என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

வெள்ளி, மே 06, 2011

19 அடேங்கப்பா...தமிழ்நாட்டில் இம்புட்டு கட்சிகளா இருந்துச்சு?


தமிழ்நாட்டில் கட்சிகளுக்கும்,தலைவர்களுக்கும் எப்போதுமே பஞ்சம் இருந்ததில்லை...பதவி கிடைத்தவர்கள்,கிடைக்காதவர்கள்., சீட் கிடைத்தவர்கள், கிடைக்காதவர்கள் என்று முணுக்கென்றால் ஒரு கட்சி ஆரம்பித்து விடுவார்கள். அப்படி ஆரம்பிக்கப்பட்ட  எத்தனையோ  கட்சிகள் லட்டர்பேட் கட்சிகளாக இருந்து கால ஓட்டத்தில் காணாமல் போய்விட்டதுதான் அதிகம்.சிலர் மீண்டும் தாய் கழகத்திலேயே இணைந்து விட்டார்கள்.  அப்படிப்பட்ட சில  பெரிய கட்சிகளையும், சிறிய கட்சிகளையும் காணாமல் போன கட்சிகளையும், இப்போதும் லட்டர்பேட் கட்சிகளாகவும் இயங்கி வந்த/ வருகின்ற கட்சிகளை பார்ப்போம்.

முதலில் காங்கிரஸ் 

ராஜாஜி- சுதந்திரா கட்சி
காமராஜர்- ஸ்தாபன காங்கிரஸ்
நடிகர் சிவாஜி- தமிழக முன்னேற்ற முன்னணி
மூப்பனார்- தமிழ் மாநில காங்கிரஸ்(இதிலிருந்து விலகி ப.சிதம்பரம்- ஜனநாயக பேரவையை ஆரம்பித்தார்).
குமரி அனந்தன்- காந்தி காமராஜர் தேசிய காங்கிரஸ்
பழ.நெடுமாறன்- தமிழ்நாடு காமராஜ் காங்கிரஸ்
வாழப்பாடியார்- தமிழ்நாடு ராஜீவ் காங்கிரஸ்

தி.மு.க அண்ணா காலத்தில்...

ஈ.வி.கே.சம்பத்- தமிழ் தேசிய கட்சி

கலைஞர் காலத்தில்....

எம்.ஜி.ஆர்- அண்ணா.தி.மு.க
நாவலர் நெடுஞ்செழியன்- மக்கள் தி.மு.க.
வைகோ- மறுமலர்ச்சி தி.மு.க.
டி.ராஜேந்தர்- தாயக மறுமலர்ச்சி கழகம் பின்னர் இப்போது லட்சிய தி.மு.க

அண்ணா.தி.மு.க., ....எம்.ஜி.ஆர் காலத்தில்.....

எஸ்.டி.சோமசுந்தரம்- நமது கழகம்
நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன்- எம்.ஜி.ஆர்-எஸ்.எஸ்.ஆர்-புரட்சி கழகம்

எம்.ஜி.ஆர்..மறைவுக்கு பின்...

ஜானகி அம்மாள்-அண்ணா.தி.மு.க-ஜானகி அணி
ஜெயலலிதா- அண்ணா.தி.மு.க-ஜெயலலிதா அணி.

பின்னர் இரு அணிகளும் ஒன்றிணைந்தது....அண்ணா.தி.மு.க பொதுச்செயலாளர் ஆனார் ஜெ.....அதன் பிறகு கொஞ்ச நாள் நாவலர், பண்ருட்டியார், எஸ்.டி.சோமசுந்தரம்  போன்றோர் நால்வர் அணி என்று ஆரம்பித்தார்கள்...இப்போதுதான் நாவலரை என் உடம்பிலிருந்து உதிர்ந்த ரோமம் என்று ஜெயலலிதா திட்டினார். பின்னர் அதே ரோமம் எஸ்.டி.எஸ்-சுடன் சேர்ந்து ஜெயலலிதாவோடு  ஒட்டிக்கொண்டது.
ஆனால்  பண்ருட்டியார்  பாட்டாளி மக்கள் கட்சியில் இணைந்து 1991- ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பண்ருட்டியில் போட்டியிட்டு வென்றார்...அந்த வகையில் பா.ம.க-வின் முதல் எம்.எல்.ஏ. பண்ரூட்டியார்தான். பின்னர் அந்த கட்சியிலிருந்து விலகிய  பண்ரூட்டி ராமச்சந்திரன் தனியாக மக்கள் நல உரிமை கழகத்தை ஆரம்பித்து தாக்குப்பிடிக்க முடியாமல் அரசியலிலிருந்தும் ஒதுங்கிய பண்ருட்டியார் பின்னர் விஜயகாந்தின் கட்சியில் இணைந்தார். 

அண்ணா.தி.மு.க ஜெயலலிதா  காலத்தில்....

திருநாவுக்கரசு- அண்ணா.புரட்சித்தலைவர் தமிழக முன்னேற்ற கழகம், பிறகு எம்.ஜி.ஆர்.அண்ணா.தி.மு.க 

நடிகர் பாக்யராஜ்- எம்.ஜி.ஆர்.மக்கள் முன்னேற்ற  கழகம்
எஸ்.ராஜ கண்ணப்பன்- மக்கள் தமிழ் தேசம்
கு.ப.கிருஷ்ணன்- தமிழர் பூமி
ஆர்.எம்.வீரப்பன்- எம்.ஜி.ஆர் கழகம்

டிஸ்கி: எனக்கு தெரிந்த, படித்த, கேள்விப்பட்ட தகவல்களை தொகுத்து தந்திருக்கிறேன். இதில் ஏதாவது விடுபட்டிருந்தால் அல்லது தவறிருந்தால் பின்னூட்டத்தில் தெரியப்படுத்தவும். 

படிக்காமல் தவற விட்டவர்களுக்காக....என் முந்தைய பதிவு 



Post Comment

இதையும் படிக்கலாமே:


19 கருத்துகள்:

  1. [ma]ரைட்டு ..நல்ல ஆராய்ச்சி[/ma]

    பதிலளிநீக்கு
  2. சகோ, போகிற போக்கைப் பார்த்தால், தாங்கள் வருங் காலத்தில் அரசியலில் குதித்து விடுவீர்கள் போல இருக்கே..

    ஹா...ஹா...


    தகவல் தொகுப்பிற்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா6 மே, 2011, 11:10:00 AM

    இன்னும் நிறைய இருக்கு..இதுவே பல பேருக்கு தெரியாது

    பதிலளிநீக்கு
  4. அண்ணனோட அ.பெ.கா.ரா.நே.ஆ.தி.மு.மு.ம.ம.க.வை மறந்துட்டீங்களே!

    பதிலளிநீக்கு
  5. மழைக்கு முளைக்கும் காளான்கள் போலல்லவா இருக்கிறது!!

    பதிலளிநீக்கு
  6. பெயரில்லா6 மே, 2011, 11:27:00 AM

    இன்னொரு கட்சி வரப்போகுதாமுல்ல....க.எ.மு.க. (கஸாலி எசகுபிசகு முன்னேற்ற கழகம்!)

    பதிலளிநீக்கு
  7. இது கொஞ்சம் பிரபலமான கட்சிகள். இன்னும் நிறைய இருக்கின்றன.

    பதிலளிநீக்கு
  8. ஸ் ஸ் ஸ் அபா கண்ணா கட்டுதுரா சாமி!

    பதிலளிநீக்கு
  9. நம் நாட்டில் பலதார பட்ட ஜாதி ஜாதி கட்சிகளை விட்டு விட்டிர்களே அண்ணா

    பதிலளிநீக்கு
  10. நல்ல பதிவு. அரசியல் தகவல்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  11. அடேங்கப்பா இத்தன கட்சியா

    ஆன யாரும் உருப்படிய ஏதும் செய்யல

    ================================
    நாமே ராஜா, நமக்கே விருது-6


    http://speedsays.blogspot.com/2011/05/6.html

    பதிலளிநீக்கு
  12. அப்புறம் ஜாதி/மதக்கட்சிகள் லிஸ்ட்டைப் போட்டீங்கன்னா..ஒரு தொடரே எழுதலாம்.

    பதிலளிநீக்கு
  13. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  14. அருமையான வரலாற்றுப் பதிவு. நீதிக் கட்சி, திராவிடர் கழகம் என்கின்ற மூத்த இயக்கங்களை இணைத்துக்கொள்ளுங்கள். சாதி ரீதியாகவும், மத ரீதியாகவும் உள்ள கட்சிகளான பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகள், புரட்சி பாரதம், மனித நேய மக்கள் கட்சி.... உள்ளிட்ட தற்காலிக கட்சிகளையும் இணைத்திருந்தால் முழுமை அடைந்திருக்கும். இருப்பினும் தங்களின் தகவல் திரட்டு மிகவும் பாராட்டிற்குரியது.

    பதிலளிநீக்கு
  15. தகவல் களஞ்சியமான பதிவு.

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.