என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

சனி, மே 21, 2011

15 பாண்டிச்சேரி அரசும், அவசரப்பட்ட ஜெயலலிதாவும்.....


வாப்பா.....பார்த்து ரொம்ப நாளாச்சு...எப்படி இருக்கே?

எனக்கென்ன....நான் நல்லாத்தான் இருக்கேன்...கலைஞர் கிட்ட கேக்கவேண்டிய கேள்விய என்கிட்டே கேக்கறே?

ஞாபக படுத்திட்டேப்பா....கனிமொழிய கைது பண்ணிட்டாங்காமே....

ஆமாப்பா....சட்டம்  தன் கடமைய செஞ்சிருக்கு....நேத்து கனி உள்ளே போகும்போது கண்ணு கலங்குச்சாம்

அப்புறம்?

ராசாவோட மனைவிதான் ஆறுதல் சொல்லி அனுப்புனாங்களாம்.

அப்படியா? ....சரி கலைஞர் அறிக்கை ஏதும் விடலியா?

விட்டிருக்காரு...செய்யாத குற்றத்திற்கு தண்டனையாம்...

அடப்போப்பா...இவ்வளவு பெரிய தலைவரு மகளை தகுந்த ஆதாரம் இல்லாமலா கைது பண்ணிருப்பாங்க?...அவங்க ஒன்னும் மொழிப்போரில் கலந்துக்கு உள்ளே போகல...ஆமா...தேர்தல் தோல்வியபத்தி கலைஞர் இன்னும் ஒண்ணுமே சொல்லக்காணோம்?

ஏன் சொல்லலா? அதான் மக்கள் எனக்கு ஓய்வு கொடுத்துருக்காங்கன்னு சொன்னாரே....


ரெண்டு வரில சொன்னதுக்கு  பேரு அறிக்கையா? நிஜமாகவே மக்கள் அவருக்கு ஓய்வு கொடுத்துட்டாங்களா?

அவரு முதலமைச்சரா இருக்கறதிலிருந்து தான் ஓய்வு கொடுத்திருக்காங்க..ஆனா...திருவாரூர் மக்களுக்கு உழைக்க அவர அந்த ஊரு மக்கள் எம்.எல்.ஏ. ஆக்கிருக்காங்க...இன்னொரு விஷயம் தெரியுமா? கலைஞர் இதுவரை போட்டியிட்ட எல்லா தேர்தல்லையும் ஜெயிச்ச  வாக்கு வித்தியாசத்தை விட திருவாரூரில் ஜெயிச்சதுதான் அதிக வாக்கு வித்தியாசமாம்.

அப்படியா சொந்த ஊராச்சே அதான் ...கலைஞர் சட்டசபைக்கு போவாரா?

பார்க்கலாம்.தன்னை நம்பி வாக்களித்த தன் ஊர் மக்களுக்காக சட்டசபைக்கு போகிறாரா? அல்லது ராஜினாமா செஞ்சுட்டு போறாரான்னு?

ராஜினாமான்னதும் ஞாபகம் வருது....கனிமொழி கைத காரணம் காட்டி மத்தியிலேர்ந்து தி.மு.க.விலகிடுமே?
 
அதெல்லாம் கிடையாது. கூட்டணி தொடரும்ன்னு சொல்லிருக்காரே...கூட்டணி உடைய இது பாண்டிச்சேரின்னு நினைச்சுகிட்டியோ?



நானே கேக்கணும்ன்னு நினைச்சேன்....பதவிக்கு வந்த ரெண்டே நாள்ல அண்ணா.தி.முக.-ரெங்கசாமி காங்கிரஸ் கூட்டணி பிச்சிக்கிச்சு போல...

அட...ஆமாப்பா...ரங்கசாமி ஆட்சியமைக்கும்போது ஜெயலலிதாவுக்கு பங்கு கொடுக்கலியாம்...

இங்கே மட்டும் ஜெயலலிதா விஜயகாந்துக்கு கொடுத்தாங்களா என்ன?

அப்படியில்லை. இங்கே தனிப்பெரும் மெஜாரிட்டி...அங்கே மெஜாரிட்டி இடம் மட்டும்தான்  ஒரு இடம் கூட அதிகமில்லை.

அதான் ரங்கசாமி முதுகுல குத்திட்டாருன்னு அன்பழகன் சொல்லிருக்கரோ?....

தெளிவாசொல்லுப்பா...அன்பழகன்னதும் பேராசிரியர்ன்னு நினைச்சுக்க போறாங்க....

பாவம் நான் என்பா அவர சொல்லப்போறேன்...அவரே நொந்து போயி இருப்பாரு....நான் சொல்லற அன்பழகன் பாண்டிச்சேரி அண்ணா .தி.மு.க அமைப்பாளர்.

ஆமாப்பா....ரங்கசாமி நல்லவர்,நேர்மையானவர், கடவுள் பக்தி உள்ளவர்ன்னு நினைச்சேன்.அவரு இப்படி முதுகுல குத்துவாருன்னு நினைக்கல...இந்த ஆட்சி ரொம்பநாளைக்கு நீடிக்காதுன்னு சொல்லிருக்காருப்பா....

அரசியல்ல முதுகுல குத்தறதும், காலை வாருவதும் சகஜம் தானே....என்னவோ ஜெயலலிதா மட்டும்தான் முதுகில் குத்தறதுக்கு காப்பி ரைட் வாங்கிருக்க மாதிரி நினைச்சுக்கிட்டாங்க போல...

சரி விடு..இந்த விஷயத்துல ஜெயலலிதா கொஞ்சம் அவசரப்பட்டுட்டாங்களோன்னு தோணுது

எப்படி சொல்றே?.....

இப்ப ரெங்கசாமி மட்டும் பதினஞ்சு சீட்ல ஜெயிச்சுருக்காரு....மெஜாரிட்டிக்கு ஒரு இடம் தேவைன்னதும் தி.மு.க.அதிருப்தியில் சுயேச்சை  வேட்பாளர நின்னு ஜெயிச்ச சிவக்குமார் தனது ஆதரவையும் கொடுத்து மெஜாரிட்டி ஆக்கிட்டாரு...

அதான் மெஜாரிட்டி ஆகிடுச்சே? அப்புறம் என்ன சிக்கல்?

இருக்கே....ரெங்கசாமி ரெண்டு இடத்துல நின்னு ஜெயிச்சதால அப்படியே நீடிக்க முடியாது. எப்படியும் ஒரு இடத்த ராஜினாமா செய்யணும்...அப்ப மெஜாரிட்டிக்கு ஒரு இடம் குறைஞ்சிடும். இடைத்தேர்தல் நடத்த எப்பயும் மூணு மாசமாவது ஆகும். அந்த மூணு மாச  கேப்ல அண்ணா.தி.மு.க. ஆதரவு தேவைப்படும் ரெங்கசாமிக்கு...இதுதான் சமயம்ன்னு அப்போ ஆட்சியில பங்கு கேட்டிருக்கலாம் ஜெயலலிதா...

அப்படின்னா...ரங்கசாமிக்கு மெஜாரிட்டி கிடைக்க கூடாதுன்னு இடைத்தேர்தல்ல உள்ளடி வேலை பார்த்து அவரு வேட்பாளரை தோற்கடிக்க செஞ்சாலும் செய்யலாம்ன்னு சொல்லு....

நிச்சயமா....

ஆனா...நாமே இவ்வளவு தூரம் யோசிக்கையில...ரங்கசாமி யோசிக்க மாட்டாரா  என்ன? எப்படியும் குதிரை பேரம் நடக்கும்.ஏதாவது ரெண்டு எம்.எல்.ஏ.வை விலைக்கு வாங்கினாலும் வாங்கலாம்.

அதுதான் அங்கே நடக்கப்போகுது. தி.மு.க-வே கூட ஆதரிச்சாலும் ஆதரிக்கலாம்...

எப்படிப்பா காங்கிரஸ் கூட்டணியில இருந்துக்கு இப்படி பண்ணுவாங்க...

காங்கிரஸ் மேல இருக்க அதிருப்திய காட்ட செஞ்சாலும் செய்யலாம்....அரசியலில்தான் ஏதும் நடக்குமே....சரிப்பா நான் வர்றேன் நேரமாச்சு....இன்னொரு நாளைக்கு பார்ப்போம்.

படிக்காமல் தவற விட்டவர்களுக்காக....என் முந்தைய பதிவு 


Post Comment

இதையும் படிக்கலாமே:


15 கருத்துகள்:

  1. நெட் ரொம்ப ஸ்லோவா இருக்கு நண்பா...

    பதிலளிநீக்கு
  2. உலகம் உருண்டையானது! கலங்கள் மாறும்! எல்லோருக்கும் எப்போதும் எல்லாமும் சாதகமாய் இருக்காது!! இதுவே உண்மை!

    பதிலளிநீக்கு
  3. பதிவர்கள் முன்னேற்ற கழகம் ஒன்னு ஆரம்பிக்கிறோம் ...தலைமை பொறுப்பு உங்களுக்கு தான் மற்ற நிர்வாகிகள் செயற்குழு கூடி முடிவு செய்யும் .... என்ன ஓகே வா அண்ணன்

    பதிலளிநீக்கு
  4. நண்பா கஸ்ஸாலி , அரசியல்வாதிங்க ஒருமாசத்துக்கு அரசியல் பண்ணலேன்னு வைய்யிபதிவுக்கு என்னாப பண்ணுவே ?

    5th vote yennodathu!!

    பதிலளிநீக்கு
  5. ஷர்புதீன் said... நண்பா கஸ்ஸாலி , அரசியல்வாதிங்க ஒருமாசத்துக்கு அரசியல் பண்ணலேன்னு வைய்யி பதிவுக்கு என்னாப பண்ணுவே ?
    எதுக்கு அவங்க ஒரு மாசம் அரசியல் பண்ணலேன்னு ஆராய்ச்சி பண்ணியே ஒரு மாசம் பதிவு போட்டுடுவேன்

    பதிலளிநீக்கு
  6. ம்ம்ம்.... நடக்கட்டும் நல்லவைகளாக...

    ம்...சொல்ல மறந்திட்டேன்... தமிழ்மணம் ஏழாவது ஓட்டு நான் தான் ஹி..ஹி...

    பதிலளிநீக்கு
  7. செம்மொழியான தமிழ்மொழியாம்


    கம்பிக்கு பின்னாடி கனிமொழியாம்
    =+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+
    ஒரு காந்தியவாதியின் வேண்டுகோள்
    http://speedsays.blogspot.com/2011/05/gandhi-request.html

    பதிலளிநீக்கு
  8. நிகழ்கால நடப்புகளை நச்சென சொல்லும்
    அட்டகாசமான அரசியல் பதிவுகள்
    வாழ்த்துக்கள் நண்பரே

    பதிலளிநீக்கு
  9. ஆசை யாரை விட்டுச்சு, செஞ்ச பாவம் யாரையும் சும்மா விடாதுன்னு தெரிஞ்சும் எல்லாம் பண்றாங்க.

    பதிலளிநீக்கு
  10. ம்ம் பதிவு ரொம்ப கலக்கலான விவாதமாக எழுதியிருக்கீங்க.. தல... டீக்கடை பெஞ்சு, டவுட் தனபாலு படிச்சாப் போல இருக்கு தல... உங்க பதிவ படிச்சதும்..!!

    பதிலளிநீக்கு
  11. அரசியல் பதிவு சூப்பர்.

    பதிலளிநீக்கு
  12. ஆஹா..பாண்டிச்சேரி அரசியல்லயும் கலக்குறீங்களே..

    பதிலளிநீக்கு
  13. ஒரு பத்திரிக்கையின் அரசியல் பிரிவு நிருபருக்கு இருக்க வேண்டிய எல்லா தகுதிகளும் உனக்கு இருக்கு... எந்த பத்திரிக்கை காரணாவது உன் ப்ளாக் பார்த்தா உடனே நீ பத்திரிகை நிருபர் தான்... மாதவா என்னமோ போடா...

    பதிலளிநீக்கு
  14. சகோதரர் கஸாலி,

    அஸ்ஸலாமு அலைக்கும்,

    புதுவை அரசியலை பொருத்தவரை ரங்கசாமிக்கு அதிக மரியாதை உண்டு. மக்களிடம் அவருக்கு இருந்த நல்ல பெயர் தான் இன்று அவரை ஆட்சியில் உட்கார வைத்துள்ளது.

    அதிகம் பேச கூச்சப்படுபவர் என்று எங்களால் அறியப்பட்ட அவர் தன் கட்சியின் முதல் மாநாட்டில் பேசினார் பாருங்கள் ஒரு பேச்சை. தொடர்ந்து மூணு மணி நேரம். "ரங்கசாமி பேச மாட்டான் அப்படினுன்னு சொல்றாங்க. இன்னைக்கு பூர பேசச்சொன்னாலும் பேசுவேன்" என்று அந்த மேடையில் கூறினார் பாருங்கள். அன்று அவர் பேசிய உரை தொடர்ந்து புதுவையின் கேபிள் சானல்களில் (புதுவையில் லோக்கல் கேபிள் சானல்கள் மட்டுமே சுமார் முப்பது வரை இருக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா??) ஒளிபரப்பபட்டது. இது மக்களிடையே பெரிய மாற்றத்தை உண்டாக்கி இருக்கவேண்டும்.

    இப்போது அ.தி.மு.கவை அவர் விலக்கியதை கூட ராஜதந்திரமாகவே பார்க்கின்றன இங்குள்ள பத்திரிக்கைகள். எதற்காக அவர்களை அமைச்சரவையில் சேர்க்கவில்லை? அவருக்கே வெளிச்சம்.

    தமிழகத்தில், கூடிய விரைவில் அ.தி.மு.கவுடன் காங்கிரஸ் கூட்டணி அமையலாம் என்று அவர் நினைத்திருக்கலாம். அப்படி நடந்தால் தன் ஆட்சிக்கு பங்கம் வரலாம் என்று கணக்கு போட்டிருக்கலாம். எனினும் அவராக சொல்லாதவரை எதுவும் அனுமானமாகவே இருக்க போகின்றது.

    நன்றி,

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இறைவன் மகிழ்ச்சியையும், மனஅமைதியையும் அருளவேண்டுமேன்று பிரார்த்திக்கும்

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹமத் அ

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.