் போவதாக இருந்தாலும் பேருந்திலேயே பயணிக்கிறார்கள். இதனால்தான் நோயாளியாக இருக்கிறார்கள் என்று என்னிடம் சொல்லப்பட்டது.

அப்படி மக்கள் காலார நடப்பதற்கு என்ன செய்யவேண்டும் என்று ஹெலிகாப்டரில் பறந்தபடியே நான் யோசித்தபோது, பேருந்துக்கட்டணத்தை ஏழைகளுக்கு எட்டாக்கனியாக்கிவிட்டால் எல்லோரும் வேறு வழியின்றி நடந்துதானே ஆகவேண்டும் என்ற தொலைநோக்கு சிந்தனை உதித்தது. அதன்படியே பேருந்துக்கட்டணத்தை உயர்த்தியுள்ளேன். மக்கள் நடப்பதன் மூலம், இனி ஆரோக்கியமான மாநிலமாக தமிழகம் திகழும்.

ஆனாலும், மக்கள் எவ்வளவு தூரம் தான் நடப்பது? நடக்கும் தூரம் 3 கி.மீ-க்கு அதிகம் இருந்தால், அவர்கள் சைக்கிளில் போகலாம்.
அப்படி,சைக்கிள் கூட இல்லாதவர்களுக்காக, கிராமந்தோறும், இருக்கும் நியாயவிலைக்கடையை ஒட்டி ஒரு நியாய வாடகை சைக்கிள் கம்பேனி ஆரம்பிக்கப்பட்டு, ஒரு மணி நேர வாடகையாக ரூ 1 மட்டுமே வசூலிக்கப்படும். இதற்காக  ஆண்டு ஒன்றுக்கு 1500 கோடி ரூபாயை  நிதியாக என் அரசு ஒதுக்கியுள்ளது. இந்த நிதிப்பற்றாக்குறையை சமாளிக்க இனி ரேசன் கடையில் இலவச அரிசி வழங்கப்பட மாட்டாது.

பால் விலையேற்றம்....

பால் விலையேற்றம் நிச்சயம் ஏழை எளிய மக்களை பாதிக்காது. என் அரசு ஏழைகளுக்காக இலவசமாக வழங்க இருக்கும் ஆடு, மாடுகளை, மக்கள் அடிமாட்டு விலைக்கு விற்பனை செய்ய திட்டமிட்டிருக்கிறதாக எனக்கு கிடைத்த தகவல் அடிப்படையிலேயே இந்த பால் விலையேற்ற முடிவு எடுக்கப்பட்டது. இதன்மூலம், இனி ஏழை மக்கள் கடைக்கு சென்று பால் வாங்கவே முடியாது. வேறு வழியின்றி என் அரசு கொடுக்கும் இலவச மாடுகளை மேய்த்து தங்கள் பால் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள வேண்டியதுதான். மாடுகளுக்கு தீவனமாக ரேசன் கடையில் மாதம் ஒன்றுக்கு ஒரு கட்டு புல்லும், பத்துகிலோ புண்ணாக்கும் மானிய விலையில் வழங்கப்படும்.

மின்கட்டணம் உயர்வு....

மின்கட்டண உயர்வைப்பற்றி மக்கள் ஒரு போதும் கவலைப்படவேண்டாம். முந்தைய மைனாரிட்டி தி.மு.க., அரசில் செலுத்தியதைவிட விட குறைவாகவே என் ஆட்சியில் மின் கட்டணம் செலுத்தப்போகிறீர்கள். எப்படி என்றால், மைனாரிட்டி தி.மு.க, ஆட்சியில் ஒரு நாளைக்கு மூன்று மணி நேரமே மின்வெட்டு இருந்து மீதமுள்ள 21 மணி நேரமும் தடையின்றி மின்சாரம் கிடைத்ததால் நீங்கள் செலுத்தவேண்டிய  மின் கட்டணம் உயர்ந்தது.
ஆனால், என் ஆட்சியில் ஒரு நாளைக்கு ஏழு, அல்லது எட்டு மணி நேரம் மின்சாரத்தை நிறுத்த சொல்லி உத்தரவிடுள்ளேன். அப்படி நிறுத்தப்படும் ஏழு, எட்டு மணி நேரம் போக மீதி 16 மணி நேரமே மின்சாரம் வருவதால்  நீங்கள் செலுத்தவேண்டிய மின்கட்டணம் பாதியாக குறைந்து விடும்.

இந்த விலையேற்றத்திற்கு முக்கிய காரணம் முந்தைய மைனாரிட்டி தி.மு.க., அரசுதான் என்பதையும் குறிப்பிட்டே ஆகவேண்டும். தீயசக்தி கருணாநிதி மட்டும் அவர் ஆட்சியில் பேருந்து, மின்சாரம், பால் போன்றவற்றின் விலையை உயர்த்தியிருந்தால்... அவர்கள் திட்டங்களையெல்லாம் எடுக்கவேண்டும் என்ற என் ஏட்டிக்குப்போட்டி மனப்பான்மையின் படி  நான் விலையை குறைத்திருப்பேன்.


Post Comment

இதையும் படிக்கலாமே:


27 கருத்துகள்:

  1. ஆஹா... அம்மாவுக்காக ரொம்பவே யோசிச்சிருக்கீங்க கஸாலி சார்... பாத்தாங்கன்னா உங்களை கொ.ப.செ. ஆக்கிடுவாங்க...

    பதிலளிநீக்கு
  2. அடேங்கப்பா, ஓ பன்னீர் செல்வம் லெவலை தாண்டீட்டீங்க

    பதிலளிநீக்கு
  3. யம்மாடி நல்லா யோசிக்கிறீங்கப்பா…! அசத்திட்டீங்க …!

    பதிலளிநீக்கு
  4. ஐயா, உங்களை அம்மாவின் உதவியாளராக அப்பாயின்மென்ட் ஆர்டர் விரைவில் வரும். உங்க அளவுக்கு சிந்திக்க ஆளே இல்லையாம் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  5. நான் என்னவோ மக்களை பாதிக்கும் என்று நினைத்தேன் இப்போதுதான் புரிகிறது...


    நல்லா யோசிக்கிறிங்கப்பா...

    பதிலளிநீக்கு
  6. ரஹீம் கசாலி, என்னுடைய இந்தப் பதிவைப் பார்க்கவும்.

    http://swamysmusings.blogspot.com/2011/11/blog-post_21.html

    அறிவு ஜீவிகள் எல்லோருடைய சிந்தனைகளும் ஒரே மாதிரி இருக்கும் என்று சொல்வார்கள்.

    பதிலளிநீக்கு
  7. //இந்த விலையேற்றத்திற்கு முக்கிய காரணம் முந்தைய மைனாரிட்டி தி.மு.க., அரசுதான் என்பதையும் குறிப்பிட்டே ஆகவேண்டும். தீயசக்தி கருணாநிதி மட்டும் அவர் ஆட்சியில் பேருந்து, மின்சாரம், பால் போன்றவற்றின் விலையை உயர்த்தியிருந்தால்... அவர்கள் திட்டங்களையெல்லாம் எடுக்கவேண்டும் என்ற என் ஏட்டிக்குப்போட்டி மனப்பான்மையின் படி நான் விலையை குறைத்திருப்பேன்.
    //

    சரியா சொன்னிங்க

    பதிலளிநீக்கு
  8. அம்மா என்றால் அன்பு...அது இதுதானோ...

    பதிலளிநீக்கு
  9. காரணம் சரியாதான இருக்கு...

    நல்ல கற்பனை...

    பதிலளிநீக்கு
  10. அட போங்கண்ணே...

    ஒரு வித்தியாசமும் இல்ல...

    என்னை ஏமாத்திட்டீங்க...

    பதிலளிநீக்கு
  11. After refreshing, i could see the difference... You do not cheat me.. i only not aware this...


    Great...

    பதிலளிநீக்கு
  12. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  13. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  14. ஸலாம் சகோ.கஸாலி,

    தமிழர்களின் ஆரோக்கியம்தான் முக்கியம் என்றால்... அவரை முதலில் டாஸ்மாக்கை இழுத்து மூடச்சொல்லுங்கள்.

    //ஒரு கட்டு புல்லும், பத்துகிலோ புண்ணாக்கும்//---அட..! இனி இதுதான் தமிழக மக்களின் உணவாக நாளடைவில் மாறக்கூடும். இதுகூட கிடைக்காமல்... பாவம் இனி நிஜ மாடுகள் கதி..!

    //மீதி 16 மணி நேரமே மின்சாரம் வருவதால்//---அட..! இது ரொம்ப அதிகமாக தெரியுதே..! இன்னும் குறைக்கலாமே..? (மின் கட்டணத்தை குறைக்க)

    சுமார் 24% பால் விலையேற்றம்,
    சுமார் 46% பேருந்து டிக்கெட் கட்டண விலையேற்றம்,
    சுமார் 87% மின் கட்டண விலையேற்றம்..!

    வாளேந்திய காரிகை

    நம்மை நோக்கி வாளை ஓங்கி விட்டார்..! இனி என்னாகுமோ..?

    பதிலளிநீக்கு
  15. வேதனையிலும் சிரிக்க வைத்துவிட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
  16. ச்சே... போன்ல மேட்டரை கேட்டதும் நானே பதிவா போட்டிருக்கணும்... மிஸ் பண்ணிட்டேன்...

    பதிலளிநீக்கு
  17. ஹா ஹா ஹா.........

    நடத்துங்க சார்.... நடத்துங்க......

    #வாழ்க ஜனநாயகம்..

    பதிலளிநீக்கு
  18. நம்ம கடையிலும் இதே சரக்கு தான்..

    பதிலளிநீக்கு
  19. சார், சிரிக்க முடியல... ஆனா சிரிச்சா தான் டென்ஷன் குறையும் போலிருக்கு

    பதிலளிநீக்கு
  20. நல்ல மனதை வரவேற்போம் ...வாழ்க நாடு வாழ்க மக்கள் (மாக்கள்)சிவகுமார் G

    பதிலளிநீக்கு
  21. சூப்பர் நல்லா யோசிக்கிறீங்க…! அசத்திட்டீங்க …!

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.