என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

ஞாயிறு, மே 22, 2011

8 புலன் விசாரணை- பாகம்-11

 

முந்தைய பாகங்கள் 




"அவரு...அவரு"....

"ம்...சொல்லுங்க....எவரு?"...

"அவரு தயாரிப்பாளர் மனோகரன்"

"மனோகரனா?"

"ஆமாம் சார்...அவருதான் இந்த தபாலை கொடுத்து பாடிக்கு பக்கத்துல போட சொன்னாரு"....

"சொல்றது நம்புறமாதிரி இல்லையே? அவரு இன்னைக்கு பெரிய புரடியூசாரு....அவரா இப்படி...நீ கேசை திசை திருப்புறே"....

"நிஜம்தான் சார்.அவருதான் கொடுத்தாரு"....

"எப்ப?"

"நடிகை இறந்து கிடந்ததை பார்த்துட்டு எங்க டைரக்டருக்கு போன் போட வெளில வந்தேன்.அப்பத்தான் இதை கொடுத்தாரு"

"அவரு கொடுத்த நீ போட்டுடுறதா? உனக்கு அறிவு வேணாம்...சரி இது எவ்வளவு பெரிய குற்றம்ன்னு தெரியுமா?"

"தெரியும் சார்"...

"தெரிஞ்சிருந்தும் போட்டுருக்கேன்னா...."

"இது என் வாழ்க்கை பிரச்சினை சார்.அதான்..."

"இதுல  என்னைய்யா உன் வாழ்க்கை பிரச்சினை இருக்கு?."

"சார் நான் இந்த அசிஸ்டென்ட் டைரக்டரா வந்து எட்டு வருஷம் ஆச்சு...மூணு டைரக்டர்ட்ட மொத்தம் பத்து படம் வேலை பார்த்துட்டேன்.அனாலும், என்னால ஒரு டைரக்டரா வரமுடியல...அப்படி இருக்கும் போது ஒரு நாள் தயாரிப்பாளர் மனோகரன் எங்க டைரக்டர் மாணிக்கராஜாவ பார்க்க   இங்கே வந்திருந்தாரு...அப்போ டைரக்டர் சார் இல்லை. அந்த சமயத்துல அவரை  பார்த்து ஒரு கதை சொன்னேன். கதை நல்லாருக்கு சீக்கிரம் டெவலப் பண்ணிட்டு வா..உனக்கு டைரக்டர் சான்ஸ் தாரேன்னு சொன்னாரு..."

"சரி....அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் இருக்கு?".

"இருக்கு சார்...கொஞ்ச நாள்ல நடிகை ஸ்ரீமதி கொலை நடந்துச்சு...அப்போதான் இந்த லெட்டரை கொடுத்து போட சொல்லி மனோகரன் சொன்னாரு...நான் பயந்து போய் மறுத்துட்டேன். இதை நீ செய்யாட்டி உனக்கு டைரக்டர் சான்ஸ் இல்லைன்னு மிரட்டினாரு...நானும் டைரக்டர் சான்ஸ் கிடைக்கப்போகுதேன்னு நம்பி இதை வாங்கி பாடிக்கு பக்கத்துல போட்டுட்டேன். ஆனா, யாரும் பார்க்கலைன்னு நினைச்சேன்...இப்ப மாட்டிக்கிட்டேன். நான் டைரக்டர் ஆசையில இதை செஞ்சிட்டேன். சார் என்னை விட்டுடுங்க....இனிமே எனக்கு சினிமாவே வேண்டாம் எல்லாத்தையும் மூட்டை கட்டி வச்சிட்டு எங்க கிராமத்துலபோயி மூட்டை தூக்கியாவது பொழைச்சுகறேன்".

"இப்ப அந்த மனோகர் எங்க இருப்பாருன்னு தெரியுமா?"

"அவரு வீடெல்லாம் தெரியாது....ஆபீஸ்தான் தெரியும்.".

"சரி வண்டில ஏறுங்க நாம நேரா இப்ப மனோகரனை பார்க்க போறோம்."

வாகனம் கிளம்பி நேராக மனோகர் ஆபீசில் போய் நின்றது. இன்ஸ்பெக்டர் தில்லையம்பலம் போய் காலிங் பெல்லை அழுத்தினார்.
கதவை திறந்து ஒருவன் எட்டி பார்த்தான்.

"மனோகரன் இருக்காரா?"

"வாங்க சார்...உள்ளேதான் இருக்கார்."

இன்ஸ்பெக்டர் உள்ளே நுழைந்தார்.

"வாங்க சார்"...என்று தில்லையம்பலத்தை வரவேற்ற மனோகரர் பின்னால் வந்த சேகரை பார்த்ததும் வெலவெலத்து போனார்.

அதன்பிறகு........வரும் ஞாயிறு வரும் 




படிக்காமல் தவற விட்டவர்களுக்காக....என் முந்தைய பதிவு 


Post Comment

இதையும் படிக்கலாமே:


8 கருத்துகள்:

  1. இப்போதைக்கு வடை..அப்பாலிக்கா படிக்கேன்..

    பதிலளிநீக்கு
  2. நல்ல விறுவிறுப்பை கொடுக்கும் தொடருக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. கசாலி, உண்மையிலே வித்தியாசமான முயற்சி. 12 வாரங்கள்/பாகங்கள் தொடர்கதை எழுதுவது என்பது சாதாரண விஷயம் இல்லை. மிகப்பெரிய கற்பனை வளம் இருந்தால் மட்டுமே இது சாத்தியம். அந்த வகையில் பதிவுலகிற்கு நீ ஒரு முன்னோடி. Keep up your good work .

    பதிலளிநீக்கு
  4. பிச்சு பிச்சு வடை சாப்பிட எனக்குப் பிடிக்காது:)

    பதிலளிநீக்கு
  5. பின்னால் வந்த சேகரை பார்த்ததும் வெலவெலத்து போனார்.//
    விறுவிறுப்பான தொடருக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  6. பரபரப்பான அரசியல் பதிவுகளுக்கு மத்தியில் இப்படியான, உங்கள் எழுத்து திறமையைக் காட்டும் பதிவுகளையும் இடுவது மாறுதலாக இருக்கிறது! வாழ்த்துக்கள் நண்பரே!

    பதிலளிநீக்கு
  7. நறுக்குன்னு நாலு ஒட்டு குத்தியாச்சு...

    பதிலளிநீக்கு
  8. வேண்டா வெறுப்பான்னு யாருய்யா சொன்னது?...வாரா வாரம் எப்படிய்யா இப்படி சஸ்பென்ஸ் வைக்கிறீங்க?

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.