என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

செவ்வாய், நவம்பர் 29, 2011

18 நாய் நக்கிய இலை.......


ஹோட்டல் ஒன்றில் நானும் என் நண்பர் ஒருவரும் சாப்பிட்டுக்கொண்டிருந்தோம். இலையில் கொஞ்சம் சாப்பாட்டை மிச்சம் வைத்துவிட்டு எழுந்துவிட்டார் அந்த நண்பர்.

ஏன் சாப்பாட்டை மிச்சம் வைத்துவிட்டீர்...பிடிக்கலியா? என்றேன் நான்

இல்லை. இப்போது நாம் சாப்பிட்ட எச்சில் இலையை பக்கத்தில் இருக்கும் குப்பைத்தொட்டியில் போடுவர்கள் இல்லையா....அப்போது மிச்சமிருக்கும் சாப்பாட்டை ஏதாவது ஒரு நாய் சாப்பிடவரும்.....என்றார் நண்பர்.

ஓ.... நாயிக்கு கொஞ்சம் சாப்பாடு கிடைக்கட்டுமேன்னு  நல்ல எண்ணத்தில் மிச்சம் வச்சிட்டீங்க....அப்படித்தானே? என்று கேட்டேன் நான்

அதுதான் இல்லை. அப்படி நாய் சாப்பிட வரும்போது நாம் கொஞ்சம் கூட மிச்சம் வைக்காமல் சாப்பிட்டு விட்டு இலையை சுத்தமாக வைத்திருந்தால் நாய் என்ன நினைக்கும்ன்னு தெரியுமா? என்று கேட்டார்.

என்ன நினைக்கும்? என்றேன் புரியாமல்....

இதுக்கு முன்னாடி இந்த இலையை எந்த நாய் நக்குச்சோன்னு நினைக்குமாம்....இதுக்கு முன்னாடி நம்ம தான அந்த இலையில் சாப்பிட்டோம்...எதுக்கு நாயிட்ட நாம நாயின்னு பேரு வாங்கனும்? அதான் கொஞ்சம் மிச்சம் வச்சுட்டேன் என்றார் நகைச்சுவையாக....

அதுசரி என்றேன் சிரித்துக்கொண்டே....


Post Comment

இதையும் படிக்கலாமே:


18 கருத்துகள்:

  1. ரொம்பவும் மெனக் கேட்டு எழுதி உள்ளீர்கள்,

    பதிலளிநீக்கு
  2. தற்போது குப்பைத் தொட்டியில் நாய்களோடு போட்டியில் இருக்கிறார்கள் சில மனிதர்கள்...

    வருமையின் காரணமாக...

    பதிலளிநீக்கு
  3. அது சரி!நண்பர் ஒத்துக்கிறாரு!( நாயின்னு)

    பதிலளிநீக்கு
  4. நல்ல சொன்னார் உங்க நண்பர்

    பதிலளிநீக்கு
  5. உண்மை தான்.. எங்க கடைக்கும் வாங்கhttp://mydreamonhome.blogspot.com

    பதிலளிநீக்கு
  6. இதுக்கு முன்னாடி இந்த இலையை எந்த நாய் நக்குச்சோன்னு நினைக்குமாம்...//

    ஹா..ஹ....ஹ....ஹா..

    பதிலளிநீக்கு
  7. டைமிங் காமெடி அருமை..

    பதிலளிநீக்கு
  8. படித்த உடன் சிரிப்பு வருகிறது. நன்றி நண்பரே!நம்ம தளத்தில்:
    "மனிதனுக்கு மிகப் பெரிய தண்டனை எது?"

    பதிலளிநீக்கு
  9. ஒவ்வொரு முறை சாப்பிடும் பொழுதும் எனக்கு வைரமுத்துவின் வரிகள் மட்டுமே நினைவில் வரும்..
    அது
    வயிற்றில் மிச்சம் வை..
    இலையில் மிச்சம் வைக்காதே என்று..

    நகைச்சுவை நன்றாக இருந்தாலும், நான் நாயாகவே இருக்க ஆசை படுகிறேன்

    பதிலளிநீக்கு
  10. பெயரில்லா29 நவ., 2011, 6:06:00 PM

    இனி ஒவ்வொரு முறை ஹோட்டலில் சாப்டும் போதும் கண்டிப்பாக இது ஞாபகத்துக்கு வரும்

    பதிலளிநீக்கு
  11. நாய்கிட்டே கூட நாய்னு பெயர் வாங்கிடக்கூடாதேனுதானே நாய் மாதிரி உழைச்சு நாலு காசு நாம சம்பாதிக்க வேண்டியதிருக்கு....? நான் சொல்றதில கொஞ்சமாவது நாயம் இருக்குதுல்ல நண்பா..?

    பதிலளிநீக்கு
  12. உங்களோடு சாப்பிட வந்த நண்பரின் பெயர் நக்கீரன் ஜெயராமனா...???

    பதிலளிநீக்கு
  13. தாராளம்தான் போங்க...

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.