என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

சனி, மே 28, 2011

18 இன்னைக்கு நமக்கு நேரமே சரியில்ல....


"சரி நான் கிளம்புறேன் வீட்டை பூட்டிக்கு பத்திரமா இரு" என்று தன் மனைவியிடம் சொல்லிவிட்டு வீட்டைவிட்டு புறப்பட்ட அரவிந்தனின் எதிரில் வந்தான் அவன் எதிர்வீட்டு மாணிக்கம்.

"என்ன அரவிந்து வெளில கிளம்பிட்ட போல"

 "ஆமாப்பா"....

"எங்கே கிளம்பிட்டே?"

"போச்சுடா போகும்போதே எங்கே போறேன்னு கேட்டியல்ல இன்னைக்கு விளங்குனமாதிரிதான்"

"அட போப்பா...கோடி ரூபாய்க்கு வியாபாரம் பண்ண போறியாக்கும்.வெட்டியா எங்கேயாவது போயிட்டு வருவே"

"நான் எங்கே போனா உனக்கென்னப்பா?  உன் வேலைய பாத்துட்டு போவியா" என்றவாறு வீட்டை நோக்கி திரும்பி நடந்தான்.

"என்னங்க..என்னாச்சு? போன வேகத்துல வந்துட்டீங்க"....

"ஆமா ...இன்னைக்கு உருப்பட்ட மாதிரிதான் .போகும்போதே அந்த சனியன் புடிச்ச மாணிக்கம் பய எங்கே போறேன்னு கேட்குறான்...அதான் திரும்பி வந்துட்டேன்". 

"அட போங்க...இதையெல்லாம்  நம்பிகிட்டு....கிளம்புங்க"...

"இருடி.... கொஞ்சம் தண்ணி கொண்டா குடிச்சிட்டு போறேன்".

தண்ணீரை குடித்து விட்டு கிளம்பினான்.இந்த முறை யாரும் கேட்டுவிடக்கூடாதுன்னு வேகமாக போய் நின்று கொண்டிருந்த பஸ்ஸில் ஏறினான்.

'சே....ராத்திரி கரண்டு போயிட்டு போயிட்டு வந்ததால ஒழுங்காவே தூங்கலைன்னு' நினைச்சுக்கு கண்மூடிய அரவிந்தனை கண்டக்டரின் குரல் எழுப்பியது...

"சார் எங்கே போறீங்க?" 






Post Comment

இதையும் படிக்கலாமே:


18 கருத்துகள்:

  1. ஓ! இங்கயும் நேரம் சரியில்ல, பஸ்ஸா? :-)

    பதிலளிநீக்கு
  2. எங்கே போறீங்க ன்னு கேக்குறதுல அப்படி என்னதான் தப்போ தெரியல .யாராவது கொஞ்சம் ஆராய்ச்சி பண்ணி சொல்லுங்களேன் .....

    பதிலளிநீக்கு
  3. நல்ல ரசனியான பதிவு நண்பரே

    பதிலளிநீக்கு
  4. எந்த மடையன் உனக்கு உடனே லாப் டாபை சரி பண்ணி கொடுத்தது., கொஞ்ச நாள்தான் எங்களக்கு நிம்மதியா?ஹி ஹி வா மாப்பிள்ளை, கலக்கு!

    பதிலளிநீக்கு
  5. ஜனங்க விடாம விரட்ராங்க போல...

    ஆமா எங்கதான் போனிங்க...

    பதிலளிநீக்கு
  6. பெயரில்லா28 மே, 2011, 7:10:00 PM

    அருமை

    பதிலளிநீக்கு
  7. "சார் எங்கே போறீங்க?"
    அருமை....

    பதிலளிநீக்கு
  8. குமுதம் ஒருபக்க கதைகள் மாதிரி அருமையா இருக்கு...

    பதிலளிநீக்கு
  9. கதை நன்றாக இருந்தது. முடிவு என்ன? நன்றி.

    பதிலளிநீக்கு
  10. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  11. yaarum romba bayamuruthittaangalaa....?konja naalaa aalaye kaanoom....?அரசியல் காட்டம் ஜாஸ்தி ஆயிருச்சோ..?

    பதிலளிநீக்கு
  12. நீங்க கிளம்பின இடத்துக்கு போனீங்களா, இல்லியா?

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.