என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

வெள்ளி, நவம்பர் 18, 2011

14 ஜெயலலிதாவும் கசப்பு மருந்தும்.......

முந்தைய ஆட்சியில், மின்சாரம் ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று மணி நேரம் மட்டுமே போகும்.அதுவே மழை(குளிர்) காலமாக இருந்தால் மின்வெட்டின் நேரம்  பாதியாக குறைந்துவிடும். ஆனால்,இப்போது ஏழு, எட்டு மணி நேரம் போகிறது. கிராமப்புறமான எங்களுக்குத்தான் இப்படியா? நகர்புறங்களிலும் இப்படியா என்று தெரியவில்லை. யாராவது சொல்லுங்க...


===============

தமிழக மக்களை இலவச திட்டம், சம்பளம் உயர்வு போன்ற  மதுபானத்தை ஊற்றிக்கொடுத்து கலைஞர் போதை மயக்கத்திலேயே வைத்திருந்தாராம். அந்த மயக்கத்தை தெளியவைக்க ஜெயலலிதா என்னும் டாக்டர் கசப்பு மருந்து கொடுக்கிறாராம். அப்படி கொடுக்கப்பட்ட கசப்பு மருந்துதான் பஸ் கட்டணம் உயர்வும், பால் விலை உயர்வும், மக்கள் நல பணியாளர்கள் நீக்கமுமாம். இதை சமீபத்தில் ஒரு  நண்பரின் தளத்தில் படித்தேன். ஜெயலலிதா தேர்தலுக்கு முன்பே இந்த கசப்பு மருந்து விஷயத்தை சொல்லியிருந்தால் அதே கசப்பு மருந்தை மக்கள் இவருக்கு கொடுத்திருப்பார்கள். ஆனால், ஜெயலலிதாவும் இலவச திட்டம் என்ற மதுவை ஊற்றிக்கொடுத்துத்தான் வாக்குகளை இலை வசம் திருப்பினார் என்று அந்த நண்பருக்கு விளங்கவில்லை போல.......

இன்னும் என்னன்ன கசப்பு மருந்தை வரும் வருடங்களில் கொடுக்கப்போகிறாரோ ஜெ.....

----------------------------------

கடந்த வருடத்தை போலவே இந்த வருடமும் தமிழ்மணம் 2011-ஆம் ஆண்டின் சிறந்த வலைப்பதிவு விருதுகள் போட்டியை அறிவித்திருக்கிறது.
மேலும் படிக்க இங்கே செல்லவும்.



அதுபோல எங்கள் blog தளமும் ஒரு வித்தியாசமான சிறுகதை போட்டியை அறிவித்திருக்கிறது. ஒரு கதையின் முதல் பாதியை கொடுத்து மறு பாதியை நம்மை எழுத சொல்லியுள்ளார்கள். மேலும் விபரங்களுக்கு இங்கே போகவும்.

----------------------------------

டிஸ்கி: கடந்த இரு நாட்களாக மெட்ராஸ் ஐ எனப்படும் சென்னைக் கண் (சரியாத்தானே தமிழ் படுத்தியிருக்கேன்?)  நோயால் கண்கள் இரண்டும் ஒரே எரிச்சல். விஜயகாந்தின் கண்களை விட அதிகமாக என் கண்கள் சிவந்திருக்கிறது. அதிகமாக எழுதமுடியவில்லை. அதான் இந்த சின்னப்பதிவு. பொருத்துக்கொள்ள வேண்டுகிறேன்.


Post Comment

இதையும் படிக்கலாமே:


14 கருத்துகள்:

  1. எல்லோருக்குமே கசப்பு மருந்து கொடுக்கும் தைரியம் தேர்தல்கள் முடிந்த பின் தான் வருகிறது?அரசு போக்குவரத்தும்,மின்வாரியமும் திவால் நிலையில் இருப்பது உள்ளாட்சி தேர்தலுக்கு முன் தெரியவில்லையா/

    பதிலளிநீக்கு
  2. இது சரியா இல்லை தவறா என்று சொல்லத்தெரியாவில்லை.

    பதிலளிநீக்கு
  3. நகர்ப்புறங்களில் குறைந்தது ஐந்து மணி நேர மின் தடை... மாநகரங்கள் கதை தெரியவில்லை...

    8-10 am
    2-4 pm
    7-7.30 pm
    9 - 9.30 pm
    11-11.30 pm

    current cut in tiruvannamalai

    பதிலளிநீக்கு
  4. வெலேய் கொறைக்க எங்கிட்டே ஒரு சூப்பர் ஐடியா கீதுபா!

    மொதல்லே பஸ் டிக்கெட் வெலபா!
    அதாவது இனிமே டிக்கெட்க்கு காசுக்குபதிலா ஹால்ஃப் இல்லே ஃபுல் காலி பாட்டிலைக் கொடுக்கலாம்னு புது ஆர்டர் போட்டாக்கா அப்பொரம் பாரு மவ்னே பணம் கவர்ன்மெண்ட்டுக்கு கொட்டும்.

    அப்பொரம் பால் வெலபா:
    டெய்லீ காலைலே டீ காபிக்கு பதிலா கண்டிப்பா டாஸ்மாக் சரக்குதான்னு வொரு ஆர்டர். அப்பொறம் பாரு வென்மெப்புரச்சிதான் போ!

    அய்யோ அய்யோ!
    எனக்கே காமடியா கீதுபா.

    பதிலளிநீக்கு
  5. நம்ப மக்க எவ்வளவு அடிச்சாலும் தாங்கிக்குவங்கப்பா.

    பதிலளிநீக்கு
  6. ”ஜெ” வின் முந்தைய ஆட்சிக்காலத்தினை ஆய்வு செய்திருந்தால் இது போன்ற கசப்பு மருந்து, அதிர்ச்சி... என எழ வாய்ப்பில்லை. தமிழக இளம் வாக்காளர்கள் 2ஜி ஊழலின் ஊகத் தொகையினைக் கருத்த்தில் கொண்டு கொதித்தெழுந்து திமுகவினை தண்டிப்பதாகக் கருதிக்கொண்டு தங்களைத் தாங்களே தண்டித்துக் கொண்டார்களோ என எண்ணிக்கை வைக்கின்றது நம் தமிழக முதல்வரின் செயல்கள். உப்பு தின்றவர்களுக்கு(அதிமுகவிற்கு வாக்களித்தவர்கள்)மட்டுமல்ல உடனிருப்பவர்களுக்கும் தண்ணீர் குடிக்க வைக்கின்றது இன்றைய ஆட்சி முறை!

    பதிலளிநீக்கு
  7. இதெல்லாம் அரசியல சாதரணமப்பா...

    பதிலளிநீக்கு
  8. இது கசப்பு மருந்ததில்லைங்க,ப்பூச்சி மருந்து,அதுதான் உண்மை.

    பதிலளிநீக்கு
  9. தமிழக மக்கள் என்ன தான் செய்து விட முடியும் என்று தெறியாமல் இருக்கிறார்கள். நல்ல கருத்துக்கள் சொல்லி உள்ளீர்கள். உங்கள் ப்ளாக் கதை போட்டிக்கு நான் ஒரு பதிவு இட்டுள்ளன்னே. தகவல் அறிய தந்தமைக்கு நன்றி கசாலி சார்...

    பதிலளிநீக்கு
  10. Inime kasappu marunthu kodukka maattaanga.Inippu visam than koduppanga.

    பதிலளிநீக்கு
  11. இந்த பதிவை விட நீங்கள் போனில் சொன்ன வாக்கியம்தான் அல்டிமேட்... தாயுள்ளமாவது நாயுள்ளமாவது...

    பதிலளிநீக்கு
  12. எங்கள் பகுதியில் தினமும் ஒரு மணிநேரம் மட்டுமே மின்சாரம் தடைபடுகிறது....

    அதுவும் நான் அலுவலகத்தில் இருக்கும் நேரம் என்பதால் நான் நேரடியாக பாதிக்கப்படவில்லை...

    பதிலளிநீக்கு
  13. பொது பிரச்சனைகளை இது போன்ற தளங்களில் பகிர்ந்து கொள்வது எனக்கு மிக்க மகிழ்ச்சி !!

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.