என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

செவ்வாய், மே 17, 2011

26 ஜெயலலிதா முதல்வராகி விட்டார்.....இனி இப்படியெல்லாம் நடக்கலாம்?.........


ஜெயலலிதா நேற்று முதல்வராக பதவி எற்றுவிட்டார். இனி தமிழ்நாட்டில் என்னன்ன நடக்கும் என்று நம் கற்பனை குதிரையை தட்டிவிட்டதிலிருந்து....

கோடைகால தலைநகர், குளிர்கால தலைநகர் என்று இரண்டு தலைநகர் வைத்திருக்கும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை போல...இங்கும்
குளிர்கால சட்டசபை கூட்டத்தொடர் சென்னையிலும், கோடைகால சட்டசபை கூட்ட தொடர் கொடநாட்டிலும் நடக்கலாம்...

இனி திரையுலகமே திரண்டு...தங்க தாரகைக்கு பாராட்டு விழா, தைரிய லட்சுமிக்கு பாராட்டு விழா என்று மாதந்தோறும் பாராட்டுவிழா நடத்தி ஜெயலலிதாவை குளிர்விக்கலாம்.


சன்பிக்சர் போல ஜெயா பிக்சர் ஆரம்பித்து...புதிய படங்களை தயாரித்து வெளியிடலாம்....


சன் பிக்சர், ரெட் ஜெயன்ட், க்ளவுட் நைன் போன்ற கலைஞர் குடும்பத்து தயாரிப்பாளர்கள் படங்களை  வெளியிட தியேட்டர் கிடைக்காமல் அனைத்து தியேட்டர்களையும் சசிகலா குடும்பத்தினர் ஆக்கிரமிக்கலாம்.


தி.மு.க., முக்கிய நிர்வாகிகளை அண்ணா தி.மு.க. பக்கம் இழுத்து பழிக்கு பழிவாங்கி தி.மு.க-விற்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கலாம்.


ஈழத்தமிழர்களையும், விடுதலை புலிகளையும் ஆதரிக்கும் தலைவர்களை புழலில் தள்ள புதிதாக சட்டம் இயற்றப்படலாம்.



அண்ணா.தி.மு.க. விற்கு எதிராக எழுதும் பத்திரிகையாளர்களும் , பதிவர்களும்  ஆட்டோ மூலம் மன்னிக்கவும் டாட்டா சுமோ, ஸ்கார்பியோ கார்மூலம் போயஸ் கார்டன் இழுத்து செல்லப்பட்டு    உதை வாங்கப்படலாம் . .


**************************************************************** 

படிக்காமல் தவற விட்டவர்களுக்காக....என் முந்தைய பதிவு 




Post Comment

இதையும் படிக்கலாமே:


26 கருத்துகள்:

  1. ஸ்கார்பியோ வந்து கிட்டு இருக்கு வான் வழியாக -

    பதிலளிநீக்கு
  2. உன்னை மொத்த ஆட்களையும் அனுப்பலாம்

    பதிலளிநீக்கு
  3. என்னங்க ரெண்டு மைனஸ் ஓட்டு ,யாராக இருக்கும் ?ஒரு வேளை ஜெயலலிதா மற்றும் சசிகலாவாக இருப்பார்களோ

    பதிலளிநீக்கு
  4. தற்போது இது போன்று நடக்காது என்று நம்புவோம்...

    பதிலளிநீக்கு
  5. வலைச்சரத்தில் இன்று..

    மாற்றான் தோட்டத்தில் மனம் வீசும் மலர்கள்...

    http://blogintamil.blogspot.com/2011/05/blog-post_17.html

    பதிலளிநீக்கு
  6. பார்க்கலாம்


    =+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+
    சார்லி சாப்ளின் “The Kid”

    http://speedsays.blogspot.com/2011/05/charlie-chaplin-kid.html

    பதிலளிநீக்கு
  7. முதல்ல உங்களுக்கு தான் ஸ்கார்பியோ வருமுன்னு நினைக்கிறேன்...

    பதிலளிநீக்கு
  8. ஏதும் சொல்ல முடியல ஹிஹி!

    பதிலளிநீக்கு
  9. illai ....tharpothu j yidam muthirchchi therikirathu ....... pathavi yerppu vilaavil kooda yaarum , pathavi yetra yentha amaichcharamu j kaalil vilavillai ....... kavaniththeerkalaa ?

    பதிலளிநீக்கு
  10. இதெல்லாம் நடக்க சான்ஸ் இல்லை..

    பதிலளிநீக்கு
  11. //# கவிதை வீதி # சௌந்தர் said... 6

    தற்போது இது போன்று நடக்காது என்று நம்புவோம்...//
    இதை நான் வழி மொழிகிறேன்!

    பதிலளிநீக்கு
  12. பெயரில்லா17 மே, 2011, 1:08:00 PM

    ///இனி திரையுலகமே திரண்டு...தங்க தாரகைக்கு பாராட்டு விழா, தைரிய லட்சுமிக்கு பாராட்டு விழா என்று மாதந்தோறும் பாராட்டுவிழா நடத்தி ஜெயலலிதாவை குளிர்விக்கலாம்./// ஹஹஅஹா நடந்தாலும் நடக்கும்...)

    பதிலளிநீக்கு
  13. நீங்க யோசிச்சதேல்லாம் ஜுஜூபி....இன்னும் நிறைய எதிர்பாராதது நடக்கும்.

    பதிலளிநீக்கு
  14. பெயரில்லா17 மே, 2011, 3:01:00 PM

    எத்தனை 'லாம்' கஸாலி. ஒரு சில 'க்கும்' சேர்த்து எழுதி இருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  15. அதானே... பின்னே... கருணாநிதி செய்த 'சாதனைகளை' முறியடிக்காவிட்டால் அப்புறம் ஜெ. யின் கெளரவம் என்னாவது..?

    பதிலளிநீக்கு
  16. அம்மா ரௌடிகளை(மு க அழகிரி) ஒளிச்சி ஒழி விளக்கு எற்றுவாங்கன்னு நம்புவோம் :)

    பதிலளிநீக்கு
  17. அப்போ சிறுதாவூர்?

    ஆறு மாதத்துக்கு ஒரு முறை அமைச்சர்கள் மாற்றப்பட்டு, குறைந்தது 120 ௦ எம்எல்ஏக்கள் அமைச்சர் பதவி பெறலாம்

    சிலர் மீது கஞ்சா வழக்குகள் பதிவாகலாம்

    அம்மா காப்பீட்டு திட்டம் அல்லது ஜெ ஜெ மல்டி ஸ்பெசாலிட்டி இலவச ஆஸ்பிட்டல் வரலாம்

    சசிகலா கேபிள் டிவி அல்லச ஜெயா டிஷ் டைரக்ட் வரலாம்

    உச்சபட்டமாக , அண்ணா அறிவாலயம் மாநகராட்சி நிலத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு தரைமட்டமாக இடிக்க படலாம்

    பதிலளிநீக்கு
  18. அம்மம்மா சரணம் சரணம் உன் பாதங்கள்.......

    பதிலளிநீக்கு
  19. இப்பவே கண்ணகட்டுதே

    பதிலளிநீக்கு
  20. இவை நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

    பதிலளிநீக்கு
  21. இவை நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

    பதிலளிநீக்கு
  22. இதில் எத்தனை முந்தைய ஜெ. ஆட்சியில் இருந்தது என்று நீங்கள் குறிப்பிடப் படவில்லை. இதில் கிட்டத்த் தட்ட எல்லாமே, கருணாநிதியால் அறிமுகப் படுத்தப் பட்ட அராஜகங்கள்.அம்மா இப்படியெல்லாம் செய்தாலும் அதற்க்கு வழி வகுத்தவர் மஞ்சள் துண்டு என்பதை மறுக்க முடியாது. அம்மா செய்ய மாட்டார் என நம்புவோமாக.

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.