என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

செவ்வாய், நவம்பர் 15, 2011

14 நீ(ஜா)திபதிகளும்....கலாச்சார காவலன் நீயாநானா கோபிநாத்தும்....



தமிழ்நாடு ஹை கோர்ட் நீதிபதியான கர்ணன் அவர்கள் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் பி.எல்.புனியாவுக்கு ஒருகடிதம் அனுப்பியுள்ளார். அதில்,
அவருடன் பணியாற்றும் சகநீதிபதிகளே அவரை ஜாதீய அடிப்படையில் இழிவுபடுத்துவதாக கூறியுள்ளார். தம்மிடம் வரும் வழக்குகளில் சுயமாக எடுக்கும் முடிவுகளை ‘குழு மனப் பான்மையோடு’ முடிவுகளை எடுக்கும் நீதிபதிகள் விரும்புவதில்லை என்றும், எல்லோரும் கலந்து பேசி, ஒருமித்த தீர்ப்பை வழங்க வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்ப்பது நீதித்துறையின் நேர்மையான செயல்பாட்டுக்கு எதிரானது என்றும் அந்தக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 
நீதித்துறை தொடர்பான நிகழ்வுகளிலும், அரசு நிகழ்ச்சியிலும் தலித் என்பதால், தன்னை பங்கேற்க அனுமதிக்க வில்லை என்றும், சென்னை திருமண நிகழ்வு ஒன்றில் தனக்கு அடுத்த இருக்கையில் அமர்ந்திருந்த ஒரு நீதிபதி, தனது செருப்புக் காலைத் தூக்கி, தனது காலின் மீது போட்டதாகவும், மற்றொரு நிகழ்வில், தனக்கு பின் இருக்கையில் அமர்ந்திருந்த ஒரு நீதிபதி, தனது இருக்கையைப் பிடித்து அசைத்துக் கொண்டே இருந்ததாகவும் வேதனை தெரிவித்துள்ளார். அந்த புகார் கடிதத்தை உச்ச நீதி மன்ற நீதிபதிக்கு அனுப்பியுள்ளார் ஆணையத்தின் தலைவரான பி.எல்.புனியா.

எனக்கு ஒரு சந்தேகம்.....இப்படிப்பட்ட ஜாதி வெறியுள்ள நீதிபதிகளிடம் அவர்கள் சார்ந்திருக்கும் ஜாதியை சேர்ந்த ஒருவரின் வழக்கு வருகிறதென்றால்...எப்படி நியாயமான தீர்ப்பை அவர்களிடம் எதிர்பார்க்க முடியும்? சம்பந்தப்பட்ட நீதிபதியும், குற்றவாளியும் ஒரே ஜாதியாக இருந்தால் அந்த குற்றவாளி விடுதலையாகும் அபாயமும் இருக்கிறதே?
இவர்களிடம் விசாரணைக்கு வரும் வழக்குகளில் அந்த வழக்கின் தன்மையை பொருத்தே நீதி வழங்குவார்களா என்பது சந்தேகமே....இப்படிப்பட்டவர்களால் நீதிதேவதைக்கே அசிங்கம்.

-------------------------------

இதைப்போல இன்னொரு சம்பவம்.....

சமீபகாலமாக நீயா நானா கோபிநாத் மீது ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நீயா நானாவில் பங்கேற்ற ஒருவர் தான் யூகேவில் இருந்தபோது ஒரு பெண்னை காதலித்ததாகவும், பின் குடும்பத்தினர் வேண்டுகோளுக்கினங்க அந்தப்பெண்ணை கைவிட்டு விட்டதாகவும் சொல்கிறார். அப்போதெல்லாம், குறுக்கிட்டு எதிர் கேள்வி கேட்காத கோபி...அதே கருத்தை இன்னொருவர் சொன்னதும் இடையிடையே குறுக்கிட்டு கேள்விக்கணைகளை அள்ளி வீசுகிறார். அதைப்பார்த்துக்கொண்டிருக்கும் பார்வையாளர்களிடமும் அதைப்பற்றி கருத்துகேட்கிறார்.... பார்வையாளர்களும் அதை தேசிய குற்றமாக கருதி தவறென்று ஜால்ரா தட்டுகிறார்கள்.
யூகே-யில் இருப்பவன் செய்தால் சரியாம்... நம் ஆளுங்க செய்தால் தப்பாம்... நல்லாருக்குடா உங்க நீதி?...
ஒருவேளை யூகே, யூஎஸ் போன்ற மேற்கத்திய  நாடுகளில் வாழ்பவர்கள் கலாச்சார விஷயத்தில் அப்படி இப்படி இருப்பார்கள். காதலிப்பதும். படுத்து எழுந்திருப்பதும், காரியம் முடிந்ததும் கை விடுவதும் அங்கு சகஜம் என்பதாலும், தமிழ் நாட்டு கலாச்சாரம் அப்படியில்லை...ஒருவனுக்கு ஒருத்தி கலாச்சாரத்தில் அது தப்பு என்பதாலும்  அந்த யூகே வாசி பேசியபோது கம்முன்னு இருந்து விட்டு, நம் தமிழ் நாட்டுவாசி பேசும்போது மட்டும் நம் கலாச்சாரத்திற்காக ஆதரவாகத்தான் இப்படி  எதிர்கேள்வி கேட்டிருப்பாரோ நம்ம கோபிநாத்? ஒரு டவுட்டு....

அப்படியானாலும், வெளி நாட்டில் இருக்கும் எல்லோரும் அப்படிப்பட்டவர்கள் கிடையாதே? லாஜிக் எங்கேயோ இடிக்கிறதே?

அந்த வீடியோ இணைப்பை பார்த்துவிட்டு பதில் பதில் சொல்லுங்கள்.


==================================


Post Comment

இதையும் படிக்கலாமே:


14 கருத்துகள்:

  1. இந்த ஜாதி வெறி எல்லா மட்டத்திலும் இன்னும் இருந்துவருவது மிகவும் கவலையளிக்கிறது...

    நீதித்துறையில் இது மிகப்பெரிய மானக்கேடு...

    பதிலளிநீக்கு
  2. ஜாதி ஜாதி இதில் இருந்து மீண்டு வருவது எப்போது? இல்லை மீளவே முடியாதா?

    பதிலளிநீக்கு
  3. ஒரு நீதிபதிக்கே இந்த நிலைமைன்னா பின்னே சாதாரண மக்களின் நிலை என்ன?

    நீயா நானாவில் எனக்கு அவ்வளவாக ஆர்வம் கிடையாது. ஆனால் இந்த நிகழ்ச்சியை நானும் பார்த்தேன். அதில் அந்த யுகேகாரர் மிக தெளிவாக சொன்னார். உள்ளூர்காரர் தெளிவாக சொல்லவில்லை. அதுவே அங்கே அத்தனை கேள்விகளுக்கு வழிவகுத்தது என்பது என் கருத்து.

    பதிலளிநீக்கு
  4. //இப்படிப்பட்ட ஜாதி வெறியுள்ள நீதிபதிகளிடம் அவர்கள் சார்ந்திருக்கும் ஜாதியை சேர்ந்த ஒருவரின் வழக்கு வருகிறதென்றால்...எப்படி நியாயமான தீர்ப்பை அவர்களிடம் எதிர்பார்க்க முடியும்? சம்பந்தப்பட்ட நீதிபதியும், குற்றவாளியும் ஒரே ஜாதியாக இருந்தால் அந்த குற்றவாளி விடுதலையாகும் அபாயமும் இருக்கிறதே?
    //
    நியாயமான கேள்வி

    பதிலளிநீக்கு
  5. 'நீயா நானா' ஒரு கேவலமான நிகழ்ச்சி! இது போல ஏராளமான பல உதாரணங்கள் உள்ளன! நம்மாளுங்க அதை ஏதோ பெரிய விஷயமாக நினைத்துப் பார்ப்பதுதான் கொடுமை!

    பதிலளிநீக்கு
  6. ஒரு வேளை ஜாதியே கூட அழிந்தாலும் எதவாது ஒரு வகையில் மனிதன் உயர்வென்றும் தாழ்வென்றும் பிரித்து பார்த்து அழிவான் ...இது இயற்கையின் நீதி

    பதிலளிநீக்கு
  7. ஸலாம் சகோ.கஸாலி,
    //நீ(ஜா)திபதிகளும்....//---நெத்தியடி தலைப்பு..!

    அடுத்த பாதி தலைப்பை கண்டவுடன், //"கலாச்சார காவலன் நீயாநானா கோபிநாத்"(...?)தும்....//---என்று கேள்வி கேட்க வேண்டும்போல உள்ளது.

    செம கேள்விகள். நல்ல பதிவு சகோ.கசாலி.

    பதிலளிநீக்கு
  8. அமாம் இப்போதெல்லாம் நீயா,நானா நிகழ்ச்சியில் நிறைய ஒருதலைப் பட்சமான விவாதங்கள் நடக்கிறது..

    பதிலளிநீக்கு
  9. கோபிநாத் எப்போதும் தன்னை நீதிபதி நிலையில் வைத்துக் கொண்டே பேசுவார்..... சமயத்திற்கு ஏற்றவாறு .......

    பதிலளிநீக்கு
  10. //அதில் அந்த யுகேகாரர் மிக தெளிவாக சொன்னார். உள்ளூர்காரர் தெளிவாக சொல்லவில்லை. அதுவே அங்கே அத்தனை கேள்விகளுக்கு வழிவகுத்தது என்பது என் கருத்து.//

    இதான் என் கருத்தும். :-)

    பதிலளிநீக்கு
  11. நீதிதுறையின் மானக்கேடு

    பதிலளிநீக்கு
  12. கஸாலி... வீடியோவிலேயே உங்களுடைய கேள்விகளுக்கு தெளிவாக பதில் சொல்லப்பட்டிருக்கிறது...

    முன்னவர் கோபியை கேள்வி கேட்கவே விடவில்லை... அதற்கு முன்பு எல்லாவற்றையும் அவராகவே தெள்ளத்தெளிவாக சொல்லிவிட்டார்... அவருடைய குருட்டுத்தனமான நம்பிக்கை குறித்த கடைசி வாக்கியத்தை கவனிக்கவும்...

    இரண்டாமவர் ஏனோ தானோ என்று பதில் சொல்கிறார்... இருக்கட்டும் அது அவரது சுபாவமாக இருக்கலாம்... ஆனால் கோபி எதிர் கேள்வி கேட்கும்போது அவர் தெளிவான பதில் எதையும் சொல்லவில்லை...

    உண்மையிலேயே அவருக்கும் காதல் வலி இருந்திருக்கலாம்... ஆனால் ஒரு பேச்சு சம்பந்தமான நிகழ்ச்சியில் தன்னிலையை பேசி விளக்க முடியாத ஒருவர் ஏளனம் செய்யப்படுவது ஒன்றும் தவறில்லை...

    பதிலளிநீக்கு
  13. Boss.. please visit SAVUKKU.NET to understand the whole issue. this judge is dirty , to hide his ugly sides , he is trying to create issues like this..

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.