என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

திங்கள், மே 16, 2011

45 முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதாவிற்கு ஒரு பகிரங்க கடிதம்....



மாண்புமிகு தமிழக முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதாவிற்கு.....,

தேர்தலின் போது மட்டுமே உங்களைப்போன்ற அரசியல்வாதிகளுக்கு மகேசனாக தெரியும் ஒரு சாதாரண வாக்காளன் எழுதிக்கொள்வது,
நீங்கள் நலமாக இருப்பீர்கள், ஆனால், நாங்கள் நலமாக இல்லை....மூன்றாவது முறையாக முதல்வரானதிற்கு வாழ்த்துக்கள். தனிப்பெரும் மெஜாரிட்டியுடன் அசுர பலத்துடன் மீண்டும் இவ்வளவு பெரிய வெற்றியடைந்ததற்கு உங்களின் ராஜதந்திரமோ, கூட்டணி பலமோ, களப்பணியோ காரணமில்லை, முந்தைய ஆட்சியாளர்களின் இமாலய தவறுதான் என்று நீங்களும் உணர்ந்தே இருப்பீர்கள்.

ஒரு கட்சி இப்படி அசுர பலத்துடன் ஆட்சிக்கு வருவது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல....

இடிப்பார் இல்லா ஏமரா மன்னன்
கெடுப்பார் இல்லாமல் கெடும்.

என்பது  வள்ளுவரின் குறள்.

இடித்து சொல்லவும், எடுத்துசொல்லவும் வாய்ப்பே இல்லாமல் உங்கள் கூட்டணி கட்சியே எதிர்கட்சியாகவும் மாறிவிட்டது.
(தொடர்ந்து விஜயகாந்த் உங்கள கூட்டணியில் இருப்பாராவென்று சந்தேகமே...கூட்டணியிலிருந்து உங்களால் விரட்டப்படலாம், அல்லது அவரே விலக நேரிடலாம் ஆனால் அதுவரை....உங்கள் தவறுகளை எடுத்து சொல்ல யார் இருக்கிறார்கள்?)

பரவாயில்லை, இதுதான் மக்களின் தீர்ப்பு என்னும் போது விமர்சிக்க யாரால் முடியும்? (ஆனால், தோற்கும் ஒவ்வொரு முறையும் மக்கள் தீர்ப்பை தலைவணங்கி ஏற்காமல் வாக்குப்பதிவு மிசினையும், தேர்தல் ஆணையத்தையும்  குறைசொல்லும் உங்கள் தைரியம் இங்கு யாருக்குமில்லை என்பதையும் இங்கு சொல்லித்தான் ஆகணும். நல்லவேளை உங்கள் கட்சி தோற்ற மற்ற இடங்களில் வாக்குப்பதிவு எந்திரத்தில் கோளாறு என்று சொல்லாமல் விட்டீர்களே....அந்த அளவுக்காவது சந்தோஷ பட்டுக்கொள்ள வேண்டியதுதான்).

பிடிக்காத அரசு  ஊழியர்களை, காவல்துறையினர்களை பழி வாங்குவது, பந்தாடுவது, பிடிக்காதவர்களை அடித்து உதைப்பது, கஞ்சா கேஸ் போடுவது, எஸ்மா, டெஸ்மா, போடா சட்டங்கள் மூலம் சிறைக்கு அனுப்புவது, மதமாற்ற தடை சட்டம் கொண்டுவருவது, கோவில்களில் ஆடு, மாடு, கோழி வெட்டக்கூடாது என்று தடைபோடுவது பத்திரிகைகளின் குரல்வளையை நெறிப்பது போன்ற  கடந்த கால தவறுகளை மீண்டும் செய்யாமல் ஒரு நல்லாட்சியை தாருங்கள். குறிப்பாக சசிகலா  வகையறாக்களை கட்சியிலும், ஆட்சியிலும் தலையிட விடாமல் தள்ளியே வையுங்கள். உங்களின் கடந்த கால ஆட்சியில் அவரால்தான் உங்களுக்கு கெட்டபெயர். கலைஞருக்கு அவரின் குடும்பம் என்றால் உங்களுக்கு சசியின் குடும்பம்.

கடந்த 1991-ஆம் ஆண்டு ஆட்சியில் சபாநாயகராக இருந்த சேடப்பட்டி முத்தையாவை சபாநாயகர் இருக்கையிலிருந்து எழ வைத்துவிட்டு அந்த இருக்கையில் சசிகலாவை அமர வைத்து உங்கள் நட்பின் தீவிரத்தை காட்டி, சட்டசபை மரபையே கேலிக்குரியதாக்கினீர்கள். இப்போதும் அப்படி செய்து விடாதீர்கள். சபாநாயகர் இருக்கையில் சபாநாயகரை மட்டும் அமர வையுங்கள்.

கலைஞரால் கட்டப்பட்டது என்ற ஒரே காரணத்திற்காக புதிய சட்டமன்ற கட்டிடம் பாண்டிச்சேரி போலீசின்  தொப்பி போல இருக்கிறது என்று கிண்டல் செய்து, இந்த சட்டசபை வளாகத்தில் காலடியே எடுத்து வைக்க மாட்டேன் என்று சபதமேற்று இப்போது முதல்வரானதும் பழைய கோட்டையிலேயே நுழைகிறீர்கள். அதற்கான மராமத்து  பணிக்காக எடுத்த எடுப்பிலேயே மக்களின் வரிப்பணத்தில் 50 கோடி ரூபாய்களை சிலவிடுகிறீர்கள்.

இப்படி செய்யும் நீங்கள்தான் கடந்தமுறை ஆட்சியில் இருந்தபோது ஜார்ஜ் கோட்டையில் இடவசதி போதவில்லை என்று புதிய சட்டமன்றம் கட்ட ராணி மேரி கல்லூரியை தேர்வு செய்து கடும் எதிர்ப்புக்கு மத்தியில் அதை கைவிட்டீர். இப்போது இதை விட வசதியாக இருக்கும் சட்டசபையை மறுத்துவிட்டு மீண்டும் கோட்டைக்கே திரும்பியிருக்கிறீர்கள். நீங்கள் மறுப்பதற்கு கலைஞர் கட்டிய கட்டிடம் என்ற காரணம் தானே தவிர வேறு என்ன இருக்க முடியும்?
யார் வெட்டிய கிணறாக இருந்தால் என்ன தண்ணீர் நன்றாக இருந்தால் பயன்படுத்திக்கொள்ள வேண்டியதுதானே?...

இதை மறுக்கும் நீங்கள்.....இன்று சென்னையில் பெருமளவு போக்குவரத்து நெரிசலை குறைக்க காரணமாக விளங்கும் மேம்பாலங்களில் அதிக மேம்பாலங்கள் கலைஞர் ஆட்சியில் கட்டப்பட்டதுதான்....அப்படி கலைஞரால்  கட்டப்பட்ட மேம்பாலங்கள் வழியில் நான் பயணிக்க மாட்டேன் என்று அவற்றையெல்லாம் இடித்து விட்டு புதிதாக கட்டுகிறேன் என்று மக்கள் வரிப்பணத்தை வீணடித்து விடாதீர்கள்.

அடுத்து, மத்திய அரசின் திட்டங்களாக இருந்தாலும்...தமிழ்நாட்டில் கலைஞரால் அறிமுகப்படுத்தப்பட்ட 108 ஆம்புலன்ஸ், வீட்டுவசதி திட்டம் போன்றவற்றை நீக்கி விடாதீர்கள். இன்று பெருமளவு உயிர் சேதத்தை தடுக்க 108 ஆம்புலன்ஸ் பெரிதும் காரணியாக விளங்குகிறது. குறிப்பாக கலைஞர் காப்பீடு திட்டம். ஏழைகளுக்கு எட்டாக்கனியாக இருந்த மருத்துவ வசதி இந்த திட்டத்தால் தான் கிடைத்திருக்கிறது. வேண்டுமானால் கலைஞர் காப்பீடு திட்டம் என்பதை உங்கள் ஆசான் எம்.ஜி.ஆர். காப்பீடு திட்டம் என்றோ, ஜெயலலிதா காப்பீடு திட்டம் என்றோ...இல்லாவிட்டால் உங்கள் தாயார் பேரில் சந்தியா காப்பீடு திட்டம் என்றோ பெயரை மாற்றி கொள்ளுங்கள். ஆனால் இந்த திட்டத்தை மட்டும் தயவு செய்து நீக்கிவிடாதீர்கள்.

அடுத்து, இலவசங்கள்....
மக்கள் விரும்புவது இலவசங்களை அல்ல....அப்படி இலவசம் தான் முக்கியமென்றால் அதையெல்லாம் கொடுத்த கலைஞரையே மீண்டும் தேர்வு செய்திருப்பார்கள். ஆனால், அவர்கள் உங்களை தேர்வு செய்திருக்கிறார்கள் என்றால் அதற்கு நீங்கள் கொடுப்பேன் என்று சொன்ன இலவசங்களால் அல்ல....தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் உங்களை விட கலைஞரே நம்பகத்தன்மை உள்ளவர் என்று எல்லோருக்கும் தெரியும். இருந்தாலும் உங்களை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்றால் அவர்கள் உங்களிடம் எதிர்பார்ப்பது வேறு ஒன்றைத்தான்...அதாவது மக்கள் விரும்புவது நல்ல வாழ்க்கை தரத்தைதான். மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்து விட்டால் அவர்களிடம் வாங்கும் சக்தி அதிகரித்து அவர்களின் தேவைகளை அவர்களே பூர்த்தி செய்து கொள்வார்கள். பின்னர் யாரிடமும் எதற்காகவும் இலவசங்களுக்காக கையேந்த மாட்டார்கள். அதற்காக அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கு திட்டம் தீட்டுங்கள்.

அடுத்து மின்சாரம்,
இன்று மின்தடையால் ஜெனரேட்டர், இன்வர்டர், UPS விற்பவர்களை தவிர மற்ற அனைவரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். சிறுதொழில், பெருந்தொழில் என்று பாரபட்சமில்லாமல் நீக்கமற அனைவரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தொழில் துறையே நலிந்து நசிந்து போய் விட்டது. மின்சாரம் தடையின்றி  கிடைக்க திட்டமிடுங்கள். இன்று இலவச மின்சாரங்கள் மூலம் பெருமளவு மின்சாரம் வீணடிக்கப்படுகிறது. இன்று இலவச மின்சார பயனாளிகளில் பலர் ஏக்கர் கணக்கில் சொத்து வைத்திருப்பவர்கள்தான். ஏழைகளுக்கு இலவச மின்சாரம் என்ற நோக்கமே அடிபட்டு விட்டது. ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல்  சொத்து வைத்திருப்பவர்களுக்கு இலவச மின்சாரம் ரத்து என்று அறிவித்து முறைபடுத்துங்கள். அதுபோல...ஆங்காங்கே கொக்கிகள் போட்டு மின்சாரம் திருடுபவர்களை பிடித்து கடுமையான தண்டனை தாருங்கள்.

அடுத்து....
மந்திரிகளை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருக்காதீர்கள்...அது உங்கள் உரிமை என்றாலும் கூட அப்படி செய்வது  நிர்வாக சிக்கலுக்கு வழிவகுக்கும். ஒருவரை  ஒரு குறிப்பிட்ட துறைக்கு மந்திரியாக நியமிக்கிறீர்கள் என்றால்..அவர் அந்த துறையை பற்றி தெரிந்து(புரிந்து) கொள்ளவே சிலகாலம் எடுக்கும். அப்படி அவர் அந்த துறையை பற்றி தெரிந்து கொண்டிருக்கும்போதே அவரை மாற்றிவிட்டு இன்னொருவரை, பின்னர் அவரை மாற்றிவிட்டு வேறொருவரை நியமிப்பதால் தமிழ்நாட்டிற்கு ஒரு பயனுமில்லை. இதனால்   உங்கள் கட்சி MLA-க்கள் அனைவரும் சுழற்சி முறையில் மந்திரியாகிவிடுவார்கள் என்பதை தவிர.....

இன்னும் நிறைய இருக்கிறது எழுத...ஆனால் வெளியில் ஆட்டோ வரும் சப்தம் கேட்பதால்  இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்.

இறுதியாக ஒன்று,
இந்த முறையாவது நீங்கள் நல்லாட்சி கொடுங்கள்....இல்லாவிட்டால் கலைஞரின் தவறுகள் மூலம் நோகாமல் நீங்கள் ஆட்சிக்கு வந்ததுபோல...அடுத்தமுறை தி.மு.க. வருவதற்கு உங்கள் தவறே காரணமாகிவிடும் என்று கூறி விடை பெறுகிறேன்.

இப்படிக்கு 
எதிர்பார்ப்புடன்...
வாக்காளன்



படிக்காமல் தவற விட்டவர்களுக்காக....என் முந்தைய பதிவு 


Post Comment

இதையும் படிக்கலாமே:


45 கருத்துகள்:

  1. அவசியமான கடிதம்தான்! ஆட்சி மாற்றத்துக்கு ஈழப்பிரச்சினையும் முக்கிய காரணம்தானே! அதை விட்டுவிட்டீர்களே!

    பதிலளிநீக்கு
  2. //யார் வெட்டிய கிணறாக இருந்தால் என்ன தண்ணீர் நன்றாக இருந்தால் பயன்படுத்திக்கொள்ள வேண்டியதுதானே?...//

    இதோட,,,, கஸ்ஸாலி சொல்லித்தான் கேட்கபோறாங்க பாரு., ( கஸ்ஸாலி இது உங்கள கிண்டல் பண்ணும் அர்த்தத்தில் சொல்லவில்லை, ஜெயா இதில் எல்லாம் ரொம்ப ஓவராத்தான் செய்வாங்க

    பதிலளிநீக்கு
  3. ஜெ...இந்த முறை தவறுகளை திருத்திக்கொள்ளுவார் என்று நம்புவோம் ...

    பதிலளிநீக்கு
  4. இதை அப்படியா அம்மாவுக்கு மனுவாக புதிய கோட்டைக்கு இல்ல பழைய கோட்டைக்கு அட இல்ல இல்ல இப்ப புதுசுதானே அந்த கோட்டைக்கு அனுப்புங்க

    பதிலளிநீக்கு
  5. //ஒரு கட்சி இப்படி அசுர பலத்துடன் ஆட்சிக்கு வருவது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல....//

    Last time people believed in this and gave a divided verdict but the opposition were made puppets and the dancing by the ruling party became ugly.

    So the Democracy has done its duty, so kindly refrain from using democracy as a word for expressing your opinion.

    Hope to see you after one year to comment on JJ's performance.

    If MK and his family do not repent atleast now then they are not fit to be Human beings also. May be they will get another chance to prove they are not human beings. Let us wait and see.

    பதிலளிநீக்கு
  6. பெயரில்லா16 மே, 2011, 11:03:00 AM

    ஜெ..வீட்டு வரவேற்பறையில் மாட்டி வைக்க வேண்டிய அருமையான கடிதம்

    பதிலளிநீக்கு
  7. பெயரில்லா16 மே, 2011, 11:04:00 AM

    ஈழத்தில் செத்து போன மக்களின் வயெத்தெரிச்சல்தான் ..இன்று ஜெ..முதல்வர் ஆகும்போது கலைஞருக்கு வந்திருக்கிறது ஹஹா

    பதிலளிநீக்கு
  8. பெயரில்லா16 மே, 2011, 11:04:00 AM

    குடும்ப ஆட்சியை ஒழித்து கட்டிய,ஓவரா ஆட்டம் போட்ட கூட்டத்தை ஒடுக்கி மடக்கி வைத்த தங்கதாரகை ஜெ..வாழ்க!

    பதிலளிநீக்கு
  9. பெயரில்லா16 மே, 2011, 11:05:00 AM

    தி.மு.க என்ன ஆட்டம் போட்டது..என்னமோ நிரந்தர முதல்வர் மாதிரி..தமிழக மக்கள் ஓட ஓட விரட்டி விட்டார்கள்

    பதிலளிநீக்கு
  10. பெயரில்லா16 மே, 2011, 11:06:00 AM

    ஒரு கட்சி இப்படி அசுர பலத்துடன் ஆட்சிக்கு வருவது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல.//
    ஆஹா அண்ணனுக்கு வயித்தாலை புடுங்குது டோய்!!

    பதிலளிநீக்கு
  11. சொல்றதைத்தான் செய்வாங்க..
    செய்வதைத்தான் சொல்வாங்க..

    மத்தவங்க யாரும் வாயை திறக்கக்கூடாது...

    பதிலளிநீக்கு
  12. என்னைப்பற்றி தெரிந்துக் கொள்ள
    வலைச்சரம் வாங்க....

    பூக்கடைக்கு ஒரு விளம்பரம்... (இது சம்திங்..சம்திங்..)

    http://blogintamil.blogspot.com/2011/05/blog-post_16.html

    பதிலளிநீக்கு
  13. பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கிறதென்று

    பதிலளிநீக்கு
  14. யார் சொல்லியும் கேட்கும் பழக்கம் அம்மாவின் அகராதியில் இல்லை

    பதிலளிநீக்கு
  15. தமிழ்மணம் ஓட்டு விழமாட்டேங்குது செக் இட்

    பதிலளிநீக்கு
  16. நல்ல கடிதம்.. ஆனால் நீங்கள் சொன்னதில் 1% கூட ஏற்றுக்கொள்ளப்படாது என்பதே கடந்த இரண்டு அம்மா ஆட்சியை பார்த்தவர்களின் கணிப்பு :)

    பதிலளிநீக்கு
  17. இப்படியே மாறி மாறி போய்கிட்டு இருந்தா என்னதான்யா முடிவு.? இதுக்கு ஒரு பினிஷிங் டச்சே வராதா.?

    இவிங்க வுட்டா அவிங்க, அவிங்க உட்டா இவிங்க.. வேற ஆளே இல்லையா.? என்னையெல்லாம் முதல்வராக்கமாட்டீங்களா.?

    பதிலளிநீக்கு
  18. இப்படிக்கு எதிர்பார்ப்புடன்...வாக்காளன் .......///////////////////ரொம்ப நல்ல வாக்காளனாக இருப்பீர்கள் போல ..

    பதிலளிநீக்கு
  19. கடிதத்திற்கு பதில் வந்தா கண்டிப்பா அதையும் போடுங்க.

    பதிலளிநீக்கு
  20. பெயரில்லா16 மே, 2011, 1:26:00 PM

    கூர்மதியன் !

    நீங்கள் கேட்டதற்கு இப்படி பதில் சொல்லலாம்.

    தேர்தலில் ஆளுங்கட்சி நிற்கக்கூடாது. மற்ற கட்சிகள்தான் நிற்க வேண்டும். மக்கள் அவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம்.

    ஆளுங்கட்சி அடுத்த தேர்தலில் நிற்கலாம். ஏனென்றால் அவர்கள்தான் அப்போது ஆளுங்கட்சியாக இல்லையே !

    இப்படி செய்யின், "அவங்களை விட்ட இவிங்க.. இவிங்களை விட்ட அவிங்க' என்று வராது. எல்லாக்கட்சிக்கும் ஒரு வாய்ப்பாகவாது கிடைக்கும் பணம் பண்ண .!!

    பதிலளிநீக்கு
  21. பெயரில்லா16 மே, 2011, 1:30:00 PM

    Or we can take this alternative.

    If a political party while it was in power did a lot of corruption; and many cases are filed in courts.

    That party can stand in elections only after all the cases are settled in courts

    No doubt, it can never stand because courts will taken many decades to finalise the cases.

    But this will make the parties to ensure that they are corruption free while they are in powers.

    If this formula is applied, both DMK and AIADMK cant come to power. Only people like VKanth will come. But he will do corrupt action and will face the same fate after his tenure.

    But it will all end in seeing only corruption free party in power.

    பதிலளிநீக்கு
  22. தமிழக முதல்வருக்கு தமிழக வாக்காளனுடைய நல்ல கடிதம். இதற்க்குள் இலங்கையை கொண்டுவருவது என்பது வெறும் போலி. அதை செய்யாததிற்காக எனது பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  23. அவசியமான கடிதம்தான்! ஆட்சி மாற்றத்துக்கு ஈழப்பிரச்சினையும் முக்கிய காரணம்தானே! அதை விட்டுவிட்டீர்களே!இந்த முறை தவறுகளை திருத்திக்கொள்ளுவார் என்று நம்புவோம் ...

    பதிலளிநீக்கு
  24. தலைவரே நானும் இதைதான் கொஞ்சம் சுருக்கமாக எழுதி இருக்கிறேன்..அது எப்படி?

    பதிலளிநீக்கு
  25. கடிதத்தில், தமிழக மக்கள் ஒவ்வொருவரினதும் உணர்வலைகளைப் பிரதிபலித்திருக்கிறீர்கள் சகோ. பத்திரிகைத் துறையினர் யாராவது இருந்தால், இக் கடிதத்தைத் தங்களின் பத்திரிகையில் பிரசுரித்து ஜெயலலிதாவின் கரங்களை எட்டச் செய்ய வேண்டும்.

    பதிலளிநீக்கு
  26. இன்னைக்கு தான் இந்த அம்மா முதல் அமைச்சர் ஆயிருக்கு அதுக்குள்ள பகிரங்க கடிதமா ?? கிளப்புங்க...இதை எல்லாம் மனசுல வச்சி ஆட்சி நடத்துனா சந்தோசம்...

    பதிலளிநீக்கு
  27. அன்பின் கஸாலி - சிந்தனை நன்று - எனினும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் - என்ன நடக்கிறதென்று.

    பதிலளிநீக்கு
  28. இன்னும் நிறைய இருக்கிறது எழுத...ஆனால் வெளியில் ஆட்டோ வரும் சப்தம் கேட்பதால் இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்.
    ஞாபகம் இருந்தால் சரி

    பதிலளிநீக்கு
  29. //ஒரு கட்சி இப்படி அசுர பலத்துடன் ஆட்சிக்கு வருவது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல....// அருமை..சூப்பராச் சொன்னீங்க கஸாலி.

    பதிலளிநீக்கு
  30. ஐயோ ராமா இவனுக தொல்ல தாங்க முடியல ... ப்ரீயா பிளாக் கிடைச்சா என்ன எழுதறதுன்னு தெரியாம எழுதீட்டு இருக்காங்க !!!

    பதிலளிநீக்கு
  31. இலவசங்கள்: பயனாளிகளை விட, பெறாதோர் எண்ணிக்கையே அதிகம் என்பதைக் காட்டுகிறது! மந்திரி...நீ...எந்திரி! இது ஒரு சுகமான விளையாட்டு!

    பதிலளிநீக்கு
  32. மாற்றம்...நன்மையா? தீமையா?...விரைவில் தெரியும்.

    பதிலளிநீக்கு
  33. ஏழு நம்ம அம்மாவுக்கு ரெம்ப புடிச்ச நம்பர் பார்த்தீகளா........

    பதிலளிநீக்கு
  34. அருமையான கடிதம் , இது எல்லாம் இந்த அம்மாகிட்ட நடக்குமாங்கிறது சந்தேகம் தான்?

    பதிலளிநீக்கு
  35. பெயரில்லா17 மே, 2011, 3:54:00 AM

    அம்மாவுக்கு ஒரு கடிதம் எழுத காலையில்தான் யோசித்தேன். நீங்கள் எழுதி விட்டீர்கள். நன்றாக உள்ளது கசாலி. விரைவில் நானும் எழுதுகிறேன்.

    பதிலளிநீக்கு
  36. மதமாற்ற தடை சட்டம் ஒரு நல்ல சட்டம். இந்தியாவிற்கே இந்த சட்டம் மிக அவசியம். சௌதி அரேபிய, பாக்கிஸ்தான், ஈரான், மலேசியா போன்ற நாடுகளில் பின்பற்றப்படும் சட்டம்.

    பதிலளிநீக்கு
  37. \\நீங்கள் மறுப்பதற்கு கலைஞர் கட்டிய கட்டிடம் என்ற காரணம் தானே தவிர வேறு என்ன இருக்க முடியும்?\\ கருணாநிதி அந்த இடத்தை குத்தகைக்குப் பேசி கமிஷன் அடிப்பதற்காக கட்டி, சினிமா செட்டிங் போட்டு திறந்த கட்டிடம். கருணாநிதி கட்டினார் என்பதற்காக குட்டிச் சுவற்றிலும் போய் உட்கார வேண்டும் என்ற அவசியம் அம்மாவுக்கு இல்லை. அந்த குட்டிச் சுவர் வேறு ஏதாவது ஒன்றுக்கு பயன் படுத்தப் படும், இதையும், பாலங்களையும் ஒப்பிட வேண்டாம். இன்னொன்று, நாலாயிரம் கோடி வருஷத்துக்கு செலவு பண்ணிய மருத்துவக் காப்பீடு, அந்தப் பணத்தில் வருஷத்துக்கு நானூறு கோடி மஞ்சள் துண்டுக்கு கமிஷன், மிச்சம், இன்சூரன்ஸ் கம்பனிகள் ஸ்வாஹா பண்ணிவிடும், நீங்க ஆசுபத்திரிக்கு அதை நம்பிப் போனா, உங்க பணத்தைத் தான் அழுதுவிட்டு வரவேண்டும். அரசு மருத்துவமனைகளை மேம்படுத்தி, தனியாருக்கு இணையான வசதிகளைத் தருவதுதான் சிறந்த ஆட்சியாளரின் திறமை. சென்னை, வேலூர் போன்ற இடங்களில் அரசு மருத்துவமனைகளை யாரும் மிஞ்ச முடியாது, ஆகையால் வருடத்துக்கு நாலாயிரம் கோடியை அரசு மருத்துவமனைகளை மேம்படுத்த செலவிட வேண்டும். கமிஷனுக்கு ஆசைப் பட்டு அழிக்கக் கூடாது.

    பதிலளிநீக்கு
  38. ஓகே இப்படி ஒரு க்டிததினையே எதிர்பார்த்தேன்

    பதிலளிநீக்கு
  39. நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஜ்ஜோம் . வாழ்த்துக்கள் .

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.