என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

வெள்ளி, மே 20, 2011

20 இத்தாலி அன்னையும், கொலம்பியா மருமகனும், பின்னே தமிழக காங்கிரசும் .....



1967- ஆம் ஆண்டுதான் தமிழக காங்கிரஸ் சந்தித்த கடைசி முதல்வர் தேர்தல். அதன் பிறகு நடந்த ஒன்பது  தேர்தல்களிலும் கழகங்களுடன் கூட்டணி வைத்தே களம் கண்டுள்ளது. 1989-ஆண்டு தேர்தல் மட்டும் விதிவிலக்கு...அப்போது கூட தனியாகத்தான் நிற்கவேண்டும் என்று அந்த கட்சி நினைக்கவில்லை. எம்.ஜி.ஆர்- மறைவிற்கு பிறகு அண்ணா.தி.மு.க. ஜானகி-அணி, ஜெயலலிதா அணி என்று ரெண்டுபட்டபோது பிளவுபட்ட அண்ணா.தி.மு.க-விற்கு ஆதரவு கிடையாது, ஒன்றுபட்ட அண்ணா.தி.மு.க-வோடுதான் கூட்டணி என்று அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி கூறி,  கருப்பையா மூப்பனாரை முதல்வர் வேட்பாளராக அறிவித்துவிட்டு தனியாக களம் கண்டார்.  ஆனால், ஜானகி அணியுடன் கூட்டணி வைக்கவேண்டும் என்று கூறிய அப்போதைய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் நடிகர் சிவாஜி கணேசன் ராஜீவிடம் கேட்டு...அதற்கு ராஜீவ் தலையசைக்காததால் கோபத்தில் காங்கிரசை விட்டு கணிசமான தொண்டர்களுடன் வெளியேறி தமிழக முன்னேற்ற முன்னணி என்ற கட்சியை ஆரம்பித்து ஜானகி அணியுடன் கூட்டணி வைத்து தானும் தோற்று, காங்கிரசையும் தோற்கடித்தார். அத்துடன் காங்கிரசின் ஆட்சிக்கனவு  பணால் ஆகிவிட்டது. அதன் பிறகு கழகங்கள் மூலமே காமராஜர் ஆட்சியை கண்டு வருகிறது காங்கிரஸ்...ஆனால், அதை மாற்றுகிறேன் பேர்வழி என்று  சொக்க தங்கம் சோனியா தயவில் புதிதாக ஒரு இளவரசர் வந்தார்...ராகுல் என்று பெயர்


ஒவ்வொரு மாநிலத்திலும் வீழ்ந்து கிடக்கும் காங்கிரசை தூக்கி நிறுத்துவதுதான் இவர் வேலையாம். அதற்காக அந்தந்த மாநிலங்களில் போய் ஒரு ஓலை குடிசையில் தங்கி கஞ்சி குடிப்பது, மண் சட்டி சுமப்பது என்று எல்லா வேலையும் செய்து பார்த்தார்.ஆனால் அவர் ஸ்டண்ட் எடுபடவில்லை. சமீபத்தில் தமிழ்நாட்டிற்கு வந்தார். இங்கும் பிடித்தது சனி.

இளைஞர் காங்கிரசை வளர்கிறேன் பேர்வழி என்று உருப்படாதவர்களையும், ஒன்றுக்கும் உதவாதவர்களையும், மக்கள் செல்வாக்கு இல்லாதவர்களையும் நிர்வாகிகளாக போட்டுவிட்டு இவர்களை வைத்து தமிழ்நாட்டில் மீண்டும் காமராஜர் ஆட்சியமைப்போம் என்றும் சொல்லிவிட்டு போனார். இந்த மண்குதிரைகளும் நாங்கள் பத்து லட்சம் உறுப்பினர்களை சேர்த்தோம், இருபது லட்சம் உறுப்பினர்களை சேர்த்தோம் என்று வாய்சவடால் விட்டு இளவரசர் மனதை குளிர்வித்தனர்.

இளவரசரும் ஆஹா தமிழ்நாட்டில் இனி நம்மதான் என்று மனம் மகிழ்ந்து  பேர  அரசியலை கையிலெடுத்தார்.
ஏலம் போல 100 சீட்டில் ஆரம்பித்த பேரம் மெல்ல மெல்ல குறைந்து 63 சீட்டில் திருப்தியடைந்தது. இந்த 63 தொகுதிகளிலும்  ஜெயித்து 2016-நடக்கவிருக்கும் தேர்தலில் காமராஜர் ஆட்சியமைக்க இப்போதே துண்டு போட்டு இடம் பிடிக்க பார்த்தார்கள்.

ஆனால், நடந்தது வேறு....நண்டு கதையையே தோற்கடிக்கும் தனது பிரசித்தி பெற்ற உள்ளடி வேலைகளாலும், கோஷ்டி அரசியலாலும் ஒவ்வொரு தலைவர்களையும் தோற்கடிக்க ஒவ்வொரு கோஷ்டி தலைவர்களே கங்கணம் கட்டிக்கொண்டு வேலை பார்த்தார்கள். ஆரம்பத்திலிருந்தே இவர்களை கவனித்து வந்த மக்களும் இவர்களுக்கு சாவு மணியடிக்க காத்திருந்தார்கள். தேர்தல் முடிவு வந்தது கூடவே காங்கிரசுக்கும் முடிவு வந்துவிட்டது. இனி எக்காலத்திலும்  காமாராஜர் ஆட்சியை பற்றி வாய் திறக்க மாட்டார்கள். கூரையேறி கோழிபிடிக்க தெரியாதவன் வானம் ஏறி வைகுண்டத்தை காட்டுகிறேன் என்றானாம். அந்த கதைதான்  இவர்கள் கதையும்.


சேரக்கூடாதவன்களோடு சேராதே, செருப்படி பூசை வாங்காதே என்பதுபோல  இவர்களால் பாவம் தி.மு.க. வும் பரிதாபமான தோல்வியை சந்தித்து விட்டது. காங்கிரஸ் மீது இருந்த மக்களின் கோபத்தால்  அவர்களுடன் கூட்டணியில் இருந்த தி.மு.க.- வும் பரிதாபகரமான தோல்வியை தழுவியிருக்கிறது. அப்போதே காங்கிரசை விட்டு வெளியேறி இருந்தால் நிச்சயம் எதிர்கட்சியாக கூட தி.மு.க-வால் வந்திருக்க முடியும்.
காலம் கடந்து பேசி பயனில்லை.

உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க-வை விட்டு விலகி தனித்து போட்டியிடுவோம் என்று இளைஞர் காங்கிரஸ் யுவராஜா கூறியுள்ளார். இவர்களை நினைத்து அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. காமராஜர் காலத்தோடு புதை குழிக்குள் அனுப்பப்பட்டு, கருமாதி செய்யப்பட்ட  காங்கிரஸ் தனித்து போட்டியிட்டால் என்ன? கூட்டணியில் போட்டியிட்டால் என்ன? இனி இவர்களுக்கு அஸ்தமனம் தான்.அஸ்தமனம் மட்டும்தான்.

இனி காங்கிரஸ் தலைவி சொக்க தங்கம் செய்ய வேண்டியதெல்லாம்....தமிழ்நாட்டில் (முடிந்தால் இந்தியாவிலும்) காங்கிஸ் கட்சியை கலைத்து விட்டு  டென்சன் இல்லாமல் இருக்க பாருங்கள். இல்லாவிட்டால் வரும் தேர்தல்களில் மக்களே காங்கிரசை கலைக்கும் வழியை தேர்ந்தெடுத்து விடுவார்கள். அப்புறம் குய்யோ முறையோ என்று புலம்பக்கூடாது. 





Post Comment

இதையும் படிக்கலாமே:


20 கருத்துகள்:

  1. ஹஹா அஹஹா ஹஹா ஹஹா
    முதல் முதலாய்...ச்சே..சி பி பாட்டு தான் வருது..

    பதிலளிநீக்கு
  2. // கூரையேறி கோழிபிடிக்க தெரியாதவன் வானம் ஏறி வைகுண்டத்தை காட்டுகிறேன் என்றானாம்//

    உள்குத்து ஒன்னும் இல்லியே...ஹிஹி

    பதிலளிநீக்கு
  3. //காமராஜரோடு புதைக்கட்ட காங்கிரஸ் தனித்து போட்டியிட்டால் என்ன? கூட்டணியில் போட்டியிட்டால் என்ன? இனி இவர்களுக்கு அஸ்த்தமனம் தான்.அஸ்தமனம் மட்டும்தான். //
    உண்மை!!அஸ்தமனம் நிச்சயம்!!!

    பதிலளிநீக்கு
  4. // அப்புறம் குய்யோ முறையோ என்று புலம்பக்கூடாது. //
    பாஸ்..அவங்க இங்கிலீசில் தான் புலம்புவான்கலாம்!!

    பதிலளிநீக்கு
  5. இந்தியாவில் காங்கிரஸ் ஒழியவேண்டும் என்பதுதான் ஒவ்வொரு ஈழத்தமிழனதும் வேண்டுதலாக இருக்கிறது ரஹீம்!!

    பதிலளிநீக்கு
  6. இனி காங்கிரஸ் தலைவி சொக்க தங்கம் செய்ய வேண்டியதெல்லாம்....தமிழ்நாட்டில் (முடிந்தால் இந்தியாவிலும்) காங்கிஸ் கட்சியை கலைத்து விட்டு வேலையை டென்சன் இல்லாமல் இருக்க பாருங்கள். >>>>>>>

    இன்னும் மூணு வருஷம் இருக்கே ஆட்சி முடிய மத்தியில்

    பதிலளிநீக்கு
  7. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை அழிப்பதற்கு அந்த கட்சியின் தலைவர்களே போதும்...

    பதிலளிநீக்கு
  8. அது எப்பிடீங்க ஒங்களால மட்டும் இப்பிடீல்லாம் ஓப்பனா பேச முடியுது?ஆட்டோ,இல்லீன்னா என்னமோ சொல்லுறாங்களே டாட்டாவோ சுமொவோன்னு அதெல்லாம் வராதா?

    பதிலளிநீக்கு
  9. congress கட்சி இன்னும் இருக்கா?

    பதிலளிநீக்கு
  10. தமிழ்நாட்டில் (முடிந்தால் இந்தியாவிலும்) காங்கிஸ் கட்சியை கலைத்து விட்டு டென்சன் இல்லாமல் இருக்க பாருங்கள்.

    பதிலளிநீக்கு
  11. தமிழ்நாட்டில் (முடிந்தால் இந்தியாவிலும்) காங்கிஸ் கட்சியை கலைத்து விட்டு டென்சன் இல்லாமல் இருக்க பாருங்கள்.

    பதிலளிநீக்கு
  12. அன்பின் கஸாலி - 1967க்குப் பின் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியினை அரசுக்கட்டிலில் அமர வைக்க மக்களுக்கு விருப்பமில்லை. காங்கிரஸும் முயலவில்லை. மத்தியிலும் இழுபறிதான். ஒன்றும் செய்ய இயலாது, நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  13. உங்களின் வலைப்பூவின் மொத்த தோற்றம் , எழுத்துக்களின் தன்மை, வலைபக்கத்தின் முழுவதுமான மற்ற விடயங்கள், பின்னூட்டங்களின்/ பின்னூட்டம் இடும் வசதி / தெளிவு போன்ற பல விசயங்களை ஒரு கலவையாக என் மனதில் இட்டு விருப்பு வெறுப்பின்றி அடியேன் உங்கள் வலைப்பூவின் தோற்றத்துக்கு ( TEMPLATE ) தருவது 40/100 மார்க். நன்றி!

    பதிலளிநீக்கு
  14. பெயரில்லா20 மே, 2011, 9:44:00 PM

    வரும் தேர்தல்களில் மக்களே காங்கிரசை கலைக்கும் வழியை தேர்ந்தெடுத்து விடுவார்கள். அப்புறம் குய்யோ முறையோ என்று புலம்பக்கூடாது.

    //

    அத்தனையும் உண்மையுங்கோ ......

    பதிலளிநீக்கு
  15. நிதர்சனமான கருத்துக்கள் நண்பரே தி மு க தனித்து போட்டி இட்டு இருந்தால் எதிர்க்கட்சியாகவாவது இருத்திருக்கும் என்பதுதான் எனது கருத்து. பாராட்டு , நன்றி

    பதிலளிநீக்கு
  16. பின்னிடிங்க ..போங்க ...

    பதிலளிநீக்கு
  17. பெயரில்லா25 மே, 2011, 8:22:00 AM

    //இந்தியாவில் காங்கிரஸ் ஒழியவேண்டும் என்பதுதான் ஒவ்வொரு ஈழத்தமிழனதும் வேண்டுதலாக இருக்கிறது ரஹீம்!!//

    இந்தியனின் கனவும் என்று சேர்த்து போடுங்கப்பா.

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.