என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

திங்கள், நவம்பர் 28, 2011

14 டாக்டர் ராமதாசின் அபாரமான நகைச்சுவை உணர்வு...




ஆனந்தவிகடன் கேள்வியும் நானே...பதிலும் நானே பாணியில் நான் யோசித்தது.

1)தமிழகமே பா.ம.க.,வைத்தான் நம்பியிருப்பதாக டாக்டர் ராமதாஸ் சொல்லியிருப்பது எதை காட்டுகிறது?...
ராமதாசுக்கு நகைச்சுவை உணர்வு அபாரமாக இருக்கிறது என்பதை காட்டுகிறது

2) பொய்யின் ஆயுட்காலம்  எவ்வளவு நாட்கள்?
ஆளுங்கட்சியாக ஐந்து வருடங்கள் .....அரசியல்வாதியாக ஆயுள் முழுவதும் ...

3) எனக்கு தெரியாது என்ற பதிலை அதிகமாக உபயோகப்படுத்திய இருவர்?
பிரதமர் மன்மோகன் - எப்போதும்
முதல்வர் ஜெயலலிதா -  நீதிமன்றங்களில் மட்டும் 


4) சீமானும் ஆளுங்கட்சியை விமர்சிக்க ஆரம்பித்து விட்டாரே?
உள்ளே போக ஆயத்தமாகிறார் என்று அர்த்தம் .


5) இன்றைய அரசியல்வாதிகளில் நல்லவர்கள் யார்?
பதவிக்கு அல்லது அதிகாரத்திற்கு வராத அனைவரும்


6)சரத்குமார்?
முன்பு வைகோ செய்த ரோலை இப்போது சரத்குமார் செய்கிறார், அண்ணா.தி.மு.க.,வில்.

7) 2016- ஆம் ஆண்டு தமிழகத்தில் பா.ம.க.,ஆட்சி என்று ராமதாஸ் சொன்னதும் உங்கள் நினைவுக்கு வருவது?
கூரை ஏறி கோழி பிடிக்க தெரியாதவர், வானம் ஏறி வைகுண்டத்தை காட்டுகிறேன் என்றாராம்....


Post Comment

இதையும் படிக்கலாமே:


14 கருத்துகள்:

  1. நல்ல இருக்கு ...சம்பந்தி என்ற மரியாதைக்கு அல்ல நிஜமாகவே நல்ல இருக்கு

    பதிலளிநீக்கு
  2. கற்பனை நன்றாக இருக்கிறது தோழரே..

    பதிலளிநீக்கு
  3. ஒவ்வொரு பாவத்திற்கும் ஒரு தண்டனை உண்டு என்பார்கள்.
    கடந்த திமுக ஆட்சி என்ற பாவத்திற்கு தண்டனையாக அதிமுக ஆட்சி வந்துள்ளது.
    இந்த அதிமுக ஆட்சி என்ற பாவத்திற்கும் கண்டிப்பாக தண்டனையாக் கிடைக்கப்போவது பமக ஆட்சிபோல!

    பதிலளிநீக்கு
  4. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  5. அண்ணே வாஞ்சூர் அண்ணே!!!

    நல்லது எது கேட்டது எது என உணரும் நிலையில் மக்களாகிய நாம் உள்ளோம்!!!!

    பிரிவினையை அகற்றுவோம்.... ஒற்றுமை நிலை நாட்டுவோம்...

    சாதாரணமான நாமும், அரசியல்வாதிகள் போல் நிலைப்பாடு கொல்ல வேண்டாமே???!!!

    பதிலளிநீக்கு
  6. இதையெல்லாம் ஆனந்த விகடனுக்கு அனுப்பி வச்சீங்களா... ஒன்னாவது பிரசுரமாகக் கூடும்...

    பதிலளிநீக்கு
  7. Haa.... Haa... Haa..
    Super...
    S. Lurthuxavier
    Arumuganeri

    பதிலளிநீக்கு
  8. எப்படிங்க இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க? நல்லாதான் இருக்கு. ரசிச்சேங்க.

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.