என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

ஞாயிறு, மே 01, 2011

10 புலன் விசாரணை-பாகம்-9


முந்தைய பாகங்கள் 



"அந்த கோபத்துலதான் அவங்கள கொலை பண்ணும் அளவுக்கு போனீங்க இல்லியா?"

"என்ன சார் இது புதுக்கதையா இருக்கு. நான் எதுக்கு ஸ்ரீமதிய கொலை பண்ணனும்?"

"நாங்க கேக்க வேண்டிய கேள்வியை நீங்க கேக்கறீங்க மிஸ்டர் தயாளன்.நீங்க அவங்கள மிரட்டியதா எங்களுக்கு தகவல் கிடைச்சிச்சு...."

"ஓ....நீங்க அதவச்சுத்தான் சொல்றீங்களா? நான் ஒரு நிமிஷம் ஆடிப்போயிட்டேன்...அன்னிக்கு என்ன நடந்துச்சுன்னா....ஸ்ரீமதி என்னை வேலைய விட்டு தூக்குன கடுப்புல அவங்களுக்கு போன் போட்டேன்....உங்களை ஒலிக்காம விடமாட்டேன்னு சொன்னேன்.அது உண்மை....அதுக்காக கொலை பண்ற அளவுக்கு நான் முட்டாளில்லை. "

"அப்புறம் எதுக்கு அப்படி சொன்னீங்க?"

"சொல்றேன் சார்...நான் உங்களை ஒழிக்காம விடமாட்டேன்னு சொன்னது கொலை பண்ணிடுவேங்கற அர்த்தத்தில இல்லை...நான் வேறொரு நடிகைக்கிட்ட வேலைக்கு சேர்ந்து ஸ்ரீமதிக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்பையெல்லாம் தட்டி பறிச்சுக்கு அவங்கள படமே இல்லாம பண்ணி வீட்ல உட்கார வச்சிடனும்ங்கற அர்த்தத்துல சொன்னது"...

"இங்கே பாருங்க தயாளன் நீங்க எங்கிட்ட எந்த உண்மையும் மறைக்க முடியாது".....

"சார்....நான் சொல்றது நூறு சதவிகிதம் உண்மை. உங்களுக்கு இன்னும் என்மேல சந்தேகம் இருந்தா...உண்மை கண்டறியற சோதனை பண்ணுங்க...நான் உடன் படுறேன்."

"ஓகே..ஓகே...சரி நீங்க கிளம்புங்க....விசாரணைக்கு தேவைப்பட்டா அழைக்கிறோம்"...

"ரொம்ப நன்றி சார்." கிளம்பினான்.

அப்போது தில்லையம்பலம் போன் ஒலித்தது. இயக்குனர் ரெட்டி பேசினார்.

"வணக்கம் இன்ஸ்பெக்டர்".....

"வணக்கம் சார்"

"தயாளனை விசாரிச்சீங்களா?"

"விசாரிச்சுட்டேன்"

"ஏதாவது உருப்படியான தகவல் சொன்னானா?"

"இல்லை சார்..அவனிடம் தப்பு இருக்க மாதிரி தெரியல"....

"அப்படியா? வேறு என்ன செய்வதா உத்தேசம்? சார் அடுத்த கொலை நடக்கறதுக்குள்ள கொலையாளியை மடக்கிடுங்க.எல்லா நடிகைகளும் கொஞ்சம் பயந்து போயி இருக்காங்க"

"கவலை படாதீங்க...சீக்கிரம் பிடிச்சிடலாம்."

போனை கட் செய்தார்.

"கான்ஸ்டபிள் அந்த ஸ்ரீமதி கேஸ் பைலை எடுத்ததுக்கு வாங்க"....

கான்ஸ்டபிள் எடுத்து வந்தார்....

ஸ்ரீமதி கொலையான அன்று எடுக்கப்பட்ட போட்டோக்களை பார்வையிட்டார்....அதில் ஸ்ரீமதி இறந்து கிடந்தது பல கோணங்களில் புகைப்படமாக மாறியிருந்தது.

அத்தனை போட்டோக்களையும் பார்வையிட்டவர் ஒரு குறிப்பிட்ட போட்டோவை பார்த்ததும் மின்னல் வெட்டியது போல திடுக்கிட்டார்.
அதற்கு அடுத்த போட்டோவை பார்த்ததும் சந்தோசத்தில் கத்தினார்.

"கான்ஸ்டபிள் இங்க வாங்க...இந்த ரெண்டு போட்டோவையும் பாருங்க"....

கான்ஸ்டபிள் பார்த்தார்...

"சார் இது?"

"நல்லா பாருங்க முதல் போட்டோவுல இவன் கையில ஒரு லட்டர் வச்சிருக்கான்....அடுத்த போட்டோவுல அந்த லட்டர் கீழே கிடக்கு"...

"சார் இந்த லட்டர்?"

"இந்த லட்டர்தான் அது"
என்றவாறு பைலில், கலாச்சார சீரழிவிற்கு  கொண்டு சொல்லும் இப்படிப்பட்ட நடிகைகளை களையெடுக்கும் பணி தொடரும்' என்று எழுதி இருந்த லட்டரை எடுத்து காட்டினார்....

"அட..ஆமாம் சார்...நானும் அந்த மூலையில் இருந்துதான் இந்த லட்டரை எடுத்தேன்"..

"சே...ஆரம்பத்துல பார்த்திருந்தா இவ்வளவு அலைச்சல்  நமக்கு தேவை இருந்திருக்காது".

"அப்படினா....இவன்?"

"இன்னும் என்ன சந்தேகம்? நிச்சயமா இவன்தான் கொலைகாரன்...கிளம்புங்க அவனை மடக்கலாம்"....

எவன் என்று தெரிய ஞாயிறு வரை காத்திருங்கள் நண்பர்களே....


படிக்காமல் தவற விட்டவர்களுக்காக....என் முந்தைய பதிவு 


Post Comment

இதையும் படிக்கலாமே:


10 கருத்துகள்:

  1. //எவன் என்று தெரிய ஞாயிறு வரை காத்திருங்கள் நண்பர்களே....//
    இருக்கிறோம் பாஸ்! :-)

    பதிலளிநீக்கு
  2. பேசாம நீங்க ஒரு சீரியல் க்கு கதை எழுதலாம்..
    எவன் என்று தெரிய ஞாயிறு வரை காத்திருங்கள் /// அது யார்ன்னு எனக்குமட்டும் சொல்லுங்க.

    பதிலளிநீக்கு
  3. காத்திக்கிட்டு தானே இருக்கம் பாஸ்..
    நான் ஆரம்பத்தில் ஒன்று இரண்டு பாகங்கள் வாசிக்கவில்லை...
    அதுவும் வாசித்தால் தான் முழுமை பெறும் கதை எனக்கு

    பதிலளிநீக்கு
  4. கஸாலி அண்ணன் கோவை ராஜேஷ்குமார் மாதிரி ஆக ஆசை போல.. ம் ம்

    பதிலளிநீக்கு
  5. 7 வது ஓட்டு மாப்ள ரைட்டு!

    பதிலளிநீக்கு
  6. ஆஹா..நல்ல இடத்தில் சஸ்பென்ஸ் வைத்து விட்டாரே..

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.