என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

சனி, நவம்பர் 12, 2011

9 குடி(கார)மக்கள் கவனத்திற்கு...........


தமிழ் நாட்டில் மதுவிற்பனையை அதிகரிக்க அதாவது இப்போதைய வருமானமான 14,900 கோடி ரூபாயிலிருந்து 20,000 கோடி ரூபாயாக உயர்த்த முடிவு செய்த அரசு அதற்காக மாவட்ட தலைநகரந்தோறும் புதிதாக எலைட் பார் என்று நவீன ஏசி பார்களை திறக்க இருக்கிறதாம். ஏற்கனவே தமிழ்நாடு போதையில் மிதக்கிறது. இனி இது வேறு... நடத்துங்க... நடத்துங்க...(அப்படியே குடித்துவிட்டு வேட்டி அவிழ்ந்து ரோட்டோரங்களிலும், சாக்கடைகளிலும் விழுந்து கிடப்பவர்களை பத்திரமாக பாரிலிருந்து வீட்டிற்கே அழைத்து செல்ல வாகன வசதி ஏற்பாடு செய்யுங்க....புண்ணியமா போகும்).

அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவமனையாக மாற்ற நிதி போதவில்லை போலும், அதான் வருவாயை பெருக்க இப்படி நவீன பார்களை திறக்கிறது போல....
மக்களை குடிகாரர்களாக்கி, நோயாளிகளாக்கி அதன்பிறகு இலவசமாக வைத்தியம் பார்ப்பார்கள் போல... நல்ல அரசு... நல்ல குடிமக்கள்.

குடியின் கொடுமைக்கு ஒரு சான்று...எங்கள் ஊரில் நேற்று முந்தினம் நடந்தது....

எனக்கு தெரிந்த ஒரு நண்பர், நேற்று முந்தினம் இரவு குடித்துவிட்டு வாகனம் ஓட்டிக்கொண்டுபோய் ஒரு மரத்தில் மோதிவிட்டார். குற்றுயிரும், குலை உயிருமாய் கிடந்த அவரை, அங்கிருப்பவர்கள் மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். 


அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இவர் இப்போது மதுபோதையில் இருக்கிறார். இந்த நிலையில் இவருக்கு வைத்தியம் பார்க்க முடியாது....போதை தெளியட்டும் காலையில் பார்த்துக்கொள்ளலாம் என்று கைவிரித்து விட்டார்கள். எல்லோருக்கும் பொழுது விடிந்தது. ஆனால், அவர் குடும்பத்திற்கு மட்டும் விடியவேயில்லை. ஆம்....சிகிட்சை கொடுக்க முடியாமல் அவர் இறந்துவிட்டார். 

மின்சார வாரியத்தில் வேலை பார்த்த அந்த 40 வயது நண்பரின் குடும்பம் இப்போது இருளில்.... அன்று அவர் மது அருந்தாமல் விபத்துக்குள்ளாகி இருந்தால் உடனே சிகிட்சை அளிக்கப்பட்டு ஒருவேளை காப்பாற்றப்பட்டிருக்கலாம்.


மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டாதீர்கள் என்று சொல்கிறார்கள். என்னைக்கேட்டால், வாகனம் ஓட்டும்போது மட்டுமல்ல...எப்போதும் மது அருந்தார்கள்.
உங்களுக்காக இல்லாவிட்டால் கூட....உங்கள் குடும்பத்தின் நலன் கருதியாவது மது அருந்தாதீர்கள்.




Post Comment

இதையும் படிக்கலாமே:


9 கருத்துகள்:

  1. இன்னா இன்னாவோ ஃப்ரீன்னு கொடுத்தானுங்கோபா. இப்போ பாரு அல்லார் வீட்லேயும் ஒரு சாவு ஃப்ரீ ஆகப்போது. அப்பாலேயும் நம்ம ஜனம் திருந்தாது நைனா!
    கஸ்மாலங்க

    பதிலளிநீக்கு
  2. இது மாதிரி எத்தனையோ குடும்பங்கள் அழிந்துள்ளது.......

    பதிலளிநீக்கு
  3. திமுகவும்,அதிமுகவும் தமிழ்நாட்டிற்கு கொடுத்த கொடை ஊருக்கு நாலு டாஸ்மாக் கடையும்,வீட்டிற்கு இரண்டு விதவைகளும்தான்.

    பதிலளிநீக்கு
  4. //வாகன வசதி ஏற்பாடு செய்யுங்க....புண்ணியமா போகும்). //

    108 ambulance service எதுக்குன்னு நினைச்சீங்க?

    பதிலளிநீக்கு
  5. சரியாச் சொன்னாரு சூரியஜீவா!

    பதிலளிநீக்கு
  6. அவர்களிடம் கேட்டால் நமக்கு இது ஒன்றும் புதிதில்லை என்று சொல்வார்கள். என்ன செய்வது?
    ஒரு காலத்தில் குடித்துவிட்டு வரும் நபர்களை வெறுத்து ஒதுக்கினார்கள்.
    இன்றோ ஒதுக்கும் பெண்கள் கூட் சதவிகதத்தில் குறைவாக இருந்தாலும் குடிக்க ஆரம்பித்து விட்டார்கள்.
    குடியை விடுங்கள் நோய்களை கொண்டாடும் கலாசாரமாக மாறும் தமிழகத்தில் குடி பெரிய பிரச்சினையாக எங்கே தெரியப் போகிறது. எனக்கு சுகர் 180 உனக்கு 250 ஆ, என்று தன் நோய்களை பகிர்ந்துக் கொள்ளும் போக்கு தான் இன்று தமிழகத்தில் நிலவுகிறது. இங்கே பெயர் வேறு சோசியல் ட்ரிங்கர்....
    நல்ல பதிவு நண்பரே

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.